அப்பாவுக்கு பிறந்த நாள்...

|


இன்று என் அப்பாவுக்கு பிறந்த நாள்... அவர் தந்தையாய் எனக்கு என்ன செய்தார், செய்கிறார் என்பதை நினைத்து பார்க்கிறேன்...

இன்றும் என்னை எவராவது 'உன்னுடைய சிறந்த நண்பன் யார்' எனக் கேட்டால் உடனே ராமசாமி என சொல்லுவேன். அது யாரென கேட்கும் போதுதான் அவர்களுக்கு தெரியும் அது என் அப்பா என்று. என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். உண்மைதான், என் வயதுக்கேற்றவாறு  தனது அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டு அனுசரணையாய் அக்கறையாய்... அப்பப்பா, சொல்ல வார்த்தைகளில்லை.

சிறு வயதில் விவரம் தெரிந்த வயதில் என்னை சைக்கிளில் ஏற்றி, அவர் வேலை பார்க்கும் தலைவாசல் யூனியன் ஆபிஸ் அழைத்துச் செல்வார். கொஞ்சமல்ல, பதினொரு கிலோமீட்டர் வீட்டிலிருந்து.

”பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா“

எனும், சொல்லித்தந்த விநாயகர் துதியை அலுவலக மீட்டிங்கில் பாடச்சொல்ல, எப்போதும் துணிச்சலாய் எந்த இடத்திலும் பாடும் நான் அன்று பாடாது மௌனிக்க, நிறைய அவமானப்பட்டார். ஆனாலும் கோபப்படவில்லை.

அம்மா கேட்டதற்கு 'இல்ல சரோ, பிரபு பயந்துட்டான், அதான் பாடல' என்று சமாளித்து அதற்கு அம்மா திட்ட எத்தனிக்க, 'விடு சின்ன பையன்' என சமாதானமும் செய்தார்.

பள்ளி செல்லும் முன்னரே அ முதல் ஃ வரையிலும், ABCD முழுதும், மேலே சொன்ன பாடலோடு இன்னமும் நிறைய கற்றுத் தந்தார். மூன்றாவது வரை அவருடன் தான் இருந்தேன். படிக்கவில்லை என்றால் ஆப்பைக்கொம்பால் விளாசியும் இருக்கிறார். கண்டிப்புடன் கூடிய அப்பாவை அந்த தருணத்தில் தான் பார்த்தேன்.

நான்கு முதல் ஒன்பது வரை தாத்தா வீட்டிலிருந்து படிக்க, வாரம் இருமுறை பார்க்க வந்து விடுவார். வரும் பொது எனக்கு பிடித்தமான தின்பண்டங்களை வாங்கி வருவார். செலவுக்கு தேவையான பணம் கொடுத்துவிட்டு, படிக்க தேவையானவற்றையும் வாங்கித் தருவார்.

என் மீது கோபப்பட்டு கடைசியாய் அடித்தது, நான் MCA முதல் செமஸ்டர்-ஐ முடித்து மார்க் சீட் வீட்டுக்கு கொண்டு வந்தன்று. அவர் எதேச்சையாய் எடுத்துப்பார்க்க, ஒரு பேப்பர் மற்றும் பிராக்டிகலில் மட்டும் பாஸ்.

'என்ன கண்ணு இப்படி' ன்னு கேட்டதற்கு 'ஒன்னும் பெரிய விஷயம் இல்லப்பா, அடுத்த செம்ஸ்டர்ல பாத்துக்கலாம்' என்று அலட்சியமா சொல்லியதற்கு பளிரென என்னை அறைந்துவிட, அதிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தேன். ஒன்றும் பேசவில்லை, கொஞ்ச நேரத்தில் என்னை கலங்கி, கட்டிப் பிடித்தார்.

'சட்டையை போடு, வெளியே போகலாம்' எனச் சொல்லி, தோளில் கைபோட்ட வண்ணம், மாலை வேளை என்பதால், ஊருக்கு வெளியே இருக்கிற எங்கள் ஊர் தியேட்டரில் பரோட்டா வாங்கி தந்து, 'சாரி கண்ணு உன்ன அடிச்சிருக்கக்கூடாது' என்று சொன்னார்.

'இல்லப்பா என்னோட தப்பு, நிறையா மார்க் எடுக்கலாம்னு அடிச்சிட்டு வந்துட்டேன், சாரி' என சொல்ல,  'இல்ல கண்ணு உன்மேல் இருக்கிற நம்பிக்கையில நிறைய எதிர்பாத்துட்டேன்' என்று சொன்னார். பதிலுக்கு 'கண்டிப்பா நிறைவேத்துவேன் அப்பா' என்று சொல்ல, 'எனக்கு தெரியும் நீ செய்வ' என்று நம்பிக்கையோடு சொன்னார்.

அதன்பின் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னோடு இயைந்து என்னை நெறிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது கவிதையின் முதல் ரசிகன் நான். அதன் பாதிப்புத்தான் என்னுடய அத்தனை கிறுக்கல்களும்...

சிறு வயது தவிர்த்து என்னை நேரில் வாடா போடா என அழைத்ததில்லை. வா கண்ணு, போ கண்ணு எனத்தான் சொல்லுவார். தொலைபேசியில் அழைத்தாலும், 'சொல்லு கண்ணு, நல்லாருக்கியா?' இதுதான் அவர் பேசும் முதல் வாக்கியம்.

மனைவியை இழந்து மீளாத்துயரில் இருக்கும்போது எனது மகனுடன் இங்கு வந்து என்னுடன் இரு மாதம் இருந்தார். அப்பா, நான், எனது மகன் என மூவரும் தனியே இருந்த வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் அவை.

வேலைப்பளு அதிகமாய் இருந்த சமயம் அது. எல்லாவிதத்திலும் உதவியாய் இருந்து, என்னை சரியான முறையில் அறிவுறுத்தி, மறுமணத்திற்கு சம்மதிக்கச்செய்து, இறுதியில் ஒரு குழந்தையோடு இருப்பவரைத்தான் மணந்துகொள்வேன் என சொன்னவுடன் உடனே எனது தாயாருடன் பேசி, மீண்டும் என் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தது வரை... நினைத்தாலே பிரமிப்பாய் இருக்கிறது...

இன்னும் அவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.... பக்கங்கள் போதாது.

அப்பா, நீங்கள் நீடூடி வாழ வேண்டும், எனக்கு ஆதரவாய், ஆசானாய்...

ஆசி வேண்டும் அன்பு மகன்...

ராமசாமி பிரபாகர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!  

47 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அப்பாவுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள் ,
Really Great you too sir ...

பிரபாகர் said...

// ஸ்ரீ.கிருஷ்ணா said...
அப்பாவுக்கு என்னோட பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

நன்றி கிருஷ்ணா,

கண்டிப்பாய் தெரிவிக்கிறேன்...

மணிஜி said...

அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

// தண்டோரா ...... said...
அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

வணக்கம் அண்ணே...

நன்றி. உங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவிடுகிறேன்...

நையாண்டி நைனா said...

என் அப்பாவுக்கு, என்னோட பிறந்தநாள் வாழ்த்துகள்

பிரபாகர் said...

// நையாண்டி நைனா said...
என் அப்பாவுக்கு, என்னோட பிறந்தநாள் வாழ்த்துகள்//

நன்றி நைனா....

உங்களின் அன்பிற்கும் வாழ்த்துக்கும்...

ஜெட்லி... said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
//
நன்றி ஜெட்லி... வாழ்த்துக்கும் வருகைக்கும்....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சார் , என்னோட ப்லோக் தமிழ்மணம் இணைக்க முடியல RSS feed Problem வருது . RSS எப்டி ப்லோக் add பண்றது அத பத்தி வீடியோ பார்த்தும் புரியல , எனக்கு simple லா சொல்லுங்க தமிழ்மணம் ல add Check பண்ணி பார்த்து சொல்லுங்க , 3 months ட்ரை பண்ணியும் ஒரு ஐடியா இல்ல , krishnasamyjai@gmail.com ....

பிரபாகர் said...

//ஸ்ரீ.கிருஷ்ணா said...
சார் , என்னோட ப்லோக் தமிழ்மணம் இணைக்க முடியல RSS feed Problem வருது . RSS எப்டி ப்லோக் add பண்றது அத பத்தி வீடியோ பார்த்தும் புரியல , எனக்கு simple லா சொல்லுங்க தமிழ்மணம் ல add Check பண்ணி பார்த்து சொல்லுங்க , 3 months ட்ரை பண்ணியும் ஒரு ஐடியா இல்ல , krishnasamyjai@gmail.com ....//

Jai, Please check your mail...

ஈரோடு கதிர் said...

மனம் மலரும் இடுகை!

தங்கள் அப்பாவுக்கு பாசமான வணக்கங்கள்

பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
மனம் மலரும் இடுகை!

தங்கள் அப்பாவுக்கு பாசமான வணக்கங்கள்

பல்லாண்டு வாழ வேண்டுகிறேன்//

நன்றி கதிர்...

உங்களின் மேலான அன்பும் ஆதரவும் என்னை என்றும் திகைப்பிலாழ்த்துபவை...

தராசு said...

அருமை,

அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..

பிரபாகர் said...

//தராசு said...
அருமை,

அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..

October 10, 2009 1:00 PM//

நன்றிங்க... வருகைக்கும் வாழ்த்துக்கும். அப்பாவுக்கு தெரியப்படுத்திடறேன்.....

vasu balaji said...

அப்பாவுக்கு என் பிறந்தநாள் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லுங்கள். நெகிழ்ச்சியான நினைவலைகள். அருமையான அப்பா.

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
அப்பாவுக்கு என் பிறந்தநாள் வணக்கத்தையும் வாழ்த்தையும் சொல்லுங்கள். நெகிழ்ச்சியான நினைவலைகள். அருமையான அப்பா.
October 10, 2009 1:55 PM //

நன்றிங்கய்யா.... கண்டிப்பா சொல்லிடறேன்...

ஆரூரன் விசுவநாதன் said...

அவையில்முந்தியிருப்பச் செயல் புரிந்த தந்தையையும்,


என் நோற்றான் கொள் எனும் சொல் பெற்ற மகனையும்

பார்க்க பெருமையாகவும், பொறாமையாகவும் இருக்கிறது.
அப்பா, நான், எனது மகன் என மூவரும் தனியே இருந்த வாழ்வின் மறக்க முடியாத நாட்கள் அவை


உண்மை நண்பா,,,,,வாழ்த்துக்கள்

தந்தையார்க்கு என் அன்பினைச் சொல்லவும்....

பிரபாகர் said...

//தந்தையார்க்கு என் அன்பினைச் சொல்லவும்...//

நன்றி நண்பரே, கண்டிப்பாய்...இந்த வருட பிறந்த நாள் என் அப்பாவிற்கு மிக சிறப்பான ஒன்று, எனது இணைய நண்பர்களின் வாழ்த்துக்களும் சேர்வதால்....

Btc Guider said...

அப்பாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,மேலும் நீடுடி வாழ என் பிரார்த்தனை.

பிரபாகர் said...

//ரஹ்மான் said...
அப்பாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,மேலும் நீடுடி வாழ என் பிரார்த்தனை//

நண்பரே.... வணக்கம் உங்களின் முதல் வருகைக்கு. நன்றி உங்களின் வாழ்த்துக்களுக்கு.

துபாய் ராஜா said...

அப்பாவிற்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.

நோய் நொடியின்றி நீடுழி நெடுங்காலம் வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

நெகிழ்ச்சியான பதிவு பிரபாகர்.

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
அப்பாவிற்கு எனது வணக்கமும் வாழ்த்துக்களும்.

நோய் நொடியின்றி நீடுழி நெடுங்காலம் வாழ எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்.

நெகிழ்ச்சியான பதிவு பிரபாகர்.
//

நன்றி ராஜா...

உங்களின் வாழ்த்துக்களை சொல்லிவிடுகிறேன்...

கலகலப்ரியா said...

நெகிழ் பதிவு.. ! அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..!

பிரபாகர் said...

//கலகலப்ரியா said...
நெகிழ் பதிவு.. ! அப்பாவுக்கு வாழ்த்துக்கள்..!//

நன்றிங்க ப்ரியா... வருகைக்கும் அப்பாவுக்கு வாழ்த்து சொன்னதுக்கும்...

கிறுக்கல்கள்/Scribbles said...

We cannot find such a great personality like your father. He made me to come to this level. I never refuse his words for anything. He is a divine man. I writing these for your friends' information. Good keep writing. I will write someday about your father what he did for me and how he made my life.

பிரபாகர் said...

//He is a divine man//

Thanks.... Thanks a lot..

மாதேவி said...

சிறந்த தந்தைக்கு உதாரணமாய் விளங்கும் உங்கள் அப்பாவுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//மாதேவி said...
சிறந்த தந்தைக்கு உதாரணமாய் விளங்கும் உங்கள் அப்பாவுக்கு

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
//

வாருங்கள் மாதேவி. வருகைக்கு ரொம்ப சந்தோசம்... வாழ்த்துக்கு நன்றி...

kishore said...

அப்பாவிற்கு பிறந்த நாள் வணக்கங்கள்.. அவரின் ஆசி வேண்டி..

பிரபாகர் said...

//
KISHORE said...
அப்பாவிற்கு பிறந்த நாள் வணக்கங்கள்.. அவரின் ஆசி வேண்டி..//

நன்றி கிஷோர்.... வரவிற்கும் வாழ்த்துக்கும்... கண்டிப்பாய் அப்பாவிடம் தெரிவித்து விடுகிறேன்...

Menaga Sathia said...

அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

ஒட்டும் போட்டாச்சு ப்ரதர்!!

ஷங்கி said...

உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

ப்ரியமுடன் வசந்த் said...

அப்பா தோள்ல தூக்கிபோட்டு நடக்கும்போதே நண்பனாகிவிடுகிறார்...

ராமசாமி அப்பாவுக்கு இந்த கடைக்குட்டியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

பிரபாகர் said...

//Mrs.Menagasathia said...
அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

ஒட்டும் போட்டாச்சு ப்ரதர்!!//

உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் இந்த சகோதரனின் இதயப்பூர்வமான நன்றிங்க...

பிரபாகர் said...

//ஷங்கி said...
உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
//

ஷங்கி,

உங்களின் அன்பான தொடர்தலுக்கும், நட்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

பிரபாகர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
அப்பா தோள்ல தூக்கிபோட்டு நடக்கும்போதே நண்பனாகிவிடுகிறார்...

ராமசாமி அப்பாவுக்கு இந்த கடைக்குட்டியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...//

நன்றி சகோதரா... கடைக்குட்டியின் வாழ்த்தை அப்பாவுக்கு தெரிவித்தாயிற்று.

CHANDRA said...

ராமசாமி பிராபகர்,ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்குங்க,அப்பா....... நீரும் உமது தகப்பனாரும் நீடுடி வாழ்க.இதை விட நூறு மடங்கு பாசத்தை உமது பிள்ளைகள் உங்கள் மீது காட்டுவார்கள்.எதை நாம் விதைக்கிறோமோ,அதை நாம் திரும்ப பெருவோம்.இது நம் கலாச்சாரம் இதை பேணிக்காப்போம்.God Bless you and your family.

பிரபாகர் said...

//CHANDRA said...
ராமசாமி பிராபகர்,ரொம்ப நெகிழ்ச்சியாய் இருக்குங்க,அப்பா....... நீரும் உமது தகப்பனாரும் நீடுடி வாழ்க.இதை விட நூறு மடங்கு பாசத்தை உமது பிள்ளைகள் உங்கள் மீது காட்டுவார்கள்..இது நம் கலாச்சாரம் இதை பேணிக்காப்போம்.God Bless you and your family. //

CHANDRA ரொம்ப நன்றிங்க...

//எதை நாம் விதைக்கிறோமோ,அதை நாம் திரும்ப பெருவோம்//

நிச்சயமா... சரியா சொன்னீங்க....

நாகராஜன் said...

பிரபாகர்,

அப்பாவிற்கு எனது அன்பான வாழ்த்துக்களும், ஆசிகளும்... அருமையான அப்பா, அருமையான பையன்... இதே மாதிரியான உறவை நீங்களும் உங்கள் மகனும் தொடர வேண்டுகிறேன்... ஒவ்வொரு மகனுக்கும் அவனோட அப்பா தாங்க ஹீரோ...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
பிரபாகர்,

அப்பாவிற்கு எனது அன்பான வாழ்த்துக்களும், ஆசிகளும்... அருமையான அப்பா, அருமையான பையன்... இதே மாதிரியான உறவை நீங்களும் உங்கள் மகனும் தொடர வேண்டுகிறேன்... ஒவ்வொரு மகனுக்கும் அவனோட அப்பா தாங்க ஹீரோ...
October 12, 2009 9:08 PM //

நன்றி ராசுக்கிட்டு. அப்பத்தான் எல்லோருக்கும் முதல் ஹீரோ.

அன்புடன் அருணா said...

அப்பாக்கள் எல்லோரும் எப்படி இப்படி அழகாக இருக்கிறார்கள்?

vasu balaji said...

பாராட்டுக்கள் குட்ப்ளாக்ஸ் தேர்வுக்கு

பிரபாகர் said...

//அன்புடன் அருணா said...
அப்பாக்கள் எல்லோரும் எப்படி இப்படி அழகாக இருக்கிறார்கள்?

October 13, 2009 8:51 PM//

நாமும் நல்ல தகப்பனாக இருக்கவேண்டும் என்பதற்காகவோ?

நன்றிங்க, வரவுக்கும் கருத்துக்கும்...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
பாராட்டுக்கள் குட்ப்ளாக்ஸ் தேர்வுக்கு

October 13, 2009 9:32 PM
//

வாழ்த்துக்கு நன்றிங்கய்யா...

ஜோதிஜி said...

சில அப்பாக்கள் இப்படி அழகாகத்தான் இருக்கிறார்கள். என்னுடைய வாழ்த்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களின் ஆளுமை எங்கிருந்து வந்தது என்று இப்போது புரிகிறது?

பிரபாகர் said...

சரியாகச் சொன்னீர்கள். எனது அப்பாவிடமிருந்து வந்தவைகள்தான் யாவும். நன்றிங்கய்யா.

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

அப்பாவினைப் பற்றிய இடுகை அருமை

சும்மா சொல்லக்கூடாது - கொடுத்து வச்சவர் நீங்கள் - அருமையான அப்பா

நல்வாழ்த்துகள்

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB