பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல்

|

தொகுப்பாளினி : வணக்கம், இது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியோட கலந்துரையாடல் நிகழ்ச்சி. இதில் பிரபலபதிவர் பீதாம்பரத்தோடு பேச வருகிறார் நமது உண்மையும் சொல்வோம் (எப்பாவாச்சும்) டிவியில் எல்லோருக்கும் மிகவும் பரிட்சயமான பீலா பெருமாள்சாமி.

தொகுப்பாளினி மறைய, இருட்டாய் ஒரு அரங்கம்.மெதுவாய் வெளிச்சம் பரவுகிறது. காமிராவின் பார்வையில் இருவர். பளீரென எல்லா விளக்குகளும் ஒளிர நிகழ்ச்சி ஆ...ரம்பமாகிறது.

பீலா பெருமாள்சாமி : வணக்கம் திரு பிரபலப்பதிவர் பீதாம்பரம். எங்கள் உண்மையும் சொல்லுவோம் (எப்பவாச்சும்) டிவி சார்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி..

பிரபலப்பதிவர் பீதாம்பரம் : ரொம்ப சந்தோஷம். ஒரு நிமிஷம்...(தயாராய் வைத்திருக்கும் அருகிலிருக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்து டீப்பாயின் மேல் வைக்கிறார். பொரி, கடலை, மிக்சர் எல்லாவற்றையும் பிரித்து கொட்டி, 'வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கலந்துட்டு அப்புறம் உரையாடலாம்'

பீ.பெ : ஆஹா என்ன நகைச்சுவை உணர்வு உங்களுக்கு, இந்த மாதிரி ஓர் கலந்து உரையாடலை உலகத்துக்கே அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பி.பீ : அதான் இந்த பதிவுலகத்தின் புதுமை. புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சிகிட்டே இருப்போம்.

பீ.பெ : சரிங்க அது பற்றி பிறகு பேசலாம். முதல் கேள்வி உங்க சொந்த ஊர் என்ன?

பி.பீ : அதான் என் பேர்லயே இருக்கே, தாம்பரம்ங்க!

பீ.பெ : ஆஹா, பேர்லயே ஊரு... இது பற்றி ஒரு இடுகை கூட எழுதியிருக்கிறீர்கள் இல்லையா?

பி.பீ : சரியான ஞாபகசக்தி உங்களுக்கு. சிதம்பரம், பழனி, மருதன்னு சும்மா பூந்து விளையாடியிருப்பேன். பதினைஞ்சி பின்னூட்டம், தமிலிஷ்-ல பத்து, தமிழ்மணத்துல நாலுன்னு சூப்பர் டூப்பர் ஹிட்டுங்க அந்த இடுகை.

பீ.பெ : கேட்கவே சந்தோஷமா இருக்கு. அதில் பத்து பின்னூட்டத்துக்கு உங்க பதில்... சரி, பிரபலப்பதிவர்னு பட்டம் உங்களுக்கு யார் கொடுத்தது?

பி.பீ : சரக்கில்லாதவங்கதான் அடுத்தவங்க தர்றத வாங்கணும், இதெல்லாம் நமக்கு நாமே திட்டத்துல வந்ததுதான், உங்க பீலா பெருமாள் மாதிரி...

பீ.பெ : சரி, அதெல்லாம் இருக்கட்டும், வலையுலகத்தில் என்னென்ன புதுமை செய்திருக்கிறீர்கள்?

பி.பீ : அது பற்றி விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்...

பீ.பெ : வேண்டாங்க, கொஞ்சம் சுருக்கமா நிகழ்ச்சிக்கான அரை மணி நேரத்துல சொல்லுங்களேன், அதிர்ச்சியான தகவல்களை அதிகம் கேக்கக்கூடாது என நம் டிவியில வர டாக்டர் டக்ளஸ் பாண்டி சொல்லியிருக்காரு.

பி:பீ : ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே எல்லாத்தையும் படிச்சிட்டு கலந்து கட்டி அழகா விமர்சனம் எழுதிடுவேன்.

பீ.பெ : ஆமாமாம், படம் எடுக்கப்போவதாய் வந்த தகவலை வைத்தே படம் பார்த்து விமர்சனம் எழுதியதாய் சொல்லி பல்பு வாங்கினீர்களே, நன்றாக நினைவில் இருக்கிறது.

பி:பீ : அப்புறம் பிடிச்ச பத்துன்னு சூப்பரா ஒரு விஷயம். எல்லாரும் என்னென்னவோ எழுதினாங்க! நான் என்ன எழுதினேன் தெரியுமா? தலைப்பிரட்டை, ஓணான், பட்டாம் பூச்சி, பொன்வண்டு.... படிச்சிட்டு எல்லாம் அரண்டுட்டாங்க.

பீ.பெ : ஆகா அருமை, அருமை. அப்புறம் நீங்க எழுதிய கேரக்டர் இடுகையைப் பற்றி சொல்லுங்களேன்!

பி.பீ : பத்தே நிமிஷத்துல எழுதி போட்டேன் அந்த இடுகையை. தமிழ், இந்தி, இங்கிலீஷ் -ல இருக்கிற கேரக்டர் எல்லாத்தையும்போட்டு அதுக்கு அழகா விளக்கமும் கொடுத்தேன் பாருங்க, ஒட்டுப்பட்டையே பிச்சிக்கிச்சி.

பீ.பெ : ரொம்ப அருமையா இருக்குங்க, நேயர்களே, ஒரு சின்ன விளம்பர இடைவெளிக்கு அப்புறம் நமது பேட்டியை தொடரலாம்.

(விளம்பரத்திலிருந்து நாளை பார்க்கலாம், பிடித்திருந்தால்)

49 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Present pottukkaren

ஆரூரன் விசுவநாதன் said...

//ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே அழகா விமர்சனம் எழுதிடுவேன்.///

யாரைப் பற்றி சொல்ல வாரீங்க பிரபா

பிரபாகர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
//ஒரு சினிமா வந்துச்சின்னா மத்தவங்கல்லாம் விமர்சனம் போடறவரைக்கும் காத்திருந்து படத்தைப் பார்க்காமலேயே அழகா விமர்சனம் எழுதிடுவேன்.///

யாரைப் பற்றி சொல்ல வாரீங்க பிரபா
//
அய்யய்யோ, யாரையும் சொல்லலைங்க... இவரு ஒரு டுபாக்கூர் பதிவர். நூறுசதம் கற்பனை...

பிரபாகர்...

Unknown said...

பாலா சார் கழுகுல குடுத்த பேட்டிக்கு எதிர் பேட்டியா. அடுத்து பாலா சார் கிட்ட இருந்து ஒரு புனைவை எதிர் பார்க்கிறேன். 

(பத வச்சாச்சி. இனி ஆபீஸ் வேலையப் பாக்கலாம்)

vasu balaji said...

முகிலன் said...
பாலா சார் கழுகுல குடுத்த பேட்டிக்கு எதிர் பேட்டியா. அடுத்து பாலா சார் கிட்ட இருந்து ஒரு புனைவை எதிர் பார்க்கிறேன்.

(பத வச்சாச்சி. இனி ஆபீஸ் வேலையப் பாக்கலாம்)//

ஏம் பிரவு:>, அப்புடியா? இருக்குடி!

ஈரோடு கதிர் said...

யெப்பா..

இத்தன உள்குத்து.. பாலிடிக்ஸ்ச இது வரைக்கும் பார்த்ததில்ல

எல்லாரும் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
முகிலன் said...
பாலா சார் கழுகுல குடுத்த பேட்டிக்கு எதிர் பேட்டியா. அடுத்து பாலா சார் கிட்ட இருந்து ஒரு புனைவை எதிர் பார்க்கிறேன்.

(பத வச்சாச்சி. இனி ஆபீஸ் வேலையப் பாக்கலாம்)//

ஏம் பிரவு:>, அப்புடியா? இருக்குடி!
//
பேசும்போது கழுகுன்னு சொன்ன மாதிரி இருந்தது அய்யா, இதுதானா அது!

(அப்பா, தெரியாம எழுதின மாதிரி சொல்லி தப்பிச்சாச்சி....)

பிரபாகர்...

பிரபாகர் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...
Present pottukkaren
//
நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//முகிலன் said...
பாலா சார் கழுகுல குடுத்த பேட்டிக்கு எதிர் பேட்டியா. அடுத்து பாலா சார் கிட்ட இருந்து ஒரு புனைவை எதிர் பார்க்கிறேன்.

(பத வச்சாச்சி. இனி ஆபீஸ் வேலையப் பாக்கலாம்)
//
உன்னை நானறிவேன், என்னை நீ அறிவாய்...தினேஷ், சும்மா பாட்டுப்பாடுறேங்க!

பிரபாகர்....

பிரபல பதிவர் பிரபாகர் said...

அடச்சே.. என்ன மக்கள்ஸ் இவங்க

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு அரசியலை அநாயசமா எழுதியிருக்கேன்..

யாருக்கும் இதில் இருப்பது புரியலையே

அன்புடன்
பிரபாகர்

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
யெப்பா..

இத்தன உள்குத்து.. பாலிடிக்ஸ்ச இது வரைக்கும் பார்த்ததில்ல

எல்லாரும் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க
//
இதெல்ல உள்குத்து சாமி? எதுவும் கசியவே இல்லையே? மவுனமாத் தானே எழுதியிருக்கேன்?

பிரபாகர்...

Baiju said...

அன்னிக்கு ஈரோட்ல ஹோட்டல் சாப்பிடும் போது சொன்னீர்களே அந்த பதிவர்களைப் பற்றியா எழுதியிருக்கிறீட்கள்

பிரபாகர் said...

//பிரபல பதிவர் பிரபாகர் said...
அடச்சே.. என்ன மக்கள்ஸ் இவங்க

நான் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு அரசியலை அநாயசமா எழுதியிருக்கேன்..

யாருக்கும் இதில் இருப்பது புரியலையே

அன்புடன்
பிரபாகர்
//
மக்களே இது நான் இல்லை என்பதற்கு உதாரணம் பிரபல பதிர்வர்னு இருக்கிற அடைமொழி... நாமெல்லாம் காமெடி பீசு. அப்புறம் பிரபாகர்...னு மூணு புள்ளி வேப்பனே.... அது இல்லையே...

பிரபாகர்...

ஸ்நேக் பிரபாவின் செல்ல சைட் தொகுப்பாளினி said...

செல்லம்..

நீ நல்லா எழுதறடா செல்லம்

கன்டினியூடா செல்லம்

பிரபாகர் said...

//Baiju said...
அன்னிக்கு ஈரோட்ல ஹோட்டல் சாப்பிடும் போது சொன்னீர்களே அந்த பதிவர்களைப் பற்றியா எழுதியிருக்கிறீட்கள்
//
என்னோட உண்மையான் நண்பர், வாசகர் என நினைத்ததற்கு.... குழி தோண்டி புதைச்சிட்டீங்களே சாமி! பதிவைப் பத்தியா அன்னிக்கு பேசினோம்?... பிரபாகருக்கு எதிராய் ஈரோட்டில் சதி....

பிரபாகர்...

மூனு புள்ளி முனுசாமி said...

அதென்ன பிரவு
மூனு புள்ளி நியூமராலஜியா

பிரபாகர் said...

//ஸ்நேக் பிரபாவின் செல்ல சைட் தொகுப்பாளினி said...
செல்லம்..

நீ நல்லா எழுதறடா செல்லம்

கன்டினியூடா செல்லம்
//
அடுத்து குடும்பத்துல குழப்பம் வர அளவுக்கு பாளினி பேர்ல பின்னூட்டமா? நடத்துங்க சாமி, நடத்துங்க....

பிரபாகர்....

பிரபாகர்... said...

ஏனய்யா இப்படி கும்முகுறீர்கள். எனக்கு உள்குத்து அரசியல் எழுத உரிமையில்லையா என்ன?

பிரபாகர் said...

//மூனு புள்ளி முனுசாமி said...
அதென்ன பிரவு
மூனு புள்ளி நியூமராலஜியா
//
ஆமாம் கதிர், நேர்ல சொல்லுறேன்...

பிரபாகர்...

பிரபாகர் said...

// பிரபாகர்... said...
ஏனய்யா இப்படி கும்முகுறீர்கள். எனக்கு உள்குத்து அரசியல் எழுத உரிமையில்லையா என்ன?
//
வாங்க ராசா வாங்க, எத்தனை நாளா காத்திருந்தீங்க?

பிரபாகர்...

பிரபாகர் said...

நான் மெயில் பார்க்காமல், ஆஃப்லைனர் மெசேஜ் கூட பார்க்காமல் சின்சியராக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அது புரிகிறதா?

பிரபாகர்...

பிரபாகர் said...

பிரபாகர, செல்லம், முனு புள்ளி... வீட்டுக்கு கிளம்புறேன்... போயிட்டு தொடருறேன்... பை..

பிரபாகர்...

பிரபாகர் said...

// பிரபாகர் said...
நான் மெயில் பார்க்காமல், ஆஃப்லைனர் மெசேஜ் கூட பார்க்காமல் சின்சியராக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு அது புரிகிறதா?

பிரபாகர்...
//
புள்ளி வெச்சாச்சா? ஐயோ இனி (அலங்)கோலம் தான்...

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

யோவ் பிராபள பிரபா அண்ணே
பைஜு மட்டும்தான் நண்பனா

நாங்க எல்லாம் எதிரியா

எம்சிஏ-தோழி said...

நீங்க படிக்கும் போது இருந்த மாதிரியே இளமையா இருக்கீங்க பிரபாகர்

உங்களுக்கு வயசானாலும் உங்க எழுத்தும் இன்னும் இளமையோடவே இருக்கு

சி.என்.அண்ணாதுரை said...

அன்புத் தம்பி பிரபாகர்

நீ, இவ்வளவு அரசியல் சாணக்கியத்தனம் செய்வாய் என்று தெரிந்திருந்தால் நீ குழந்தையாக பிறந்தபோதே இந்த நாட்டின் முடிசூடா மன்னனாக அறிவித்திருப்பேன்

எம்.ஜி.ஆர் said...

என் இனிய இரத்தத்தின் இரத்தமே

நீ இவ்வளவு பெரிய பொடி வைக்கும் கில்லாடியா..
உன்னை பள்ளியில் படிக்கும் போதே அடையாளம் காணாமல் போனேனே நண்பா..

இந்த பதிவில் நீ வைத்திருக்கும் அரசியல் பொடி மட்டும் இருந்திருந்தான் என் அதிமுக இன்று செழித்திருக்குமே
வாழ்க பிரபாகர் நாமம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//அய்யய்யோ, யாரையும் சொல்லலைங்க... இவரு ஒரு டுபாக்கூர் பதிவர். நூறுசதம் கற்பனை...

பிரபாகர்...
//

நீங்க யாரப் பத்தி சொல்றீங்கன்னு ஓரளவு யூகிக்க முடிதுங்களே

தெடாவூர் பஞ்சாயத்து தலைவர் said...

என்றா பிரவு..

நீ இம்புட்டு பெரிய அறிவாளியா
என்னம்மா கலக்குறே
அடேய்.. சீக்கிரம் ஊருக்கு வாடா தம்பி


நிறைய பஞ்சாயத்து காத்துக்கிடக்கு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆகா.. ஆருங்க அது.. எம்.சி.ஆரு, அண்ணா எல்லாம் வந்துட்டாங்க இந்த இடுகைக்கு..

துபாய் செந்திலின் அறை நண்பன் said...

செந்தில், இந்த அரசியல் சாணக்கியனைப் புகழ்ந்தா கனவில் புலம்பினீர்கள்

வாழ்க்

வலையுலக நாட்டாமை said...

த்....த்... தள்ளுங்க... தள்ளுங்கப்பா

பிராபகர் தான் இனிமேல் நாட்டாமை

நாட்டமை பிரபாகர் வாழ்க

எழுத்துப்பிழை said...

யாருய்யா அது நாட்டாமைக்கு நாட்டமைனு எழுதினது.


தப்பை திருத்திக்கொள் இல்லாவிடில் வருத்தப்படுவாய்

Unknown said...

SP anony & name/URL optionai thookki vidunga Prabha

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

யாருங்க படத்தப் பார்க்காமலேயே விமர்சனம் எழுதறது..?

அவரா இருக்குமோ.. இல்லீன்னா இவரா இருக்குமோ?

ஆத்தூர் எம்.எல்.ஏ said...

அரசியல் அரிச்சுவடியே

உன் தாள் பணிகிறேன்
வலை அரசியலை பிரித்து மேய்ந்தது போல் எனக்கும் அரசியலை கத்துக்கொடுங்க தலைவரே

விஷாக் த/பெ பிரபாகர் said...

அப்பா, எப்பப்பா இப்படி எழுதுவதை நிறுத்துவீங்க

சப்பான் சிக்கன் said...

baiju சொல்வது உண்மைதான்
என்னை அன்று தின்னும் போது நீங்கள் இது போல் எழுதுவதாக சொன்னதை உங்கள் வாய்க்குள் இருந்து கேட்டேனே

பிரபாகர் said...

//முகிலன் said...
SP anony & name/URL optionai thookki vidunga Prabha//
நன்றி தினேஷ்... தூக்கிட்டேன்...

பிரபாகர்...

Paleo God said...

whats happening here SP! ?

செ.சரவணக்குமார் said...

ஹா ஹா.. ஸ்னேக் பிரபா ரொம்ப நல்லாயிருக்குங்க தல.

கலகலப்ரியா said...

புரியலண்ணா... எனிதிங் சீரியஸ்..?

பழமைபேசி said...

நடக்கட்டு நடக்கட்டு...

மரா said...

ரொம்ப நல்லா இருக்குங்க பொனைவு :)

தோழமையுடன்
மரா
தாம்பரம்.

sudhanthira said...

உங்களின் முயற்ச்சி நன்றாக இருக்கிறது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Anonymous said...

அண்ணே, விளம்பரம் எப்ப முடியும்,, அடுத்து உங்க நிகழ்ச்சி எப்ப ?? ...
பின்னூட்ட குழப்பத்தினால்,மறுபடியும் இடுகையை படித்து பின்னூட்டம் போட வைத்த அனானியே......
உனக்கு ...பட CDய அனுப்பி வைக்கிறேன்...
சத்தியமா இந்த ... புள்ளி பிரபா அண்ணனோடது கிடையாது....

Anonymous said...

//பீ.பெ : ஆகா அருமை, அருமை. அப்புறம் நீங்க எழுதிய கேரக்டர் இடுகையைப் பற்றி சொல்லுங்களேன்! //

ithula etho ulkuththu irukkurathu maathiri thriyuthe :)

settaikkaran said...

இதுலே ஒண்ணும் உள்குத்து இல்லியே....? :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருண்ணே.. அந்த பிரபலம்?..
.சின்ன வயசில எங்க பாட்டி சொல்லும், உனக்கு கற்பூரபுத்தினு..

வெளியூர்காரனத்தானே சொன்னிங்க... ஹி..ஹி.

( ஸ்நேக் சீற ஆரம்பிச்சுட்டார்.. வெளியூர் ஊ.....ஊ...)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB