கேரக்டர் : வானம்பாடிகள் அய்யா...

|

வானம்பாடிகள் அய்யா... வாழ்வியல் பாடம்...

அய்யாவைப் பற்றி ஏதாவது ஒரு இடுகை இடவேண்டும் என்பது எனது நீண்ட நாள் எண்ணம்.தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில் எழுதுவது மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் எண்ணத்தை எழுத்தாக்கி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

இந்த வாரம் மட்டுமன்றி எல்லா வாரமும் எங்கள் மனத்தில் ஸ்டாராக இருக்குமென் ஆசான் வானம்பாடிகள் அய்யாவை நினைத்து வியக்காத நாளே கிடையாது. ஆசானின் ஒவ்வொரு செய்கையும் சிஷ்யனுக்குப் பிடிக்கும் என்பது நியதி. ஆனால் இவர் விஷயத்தில் இவரைத் தொடர்ந்து படிப்பவர்கள் அனைவருக்குமே மிக மிகப் பிடிக்கிறது என்பதில்தான் இருக்கிறது இவரின் எழுத்தின் வெற்றி.

நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ? அழைக்கும்போது பதிலுக்கு அவர் சொல்லும் வார்த்தையிலிருந்தே(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும். குழம்பிய மனத்துடன் பேச ஆரம்பித்தாலும் பேசி முடிக்கும்போது தெளிவாக இருக்கும்.

இடுகை ஒன்றுக்கு அவர் இடும் பின்னூட்டத்தை வைத்தே அவர் எவ்வாறு அதை ரசித்திருக்கிறார் என்பது தெள்ளெனத் தெரியும். பல இடுகைகளை அவரின் பின்னூட்டங்களைப் படித்தபின் தான் படிப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறேன்.

இலங்கை விஷயம் என்னை மிகவும் பாதிக்க ஆரம்பித்தது இவரைப் படிக்க ஆரம்பித்த பிறகுதான். பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். தொடர்ந்த சோகங்கள் என்னை சோர்வில் ஆழ்த்தினாலும் சரி செய்து இயல்பாகியது இவரால்தான்.

நேர்மையான அரசாங்க ஊழியரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேன்... ஆனால் பழகிகொண்டிருப்பது இவரோடு மட்டும்தான். சந்தித்தது மூன்று முறைதான், ஆனால் மூன்று ஜென்மம் பழகியது போல் உணர்வு பேசும்போது, பார்க்கும்போது.

இவரின் ஒவ்வொரு இடுகையும் ஒவ்வொரு தினுசாய், தரத்தில் ஒன்றையொன்றி விஞ்சி இருக்கும். நறுக், கேரக்டர், வடிவேலுவை வைத்து எழுதப்படும் காமெடிகள், சமுதாய அக்கறையோடு எழுதும் கட்டுரைகள், காதல் ததும்பும் கவிதைகள், அதி சூர மொக்கை, மரண மொக்கை... என எல்லாம் இவரின் எழுத்தாற்றலை பறைச்சாற்றும். இவரின் கவிதைகளின் முதல் ரசிகன் நான். இப்படியெல்லாம் கூட யோசிக்க முடியுமா என வியக்க வைப்பவை இவரின் கவிதை வரிகள்...

வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார். ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா? எப்படி இருக்கார்?’...’அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க?... அட்லீஸ்ட் சென்னைக்காவது தாத்தாவீட்டுக்கு கூட்டிட்டுப் போங்கப்பா!’ ‘அப்பா கம்பெடிஷனுக்கு சென்னை போறேன், அப்படியே தாத்தாவைப் பார்த்துட்டு வரட்டுமா?’

இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை. இந்த சொந்தம் இன்னும் மெருகேறி தொடர்ந்திடவும், அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.

31 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

VISA said...

characterukea charactera?

ஈரோடு கதிர் said...

||வனம்பாடிகள் அய்யா||

யோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே?

ஈரோடு கதிர் said...

||கதிருக்கும் ஒரு நன்றி||

காசா பணமா...

அதென்ன ஒரு நன்றி

கொஞ்சம் சேர்த்துத்தான் சொல்றது

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
||வனம்பாடிகள் அய்யா||

யோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே?
//
பப்ளிஷ் பண்ணி சரிபண்றதுக்குள்ள படிச்சதுமில்லாம, நக்கலு! சுட்டலுக்கு நன்றி கதிர்! சரி செய்துவிட்டேன்...

ஈரோடு கதிர் said...

||நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ? ||

அப்போ.. நாங்க எல்லாம் அட்டு பீசா!!!??

ஈரோடு கதிர் said...

||காதல் ததும்பும் கவிதைகள்||

ததும்பாம, கசியறது புடிக்காதா!!??

ஈரோடு கதிர் said...

||தமிழ்மணம் ஸ்டாராக இருக்கும் இந்த வாரத்தில்||

அண்ணே, நீங்க நட்சத்திரமா வரும் போது எழுதியிருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்ல

ஈரோடு கதிர் said...

||அப்பா... சிங்கப்பூர் எப்பப்பா கூட்டிட்டு போறீங்க?||

அதையேதான் நானும் கேக்குறேன்

என்னை எப்ப சிங்கப்பூர் கூட்டிட்டு போறீங்க பிரபா?

ஈரோடு கதிர் said...

||பப்ளிஷ் பண்ணி சரிபண்றதுக்குள்ள படிச்சதுமில்லாம, நக்கலு! ||

அடிங்...

அதேன்... சரி பண்ணிட்டு வெளியவுட மாட்டீங்களா

எனக்கு சுட்டி கொடுத்த பிறகுதானே படிச்சேன்

என்ன இருந்தாலும் அய்யா கால ஒடச்சுப்புட்டு இப்ப ஒட்ட வச்சா மட்டும் அவருக்கு வலிக்காதா!!!???

ஈரோடு கதிர் said...

பிரபாவின் மனதில் கதாநாயகனாக வீற்றிருக்கும் பாலா அண்ணாவுக்கு நட்சத்திர வாழ்த்துகள் மீண்டும் ஒரு முறை...

காலையில கும்மியடிக்க சான்ஸ் கொடுத்த பிரபாவுக்கும் நன்றி

நர்சிம் said...

பகிர்விற்கு நன்றி பிரபா.

க.பாலாசி said...

//இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை.//

இவ்விடயத்தின் நான் கொஞ்சம் பாக்யசாலி...

வேறென்ன சொல்ல உங்களைத்தாண்டி...

Prathap Kumar S. said...

//யோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே?//

:))

பால சார் பற்றிய பகிர்வுக்கு நன்றி...

vasu balaji said...

//ஈரோடு கதிர் said...
||வனம்பாடிகள் அய்யா||

யோவ்.. ஏய்யா அய்யா கால ஒடைச்சிப்புட்டே?//

ஓ. அதானா? என்னடா எழும்பும்போதே காலு இந்த வலி வலிக்குதேன்னு பார்த்தேன்.

vasu balaji said...

//(‘சொல்லுங்க பிரபா’...’சொல்லுங்க அய்யா’, ‘ம்... சொல்லுங்க’...)அவர் எந்த மாதிரி பேசப்போகிறார், என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியும்.//

அய்ங்! இதெல்லாம் நெம்ப ஓவரு. எனக்கே நான் என்ன பேசுறேன்னு தெரியாது:))

//பல புதிய நட்புக்கள் கிடைக்கப்பெற்றதும் இவரால் தான். //

குடுத்த காசுக்கு மேல கூவுறான்யாங்கொய்யால:))

//வாரத்திற்கு ஒரு முறையாவது கேட்காமல் இருக்க மாட்டார்.//

யாரு:))

// ‘அய்யா அய்யா சொல்வீங்களே, அந்த தாத்தா கிட்ட இன்னும் பேசறீங்களா?//

ஒரு பச்ச புள்ள இன்னும்னு கேக்குதுன்னா என்னத்த சொல்லி தொலைஞ்சீரு. அறுவை கிராக்கின்னா:)).

//இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும்//

யப்பா! சாமி! எங்க காலு?..நானே கோணில சுத்தி முச்சந்தில விட்ட பூனை மாதிரி சுத்துறேன். இதுல வழி வேற நடத்துறாய்ங்க.

ம்ம். எப்புடியோ அன்புக்கு நன்றி பிரபாண்ணா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்விற்கு நன்றி

சத்ரியன் said...

//ஈரோடு கதிர் said...
||நட்பு பாராட்டுவதற்கு இவரினும் சிறந்தவர் எவரேனும் உண்டோ? ||

அப்போ.. நாங்க எல்லாம் அட்டு பீசா!!!?//

அப்பு ,

அதாம் கேக்குறாரு இல்ல. சொல்லுங்க!

சத்ரியன் said...

//||காதல் ததும்பும் கவிதைகள்||

ததும்பாம, கசியறது புடிக்காதா!!??

AUGUST 28, 2010 2:14 PM
ஈரோடு கதிர் //

பிரபா,

இந்த கதிருக்கும் ஒரு இடுகைய போட்டுறேன் சாமீ.

சத்ரியன் said...

பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்.

நன்றி பிரபா.

VELU.G said...

அய்யா பற்றி நல்ல பதிவு

//
அய்யா அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இன்னும் பல எழுதி எங்களை வழிநடத்தி சென்றிடவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி அறிமுகம் செய்து வைத்த கதிருக்கும் ஒரு நன்றி சொல்லி முடிக்கிறேன்.
//

ரிபீட்டு

கலகலப்ரியா said...

நெகிழ்வு.... இப்டியே இருக்கட்டும்ணா...

(நிறையப் பேரு ஐய்யான்னு எழுதிட்டு.. கெழ போல்ட்டு,,, சொல்ற அளவுக்குப் போயிடுறாங்க... அந்த அறிவு ஜீவிகளைத் தீட்டாமா விடறதில்ல ஒரு நாள்...)

செ.சரவணக்குமார் said...

அய்யாவைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள் பிரபா. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

நல்ல பகிர்வு. நன்றி பிரபா

settaikkaran said...

சீடருக்கு வாழ்த்துகள்; சீடரின் ஆசானுக்கு வணக்கங்கள்! :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ம்ம்... திருநெல்வேலிக்கே அல்வாவாங்கற மாதிரி.. ஒரு இடுகை.

இன்னும் கொஞ்சம் விளக்கமா எழுதியிருக்கலாமோ..

Paleo God said...

Super SP! :)

a said...

நல்ல பகிர்வு........

பத்மா said...

கலகலப்பிரியா அவர்கள் சொல்றா மாதிரி ...படித்தவுடன் மனசுக்குள் ஒரு நெகிழ்வு ..
நல்லதொரு நேரத்தில் நல்லதொரு இடுகை

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இவரின் நட்பு மட்டும் இன்னும் சற்று முன்னதாய் கிடைத்திருக்கக் கூடாதா என ஏங்காத நாளில்லை.//

என்ன பிரதர்.. அதுதான் நட்பு கிடைச்சிருச்சே.. அப்புறம் எதுக்கு இன்னமும் ஏங்கிக்கிட்டு இருக்கீங்க..

புரியலையே...

இப்போது உள்ள நட்பை வைத்து..ஏங்காம.. சந்தோசமா இருங்க பிரதர்...

Mahi_Granny said...

நட்பு பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள். கால ஒடச்சதும் காலையிலே வலியோடு எழுந்ததும் இங்கு தான் சாத்தியம் .ரசனையான கமெண்ட்

Unknown said...

//.. அய்ங்! இதெல்லாம் நெம்ப ஓவரு. எனக்கே நான் என்ன பேசுறேன்னு தெரியாது:)) ..//

ஏன் சரக்குல இருப்பீங்களோ..??(சும்மா.. காமெடி..!!) :-D))

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB