கொண்டாடுவோம் தீபா 'வலி'...

|

அன்பு நண்பர் கதிர் அவர்களின் கவிதையை படித்த தாக்கத்தில் மனம் கசிந்து எழுதியது.

அசுரவதம் செய்ததினால்
ஆண்டுதோறும் தீபாவளி
அசுரன் வதம் செய்தலினால்
அனைவருக்கும் மரணவலி.

வீசும் காற்றில் ரத்த வாடை
வாழ்வதுவோ என்றும் கோடை
பேசுதற்கு நாவிருந்தும்
பேச்சறுந்த அவலநிலை.

மாண்ட பின்பு நரகமது
மறுபடியும் தேவையில்லை
ஆண்டழிக்கும் அசுரனிடம்
அல்லல்படும் என்னவர்க்கு.

பணம் பதவி சுகம் காணும்
பகட்டான ஆள்வோர்க்கு
இனம் சாக இன்புற்று
இனிமையாய் தீபாவளி

மனம் இருப்பின் மறுத்திடுவோம்
மகிழ்ச்சியதை துரத்திடுவோம்
இனம் வாழும் அந்நாளை
பொன்னாளாய் உணர்ந்திடுவோம்.

மனம் கசிந்து மறுவாழ்வு
மீண்டும் வந்து சேர்ந்திடவே
இனம் வாழ இறைவேண்ட
அன்புடனே அழைக்கின்றேன்...

34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

பிரபாகர்!ரொம்ப ரொம்ப அழகான கவிதை. சின்ன வார்த்தைகளில் வலி பகிர்ந்தமைக்கு நன்றி

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
பிரபாகர்!ரொம்ப ரொம்ப அழகான கவிதை. சின்ன வார்த்தைகளில் வலி பகிர்ந்தமைக்கு நன்றி//

நன்றி அய்யா. கதிரை படித்தவுடன் ஏற்பட்ட மனவலியின் வெளிப்பாடு.

கார்க்கிபவா said...

//மாண்ட பின்பு நரகமது
மறுபடியும் தேவையில்லை
ஆண்டழிக்கும் அசுரனிடம்
அல்லல்படும் என்னவர்க்கு//

:(((

பிரபாகர் said...

நன்றி சகா...

நையாண்டி நைனா said...

வாவ்.... டாப் கிளாஸ்...

பிரபாகர் said...

//நையாண்டி நைனா said...
வாவ்.... டாப் கிளாஸ்...
//

நன்றி நைனா... வரவிற்கும் கருத்திற்கும்.

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அருமையான வரிகள் பிரபா....

வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
மிக அருமையான வரிகள் பிரபா....

வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி ஆரூரன்... மனத்தின் வலியை வார்த்தையில் வெளிப்படுத்த எண்ணி ஏதோ என்னால் இயன்ற ஒரு புலம்பல்...

மணிஜி said...

பிரபா..................................................................................ம்ப நல்லாயிருக்கு

பிரபாகர் said...

//
தண்டோரா ...... said...
பிரபா..................................................................................ம்ப நல்லாயிருக்கு//

நன்றி அண்ணா...

ISR Selvakumar said...

ஆறுதல் தரும் வலிகள்..ஸாரி வரிகள்!

பிரபாகர் said...

//r.selvakkumar said...
ஆறுதல் தரும் வலிகள்..ஸாரி வரிகள்!//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க...

க.பாலாசி said...

//மாண்ட பின்பு நரகமது
மறுபடியும் தேவையில்லை
ஆண்டழிக்கும் அசுரனிடம்
அல்லல்படும் என்னவர்க்கு.//

மனதை ஒருவாரு பிசையும் வரிகள் நண்பரே....

தாங்களும் வார்த்தை கோர்வையில் வல்லவர் என்பதை நிருபித்துவிட்டீர்.....

நல்ல கவிதை.....மிக வலி பொதிந்த வரிகளாய் மேலே உள்ளதை கருதுகிறேன்.

(தமிழ்மணத்தில் ஓட்டிட இயலவில்லை. பின்னர் போடுகிறேன்.)

பிரபாகர் said...

//நல்ல கவிதை.....மிக வலி பொதிந்த வரிகளாய் மேலே உள்ளதை கருதுகிறேன். //

எனக்கும் எழுதியதில் பிடித்த வரிகளுக்கு அவைதான் பாலாஜி... நன்றி, உங்களின் வருகை மற்றும் கருத்துக்கு.

ஈரோடு கதிர் said...

நம் கவிதைகள்... அந்த மக்களின் வலி நமக்குள் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்...

என் எண்ணத்தோடு, நம் மக்களுக்காக வலிந்து வலியோடு படைத்தமைக்கு நன்றிகள் மட்டும் தோழா

பிரபாகர் said...

நன்றி கதிர்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பிரபாகர், நம் இனத்தினரின் வலியை அழகாக வடித்துள்ளீர்கள்.

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், நம் இனத்தினரின் வலியை அழகாக வடித்துள்ளீர்கள்.//

நன்றி செந்தில். இதைத்தான் நாமிருக்கும் நிலையில் செய்ய இயலும்.

நாகராஜன் said...

கதிரோட பதிவுக்கு எழுதிய அதே பின்னூட்டம் தான் இதற்கும் பிரபாகர்...

முடிந்த வரையில் இந்த தீபாவளியை கொண்டாடாமல் இருந்து அவர்கள் வலி நீங்க ஒரு வழி பிறக்க இறைவனை வேண்டுவோம்...

ப்ரியமுடன் வசந்த் said...

pirabaa nice poem..

un expected ...

பிரபாகர் said...

//October 15, 2009 12:42 AM
ராசுக்குட்டி said...
கதிரோட பதிவுக்கு எழுதிய அதே பின்னூட்டம் தான் இதற்கும் பிரபாகர்...

முடிந்த வரையில் இந்த தீபாவளியை கொண்டாடாமல் இருந்து அவர்கள் வலி நீங்க ஒரு வழி பிறக்க இறைவனை வேண்டுவோம்...
//

நன்றி ராசுக்குட்டி. கண்டிப்பாய் அதையாவது செய்வோம்.

பிரபாகர் said...

//பிரியமுடன்...வசந்த் said...
pirabaa nice poem..

un expected ...//

நன்றி வசந்த். சோகத்தின் வெளிப்பாடு.

கார்த்திகைப் பாண்டியன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..:-)))

பிரபாகர் said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..:-)))

October 15, 2009 5:49 PM//

வருகைக்கு நன்றிங்க...

தீப்பெட்டி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

பிரபாகர் said...

//தீப்பெட்டி said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

October 16, 2009 3:07 PM
//

வருகைக்கு நன்றிங்க...

ஷங்கி said...

தீபாவளி வாழ்த்துகள் பிரபாகர்!

பிரபாகர் said...

//ஷங்கி said...
தீபாவளி வாழ்த்துகள் பிரபாகர்!

October 17, 2009 11:27 AM//

நன்றி ஷங்கி...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்...

கலகலப்ரியா said...

:)..

பிரபாகர் said...

//

கலகலப்ரியா said...
:)..//

வருகைக்கு நன்றிங்க...

ஜோதிஜி said...

அதே வலி அதே சோகம். எண்ணங்கள் வலிமையானது. அதன் விளைவுகள் விரையில் வெளியே தெரியும் பிரபாகர். ஆயிரம் ஆண்டுகள் ஆளப் பிறந்தவன் என்று அகங்காரம் கொண்ட மன்னர்கள் இன்று யாரும் இல்லை. அவர்களின் புகழ் கோட்டை கொத்தளங்கள் எதுவும் இன்று இல்லை. தஞ்சை பெரிய கோவில் கோயில் கூட வெறும் நிணைவுச் சின்னமாகத் தான் இன்று நம்மிடம் இருக்கிறது. ஆனால் கல்லணை பாருங்கள்? ஆமாம் மக்களின் நலன் என்பது நீடித்த புகழ் உருவாக்கும் வாழ வைக்கும். சீக்கிரம் பாருங்கள். சிரிக்கும் வாழ்க்கைச் சுவடுகளையும் பார்க்கத் தான் போகிறீர்கள். அப்போது தெரியும் உங்களைப் போன்ற கதிர் போன்ற ஜெரி ஈசனாந்தவர்களின் வார்த்தைகளில் உள்ள வலிமைகளை?

பிரபாகர் said...

அய்யா,

உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. சந்தோஷமாய் உணர்கிறேன்....

ungalrasigan.blogspot.com said...

இலங்கை என்றும், ராஜபக்‌ஷே என்றும், தமிழினம் என்றும் வார்த்தைகளைப் போடாமல், வார்த்தைகளைக் கொண்டே வலியை உணர்த்தியது சிறப்பு!

பிரபாகர் said...

//இலங்கை என்றும், ராஜபக்‌ஷே என்றும், தமிழினம் என்றும் வார்த்தைகளைப் போடாமல், வார்த்தைகளைக் கொண்டே வலியை உணர்த்தியது சிறப்பு!
//
நன்றிங்கய்யா... உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB