கிருஷ்ணாவுக்கு ஆத்திரமாக வந்தது. எவ்வளவுதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் இல்லை, எப்போதும் உடன் வேலை செய்பவள் தட்டிப் பறித்துவிடுகிறாள்.
அவன் வேலை பார்ப்பதொரு எம்.என்.சி யில். பாருங்களேன், ஒரு விஷய்த்தை அவன் தான் புதிதாய் முனைப்படுத்திச் செய்வான், ஆனால் கடைசியில் அவள் வலிய நுழைந்து சின்னதாய் ஏதாவது செய்து, படம் காட்டி அவனை ஒன்றுமில்லாமல் செய்து எல்லாம் செய்தவள் போல் பெயர் வாங்கிவிடுவாள்.
கிருஷ்ணனுக்கு கடும் எரிச்சல், ஒன்றும் செய்ய இயலவில்லையே என. எப்படி காய் நகர்த்தினாலும் அவள் சரியாய் அதை பிளாக் செய்து (பிரகாஷ்ராஜ் வ.ரா வில் சொல்வதுபோல்தான்) அவன் திட்டங்களை தவிடுபொடியாகச் செய்வதை கொஞ்சமும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இதே யோசனையில், அவனால் இருக்கிற வேலையையும் சரியாக செய்ய இயலாமல் போக குழப்பம்தான் அதிகரித்தது. இரவு போனில் மகனுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, 'அப்பா, தினேஷ் எங்கிட்ட சண்டை போட்டுகிட்டே இருந்தால்லப்பா, இனிமே சண்டைக்கே வரமாட்டான்' என சொல்லவும் ஆர்வமாய், 'தம்பி என்ன செஞ்சிங்கப்பா?' எனக்கேட்டான்.
'அப்பா, டீச்சர் வர நேரமாப் பாத்து அவங்கிட்ட வம்புக்கு இழுக்கிற மாதிரி ஓங்கி அடிச்சேன். அவன் என்னை திரும்ப அடிக்க ஆரம்பிக்கும்போது டீச்சர் வந்தாங்களா, பாத்துட்டு அவனை பின்னி எடுத்துட்டு எங்கிட்ட சாரி கேட்க சொன்னாங்க. இனிமே எப்போ அடிச்சாலும் அவங்ககிட்ட சொல்ல சொல்லியிருக்காங்க. அவன் இப்போ ஃபிரண்ட் ஆயிட்டான், எங்கிட்ட பயந்துகிட்டிருக்கான்'.
'வீணா சண்டைக்கு போகக்கூடாது தம்பி' என அறிவுறுத்திய கிருஷ்ணனுக்கு அவன் ஸ்மார்ட்டாக வேலை பார்க்கவில்லை என்பதும் அவனது பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதும் இப்போது தெளிவாய்ப் புரிந்தது.
மிச்சர்கடை
4 weeks ago
9 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
கதம்..கதம்...
இப்பிடிங்கிறீங்க....ரைட்...
அடப்பாவி..இன்னைக்கு வடை எனக்கா?.
சூடா இருக்குற மாறி தெரியுது?...
Smart:)
// அவன் ஸ்மார்ட்டாக வேலை பார்க்கவில்லை என்பதும் அவனது பிரச்சினையை எப்படி அணுகுவது என்பதும் இப்போது தெளிவாய்ப் புரிந்தது. //
இந்த புரிதல் அவசியமான ஒன்றுங்க... நம் வேலையை மற்றவர்கள் திருட அனுமதிக்க கூடாது... அதையும் மீறி திருடினால்.. போட்டு பார்த்துடணும்..
அதானே! (தீட்டிய திட்டம் என்னவோ? :-)
//நம் வேலையை மற்றவர்கள் திருட அனுமதிக்க கூடாது... அதையும் மீறி திருடினால்.. போட்டு பார்த்துடணும்..//
காக்க காக்க டயலாக் மாதிரி போட்டுத் தாக்கறீங்கண்ணே!
நல்ல கதை.. ஆமா அவளை மடக்க என்ன திட்டம் தீட்டினானோ?
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
|| நல்ல கதை.. ஆமா அவளை மடக்க என்ன திட்டம் தீட்டினானோ?
August 5, 2010 7:01 AM
Anonymous Sweatha Sanjana said...
பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!||||
ரிப்பீட்டேய்... :))))))))))))))))))))))))))))))))))))
சின்னதாய் ஆனால் ஷார்ப்பாய் ஒரு கதை. நைஸ் :)
Post a Comment