வை ராஜா வை....

|

வாழ்க்கையில மூனுச் சீட்டு விளையாடி பணத்தை விட்டிருக்கிறீர்களா? என்ன... இல்லையா? அப்போ நீங்கள் சுத்த வேஸ்ட்....என்றெல்லாம் சொல்ல மாட்டேன், நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்...!

அன்றொருநாள் தம்பியும் நானும் ஆத்தூரில் இருந்தோம். அண்ணா படத்துக்கு போகலாமா? என அவன் கேட்க, இருந்த பணமெல்லாம் செலவாக பஸ்ஸுக்குத்தானே இருக்கு நாளை பார்க்கலாம் என சொன்னேன். பார்க்கவேண்டுமா சொல் பணத்தோடு வருகிறேன் எனச் சொல்லி என்னை தொலைவிலேயே இருக்கச்சொல்லி அங்கிருந்த கும்பலான ஒரு இடத்துக்கு சென்றான்.

தம்பியைப் பார்த்தவுடன் பலமாய் சலாம் போட்டு ஒரு ஐம்பது ரூபாயைத் தர, சிரித்து வாங்கி வந்து சரி படத்துக்கு போகலாம் எனச் சொல்ல, என்ன விஷயம் எப்படி உனக்கு பணம் கிடைத்தது எனக் கேட்டதற்கு காரணத்தை சொன்னான். என் தம்பி ஒரு முறை மூன்று சீட்டு விளையாடுவதை வேடிக்கைப் பார்த்து , மிகச் சரியாய் எது ஜோக்கர் என கணித்துச் சொல்லி பணத்தை ஒவ்வொரு முறையும் வைக்க, நடத்தும் அந்த ஆளுக்கு கணிசமான நட்டம். அதன்பின் உனக்கு ஆட்டம் தெரிகிறது இனிமேல் விளையாடக்கூடாது என சொல்லி இவனைப் பார்க்கும்போதெல்லாம் ஐம்பதை கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருக்கிறார்.

நமக்கு சும்மா இருக்குமா? இது சம்மந்தமாய் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வர கொசுவர்த்தியை சுற்ற ஆரம்பித்தேன்.

பதினொன்றில் படிக்கும்போது என் அத்தை மகளுக்கு திருமணம். தைக்கக் கொடுத்திருந்த துணிகளை வாங்கவும் பேருந்து செலவுக்கும் என நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, முதல் நாளே அப்பா, அம்மா என எல்லோரும் கிளம்பி சென்றுவிட்டார்கள்.

அச்சமயம் ஆத்தூரில் மாடர்ன் டைலர்ஸ் எனும் கடை மிகவும் பிரபலம். அங்குதான் அப்பா பேன்ட் சட்டைகளை தைப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார், முதன் முதலாய் எனக்கும்.

வாங்குவதற்கு சென்றபோது தயாராகிக் கொண்டிருப்பதாகச் சொல்லி, இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் எனச் சொன்னார்கள். சரி பத்து ரூபாய் செலவுக்கு இருக்கிறதே அதை வைத்து, காத்திருக்கும் நேரத்தில் சினிமா பார்க்கலாம் என முடிவு செய்தேன்.

அப்போது புதிதாய் ஆரம்பித்து பிரபலமாயிருந்த என்.எஸ். தியேட்டருக்கு சென்று காட்சிக்கான நேரத்தைப் பார்த்துவிட்டு மெதுவாய் நோட்டம் விட்டபோது அங்கு கும்பலாய் நான்கைந்துபேர். ஒரு மேசையில் துணியால் மூடி மையமாய் ஒருவர் கையில் உள்ள மூன்று சீட்டுக்களை சதிராடி மேசையில் தனித்தனியே போட்டு,

‘வாங்க சார் வாங்க, சரியா ஜோக்கர்ல வெச்சா, அஞ்ச வெச்சா பத்து, பத்த வெச்சா இருபது, ஐம்பத வெச்சா நூறு’ என சொல்லிக் கொண்டிருக்க, பணத்தை வைத்து விளையாடிய வண்ணம் சுற்றிலும் சிலர்.

மெதுவாய் எட்டிப்பார்க்க, ஒன்றில் அங்கிருந்த ஒருவர் பத்து ரூபாய் வைத்தார். அந்தச் சீட்டைத் திருப்பிக்காட்ட அது ஜோக்கராய் இல்லாததால் நடத்துபவர் பணத்தினை எடுத்துக்கொண்டு மீதமிருந்த இரண்டில் எதில் ஜோக்கர் என சொல்லுங்கள் இந்த பத்து ரூபாயைத் தருகிறேன்’ என எல்லோரையும் பார்த்துக் கேட்டார்.

நான் சொல்ல எத்தனித்து தயங்கி நிற்பதைப்பார்த்து சரியாய் சொல்லு தம்பி இந்த பத்து உனக்குத்தான் என்றார். கையை காண்பிக்க சரியாய் இருந்தது. பத்து ரூபாயை உடன் கொடுத்துவிட என்னுள் ஏகமாய் சந்தோஷம்.

அப்புறம் பக்கத்தில் இருப்பவர் என்னை உற்சாகப்படுத்தி இதில் வை அதில் வை என வைக்க சொல்ல, கொஞ்ச நேரத்தில் கையில் இருந்த எண்பது ரூபாயையும் இழந்து ராச்சியத்தை இழந்து நின்ற தருமனாய் நின்றேன், சொல்லித்தந்த அந்த சகுனியும் அவரது ஆள்தான் எனத் தெரியாமல். கடைசியாய் அவர் சரி தம்பிக்காக சொல்கிறேன், தம்பி பேர்ல நூறு ரூபாய், இதுதான் ஜோக்கர் என வாய் வார்த்தையில் ஒரு சீட்டினைக் காட்டி சொன்னார். திருப்ப அது ஜோக்கர்! ஆஹா விட்டதைப் பிடித்தாயிற்று என சந்தோசப்பட அடுத்த அதிர்ச்சி வந்தது.

‘நூறு ரூபாயக்காட்டு, நூறைத் தர்றேன்’ என சொன்னார். உடனே பக்கத்தில் இருந்த, வருவோர் போவோரை எல்லாம் கேட்க ஆரம்பித்தேன். ‘அண்ணா ஒரு நூறு ரூபாயைக் கொடுங்க, காட்டிவிட்டு கொடுத்துவிடுகிறேன்’ என. எல்லோரும் என்னை கன்னா பின்னா என திட்டி செல்ல அவர்கள் மேல் அப்படி ஒரு கோபம் வந்தது, என்ன மனிதாபிமானமே இல்லாதவர்கள் என. (பிறகு எவ்வளவு கேவலமாய் நடந்துகொண்டேன் என நெடு நாட்களுக்கு வருந்தினேன்). கடைசியில் எங்காவது போய் வாங்கி வா என சொல்லி அனுப்பிவிட்டார்கள். அழவில்லை, அதைத்தவிர எல்லாம்.

ஆட்டோ மொபைல்ஸ் வைத்திருந்த மாமாவின் கடைக்கு சென்றேன். ‘வா மருமகனே சௌக்யமா? வீட்டுக்கு போ அத்தை, புள்ளைங்க எல்லாம் இருக்காங்க! சாப்பிட்டுட்டுத் தான் போகனும்’ என சொன்னார். தயங்கி காசினை தொலைத்துவிட்டேன் என சொல்ல ஆரம்பிக்க பட்டென காசெல்லாம் தரமுடியாது என சொல்லிவிட்டார்.

வீட்டிற்கு திரும்ப செல்லுவதற்கும் மூன்று ரூபாய் வேண்டும். சென்றாலும் பணத்தினை திரட்ட முடியாது. என்ன செய்ய என குழம்பி கடைசியாய் ஒரு முடிவோடு வழக்கமாய் நகை செய்யும் பானு ஜுவல்லரிஸ் கடையை நோக்கி சென்றேன். கடையில் இருந்த என் உறவுக்கார அண்ணன் என்னை வரவேற்று உபசரித்து என்ன விஷயம் எனக் கேட்க, பணத்தினை தொலைத்துவிட்டதாய் சொன்னேன்.

உடன் எவ்வளவு வேண்டுமெனக் கேட்க, எண்பத்தைந்து ரூபாய் என சொன்னேன். பத்து ரூபாய் நோட்டுக்களாய் எண்ணி நூறு ரூபாயாகக் கொடுத்து கவலைப்படாமல் இருக்கச் சொல்லி அப்பாவிடம் சொல்லிக்கொள்கிறேன் எனச் சொன்னார். கடவுளாய் அவரை நினைந்து நன்றி கூறி கவலையை மறந்து துணிகளை வாங்கி திருமணத்துக்கு சென்றேன்.

இந்த உண்மையை சம்பாதிக்க ஆரம்பித்தபின் தான் தைரியமாக வீட்டில் சொல்ல முடிந்தது!

40 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

புலவன் புலிகேசி said...

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தர்மம் மண்ணைக் கவ்வும்...வட போச்சா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Chitra said...

////இந்த உண்மையை சம்பாதிக்க ஆரம்பித்தபின் தான் தைரியமாக வீட்டில் சொல்ல முடிந்தது!///

.....சொன்ன பின் என்ன நடந்தது? ஆர்வம் தாங்கல. ஹா,ஹா,ஹா,ஹா....

Anonymous said...

ரொம்ப நல்லாயிருந்தது. மூணு சீட்டு அனுபவத்தில் நான் இதுவரை இழந்தது அதிகமாக 55 காசுகள் மட்டுமே. இருந்தாலும் பாடம் பாடம் தானே..

keep writing more...
Seemachu..
http://seemachu.blogspot.com

Unknown said...

இதையா உங்க ஊர்ல மூணு சீட்டுனு சொல்வீங்க?

vasu balaji said...

ஓஹோ!

சங்கர் said...

நெல்லை ரத்னா தியேட்டர்ல நானும் 50 ரூபா விட்டிருக்கேன்

Unknown said...

Enga oorla langarkatta than famous.. Hm.. Thirvilakku kudukra kaasellam adhulaye ponadhuellam oru kaalam..:-(

மங்குனி அமைச்சர் said...

பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்

சைவகொத்துப்பரோட்டா said...

கதை படிச்ச மாதிரி இருக்கு!!

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு பிரபா. பிதாமகன் படத்தில் சூர்யா லைலாவை ஏமாற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.

நம் ஊரில் இப்போதும் பொது இடத்தில் இதுபோன்ற சூதாட்டங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா?

சிநேகிதன் அக்பர் said...

//நெல்லை ரத்னா தியேட்டர்ல நானும் 50 ரூபா விட்டிருக்கேன்//

அப்போ அன்னைக்கு டிக்கெட் எடுக்கும் போது வேடிக்கைபார்த்துக்கிட்டு இருந்தேனே அது நீங்கதானா. :)

ஒரு குரூப்பாத்தான் அலைவாங்க நாமதான் உசாரா இருக்கனும் பிரபாகர்.

அந்த 85 உங்களுக்கு இப்ப இருக்குற ஆயிரத்தை விட பெரிசா தெரிஞ்சிருக்கும்.

சிநேகிதன் அக்பர் said...

//மங்குனி அமைச்சர் said...
பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்
//

இவரும் அந்த குரூப்பா இருப்பாரோன்னு டவுட் வருது பாஸ்.

சிநேகிதன் அக்பர் said...

//நம் ஊரில் இப்போதும் பொது இடத்தில் இதுபோன்ற சூதாட்டங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா?//

என்ன தல இப்படி ஒரு கேள்வி.

Ahamed irshad said...

மூனு சீட்டு... எங்கேயோ கேட்ட மாதிரி.....?

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரியான மோசடிக்காரர்கள்; சும்மா தான் வேடிக்கை பார்ப்போம்., நம்மை கவர்ந்து அவங்க ஆட்டத்துல இழுத்துடுவாங்க.. உசாரா இருக்கணும்., இல்லைன்னா அம்பேல்தான்.

நல்ல அனுபவமிக்க இடுகை பிரபாகர்.

என்றும் அன்புடன்

உங்கள் ஸ்டார்ஜன்.

Thamira said...

சுவாரசியம் உங்கள் மூணு சீட்டு அனுபவம்.

கலகலப்ரியா said...

டைட்டில் சூப்பரு... சீட்டாடிப் பட்ட அனுபவம் பாடம்..

சத்ரியன் said...

சரி ராஜா இந்தா 10 வெச்சிட்டேன். மரியாதையா சீட்டை குலுக்கு.... ஆமா.

settaikkaran said...

நானும் ஒருவாட்டி ஏமாந்திருக்கேனில்லா? எப்படி பயலுவ ஏமாத்துறானுங்கன்னு கண்டுபிடிக்கிறதுக்காக, ரெண்டாவது தடவை ஆடும்போது, திபுதிபுன்னு போலீசு வந்ததும் ஓடுன ஓட்டமிருக்கே, மறக்க முடியாதப்பு.....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்...!//
என்னை ரொம்ப புகழாதீங்க.

பனித்துளி சங்கர் said...

இதுபோன்ற சூதுவினால் இன்று பலரின் குடும்பங்கள் கேள்விக் குறியாகவே உள்ளது !

Anonymous said...

சூது உங்க வாழ்க்கைலயும் விளையாடி இருக்கு :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஓ..அதுவேறயா?..

ஆகமொத்தம் எல்லா நல்லா பழக்கமும் இருக்கு போல..

க.பாலாசி said...

//என்ன மனிதாபிமானமே இல்லாதவர்கள் என. (பிறகு எவ்வளவு கேவலமாய் நடந்துகொண்டேன் என நெடு நாட்களுக்கு வருந்தினேன்)//

அந்த நேரத்துல இருக்குற போதைக்கு அடிமையாகாம இருந்திட்டோம்னா பொழச்சோம்... இல்லன்னா அவ்வளவுதான்.... பாஞ்சாலிகளின் சாபத்திற்கு ஆளாவனும்...

நல்ல அனுபவப் பாடம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

மங்குனி அமைச்சர் said...

பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்
//

அப்படி சொல்லிக்கொடு மாப்ள..

ஒருத்தன் நல்லாயிருக்கலாமா?...உடாதே.. சொல்லி சொல்லி..மண்டைய ஏத்திடனும்...

நாம யாரு.. என்னா?..

ஈரோடு கதிர் said...

சீட்டும் ஆடுவீங்களா பிரபா!!!!!?

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..தர்மம் மண்ணைக் கவ்வும்...வட போச்சா?
//
நன்றி புலிகேசி!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:)))
//
நன்றிங்கய்யா!

//
Chitra said...
////இந்த உண்மையை சம்பாதிக்க ஆரம்பித்தபின் தான் தைரியமாக வீட்டில் சொல்ல முடிந்தது!///

.....சொன்ன பின் என்ன நடந்தது? ஆர்வம் தாங்கல. ஹா,ஹா,ஹா,ஹா....
//
அம்மா உன்ன அப்பிராணியால்ல நினைச்சோம்னு சிரிச்சாங்க, அப்பா அப்பவே சந்தேகப்பட்டேன் கண்ணுன்னு சொன்னாரு...

பிரபாகர் said...

//
Anonymous said...
ரொம்ப நல்லாயிருந்தது. மூணு சீட்டு அனுபவத்தில் நான் இதுவரை இழந்தது அதிகமாக 55 காசுகள் மட்டுமே. இருந்தாலும் பாடம் பாடம் தானே..

keep writing more...
Seemachu..
http://seemachu.blogspot.com
//
வருகைக்கு நன்றிங்க! உங்களை தொடர ஆரம்பிச்சிட்டேன், ரொம்ப நல்லா எழுதறீங்க!

//
முகிலன் said...
இதையா உங்க ஊர்ல மூணு சீட்டுனு சொல்வீங்க?
//
ஆமாங்க! உங்க ஊர்ல எப்படி?

//
வானம்பாடிகள் said...
ஓஹோ!
//
ஓஹோஹோ! நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
சங்கர் said...
நெல்லை ரத்னா தியேட்டர்ல நானும் 50 ரூபா விட்டிருக்கேன்
//
இப்போதானே உண்மையெல்லாம் வருது! நன்றி தம்பி!

//
பேநா மூடி said...
Enga oorla langarkatta than famous.. Hm.. Thirvilakku kudukra kaasellam adhulaye ponadhuellam oru kaalam..:-(
//
வேலை வாங்கின கையோட வலைப்பக்கம் வந்துட்டீங்க, சொன்ன மாதிரி. ரொம்ப சந்தோஷம இருக்கு தம்பி!

//
மங்குனி அமைச்சர் said...
பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்
//
இப்படி உசுப்பேத்த ஆளில்லையே அப்போ!... இருந்தாலும் ஜென்டிங்-ல நடந்த கூத்த அப்புறமா எழுதறேன்!

பிரபாகர் said...

//
சைவகொத்துப்பரோட்டா said...
கதை படிச்ச மாதிரி இருக்கு!!
//
கதையல்ல நிஜம்.... ரொம்ப நன்றிங்க!

//
செ.சரவணக்குமார் said...
நல்ல பகிர்வு பிரபா. பிதாமகன் படத்தில் சூர்யா லைலாவை ஏமாற்றும் காட்சி நினைவுக்கு வந்தது.

நம் ஊரில் இப்போதும் பொது இடத்தில் இதுபோன்ற சூதாட்டங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா?
//
இல்லாமலா! நிறைய நண்பா!

//
அக்பர் said...
//நெல்லை ரத்னா தியேட்டர்ல நானும் 50 ரூபா விட்டிருக்கேன்//

அப்போ அன்னைக்கு டிக்கெட் எடுக்கும் போது வேடிக்கைபார்த்துக்கிட்டு இருந்தேனே அது நீங்கதானா. :)

ஒரு குரூப்பாத்தான் அலைவாங்க நாமதான் உசாரா இருக்கனும் பிரபாகர்.

அந்த 85 உங்களுக்கு இப்ப இருக்குற ஆயிரத்தை விட பெரிசா தெரிஞ்சிருக்கும்.
//
ஆமாங்க! ரொம்பவும் கஷ்டமான தருணம் அது!

பிரபாகர் said...

//
அக்பர் said...
//மங்குனி அமைச்சர் said...
பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்
//

இவரும் அந்த குரூப்பா இருப்பாரோன்னு டவுட் வருது பாஸ்.
//
சேச்சே கேமிரா மொபைல்னு விக்கிற கோஷ்டியில இல்ல இவரு இருக்காரு!

//
அக்பர் said...
//நம் ஊரில் இப்போதும் பொது இடத்தில் இதுபோன்ற சூதாட்டங்கள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதா?//

என்ன தல இப்படி ஒரு கேள்வி.
//
அதானே!

//
அஹமது இர்ஷாத் said...
மூனு சீட்டு... எங்கேயோ கேட்ட மாதிரி.....?
//
ஆஹா! ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே!

//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சரியான மோசடிக்காரர்கள்; சும்மா தான் வேடிக்கை பார்ப்போம்., நம்மை கவர்ந்து அவங்க ஆட்டத்துல இழுத்துடுவாங்க.. உசாரா இருக்கணும்., இல்லைன்னா அம்பேல்தான்.

நல்ல அனுபவமிக்க இடுகை பிரபாகர்.

என்றும் அன்புடன்

உங்கள் ஸ்டார்ஜன்.
//
நன்றி என் அன்பு நண்பா!

பிரபாகர் said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
சுவாரசியம் உங்கள் மூணு சீட்டு அனுபவம்.
//
வாங்க ஆதி! ரொம்ப நாள் கழிச்சி உங்கள பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. விரைவில் நேரில் சந்திப்போம்!

//
கலகலப்ரியா said...
டைட்டில் சூப்பரு... சீட்டாடிப் பட்ட அனுபவம் பாடம்..
//
நன்றி சகோதரி!

//
’மனவிழி’சத்ரியன் said...
சரி ராஜா இந்தா 10 வெச்சிட்டேன். மரியாதையா சீட்டை குலுக்கு.... ஆமா.
//
ஆரம்பிச்சிடுவோமா?

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
நானும் ஒருவாட்டி ஏமாந்திருக்கேனில்லா? எப்படி பயலுவ ஏமாத்துறானுங்கன்னு கண்டுபிடிக்கிறதுக்காக, ரெண்டாவது தடவை ஆடும்போது, திபுதிபுன்னு போலீசு வந்ததும் ஓடுன ஓட்டமிருக்கே, மறக்க முடியாதப்பு.....!
//
ஆஹா, நமக்கு அந்த மாதிரி அனுபவம் கிடைக்காம போயிடுச்சே! ஒரு இடுகை மிஸ்ஸிங்!

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நீங்கள் ரொம்ப ரொம்ப நல்லவர்...!//
என்னை ரொம்ப புகழாதீங்க.
//
ம்... நாங்க நம்பனுமாக்கும்! நன்றி ரமேஷ்!

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இதுபோன்ற சூதுவினால் இன்று பலரின் குடும்பங்கள் கேள்விக் குறியாகவே உள்ளது !
//
இதிலும் என்ன ஒரு அக்கறை பாருங்க ப.து.ச வுக்கு!

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
சூது உங்க வாழ்க்கைலயும் விளையாடி இருக்கு :)
//
ஆமாங்க அம்மிணி! ரொம்பவும் கம்மியா!

//
பட்டாபட்டி.. said...
ஓ..அதுவேறயா?..

ஆகமொத்தம் எல்லா நல்லா பழக்கமும் இருக்கு போல..
//
செஞ்ச ஒன்னு ரெண்டுல இதுவும் ஒன்னு! ரொம்ப நல்லவன் பட்டா! நேர்ல பாக்கும்போது கூட சரக்கு வாங்கி கொடுத்துட்டு வேடிக்கைத்தான் பார்ப்பேன் பாருங்களேன்!

//
க.பாலாசி said...
//என்ன மனிதாபிமானமே இல்லாதவர்கள் என. (பிறகு எவ்வளவு கேவலமாய் நடந்துகொண்டேன் என நெடு நாட்களுக்கு வருந்தினேன்)//

அந்த நேரத்துல இருக்குற போதைக்கு அடிமையாகாம இருந்திட்டோம்னா பொழச்சோம்... இல்லன்னா அவ்வளவுதான்.... பாஞ்சாலிகளின் சாபத்திற்கு ஆளாவனும்...

நல்ல அனுபவப் பாடம்
//
நன்றி இளவல்!

பிரபாகர் said...

//
பட்டாபட்டி.. said...
மங்குனி அமைச்சர் said...

பானு ஜுவல்லரிஸ் ல பணத்த வாங்கிட்டு மறுபடியும் போய் அந்த மூணு சீட்டு காரனுகள ரெண்டுல ஒன்னு பாத்திருக்கணும் சார்
//

அப்படி சொல்லிக்கொடு மாப்ள..

ஒருத்தன் நல்லாயிருக்கலாமா?...உடாதே.. சொல்லி சொல்லி..மண்டைய ஏத்திடனும்...

நாம யாரு.. என்னா?..
//
அதானே.... உங்களைத்தான் ஐடியா கேக்கனும்.!

//
ஈரோடு கதிர் said...
சீட்டும் ஆடுவீங்களா பிரபா!!!!!?
//
அப்போ? சாமி சங்கு ஊதிடுவீங்க போலிருக்கு!

Unknown said...

நானும் பத்து வருடங்களுக்கு முன்னால் 15 ருபாயை தொலைத்தேன்.
Sundarvel

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல அனுபவப் பாடம். கலக்கலாக எழுதியிருக்கீங்க பிரபாகர்.

சீட்டாட்டம் ஒரு வித போதை. சிக்காமல் இருப்பது நல்லது.

ஹேமா said...

பிரபா...உங்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் நிறையவே இருக்கு.ஒவ்வொரு தரமும் இயல்பா தாறீங்க.இது உங்க வாழ்க்கைக்கு நிறைய நல்லது.வாழ்வின் பேதங்களை நல்லது கெட்டதுகளைப் பிரிச்சுப் பாத்துக்கலாம்.

பிரபாகர் said...

//
adhi said...
நானும் பத்து வருடங்களுக்கு முன்னால் 15 ருபாயை தொலைத்தேன்.
Sundarvel
//
ஆஹா! எல்லோருக்குமே ஒரு அனுபவம் இருக்கும்போல் இருக்கு

//
ச.செந்தில்வேலன் said...
நல்ல அனுபவப் பாடம். கலக்கலாக எழுதியிருக்கீங்க பிரபாகர்.

சீட்டாட்டம் ஒரு வித போதை. சிக்காமல் இருப்பது நல்லது.
//
நன்றிங்க செந்தில்!

//
ஹேமா said...
பிரபா...உங்களுக்கு வாழ்க்கை அனுபவங்கள் நிறையவே இருக்கு.ஒவ்வொரு தரமும் இயல்பா தாறீங்க.இது உங்க வாழ்க்கைக்கு நிறைய நல்லது.வாழ்வின் பேதங்களை நல்லது கெட்டதுகளைப் பிரிச்சுப் பாத்துக்கலாம்.
//
நன்றி சகோதரி. உங்கள் ஊக்கம்தான் இன்னும் நிறைய எழுத ஊக்குவிக்கிறது!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB