ஆட்டுமேல காரு விட்ட கதை

|

நம்ம பிளாக்குக்கு பல விஷயங்கள தந்து உதவறது நம்ம தம்பி திவாகர்தான். எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப சுவராஸ்யமா சொல்லுவான்.

"
சேவல் தகராறும் நாம ஹீரோ ஆன கதையும்..." பத்தி அவன்கிட்ட சொன்னதுக்கு, அருமையா இருக்கு, உனக்கு ஆட்டுமேல காரு விட்ட கதை தெரியுமா' ன்னான்.

ஆர்வமா 'சொல்லுடா' ன்னு கேட்டதுக்கு அவன் சொன்னது அப்படியே கீழ...

'உனக்கு பாண்டி தெரியும்ல, நம்ம தறியில வேல செய்யிறானே, அவங்க அப்பன் பண்ணின கூத்துதான் இது.

ஒரு பத்து வருஷத்துக்கு முன்னால விடியகாலம், ஆடுங்கள ஓட்டிட்டு காட்டுக்கு போயிட்டிருந்தாப்ள. அப்போ வேகமா பின்னால வந்த காரு ஓரமா போன ஒரு ஆட்டுல மோதிடுச்சி, ரெண்டு காலும் போயிடுச்சி, வலியால கத்துது. அதவிட பெருசா பாண்டி அப்பன். 'ஐயோ ஏன், பொண்ணு, பொண்ணு' ன்னு.

எல்லாம் பதறி பாத்தப்போதான் ஆடுன்னு தெரிஞ்சுச்சி. 'அட மடையா, ஆட்ட போயி பொண்ணுன்னு... பதறிட்டோம்' னு ஒரு பெருசு சொல்லுச்சி.

அந்த நேரத்துலையே நல்லா கூட்டமா இருக்கிற டீக்கடைக்கு பக்கத்துலையே நடந்ததால சட்டுன்னு கூட்டம் கூடிடுச்சி.

'பொண்ணு மாதிரி வளர்த்தேனே, இப்படி ஆயிடுச்சே, நான் என்ன பண்ணுவேன்!' னு இன்னும் சத்தமா கத்த ஆரம்பிச்சாரு.

'கார்ல யாருய்யா? இறங்கி வெளிய வா' ன்னு ஒரு இளவட்டம் கத்த டிரைவரும், பின்னால இருந்து ஒரு பெரியவரும் இறங்கி வந்தாங்க.

டிரைவர அடிக்க ஒரு இளசு பாய, 'பொறுப்பா, அவரசப்படாத' ன்னு சொல்லி சமாதானப்படுத்தினாங்க.

'ஏன் மேல தப்பு இல்லங்க, ஆடு சட்டுன்னு குறுக்க வந்துருச்சி' டிரைவர் சொல்ல, 'ஆமாங்க ஆடுதான் திடீர்னு வந்துடுச்சி'...ன்னு அந்த பெரியவர் பதட்டமா சொன்னாரு.

'அதெல்லாம் தெரியாது ஊருக்குள்ள வரும்போது பாத்து வர வேணாமா? ' ஒரு பெருசு சொல்ல,

அந்த பெரியவர் 'மன்னிச்சுக்கோங்க, அவசரமா போயிகிட்டிருக்கோம், கல்யாணம். பொண்ணு மாப்பிள்ளை உட்காந்திருக்காங்க. ஆட்டுக்கு எவ்வளோ சொல்லுங்க. கொடுத்துட்டு போறோம்' னு சொன்னாரு.

'சரிப்பா, கல்யாணம் அது இதுன்னு சொல்றாங்க. காசு என்னவோ வாங்கிட்டு விடுங்க, போகட்டும்' னு ஒரு பெருசு சொல்லுச்சி.

'சரி சரி, நூறோ எரநூறோ கேட்டு வாங்கிட்டு உடுங்கப்பா...' இன்னொரு பெருசும் கூட சொல்லுச்சி.

'அதெல்லாம் முடியாது மூவாயிரம் வேணும்' னு பாண்டியோட அப்பா கேக்க, எல்லாருமே ஆடிப்போயிட்டோம்.

என்ன சொன்னாலும் அவரு ஒத்துக்கவே இல்ல, 'என் பொண்ணு மாதிரி வளத்தேன்' னு திரும்ப திரும்ப சொல்லிட்டிருந்தாரு, கடைசியா ரெண்டாயிரத்த வாங்கிட்டுத்தான் கார உட்டாருன்னே பாத்துக்கோவேன்' னு முடிச்சான்.

'சரி அந்த ஆடு?' ன்னு கேட்டேன்.

'வெட்டி கூறு போட்டு வித்துட்டாங்க காரு போன உடனே' ன்னு சொன்னான்.

'என்னடா அநியாயமா இருக்கு, இப்ப கேக்கும்போதே பகீர்னு இருக்கு, இப்படியும் இருப்பாங்களா?'

'அதெல்லாம் இருக்கட்டும், முழுசாக் கேளு, இப்ப பாண்டியோட அக்கா வரதட்சண பிரச்சினையில வாழா வெட்டியா இருக்கு' ன்னான்.

இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

40 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

ஹைவேஸ் பக்கத்துல வழியோர கிராமங்கள்ள இப்படி சில அடாவடி கேஸ் எங்கயும் இருக்கத்தான் செய்யுது. அவிய்ங்க லெவல்ல கறி, தண்ணிக்கு காசு தேத்திக்கிறாங்க. நல்லா சொல்லியிருக்கீங்க. :)

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
ஹைவேஸ் பக்கத்துல வழியோர கிராமங்கள்ள இப்படி சில அடாவடி கேஸ் எங்கயும் இருக்கத்தான் செய்யுது. அவிய்ங்க லெவல்ல கறி, தண்ணிக்கு காசு தேத்திக்கிறாங்க. நல்லா சொல்லியிருக்கீங்க. :)
//

கிராமங்கள்ல நல்லவங்களும் இருக்காங்க... அந்த ஆளு பண ஆசை புடிச்சவரு... நன்றிங்கய்யா உங்கள் அன்பிற்கு, வரவிற்கு...

பின்னோக்கி said...

தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.

தராசு said...

கிராமங்கள்ல இந்தக் கூத்து தினமும் நடக்கும். வேணும்னே நாயைப் பத்தி விடுவாங்க, அத அடிச்சவன் நிக்காம போயிட்டா தப்பிச்சான். நின்னான்னா, உடனே இத நான் கண்ணு மாதிரி வளர்த்தேன், தினமும் சோறு வெச்சு, பிஸ்கட் வாங்கிப் போட்டு, என் குடும்பத்தில் ஒருத்தரா வளர்த்தனேன்னு கண்ணீர் விடுவாங்க பார்க்கணும். அப்புறமா ஒரு 500 ரூபாய் கண்டிப்பா தேத்துனா அது அன்னைக்கு சரக்குக்கும் பிரியாணிக்குமாச்சு.

இப்படி நான் ஒரு தரம் மாட்டியிருக்கேன்.

ஜெட்லி... said...

வேறயென்ன நீங்கள் கூறுவது போல் பணத்தாசை தான்

Unknown said...

திவகர் முலம் கிடைத்த கதை அருமை வாழ்த்துகள், திவகர்க்கும் தான்.

ஹேமா said...

அனுபவங்கள் மிக சுவாரஸ்யம் பிரபாகர்.

Prathap Kumar S. said...

திவாகருக்கு ஒரு ஓ போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்

பிரபாகர் said...

//
பின்னோக்கி said...
தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.
//

தம்பியுடையான் இடுகைக்கு அஞ்சான்... நன்றிங்க...

பிரபாகர் said...

//
தராசு said...
கிராமங்கள்ல இந்தக் கூத்து தினமும் நடக்கும். வேணும்னே நாயைப் பத்தி விடுவாங்க, அத அடிச்சவன் நிக்காம போயிட்டா தப்பிச்சான். நின்னான்னா, உடனே இத நான் கண்ணு மாதிரி வளர்த்தேன், தினமும் சோறு வெச்சு, பிஸ்கட் வாங்கிப் போட்டு, என் குடும்பத்தில் ஒருத்தரா வளர்த்தனேன்னு கண்ணீர் விடுவாங்க பார்க்கணும். அப்புறமா ஒரு 500 ரூபாய் கண்டிப்பா தேத்துனா அது அன்னைக்கு சரக்குக்கும் பிரியாணிக்குமாச்சு.

இப்படி நான் ஒரு தரம் மாட்டியிருக்கேன்.
//

நன்றிங்கண்ணே. எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு இருக்கும்...

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
வேறயென்ன நீங்கள் கூறுவது போல் பணத்தாசை தான்
//

சரிதான். வாங்க நண்பா.... உங்கள் வரவு என்றுமே எனக்கு மிக மகிழ்ச்யான ஒன்று..

பிரபாகர் said...

//
Bharathy said...
திவகர் முலம் கிடைத்த கதை அருமை வாழ்த்துகள், திவகர்க்கும் தான்.
//

நன்றி பாரதி... உங்களின் வரவுக்கும், வாழ்த்துக்கும்..

பிரபாகர் said...

//
ஹேமா said...
அனுபவங்கள் மிக சுவாரஸ்யம் பிரபாகர்.
//

நன்றி ஹேமா, உங்களின் அன்புக்கும் தொடர் வரவுக்கும்...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
திவாகருக்கு ஒரு ஓ போடுங்க சாமியோவ்வ்வ்வ்வ்வ்
//

ஓ.... ஹோ. எழுதறது நாம, ஓ தம்பிக்கா! நடக்கட்டும், நடக்கட்டும்...

ஈரோடு கதிர் said...

எப்புடியப்பு உங்களுக்கு மட்டும் கோழி, ஆடுன்னு வரிசையா மாட்டுது...

23x7 இப்பிடியேதான் யோசிப்பீங்களோ...(அட மிச்சம் 1 மணி நேரம் ரெஸ்ட்பா)

இருங்க உங்க தம்பி கடத்திகிட்டு வந்து நாமாளும் நாலு கத கேட்டு எழுதிடலாம் போல இருக்கு

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
எப்புடியப்பு உங்களுக்கு மட்டும் கோழி, ஆடுன்னு வரிசையா மாட்டுது...

23x7 இப்பிடியேதான் யோசிப்பீங்களோ...(அட மிச்சம் 1 மணி நேரம் ரெஸ்ட்பா)

இருங்க உங்க தம்பி கடத்திகிட்டு வந்து நாமாளும் நாலு கத கேட்டு எழுதிடலாம் போல இருக்கு
//

எல்லாம் நீங்க கடத்தனும்னு நினைக்கிற ஆளாலதான். நன்றி கதிர்...

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க பிரபு!

//பின்னோக்கி said...
தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.
//

அவர் மேல ஏன் சுத்தி போடணும்? ஆணி கீணி புடுங்கச் சொன்னாரோ??

Rekha raghavan said...

கடைசி வரியில் இருக்கே ஒரு அருமையான கரு. சிறுகதையாக்கி சர்வேசன்500 'நச்' கதைப் போட்டியில் போட்டிருக்கலாம்.
நல்ல பதிவு.

ரேகா ராகவன்.

vasu balaji said...

அதென்னுங்க பிரபாகர் 23 x 7 :-?

Menaga Sathia said...

இப்படியும் சிலர்...

பிரபாகர் said...

//
பழமைபேசி said...
நல்லா இருக்குங்க பிரபு!
//

நன்றிங்க பழமைபேசி. எனது நெருங்கிய சொந்தத்தார் மட்டும்தான் என்னை பிரபு என அழைப்பார்கள். ரொம்ப சந்தோஷங்க...

//பின்னோக்கி said...
தம்பி திவாகருக்கு சுத்தி போடுங்க.
//

அவர் மேல ஏன் சுத்தி போணும்? ஆணி கீணி புடுங்கச் சொன்னாரோ??

எனக்கு ஐடியா சொல்றவரு அவருதான். அதான்.

பிரபாகர் said...

//
KALYANARAMAN RAGHAVAN said...
கடைசி வரியில் இருக்கே ஒரு அருமையான கரு. சிறுகதையாக்கி சர்வேசன்500 'நச்' கதைப் போட்டியில் போட்டிருக்கலாம்.
நல்ல பதிவு.

ரேகா ராகவன்.
//

நடந்த நிகழ்வுங்க. உங்க வருகை மற்றும் கருத்துக்கு ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
அதென்னுங்க பிரபாகர் 23 x 7 :-?
//

அய்யா, அது பில்டப் மேட்டருங்கய்யா... விவரத்த மெயில்ல சொல்றேன்...

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
இப்படியும் சிலர்...
//

ஆமாங்க. ரொம்ப நன்றிங்க... வருகை மற்றும் கருத்துக்கு...

ஆரூரன் விசுவநாதன் said...

கடைசி வரிகள் "நச்" ஆனாலும் வலிக்கிறது.

பிரபாகர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
கடைசி வரிகள் "நச்" ஆனாலும் வலிக்கிறது.
//
எனக்கும் அதே எண்ணம்தான் என் தம்பி சொன்னவுடன். நன்றிங்க....

நாகா said...

எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க, நீங்க என்னன்னா கேப்பே விடாம கெடா வெட்டறீங்களே(23/7).. வெட்டுங்க வெட்டுங்க..

பிரபாகர் said...

//நாகா said...
எல்லாரும் கேப்புல கெடா வெட்டுவாங்க, நீங்க என்னன்னா கேப்பே விடாம கெடா வெட்டறீங்களே(23/7).. வெட்டுங்க வெட்டுங்க..
//

காற்றுள்ள போதே!... நன்றி நாகா... ஸ்டாரின் வரவுக்கு நன்றி...

துபாய் ராஜா said...

சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுன்னு கதை சொல்லுவாங்க... :((

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
சில ஊருல கோயிலுக்கு நேர்ந்து விட்ட ஆடுன்னு கதை சொல்லுவாங்க... :((
//

ஆமாம் ராஜா, நம்ம மேட்டர்ல இது பெண் ஆடு. கோயிலுக்கு கிடாவத்தான் நேர்ந்து விடுவாங்க...

கலகலப்ரியா said...

ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...
//

வாங்க ப்ரியா! ஓட்ட மட்டும் போட்டுட்டு படிக்காம போயிடுவீங்களா?

ஆ.ஞானசேகரன் said...

அனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சி

முனைவர்.இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது நண்பரே..
மிகவும் எதார்த்தமாக உள்ளது..

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
அனுபவங்களை பகிர்வதில் மகிழ்ச்சி
//
நன்றிங்க. தொடர்ந்த வருகை, மற்றும் உங்க ஊக்கத்துக்கு.

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது நண்பரே..
மிகவும் எதார்த்தமாக உள்ளது..
//
உங்களைப் போன்ற முனைவர் ஒருவரால் பாராட்டப்படும்போது பெரிதும் மகிழ்கிறேன்.

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
ஐயயோ... வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம தத்துவார்த்தமா ஏதாவது சொல்ல முன்னாடி ஓட்டப் போட்டு அப்பீட்டு ஆயிடுடீ கண்ணு...
//

வாங்க ப்ரியா! ஓட்ட மட்டும் போட்டுட்டு படிக்காம போயிடுவீங்களா?//

படிக்காமலா... தத்துவார்த்தமா பதில் சொல்லாம போறோம்னு சொல்றோம்... நல்லா இருக்கே.. அவ்வ்வ்வ்வ்..

ப்ரியா கிட்ட எதிர்பாக்குறதே அதுதானே, பின்வாங்குனா எப்படி?

நாகராஜன் said...

ஹா ஹா ஹா... இது மாதிரி முன்னெல்லாம் எங்க ஊரு பக்கமும் ரொம்ப நடக்கும்... நல்லா எழுதிருக்கீங்க... உங்க தம்பிக்கும் பாராட்டுகள்... உங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லரதுனாலா... கலக்குங்க ரெண்டு பேரும் சேர்ந்து...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
ஹா ஹா ஹா... இது மாதிரி முன்னெல்லாம் எங்க ஊரு பக்கமும் ரொம்ப நடக்கும்... நல்லா எழுதிருக்கீங்க... உங்க தம்பிக்கும் பாராட்டுகள்... உங்களுக்கு நிறைய விஷயங்கள் சொல்லரதுனாலா... கலக்குங்க ரெண்டு பேரும் சேர்ந்து..//

நன்றிங்க. ஆர்வமா நிறைய விஷயங்கள சொல்லி, எனக்கு கதை சொல்லி அவன் தானுங்க.

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB