வருவாய்...தருவாய்...

|

அன்புமகன் உனை நானும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
எண்ணி இங்கு வாடுகின்றேன்
ஏக்கம் சூழ ஏங்குகிறேன்

கண்விரிந்த சிரிப்போடு
கன்னத்தில் முத்தமிட்டு
எண்ணத்தை புதுமையாக்கி
ஏக்கமெலாம் தீர்க்குமுன்னை

காண்கின்ற யாவினிலும்
கனவினிலும் நனவினிலும்
எண்ணுகின்ற யாவினிலும்
உன்னையே எண்ணியிங்கு

மனம் கனத்து மறுபடியும்
மகன் வரும் நாளதனை
தினம் தேதி மணி பார்த்து
தவிக்கின்றேன் நொடி கழிய.

வசந்தம் வரும் நாளெண்ணி
வாட்டமுடம் அப்பாவும்
கசந்து நிற்கும் நாள் கழித்து
கண்மணியின் வரவுபார்த்து

வீடும் தென்றல் தொடுதலினால்
வாசமலர் மொட்டவிழ்க்கும்
பாசமகன் பார்த்தலினால்
பரவசமும் தானே சேரும்...

எதிர்நோக்கும்,
அப்பா!

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

touchy!

lenin said...

தந்தையின் உண்மையான பாசத்தையும் பிரிவையும் சொல்லும் உண்மையான வார்த்தைகள்..

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி....

மகனுக்காக எழதிய அற்புதமான கவிதை....

பனித்துளி சங்கர் said...

///////மனம் கனத்து மறுபடியும்
மகன் வரும் நாளதனை
தினம் தேதி மணி பார்த்து
தவிக்கின்றேன் நொடி கழிய.////////

பிரிவின் ஏக்கத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது கவிதை .
பகிர்வுக்கு நன்றி நண்பரே !

க.பாலாசி said...

அருமைங்ணா.... மகனுக்கான ஏக்கம் புரியுது.... சீக்கிரம் வாங்க....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கசந்து நிற்கும் நாள் கழித்து
கண்மணியின் வரவுபார்த்து
//

ஏண்ணே.. டக்குனு டிக்கெட் புக் பண்ணி..கூட்டிக்கிட்டு வாங்க...

இதில ரெண்டாம் யோசனையே இல்லை..

சத்ரியன் said...

//வீடும் தென்றல் தொடுதலினால்
வாசமலர் மொட்டவிழ்க்கும்
பாசமகன் பார்த்தலினால்
பரவசமும் தானே சேரும்...

எதிர்நோக்கும்,
அப்பா! ///

அப்பப்ப்ப்பா...!

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு ராசா!!

அது என்ன மகனுக்கு மட்டும்..

மகளை விட்டுட்டியே படவா!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

அற்புதமான கவிதை....

நாகராஜன் said...

அப்படி சொல்லுங்க கதிர்... அதையே தான் நானும் கேட்கிறேன்... எப்படி மகளை விடலாம்... இது ஒண்ணும் நல்லா இல்லைங்கோவ்... சொல்லிப்புட்டேன் ஆமா...

மகனது பிரிவை அருமையா சொல்லியிருக்கீங்க பிரபாகர். கவலைப்படாதீங்க... ரெண்டு பேரும் (இல்லை இல்லை மூணு பேரும்) சீக்கிரம் ஒண்ணா சேர்ந்து இருப்பீங்க.

Chitra said...

மனதை தொட்ட கவிதை. நல்லா இருக்குங்க.

settaikkaran said...

ஹூம், பாசத்தால் மகனை நிறுத்துப் பார்க்கும் தந்தையின் உள்ளத்தை ஒரு ஊடுகதிர் சித்திரமாய் முன்னிறுத்தி விட்டீர்கள்! கொடுத்து வைத்த மகன்!

க ரா said...

அருமைனா. மகனை பிரிஞ்சு இருக்கற ஒரு தந்தையோட சோகத்தை நல்லா சொல்லிருக்கீங்க.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதை பிரபாகர்..

இது போன்ற கவிதைகளை உங்கள் மகளிற்காகப் பாதுகாத்து வையுங்கள்!!

கலகலப்ரியா said...

:).. சீக்கிரம் பார்க்கலாம் குட்டிப்பையன.. எல்லாம் சரியாய்டும்ணா...

Unknown said...

எல்லாம் சரியாயிடும் கவலைப் படாதீங்க பிரபா

ஹேமா said...

பிரபா அப்பாவின் ஏக்கம் மகனுக்காக அருமை.
அடுத்து மகளுக்காகவும் எழுதுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சீக்கிரம் உங்கள் மகனைப் பார்க்க வேண்டுகிறேன்...

புலவன் புலிகேசி said...

தல சீக்கிரம் இந்தியா வந்து புள்ளையை பாத்துட்டு கூட்டிட்டு போயிருங்க...

Cable சங்கர் said...

really tochy

Punnakku Moottai said...

Please arrange his travel documents, I will try to get him to you next week if possible.

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
touchy!
//
நன்றிங்கய்யா!

//
lenin said...
தந்தையின் உண்மையான பாசத்தையும் பிரிவையும் சொல்லும் உண்மையான வார்த்தைகள்..
//
நன்றி தம்பி!

//
Sangkavi said...
பங்காளி....

மகனுக்காக எழதிய அற்புதமான கவிதை....
//
நன்றி பங்காளி...

பிரபாகர் said...

//
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
///////மனம் கனத்து மறுபடியும்
மகன் வரும் நாளதனை
தினம் தேதி மணி பார்த்து
தவிக்கின்றேன் நொடி கழிய.////////

பிரிவின் ஏக்கத்தை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது கவிதை .
பகிர்வுக்கு நன்றி நண்பரே !
//
நன்றி சங்கர்...

//
க.பாலாசி said...
அருமைங்ணா.... மகனுக்கான ஏக்கம் புரியுது.... சீக்கிரம் வாங்க....
//
விரைவில் வருகிறேன் இளவல்...

//
பட்டாபட்டி.. said...
கசந்து நிற்கும் நாள் கழித்து
கண்மணியின் வரவுபார்த்து
//

ஏண்ணே.. டக்குனு டிக்கெட் புக் பண்ணி..கூட்டிக்கிட்டு வாங்க...

இதில ரெண்டாம் யோசனையே இல்லை..
//
ஆமாம் பட்டா தம்பி... சீக்கிரமே ஊருக்கு போகிறேன்.

பிரபாகர் said...

//
’மனவிழி’சத்ரியன் said...
//வீடும் தென்றல் தொடுதலினால்
வாசமலர் மொட்டவிழ்க்கும்
பாசமகன் பார்த்தலினால்
பரவசமும் தானே சேரும்...

எதிர்நோக்கும்,
அப்பா! ///

அப்பப்ப்ப்பா...!
//
நன்றிப்பா!

//
ஈரோடு கதிர் said...
நல்லாயிருக்கு ராசா!!

அது என்ன மகனுக்கு மட்டும்..

மகளை விட்டுட்டியே படவா!!!!
//
மகள் மனதிலேயே இருக்கிறாள்... அவளுக்காகவும் விரைவில் கதிர்!

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
அற்புதமான கவிதை....
//
நன்றிங்கயா!

பிரபாகர் said...

//
ராசுக்குட்டி said...
அப்படி சொல்லுங்க கதிர்... அதையே தான் நானும் கேட்கிறேன்... எப்படி மகளை விடலாம்... இது ஒண்ணும் நல்லா இல்லைங்கோவ்... சொல்லிப்புட்டேன் ஆமா...

மகனது பிரிவை அருமையா சொல்லியிருக்கீங்க பிரபாகர். கவலைப்படாதீங்க... ரெண்டு பேரும் (இல்லை இல்லை மூணு பேரும்) சீக்கிரம் ஒண்ணா சேர்ந்து இருப்பீங்க.
//
நன்றிங்க ராசுக்குட்டி... நீண்ட இடைவெளிக்குப்பின் வந்திருக்கீங்க! சோகத்துலும் சந்தோஷமா உணருறேன்...

//
Chitra said...
மனதை தொட்ட கவிதை. நல்லா இருக்குங்க.
//
நன்றிங்க சித்ரா!

//
சேட்டைக்காரன் said...
ஹூம், பாசத்தால் மகனை நிறுத்துப் பார்க்கும் தந்தையின் உள்ளத்தை ஒரு ஊடுகதிர் சித்திரமாய் முன்னிறுத்தி விட்டீர்கள்! கொடுத்து வைத்த மகன்!
//
நன்றி நண்பா!

பிரபாகர் said...

//
இராமசாமி கண்ணண் said...
அருமைனா. மகனை பிரிஞ்சு இருக்கற ஒரு தந்தையோட சோகத்தை நல்லா சொல்லிருக்கீங்க.
//
ரொம்ப நன்றிங்க!

//
ச.செந்தில்வேலன் said...
அருமையான கவிதை பிரபாகர்..

இது போன்ற கவிதைகளை உங்கள் மகளிற்காகப் பாதுகாத்து வையுங்கள்!!
//
நன்றிங்க செந்தில்...

//
கலகலப்ரியா said...
:).. சீக்கிரம் பார்க்கலாம் குட்டிப்பையன.. எல்லாம் சரியாய்டும்ணா...
//
நன்றி சகோதரி!

பிரபாகர் said...

//
முகிலன் said...
எல்லாம் சரியாயிடும் கவலைப் படாதீங்க பிரபா
..
//
நன்றி தினேஷ்!

//
ஹேமா said...
பிரபா அப்பாவின் ஏக்கம் மகனுக்காக அருமை.
அடுத்து மகளுக்காகவும் எழுதுங்க.
//
கண்டிப்பாய் சகோதரி!

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சீக்கிரம் உங்கள் மகனைப் பார்க்க வேண்டுகிறேன்...
//
நன்றி ரமேஷ்!

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
தல சீக்கிரம் இந்தியா வந்து புள்ளையை பாத்துட்டு கூட்டிட்டு போயிருங்க...
//
கண்டிப்பா புலிகேசி!

//
Cable Sankar said...
really tochy
//
ரொம்ப நன்றிங்கண்ணா...

//
Punnakku Moottai said...
Please arrange his travel documents, I will try to get him to you next week if possible.
//
ரொம்ப நன்றிங்க தலைவரே!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB