நம்பிக்கையில் வாழ்க்கை....

|


அன்பு சகோதரி  கலகலப்ரியாவின்  பயணங்கள் முடிவதில்லை... இடுகையை படித்தேன். சோகத்தை மறக்கத்தான் அந்த கலகலாவா?

அந்த அன்பு இதயத்துக்கு என் பதிலாய் இந்த இடுகை... 

சோகத்தையும்
சுகமாய் சொல்லும் என்
சகோதரி!

தாய் மண்ணின் பெருமை 
தமிழ்கொண்டு பேசி 
திகைப்பாழ்த்திய பின்
தீப்பிரவேசம் செய்தால்
திரும்பவோர் பயணமென
தெள்ளென நிலையை
திறம்பட சொல்லி

பிறந்த மண்ணை
பிறிதொருநாள் பார்க்க  
பரிதவித்து ஏங்கி 
பட்டமர நிலையை
பக்குவமாய் சொல்லி 
பாசமான தங்கையவள்
பகிர்ந்த இவ்விஷயங்கள்

கல் நெஞ்சை கரைத்து
கவலையதை சேர்க்கும்
காசு பணம் அலையும்
கயவரையும் மாற்றும்
கடமையினை மறந்த
கட்சிவாழ் நாய்களை
கணநேரம் மாற்றும்.

சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு
சிந்தையதில் வைத்து...........?????

12 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆ.ஞானசேகரன் said...

//சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு
சிந்தையதில் வைத்து...........?????//

நல்லாயிருக்குப்பா!...
சகோதரிக்கு சொன்ன ஆறுதல் பாராட்ட வேண்டிய ஒன்று...

balavasakan said...

ம்....?????????????????

பீர் | Peer said...

:-(

ஷங்கி said...

கடைசிப் பத்தி எளிமையா நல்லாருக்கு!

ஜெட்லி... said...

//காசு பணம் அலையும்
கயவரையும் மாற்றும்
//

மாறினால் சந்தோசம்....
ஆனா மாறனுமே ??

vasu balaji said...

நல்லாயிருக்கு பிரபாகர். எனக்குத் தோன்றியது, அவளின் இடுகை பிறந்த மண்ணை விட்டு அது எந்த நாடானாலும்,யாரானாலும் பிழைப்புக்காக வேறு ஊர் போய் சேர்ந்து வேர் அங்கிருக்கும் வரை ஏதோ ஒரு காரணம் எப்போழுதோ ஒரு முறை செல்லும் தொடர்பும் அற்றுப் போய் ஓய்ந்திருக்கும் ஒரு தருணத்தில் யார் படித்தாலும், ஒரு நேர்த்திக் கடன் போல், ஒரு பரவசத்துடன் போக வேண்டும் என்ற ஏக்கம் வர வழைக்கும். அதுவே அவளின் எழுத்தின் வீச்சு. இந்த இடுகையின் சக்தி.

ப்ரியமுடன் வசந்த் said...

//வானம்பாடிகள் said...

எனக்குத் தோன்றியது, அவளின் இடுகை பிறந்த மண்ணை விட்டு அது எந்த நாடானாலும்,யாரானாலும் பிழைப்புக்காக வேறு ஊர் போய் சேர்ந்து வேர் அங்கிருக்கும் வரை ஏதோ ஒரு காரணம் எப்போழுதோ ஒரு முறை செல்லும் தொடர்பும் அற்றுப் போய் ஓய்ந்திருக்கும் ஒரு தருணத்தில் யார் படித்தாலும், ஒரு நேர்த்திக் கடன் போல், ஒரு பரவசத்துடன் போக வேண்டும் என்ற ஏக்கம் வர வழைக்கும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க நைனா..

பிரபாகர் said...

//
ஆ.ஞானசேகரன் said...
//சோகத்தின் பின்னே
சுகம் சிறிதுண்டு
சாவுக்கு பின்னே
சரித்திரம் உண்டு
சஞ்சலத்தின் பின்னே
சாந்தமும் உண்டு
சிந்தையதில் வைத்து...........?????//

நல்லாயிருக்குப்பா!...
சகோதரிக்கு சொன்ன ஆறுதல் பாராட்ட வேண்டிய ஒன்று...
//
நன்றிங்க ஞானசேகர்.

//
Balavasakan said...
ம்....?????????????????
//
ஆமாம் தம்பி.... ஒரு பெரிய ????

பிரபாகர் said...

//
பீர் | Peer said...
:-(
//
ஆமாங்க பீர்!
//
ஷங்கி said...
கடைசிப் பத்தி எளிமையா நல்லாருக்கு!
//
நன்றி ஷங்கி, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்....

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
//காசு பணம் அலையும்
கயவரையும் மாற்றும்
//

மாறினால் சந்தோசம்....
ஆனா மாறனுமே ??
//
நம்புவோம் ஜெட்லி...

//
வானம்பாடிகள் said...நல்லாயிருக்கு பிரபாகர். எனக்குத் தோன்றியது, அவளின் இடுகை பிறந்த மண்ணை விட்டு அது எந்த நாடானாலும்,யாரானாலும் பிழைப்புக்காக வேறு ஊர் போய் சேர்ந்து வேர் அங்கிருக்கும் வரை ஏதோ ஒரு காரணம் எப்போழுதோ ஒரு முறை செல்லும் தொடர்பும் அற்றுப் போய் ஓய்ந்திருக்கும் ஒரு தருணத்தில் யார் படித்தாலும், ஒரு நேர்த்திக் கடன் போல், ஒரு பரவசத்துடன் போக வேண்டும் என்ற ஏக்கம் வர வழைக்கும். அதுவே அவளின் எழுத்தின் வீச்சு. இந்த இடுகையின் சக்தி.
//
ஆமாங்கய்யா... படிச்சிட்டு பின்னூட்டமா எழுத, இடுகையாவே போட்டுட்டேன்.

//
பிரியமுடன்...வசந்த் said...
//வானம்பாடிகள் said...

எனக்குத் தோன்றியது, அவளின் இடுகை பிறந்த மண்ணை விட்டு அது எந்த நாடானாலும்,யாரானாலும் பிழைப்புக்காக வேறு ஊர் போய் சேர்ந்து வேர் அங்கிருக்கும் வரை ஏதோ ஒரு காரணம் எப்போழுதோ ஒரு முறை செல்லும் தொடர்பும் அற்றுப் போய் ஓய்ந்திருக்கும் ஒரு தருணத்தில் யார் படித்தாலும், ஒரு நேர்த்திக் கடன் போல், ஒரு பரவசத்துடன் போக வேண்டும் என்ற ஏக்கம் வர வழைக்கும்.//

ரொம்ப சரியா சொன்னீங்க நைனா..
//
அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும், ஒழுங்கா கேளு தம்பி...

கலகலப்ரியா said...

ரொம்ப நன்றிண்ணா...! ம்ம்... ஏன் எல்லாம் சோகமா இருக்காங்க..? இதனால துவண்டு விடுற ஆளுங்களா நாங்க ம்ம்...?

cheer up guys...!

க.பாலாசி said...

//கல் நெஞ்சை கரைத்து
கவலையதை சேர்க்கும்
காசு பணம் அலையும்
கயவரையும் மாற்றும்
கடமையினை மறந்த
கட்சிவாழ் நாய்களை
கணநேரம் மாற்றும்.//

கட்சிவாழ் நாய்களை கணநேரம் மாற்றும் என்று நம்புகிறீர்களா? எனக்கு அந்த நம்பிக்கையில்லை.

தங்கைக்கான பதில் இடுகை கணக்கிறது.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB