காதலால்...

|

காதலால்...


சொல்லாது சொல்லி
கேளாமல் கேட்டு
பார்க்காமல் பார்த்து
சிரிக்காமல் சிரித்து
சிந்தையை தொலைத்தேன்...
சேர்ந்தந்த காதலால்..

புரியாத வார்த்தைகளும்
பொருள் பொதிந்து கவியாகும்
புன்னகைக்கும் என்னவளின்
பூஞ்சிரிப்பை பார்க்கையினில்...

தெரியாத விஷயங்களும்
தெள்ளெனத் தெளிவாகும்
குறுகுறுக்கும் விழிபார்த்து
கிறுகிறுக்கும் தருணமதில்...

அனல் நோகும் தேகமும்
ஐஸ்தொட்ட உணர்வாகும்
அருகாமை அவளிருந்து
அன்போடு தழுவுகையில்...

கோபத்திற்கு என்மேல்
கோபமடி கண்ணே
காலமெல்லாம் இருந்ததை
கழட்டிவிட்ட காரணத்தால்...

13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சத்ரியன் said...

பிரபா,

லவ்ஸ்ஸூ....... கவிதை!

சத்ரியன் said...

ஏய்... இங்க பாருங்கப்பா. வடை இன்னிக்கி எனக்கு கெடைச்சிருச்சி.

சங்கவி said...

பங்காளி...

//அனல் நோகும் தேகமும்
ஐஸ்தொட்ட உணர்வாகும்
அருகாமை அவளிருந்து
அன்போடு தழுவுகையில்...//


கவிதை எல்லாம் காதல் ரசம் சொட்டுது..........

முகிலன் said...

கவிதை சூப்பர் பிரபா..

பாலா சாரின் எதிர் கவுஜைக்கு காத்திருக்கேன்.

கலகலப்ரியா said...

அனுபவிச்சு எழுதி இருக்கீங்க... ரொம்ப நல்லாருக்குங்கண்ணா...

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு

நிலாமதி said...

உங்களவளின் அன்பு காலமெல்லாம் நிலைக்கணும். உணர்வின் வெளிப் பாட்டுக் கவிதை அழகு .பாராட்டுக்கள்.

தமிழ் யாளி said...

கோபத்திற்கு என்மேல்
கோபமடி கண்ணே
... இந்த 4வரிகள் என்
இதயம் தொட்டது .
மீதம் உள்ள வரிகளில்
புதுமை வேண்டும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோபத்திற்கு என்மேல்
கோபமடி கண்ணே
காலமெல்லாம் இருந்ததை
கழட்டிவிட்ட காரணத்தால்...//

சபாஷ்!!

ஜெரி ஈசானந்தன். said...

Nice.

க.பாலாசி said...

செமயா இருக்குங்கண்ணா... வார்த்தைகளை கோர்த்திருக்கீங்கன்னுதான் சொல்லணும்...

மாதேவி said...

"என்னவளின்
பூஞ்சிரிப்பை பார்க்கையினில்..."
ம்..ம்..அழகிய கவிதையும் பிறந்தது.

வெறும்பய said...

புரியாத வார்த்தைகளும்
பொருள் பொதிந்து கவியாகும்
புன்னகைக்கும் என்னவளின்
பூஞ்சிரிப்பை பார்க்கையினில்...

//

Nice Bro..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB