பிரபலப்பதிவர் பீதாம்பரம் - கலந்துரையாடல் - தொடர்ச்சி...

|

நேற்றையப் பேட்டி இங்கே...

விளம்பர இடைவெளிக்குப்பின் க்ளோஸ்-அப்பில் பீலா பெருமாள்சாமியினைக் காண்பிக்க, 'வெல்கம் பேக்... இன்று ஒரு வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபலப்பதிவர் பீதாம்பரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கிறோம், இதோ அவரிடம் நமது அடுக்கடுக்கான கேள்விகளும் அதற்கான அழகான பதில்களும்...'
பீ.பெ : பால்ய நினைவுகள்னு ஒரு இடுகை எழுதினீர்களே, அதைப்பற்றி சொல்ல முடியுமா?

பி.பீ : ஆஹா, அது ஒரு புதுமையான அனுபவம் ஆச்சே. சிறுவயதில் பிறந்த முதல் நாளிலிருந்து ஒருவருடம் வரைக்கும் ஓடியாடி நான் செய்த எல்லாக் குறும்புகளையும் நினைவுப்படுத்தி அருமையா எழுதியிருந்தேன். உகாண்டாவுல இருந்து ஒருத்தர் படிச்சிட்டு ஒரு மணி நேரம் பேசினாரு.

பீ.பெ : ஒரே முறைதானே உங்களிடம் பேசியிருப்பார்?  சிலபேர் வாழ்க்கையோட கடைசி நாளுக்கு முன்னால இது மாதிரி பேசறதுண்டு. சரி, அரசியல் பற்றியும் அருமையா அதிரடியா எழுதறேங்களே அது எப்படி?

பி.பீ : அதிலதான் நம்ம ட்ரிக் இருக்கு. வெள்ளை மாளிகையில் ஊழல்,புஷ்-சின் வாரிசுப் போராட்டம், கிளின்ண்டனின் கால் சுளுக்குன்னு எழுதறதெல்லாமே பத்திரிக்கையில படிச்ச அமெரிக்க அரசியல் தானே. இதிலே முக்கியமான விஷயம் என்னான்ன, நம்மளோட பார்வை எப்போவுமே உலக அளவில இருக்கும்.

பீ.பெ : அப்புறம் லைவ்  ஆக்சன் என பதினைந்து நாளுக்கு ஒரு முறை இடுகை போட்டு பரபப்பை ஏற்படுத்துக்கிறீர்களே, அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.

பி.பீ : அருமையான கேள்வி. கலக்கிட்டீங்க...  ச்சை.. பின்னூட்டம் ஸ்டைல்-ல பதில் வருது. உதாரணமா ரோட்டுல ஒரு குழி இருக்குதுன்னு வெச்சுக்குங்க, அதுல நிறைய பேரு விழப்போவாங்க, வண்டிய குழிக்குள்ள விட்டுட்டு தடுமாறிப் போவாங்க. கேமிராவோட அங்க போய் உக்காந்திருந்து, வலுவா ஒருத்தர் விழுந்து அடிபடறத போட்டோ எடுத்து இடுகையாப் போடுவேன். இதுக்கு சரியான வரவேற்பு. சில பேர் போன் பண்ணி எங்க ஏரியாவுல லைவ் ஆக்சனுக்கு மேட்டர் இருக்குன்னு சொல்லுவாங்கன்னா பாத்துக்கோங்களேன்...

பீ.பெ : ஆஹா, என்ன இளகிய மனசு. சரி ஒரு இடுகை பிரபலமாக என்ன செய்ய வேண்டும்?
 
பி.பீ : இடுகை பேரை பிரபலம்னு வைக்கலாம்... ஹா, ஹா... ஜோக்குக்காக சொன்னேன். எழுதற விஷயம் மனசுல அப்படியே ஓட்டனும்.... பாருங்க இப்ப ஓட்டனும்னு சொன்னதுல இருந்தே ஒரு இடுகைக்கான தலைப்பு 'பசை'ன்னு கிடைச்சிடுச்சி. என்னோட அடுத்த இடுகை 'பசை' எப்படி ஓட்டுதுன்னு மட்டும் பாருங்க...
 
பீ.பெ : சரி, உங்களோட எதிர்கால லட்சியம் என்னவென்று உங்க வாசகர்களுக்கு சொல்ல முடியுமா?
 
பி.பீ : இந்தியாவில இடுக்கிற எல்லா மொழியிலயும் பிளாக் ஆரம்பிக்கணும். எல்லா மொழியும் சரளமா தெரிஞ்ச ஒரு மொழிபெயர்ப்பாளர தேடிக்கிட்டிருக்கேன். எனது தமிழ்ல வர இடுகைகள் எல்லாத்தையும் ஒரே நாள்ல எல்லா மொழியிலும் ரிலீஸ் பண்ணப்போறேன்.
 
பீ:பெ : கடைசியா மொக்கை, மரண மொக்கை இது பற்றியெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமா?
 
பி.பீ : இந்த இடுகையோட முன்னாடி இடுகை மொக்கைன்னா இது மரண மொக்கை...
 
பீ:பெ : நன்றி பிரபலப்பதிவர் பீதாம்பரம் அவர்களே! எங்கள் நேயர்களின் பொன்னான நேரத்தை பாழடித்து உங்கள் பிதற்றலான கருத்துக்களை தெரிவித்ததுக்கு மிக்க நன்றி. இன்றோடு இந்த ப்ரோக்ராமே காலி. விதியிருந்தால்  உங்களை மீண்டும் சந்திக்கிறேன் எனச் சொல்லி உங்களிடமிருந்து பிரியா விடை பெறுவது உங்கள் பீலா... பெருமாள்சாமி..

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

சத்ரியன் said...

// இன்றோடு இந்த ப்ரோக்ராமே காலி. விதியிருந்தால் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் //


நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு, பொறவு என்னத்துக்கு இந்த கொலவெறி-ன்னு கேக்கறேன்.?

vasu balaji said...

நல்லாத்தானே போய்க்கிட்டிருக்கு, பொறவு என்னத்துக்கு இந்த கொலவெறி-ன்னு கேக்கறேன்.?//

சத்ரியன ரிப்பீட்டிக்கிறேன்

வால்பையன் said...

//கடைசியா மொக்கை, மரண மொக்கை இது பற்றியெல்லாம் விளக்கம் சொல்லமுடியுமா? //


உங்களை தவிர வேறு யாராவது இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறிங்க!

:)

Unknown said...

இருந்தாலும் வானம்பாடிகள் சாரையும் நைஜீரியா ராகவன் அண்ணாச்சியையும் இப்பிடி ஓட்டி இருக்க வேண்டாம்

sathishsangkavi.blogspot.com said...

//
பீ.பெ : ஆஹா, என்ன இளகிய மனசு. சரி ஒரு இடுகை பிரபலமாக என்ன செய்ய வேண்டும்?

பி.பீ : இடுகை பேரை பிரபலம்னு வைக்கலாம்... //

:)))

settaikkaran said...

ஓ.கே! ரைட்டு! :-)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB