நல்லாக் கேக்குறான்யா டீட்ட்ட்ட்டேய்லு... ன்னு ஆசான் ஒரு இடுகை போடுறப்போ சிஷ்யன் நாம சும்மாயிருந்தா எப்பூடி?... நம்ம பங்குக்கு அது ஏன்னு கேள்வி கேட்டு ஒரு இடுகை போட்டுடுவோம்ல....
1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்?
2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா'ன்னு
கேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்?
3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்?
4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் இடுகை போட்டா, பதிலுக்கு நாமும் இடுகையிடனும்னு தோணுதே... அது ஏன்?
5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்?
6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்?
7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?
8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்?
9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்?
10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்?
11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்?
மிச்சர்கடை
4 weeks ago
14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல அய்யாவை அன்புடன் மேடைக்கு அழைக்கிறேன்.......
இத்தனை கேள்வியை ஒரே பதிவுல கேட்டா எப்படிங்ணோவ் பதில் சொல்றது.... நீங்களாச்சு உங்க ஆசானாச்சு...ஆளைவுடுங்க சாமி..:))
தலைப்பைப் பார்த்ததுமே இது இப்படித்தான் இருக்குமுன்னு தெரிஞ்சும், எல்லாத்தையும் படிச்சிட்டு ஈனா தீனா கூனா மாதிரி முழிக்கிறோமே, அது ஏன்?
இந்த மாதிரியும் பதிவு போடலாம்னு எனக்கு தோணலியே ஏன்?
ஆஹா நீங்களுமா பிரபா?
குருவும் சிஷ்யனும் சேர்ந்துக்கிட்டு என்னா ஆட்டம் போடுறீங்க.
ஏன்?ஏன்?ஏன்?ஏன்?ஏன்?
||அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு,||
அடப்(ப்ப்ப்ப்)பாவி!!!!
குருவுக்கு போட்டியா? நடத்துங்க.......
ம்ம்.. நல்லாத் தான் கேக்குறீங்க கேள்விய.. ;))
7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு
தெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்?///
எனக்கு ரொம்ப புடிச்ச "ஏன்?" இந்த ஏன் தான் சார் .
ஹி.ஹி.ஹி.....................
:-D))
//
4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் இடுகை போட்ட, பதிலுக்கு நாமும் இடுகையிடனும்னு தோணுதே... அது ஏன்?
//
என்னங்க நாங்க கேள்விகேட்க எதையுமே விடமாட்டேங்கறீங்க
போன் அடிச்சா “விசில் ஊதுதே” அது ஏன் -னு மொதல்லு சொல்லுங்க சிஷ்யா.
பிரபாகர் செமையா இருக்கு! எனக்கும் இருக்கும் சந்தேகங்கள் :-)
Post a Comment