புரட்சித் தலைவர்...

|

சிங்கை வந்த புதிதில் டாக்ஸியில் பயணித்துக்கொண்டிருந்தேன். டிரைவர் சிங்கப்பூர் தமிழர் என்பதுவும் வயது அறுபது வாக்கில் இருக்கும் எனவும் யூகிக்க முடிந்தது. மெதுவாய் பேச்சுக்கொடுத்தேன். அவரின் பெயர் ரமேஷ் எனச் சொன்னார். வழக்கமான விசாரிப்புக்களுக்கு பிறகு ‘தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறீர்களா’ எனக்கேட்டேன்.

அதற்குப் பதில் சொல்லாமல் ‘நீங்கள் புரட்சித்தலைவரைப் பார்த்திருக்கிறீரா?’ எனக்கேட்டார். ‘ம்... பார்த்திருக்கிறேன், எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும்’எனச் சொன்னேன். அவர் மிகவும் சந்தோஷமடைந்து ஆர்வமாய் பேச ஆரம்பித்தார்.

தலைவர் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது அவரை அருகில் பார்த்து கை குலுக்கியதாக சொன்னார். தலைவரைத்தொட்ட கைகளை ஒரு வாரம் கழுவாமல் வைத்திருந்ததாய் சொன்னார். அவர் வந்திருந்தபோது இங்கு கூடிய கூட்டம்போல் இன்னமும் கூடியதில்லை எனச் சொல்லி, அவர் மலேசியா சென்ற பிறகும் அவர் அங்கிருக்கும்வரை அவரைப் பார்ப்பதற்காக அங்கு சென்று தங்கியிருந்ததாக சொன்னார்.

தலைவர் மலேசியா சென்றபோது அங்கு வரவேற்க பெரும் திரளாக கூட்டம் கூடியிருந்ததாம். வேகமாக வெளியே வந்த தலைவர் வெயிலில் நின்றுகொண்டிருந்த ஒரு வயதான மூதட்டியில் அருகே சென்று ஆரத்தழுவி 'அம்மா உங்களை அழைத்து வந்தது யார் எனக்கேட்டாரம். 'என் மகன்தான்' எனச் சொல்ல அருகிலிருந்த அவர் மகனை செல்லமாய் அடித்து 'இப்படியா வெயிலில் அம்மாவை நிற்க வைப்பாய்' என வைது உடன் வந்தவர்களிடமிருந்து ஒரு குடையினைப் பறித்து கையில் கொடுத்து வெயில் படாமல் பிடிக்கச் சொன்னாராம்.

இன்னும் நிறைய சொல்லியிருப்பார், அதற்குள் தங்கியிருந்த இடம் வந்துவிட்டது. அவரின் கார்டினை வாங்கிக் கொண்டு பிரியா விடை பெற்றேன்.

ஒரு விஷயத்தை மறந்துவிட்டேன், அவர் தமிழ் நாட்டுக்கு வந்ததே இல்லையாம், தலைவர் சமாதியைப் பார்ப்பதற்காக வாழ்வில் ஒருமுறையாவது வரவேண்டுமாம். அவரது சமாதியில் காதை வைத்துக்கேட்டால் கடிகாரத்தின் துடிப்பு கேட்கிறதாமே நீங்கள் கேட்டிருக்கிறீர்களா எனவும் கேட்டார்.

டிஸ்கி : எல்லோரும் புரட்சி, புரட்சி என சொல்லும்போது விலாவாரியாக விளக்கும்போது நமக்கு தெரிந்த, புரிந்த, பிடித்த புரட்சி....புரட்சித் தலைவர்தான்!

7 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

:))

மதுரை சரவணன் said...

real. thanks for sharing. even after death he still lives as super star in our villager,s heart.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

he is real super star

Prathap Kumar S. said...

புரட்சித்தலைவர் மாதிரி ஒரு மாஸ் இதுவரைக்கும் யாருக்கும் கிடையாது.வரவும் முடியாது...

இன்னொன்னு தெரியுமா நிறைய பேரு இன்னும் அவர் உயிரோட இருக்காருன்னே நினைச்சிட்டு இருக்காங்க...செத்துப்போய்ட்டாருன்னு சொன்ன கோபம் வரும்....

Unknown said...

//இன்னொன்னு தெரியுமா நிறைய பேரு இன்னும் அவர் உயிரோட இருக்காருன்னே நினைச்சிட்டு இருக்காங்க...செத்துப்போய்ட்டாருன்னு சொன்ன கோபம் வரும்..//

கரெக்டு பிரதாப். நான் 1996 தேர்தலின் போது ஒரு கிராமத்தில் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். அவரிடம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவீங்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்தப் பாதகத்திக்கு யாரு போடுவா என்றார். அப்ப எந்தக் கட்சிக்குப் போடுவீங்க என்று கேட்டேன். ரெட்டலைக்குத்தான் என்றார். என்னம்மா இப்பிடி சொல்றீங்க என்றதற்கு, அமா அது எம்ஜியாரு சின்னம்ல என்றார்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//முகிலன் said...
//இன்னொன்னு தெரியுமா நிறைய பேரு இன்னும் அவர் உயிரோட இருக்காருன்னே நினைச்சிட்டு இருக்காங்க...செத்துப்போய்ட்டாருன்னு சொன்ன கோபம் வரும்..//

கரெக்டு பிரதாப். நான் 1996 தேர்தலின் போது ஒரு கிராமத்தில் ஒரு மூதாட்டியைச் சந்தித்தேன். அவரிடம் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவீங்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் அந்தப் பாதகத்திக்கு யாரு போடுவா என்றார். அப்ப எந்தக் கட்சிக்குப் போடுவீங்க என்று கேட்டேன். ரெட்டலைக்குத்தான் என்றார். என்னம்மா இப்பிடி சொல்றீங்க என்றதற்கு, அமா அது எம்ஜியாரு சின்னம்ல என்றார்.
//

இதை நானும் அனுபவித்திருக்கிறேன். ;)

ஆ.ஞானசேகரன் said...

உண்மைதான்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB