நான்/கடவுள்...

|

என் அன்பான தினேஷ் கடவுள் பற்றிய தொடர் இடுகையை எழுதச் சொல்ல, கொஞ்சம் தாமதமாய் இதோ களத்தில். எல்லா மதங்களும் போதிக்கும் விஷயங்கள் அன்பு, அகிம்சை, நல்லொழுக்கம் என்பதுதான் என்பதை வலியுறுத்திச் சொல்லி, எல்லா மதத்திலும் எனது உயிர்க்கினிய நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்து நான் சார்ந்திருக்கும் மதத்தில் எனக்குண்டான கடவுள் நம்பிக்கை, அது பற்றிய எனது எண்ணங்களை உங்களோடு பகிர எண்ணம்!

எந்தக் குழந்தைக்கும் அதன் பெற்றவர்களைச் சார்ந்தே கடவுளைக் கும்பிடும் பழக்கம் வருகிறது என்றாலும் பின்னாளில் வளரும் சூழல் எல்லாவற்றையும் மாற்றி புரட்டி போட்டுவிடும் என்பதுதான் நிதர்சன உண்மை.

சிறு வயதிலேயே அப்பாவின் அன்பான கண்டிப்பால் வளர்ந்தேன் என்பதால் அப்பா வணங்கும் முருகரை ரொம்ப பிடிக்கும். திருமுருக பக்தர்கள் தெய்வீகப்பேரவை என்று ஆரம்பித்து அதன் குருசாமியாக இன்றும் இருக்கிறார். என்னைப் பார்க்கும் பலர் குருசாமி பையனா எனக் கேட்பார்கள். அப்பாவின் பெயர் ராமசாமி என்ற பெயரில் பலர் இருப்பதால் குருசாமியே இன்றும் அவரை தனித்து அடையாளம் காட்டப் பயன்படுகிறது.

இன்று வரை வருடம் ஒருமுறை மாலை அணிந்து முருகன் கோவிலுக்கு செல்லுவதை வழக்கமாய் கொண்டிருக்கும் அவர் வாழ்நாளில் ஒரு முறை கூட செல்லாமல் இருந்ததில்லை, என் சம்மந்தமாய் ஏற்பட்ட மாபெரும் இழப்பைத் தவிர்த்து. திருநீறு அணிந்த நெற்றிதான் அவரின் அடையாளம். பட்டை ராமசாமி என அவரை விளையாட்டுக்குச் செல்லமாய் அழைப்பேன்.

சிறுவயதிலேயே அவர் எனக்கு விநாயகர் துதியினை சொல்லித்தந்து அதை சொல்லாமல் சொதப்பியதை அப்பாவுக்கு பிறந்த நாள் என்னும் இடுகையில் குறிப்பிட்டிருப்பேன்.

அப்பாவிடமிருந்து தாத்தாவிற்கு மாறியபோதுதான் அவரின்பால் ஈர்க்கப்பட்டு பகுத்தறிவுவாதியாய் மாறி வெளியில் அறிவிக்கவும் செய்தேன். பெரியாரின் சில புத்தகங்களைப் படித்ததுவும் அப்போதுதான்! சரியாய் நான்கு வருடங்கள் அந்த வழியில் இருந்தேன். மீண்டும் சொந்த ஊருக்கு பத்தாவது படிக்க வந்தபோது பக்தி மார்க்கத்தில் மனம் மாறத் துவங்கியது.

அப்பா பழனி மலையின் கீழிருந்து உருண்டே கடந்த இரு வருடங்களாய் ஏறுகிறார் என கேள்வியுற்று பார்த்துவிடவேண்டும் என முடிவு செய்தேன். அவருடன் அறுபடை வீட்டிற்கு மாலை அணிந்து ஒரு மாத காலம் விரதம் இருந்து, காலில் செருப்பணியாமல், பச்சை வேஷ்டி கட்டி கல்லூரிக்கு சென்றேன். அச்சமயத்தில் நான் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு. எனது வகுப்பில் மூன்று பிரபாகர். ஒருவன் நெட்டை பிரபாகர், இன்னொருவன் ஸ்டாட் பிரபாகர்(ஸ்டாடிடிக்ஸ் படித்துவிட்டு வந்ததால்) என மாற இந்த சம்பவத்தால் சாமி பிரபாகர் ஆனேன். சாமி என்றுதான் பலர் கூப்பிடுவார்கள், நக்கலாய் கிண்டலாய்!

எல்லாம் எனக்கு வேடிக்கையாய் இருந்தது, போலியான மரியாதை, பூஜை, பஜனை என. ஒவ்வொரு கோவிலுக்கும் செல்லும்போது அங்கு எவ்வாறெல்லாம் கடவுள் பெயரில் ஏமாற்றுகிறார்கள் என்று எண்ணிய நான் கடைசியில் அப்பா படி உருண்டு ஏறும்போது ஆவேசமாய் கத்திக்கொண்டு அவரின் பின்னாலேயே சென்றேன். வழியில் நிறையபேர் சேர்ந்துகொள்ள மேலும் நிறைய கூட்டம்.

அரை மணி நேரத்தில் மேலே சென்றுவிட, பிரகாரத்தை சுற்றத்தான் இன்னும் அதிக நேரம் ஆனது. அப்பாவைத் தொடர்ந்து வெங்கடேசன் எனும் மாமாவும் அதே போல் தொடர்ந்து வர, எனது வற்புறுத்துதலாலும், அத்தோடு இன்னொருவர் அவரைத்தொடர்ந்து செய்ததாலும் அந்த வருடத்தோடு விட்டுவிட்டார். அப்பாவின் சிவந்த தேகத்தில் காயங்கள் இல்லையெனினும் நிறைய சிராய்ப்புக்கள். கடவுள் பக்திதான் ஒருவரை எந்த அளவிற்கு உடலை வருத்தச் செய்கிறது என்பதை கண்ணால் கண்டுணர்ந்தேன்.

நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம், கஷ்டத்தின் போது நிறைய நினைக்கிறோம். கடவுள் நம்பிக்கை என்பது ஒரு கூடுதல் பலத்தினையும் நல்ல எண்ணத்தினையும் அளிக்க ஏதுவாய் இருக்கிறது என்பதை நம்புகிறேன். கடவுளை ஒரு நல்ல தோழனாய் நமது சுக துக்கங்களைப் பகிந்துகொள்ள ஏற்படுத்திக் கொள்வோமானால் நிச்சயம் நிம்மதியான ஒரு சூழல் நம்மை சூழும் என்பதே என் எண்ணம்!

இறுதியாய் விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல  தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்.

இது பற்றிய எண்ணங்களைப் பகிர என் பிரியமான நண்பர் செந்தில் வேலனையும், வலைதந்த நகைச்சுவைப்புயல் என் சேட்டைக்காரனையும்  (சேட்டை, இது மறு அழைப்பு ஏற்கனவே முகிலன் அழைத்திருக்கிறார், என்னை அழைத்தபோது) அழைக்கிறேன்.

24 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

சாமி பிரபா முதலா? ஸ்னேக் பிரபா முதலா?ஆக கடவுள் நம்பிக்கை இருக்கா? இல்லையா? இருக்கு இல்லையா? இல்லை இருக்கா? நானும் பாக்குறேன் ஆளாளுக்கு குழப்புறீங்க. :))

பிரபாகர் said...

நீங்க முதல்...இடுகையின் பின்னூட்டத்திலும்... எனக்கும் அய்யா!

பிரபாகர்...

வால்பையன் said...

ஒன்று நிச்சயம்!
கடவுளை விட உங்கள் அப்பாவை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்!

:)

நமது ரோல் மாடல் என்ன செய்யுறாங்களோ அதை தான் உலகம் இதுவரை கடை பிடித்து வந்திருக்கிறது!, எனது பொதுபுத்தி பதிவில் சொல்லியிருப்பேன்!

பிரபாகர் said...

//

சரியாச்சொன்னீங்க அருண்... அப்பாதான் என் முதல் கடவுள் எல்லாம்! ஐ லவ் மை டாட்!

நான் பொது புத்திய படிச்சிருக்கேன்...

பிரபாகர்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்பாதான் என் முதல் கடவுள் எல்லாம்! ஐ லவ் மை டாட்!//

unmai praba

settaikkaran said...

சுவாமி விவேகானந்தர் சொல்வது போலிருப்பது இன்றைய சூழலில் மிகவும் கடினம் எனினும், அதுவே விரும்பத்தக்கது! அங்ஙனமே நமக்குள் இருக்கும் இறைவனோடு இறைவனுக்குள் இருக்கும் நம்மைத் தொடர்பு படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

முகிலன் அவர்களைத் தொடர்ந்து, நீங்களும் சொல்லி விட்டீர்கள்! எழுதி விட வேண்டியது தான்! :-)

க.பாலாசி said...

//நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம், கஷ்டத்தின் போது நிறைய நினைக்கிறோம். //

உண்மையான வாக்கியம்...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்...

கடைசிப்பத்தி நல்ல கருத்து.....

Chitra said...

இறுதியாய் விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்...... very nice. :-)

ஈரோடு கதிர் said...

மிக நல்லா எழுதியிருக்கீங்க பிரபா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர்.

நிதர்சன உண்மை, நம் வழமை, எது சரி.. என்று பலவற்றையும் அழகாக..

Unknown said...

Bala sir sonna mathiri unga standai theliva solli irukkalam :)

பிரபாகர் said...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
//அப்பாதான் என் முதல் கடவுள் எல்லாம்! ஐ லவ் மை டாட்!//

unmai praba
//
நன்றிங்கய்யா!

//
சேட்டைக்காரன் said...
சுவாமி விவேகானந்தர் சொல்வது போலிருப்பது இன்றைய சூழலில் மிகவும் கடினம் எனினும், அதுவே விரும்பத்தக்கது! அங்ஙனமே நமக்குள் இருக்கும் இறைவனோடு இறைவனுக்குள் இருக்கும் நம்மைத் தொடர்பு படுத்த முடியும் என்பதில் சந்தேகமில்லை.

முகிலன் அவர்களைத் தொடர்ந்து, நீங்களும் சொல்லி விட்டீர்கள்! எழுதி விட வேண்டியது தான்! :-)
//
ம்... எழுதிக்கலக்குங்க!

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம், கஷ்டத்தின் போது நிறைய நினைக்கிறோம். //

உண்மையான வாக்கியம்...

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்...

கடைசிப்பத்தி நல்ல கருத்து.....
//
நன்றி இளவல்!

//
Chitra said...
இறுதியாய் விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்.

..... very nice. :-)
//
நன்றிங்க சித்ரா!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
மிக நல்லா எழுதியிருக்கீங்க பிரபா
//
நன்றி கதிர்!

//
ச.செந்தில்வேலன் said...
நல்லா எழுதியிருக்கீங்க பிரபாகர்.

நிதர்சன உண்மை, நம் வழமை, எது சரி.. என்று பலவற்றையும் அழகாக..
//
நன்றிங்க செந்தில்!

//
முகிலன் said...
Bala sir sonna mathiri unga standai theliva solli irukkalam :)
//
தெளிவான ஸ்டாண்ட் இல்லைங்கறதுதான் உண்மை. சூழலுக்கு ஏற்றார்போல் மாறுதுங்க தினேஷ்!

ஜில்தண்ணி said...

உண்மைதான் சில சூழ்நிலைகள் நம்மை அப்படியே புரட்டி போட்டு விடுகிறது!!
பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும்,அப்பா அம்மா திருனீரு வைத்துவிடும் போது...ம்ம்ம் என்னடா கடவுள்
இதவிட என்ன இருக்கு என்று தோணும்

கலகலப்ரியா said...

:)

ஹேமா said...

வாழ்க்கையின் சந்தோஷங்களோ வேதனைகளோதான் கடவுளை நினைக்க வைக்கிறது.அல்லது அப்படி ஒன்று இருப்பதாய் நினைக்க வைக்கிறது.
அழகா எழுதியிருக்கீங்க பிரபா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருந்தது.

Punnakku Moottai said...

பிரபா,

கடவுளையும் தந்தையையும் தொடர்புபடுத்தி , கடவுளை விட தந்தை மேலானவர் என்று கூறி விட்டீர்கள். நானும் அதையே ஆமோதிக்கிறேன். கடவுளை நான் கண்டதில்லை. தந்தையை காண்கிறேன்.

உங்களுக்கு அமைத்தது போலவே, என் தந்தையும் எனக்கு ஒரு குருவாக, நண்பனாக, இன்னும் ஏன், ஒரு வேலைக்காரன் போல் கூட எனக்கு பலவற்றிலும் இருந்தார், இருகின்றார், இருப்பார்.

நானும், எனது தம்பிகளும், சினிமா பார்பதற்கு அவரை முதலில் திரையரங்கிற்கு அனுப்பி டிக்கட் எடுக்க வைத்துள்ளோம். அந்த அளவிற்கு எங்களுடன் ஒரு நண்பனை போல் இருந்திருக்கிறார்.

கோவிலுக்கு செல்வதில் அவருக்கு ஒரு வழிமுறை உள்ளது. அவர் இது வரை சபரி மலையோ திருப்பதியோ சென்றதில்லை. காரணம், தமிழகத்தில் இல்லா கடவுள், கேரளாவிலும் ஆந்திராவிலும் இல்லை. அங்கிருப்பதைவிட இங்கு பல கோவில்கள் உள்ளன. அதனால் பழனி போ இல்லை, திருவண்ணாமலை போ என்று கூறுவார். ஏன் காசை கொண்டுபோய் ஆந்திராவிலும் கேரளாவிலும் போடுகிறாய் என்று கடிந்து கொள்வார். அவ்வாறே, ஒரு முறை 48 நாள் விரதம் இருந்து திருவண்ணாமலையும் பழனியும் சென்று வந்து ஐய்யப்ப பக்தர்களை வெறுப்பேற்றினார்.

அவரை பின்பற்றி இதுவரை நான் சபரிமலை மற்றும் திருப்பதி சென்றதில்லை.

சத்ரியன் said...

//விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்.//

ம்ம்ம்ம்! அவரவருக்குள் கடவுள் இருக்கிறார்.

Anonymous said...

//நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம்//

சரிதான். சந்தோஷப்படும்போது நம்மளைத்தவிர யார் ஞாபகமும் வராதே :)

பிரபாகர் said...

//
ஜில்தண்ணி said...
உண்மைதான் சில சூழ்நிலைகள் நம்மை அப்படியே புரட்டி போட்டு விடுகிறது!!
பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும்,அப்பா அம்மா திருனீரு வைத்துவிடும் போது...ம்ம்ம் என்னடா கடவுள்
இதவிட என்ன இருக்கு என்று தோணும்
//
ஆமாங்க ஜில்தண்ணி... ரொம்ப நன்றிங்க.

//

//
கலகலப்ரியா said...
:)
//
நன்றி சகோதரி!

//
ஹேமா said...
வாழ்க்கையின் சந்தோஷங்களோ வேதனைகளோதான் கடவுளை நினைக்க வைக்கிறது.அல்லது அப்படி ஒன்று இருப்பதாய் நினைக்க வைக்கிறது.
அழகா எழுதியிருக்கீங்க பிரபா.
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருந்தது.
//
நன்றி ரமேஷ்!

//
Punnakku Moottai said...
பிரபா,

கடவுளையும் தந்தையையும் தொடர்புபடுத்தி , கடவுளை விட தந்தை மேலானவர் என்று கூறி விட்டீர்கள். நானும் அதையே ஆமோதிக்கிறேன். கடவுளை நான் கண்டதில்லை. தந்தையை காண்கிறேன்.

உங்களுக்கு அமைத்தது போலவே, என் தந்தையும் எனக்கு ஒரு குருவாக, நண்பனாக, இன்னும் ஏன், ஒரு வேலைக்காரன் போல் கூட எனக்கு பலவற்றிலும் இருந்தார், இருகின்றார், இருப்பார்.

நானும், எனது தம்பிகளும், சினிமா பார்பதற்கு அவரை முதலில் திரையரங்கிற்கு அனுப்பி டிக்கட் எடுக்க வைத்துள்ளோம். அந்த அளவிற்கு எங்களுடன் ஒரு நண்பனை போல் இருந்திருக்கிறார்.

கோவிலுக்கு செல்வதில் அவருக்கு ஒரு வழிமுறை உள்ளது. அவர் இது வரை சபரி மலையோ திருப்பதியோ சென்றதில்லை. காரணம், தமிழகத்தில் இல்லா கடவுள், கேரளாவிலும் ஆந்திராவிலும் இல்லை. அங்கிருப்பதைவிட இங்கு பல கோவில்கள் உள்ளன. அதனால் பழனி போ இல்லை, திருவண்ணாமலை போ என்று கூறுவார். ஏன் காசை கொண்டுபோய் ஆந்திராவிலும் கேரளாவிலும் போடுகிறாய் என்று கடிந்து கொள்வார். அவ்வாறே, ஒரு முறை 48 நாள் விரதம் இருந்து திருவண்ணாமலையும் பழனியும் சென்று வந்து ஐய்யப்ப பக்தர்களை வெறுப்பேற்றினார்.

அவரை பின்பற்றி இதுவரை நான் சபரிமலை மற்றும் திருப்பதி சென்றதில்லை.
//
உங்களின் பின்னூட்டம் அருமை பாலா! கலக்குகிறிர்கள். வாழ்க்கை என்பதே அனுபவங்களில் குவியல் என்பது உங்களிடம் பழகும்போதுதன் தெரிகிறது. உங்களின் நட்பினைப் பெற்றது என் பாக்கியம்.

பிரபாகர் said...

//
’மனவிழி’சத்ரியன் said...
//விவேகானந்தர் சொன்னதைச் சார்ந்து, குழந்தைகளுக்கு நல்ல தகப்பனாய், மனைவிக்கு நல்ல கணவனாய், பெற்றோருக்கு நல்ல மகனாய், நட்புக்களுக்கு நல்ல நண்பனாய், நாட்டுக்கு ஒரு நல்ல குடிமகனாய் இருப்பதுவே கடவுளை வேண்டுவதற்கு இணையான ஒன்றென எண்ணுகிறேன்.//

ம்ம்ம்ம்! அவரவருக்குள் கடவுள் இருக்கிறார்.
//
சரிதான் நண்பா!

//
சின்ன அம்மிணி said...
//நிறைய சந்தோஷங்கள் வரும்போது கடவுளை மறக்கிறோம் அல்லது நினைப்பதை குறைத்துக் கொள்கிறோம்//

சரிதான். சந்தோஷப்படும்போது நம்மளைத்தவிர யார் ஞாபகமும் வராதே :)
//
ஆமாங்க! நன்றிங்க அம்மணி...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB