பிளாட்ஃபார்ம் - வெயிட்டிங் லிஸ்ட் - தொடர்ச்சி

|

இதோட ஆரம்பத்த படிக்கலைன்னா இந்த வெயிட்டிங் லிஸ்ட் படிச்சிட்டு வந்துடுங்களேன், ப்ளீஸ்....

'என்ன தம்பி நிஜமாவே WL னா வெயிட்டிங் லிஸ்ட்னு தெரியாதா?' டி.டி.ஆர்.

'இல்லங்க சார், லைஃபில பர்ஸ்ட் டைம் டிரெய்ன்ல தனியா டிக்கெட் எடுத்துட்டு போறேன். எப்பவும் பஸ்ஸில தான் போவோம். ஒரு தடவ மாமா கூட பாம்பே போயிருக்கேன், ஆனா டிக்கெட் எடுத்தது எல்லாம் அவரு தான்' நான்.

பின்னூட்டத்துல நிறைய பேர்(?) சொன்ன மாதிரி அவரும் 'ஆச்சர்யமா இருக்கு' ன்னு சொல்லிட்டு சீட் நம்பர சொல்லி அவரே கூட்டிட்டு போய் உக்கார வெச்சாரு.

பக்கத்துல கேரளாவிலிருந்து ஒரு முப்பது வயசில ஒரு பெண் தன்னோடஅஞ்சு வயசு பாப்பாவோட இருந்தாங்க.

அவங்க மலையாளம் கலந்த தமிழ்ல புரியற மாதிரி பேசினாங்க. குழந்த அழகா இங்கிலீஷ் பேசுச்சி.

அந்த குட்டி பாப்பா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம திணற, இந்த பாப்பா கேள்விக்கே பதில் சொல்ல முடியலையே, இண்டர்வியூல எப்படி சொதப்ப போறோமோ தெரியலன்னு பீதி கிளம்பு ஆரம்பிச்சிடுச்சி.

'டெல் மீ எ ஸ்டோரி' ன்னு கேட்டுச்சி.

'அவளுக்கு கதைன்னா ரொம்ப இஷ்டம்' னு அவங்க அம்மா சொல்ல, ஆர்வமா சொல்றத அந்த பாப்பா கேக்க ஆரம்பிச்சது.

ஓரளவுக்கு இங்கிலிஷ்ல தெரிஞ்ச தாகம் தெளிந்த காகம் சொல்லலாம்னு ஆரம்பிக்க, ஐ நோ திஸ் ஸ்டோரி ன்னு சொல்லவும், சிங்கமும் நாலு எருதும்னு ஆரம்பிச்சேன். அதுவும் தெரிஞ்ச்சிருந்தது.

இந்த மாதிரி பல முயற்சிக்கு பின்னால 'எ ஃபாட் மென் வென்ட் டு எ காஃபி ஷாப்' னு ஆரம்பிக்கும்போது அமைதியா இருக்க ஆகா மேட்டர் மாட்டிகிச்சுன்னு தொடர ஆரம்பிச்சேன்.

'ஹி ஆர்டர்ட் எ கப் ஆப் மில்க், டிராங்க் இட். எகைன் ஆர்டர்ட் எ கப் ஆப் மில்க், டிராங்க் இட், எகைன் ' ஆரம்பிக்க 'ஓகே அங்கிள் ஹி ஹாட் த்ரீ கப் ஆப் மில்க். தென்?'

'தென் அகைன் ஹி ஆர்டர்ட் எ கப் ஆப் சுகர். ஃபெல் டவுன் தி ப்ளோர் அண்ட் .... டு மிக்ஸ் தி மில்க் அண்ட் சுகர்' னு ஒரு வழியா முடிக்கறதுக்குள்ள வேர்த்து விறுவிறுத்து போயிடுச்சி.

அந்த பாப்பா வெறுத்து போயி, 'ப்ளீஸ் அங்கிள் லீவ் மீ அலோன். ஐ டோன்ட் வான்ட் ஸ்டோரி' ன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட ஓடிடுச்சி.

பேயறைஞ்ச மாதிரி உட்காந்திருக்க, வேலையெல்லாம் முடிச்சிட்டு 'என்ன பிரபாகர்,தனியாத்தானே இருக்கீங்க, வாங்க பேசிகிட்டிருப்போம்' னு டி.டி.ஆர் கூட்டிட்டு போனாரு.

WL மேட்டராலயோ என்னமோ தெரியல, ட்ரைன்ல இருக்கிற எல்லா கிளாஸ் பத்தியும் கிளாஸ் எடுத்துட்டு, சில சுவராஸ்யமான சம்பவங்களையும், பல போரடிக்கிற விஷயங்களையும் விடிய விடிய தூங்கவிடாம சொல்லிட்டு வந்தாரு.

ஓட்டல்ல ரூம் எடுத்து கிளம்பி இண்டர்வியூக்கு போனேன். என்ன மாதிரி பத்து பேரு வந்திருந்தாங்க. வாழ்க்கையில சந்திக்கிற மொத இண்டர்வியூ.

வழ்க்கமான கேள்விகளை கேட்டாங்க. படிச்ச மாதிரி ஒப்பிச்சேன். அப்புறம்தான் என் வாழ்க்கையையே பொரட்டி போட்ட அந்த கேள்விய கேட்டாங்க.

'நீங்க எந்த பிளாட்ஃபார்ம் ல வொர்க் பண்றீங்க' ங்கறதுதான் அது.

திரு திருன்னு முழிச்சேன். பார்டன் னு கேக்க திரும்பவும் அதே கேள்வி.

அவங்களாவே புரிஞ்சிகிட்டு 'விண்டோஸ் ஆ, டாசா' ன்னு கேக்கவும், போத்னு தெளிவா சொன்னேன்.

'வி வில் கெட் பேக் டு யு' ன்னு அனுப்பிட்டாங்க, அவ்வளவுதான்.

சரி, எல்.அன்.டி ஒரு ஜீனியச இழந்துட்டங்கன்னு நினைச்சிகிட்டு டிரையின் ஃபேர் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்.

காமெடிக்காக இண்டர்வியூ பத்தி சொல்லும்போது கண்டிப்பா பிளாட்ஃபார்ம் பத்தின ஜோக்கும், அதுக்கு எதோ ஒரு ஸ்டேஷனோட பேர சொல்ற மாதிரி இருக்கும். மனசுக்குள்ள சிரிச்சிகிட்டு நம்ம முழிச்சதுக்கு இது பெட்டர் னு நினைச்சுக்குவேன்.

முன்னோட்டம்:

அடுத்த பதிவு கிராமத்து அநியாயங்கள்.

'இதோ அவங்கிட்டயே கேளு' ன்னு தம்பி சொன்னான்.

'எப்படிப்பா சாத்தியம், ஒன்னுக்கே அவனவன் சிங்கியடிக்கிறான்...'ன்னு பாலமுருகன பாத்து கேட்க,

'ப்ரைன் பிரதர் ப்ரைன்' னு புதுசு கண்ணா புதுசு மாதிரி சொன்னான்.

விரைவில் (வெயிட்டிங் லிஸ்ட்)...

பள்ளி விளையாட்டுகள்

வேலுமணிக்கு ரொம்பவும் துணிச்சல். எல்லாத்துலயும் பேர கொடுத்துட்டாப்ல.

'மெதுவா சைக்கிள் ஓட்டற போட்டியில வேகமா ஒட்டி பரிசும் வாங்கற மொத ஆளுன்னு சொல்லிபரிசு கொடுத்தாங்க. பெருமையா வாங்கிட்டு வந்தேன்.

அதே மாதிரி ஆயிரத்து ஐந்நூறு மீட்டர்ல...

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துத்தையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!

22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Raju said...

நல்லாருக்குண்ணே.

ஈரோடு கதிர் said...

//'நீங்க எந்த பிளாட்ஃபார்ம் ல வொர்க் பண்றீங்க' ங்கறதுதான் அது.//

டிடிஆர் ஞாபகத்துல ரயில்வே பிளாட்ஃபார்ம்னு சொல்லாமா போனீங்களே...

அதுதான் தங்கமணி ஊர்ல இல்லையே... அந்த டிரெய்லர் போட்டிருக்கிற மேட்டரா சீக்கிரம் எழுதுங்க பிரபா

மணிஜி said...

/சரி, எல்.அன்.டி ஒரு ஜீனியச இழந்துட்டங்கன்னு நினைச்சிகிட்டு டிரையின் ஃபேர் எல்லாம் வாங்கிட்டு //

பிரபாதம்...(பிரமாதம்)

பிரபாகர் said...

//நல்லாருக்குண்ணே.//

நன்றி தம்பி...

பிரபாகர் said...

//அதுதான் தங்கமணி ஊர்ல இல்லையே... அந்த டிரெய்லர் போட்டிருக்கிற மேட்டரா சீக்கிரம் எழுதுங்க பிரபா//

நன்றி கதிர்...

அம்மணி வர்றதுக்குள்ள அத்தனையும் எழுதிடணும்...

butterfly Surya said...

நன்றி பிரபா. நீங்களாவது நகைச்சுவை பதிவெழுதி சிரிக்க வையுங்கள்.

அங்கே ஒரே ரணகளம்..

கலக்குங்க..

பிரபாகர் said...

//பிரபாதம்...(பிரமாதம்)//
இதுதான் தண்டோரா...

பிரபாகர் said...

//நன்றி பிரபா. நீங்களாவது நகைச்சுவை பதிவெழுதி சிரிக்க வையுங்கள்.

அங்கே ஒரே ரணகளம்..

கலக்குங்க..//

நன்றி சூர்யா....

எல்லாம் உங்களின் அன்பும் ஆதரவும்தான்....

துபாய் ராஜா said...

பாப்பாவிற்கு இங்கிலீஸ்ல கதை சொன்னதுக்கு பதில் தமிழை கொஞ்சம் கடிச்சி,கடிச்சி மலையாளம் மாறி பேசியிருந்தா மொதல்லே உங்களை விட்டுருக்கும்.... :))

பிரபாகர் said...

//பாப்பாவிற்கு இங்கிலீஸ்ல கதை சொன்னதுக்கு பதில் தமிழை கொஞ்சம் கடிச்சி,கடிச்சி மலையாளம் மாறி பேசியிருந்தா மொதல்லே உங்களை விட்டுருக்கும்.... :))//

அப்போ தெரியாம போயிடுச்சே ராஜா... இன்னும் மோசமான இங்கிலிஷ்ல கதை சொன்னேன். ஐயோ கதையே வேணாம்னு ஓடிடுச்சி.

ஜெட்லி... said...

//'நீங்க எந்த பிளாட்ஃபார்ம் ல வொர்க் பண்றீங்க' //

செம டைமிங் joke பிரபாகர்...

பிரபாகர் said...

ஜெட்லி said...
//'நீங்க எந்த பிளாட்ஃபார்ம் ல வொர்க் பண்றீங்க' //

செம டைமிங் joke பிரபாகர்...
//

ஜெட்லி,

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி...

பிளாட்ஃபார்ம் தெரியாம எம்.சி.ஏ வான்னு கேக்காதீங்க... அதான் நம்ம நிலம அப்போ...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

sirippu taangala sir

பிரபாகர் said...

//krishna said...
sirippu taangala sir//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கிருஷ்ணா...

பாலாஜி said...

கலக்கலா எழுதியிருக்கீங்க நண்பரே

பிரபாகர் said...

//பாலாஜி said...
கலக்கலா எழுதியிருக்கீங்க நண்பரே//

நன்றி பாலாஜி.....

மகேஷ் : ரசிகன் said...

Nice one. Keep Rocking... :))))

பிரபாகர் said...

மகேஷ் said...
Nice one. Keep Rocking... :))))

நன்றி மகேஷ்.... வருகைக்கும் பதிவுக்கும்...

நாகராஜன் said...

அருமையோ அருமைங்க பிரபாகர்.... உங்களோட "ஸ்டோரி டெல்லிங்", நேர்காணல் (அதுவும் குறிப்பா அந்த "பிளாட்பாரம்") மற்றும் இரயில் பயண அனுபவம் அத்தனையும் அருமை... கலக்கறீங்க போங்க.

பிரபாகர் said...

ராசுக்குட்டி,

சென்ற பதிவில் நிறைய எழுத்துப்பிழை... அழகாய் சுட்டிக்காட்ட சரிசெய்தேன். நீங்கள் எழுதும் பின்னூட்டம் ஒவ்வொன்றும் எனது எழுத்து மேம்படுதற்கு உறுதுணையாய் இருக்கிறது. நன்றி ராசுக்குட்டி. உங்களின் அன்பின் நான் திளைத்துப்போகிறேன்.

ஷங்கி said...

ஹெஹ்ஹெஹ்ஹெ!
சின்னப் பிள்ளைங்களுக்குக் கதை சொல்றதை விட அவங்க சொல்ற கதைகளைக் கேட்பது சுகம்! அட்லீஸ்ட் நீங்க இண்டர்வியூ வரைக்குமாவது போயிருக்கீங்க! என் ரெஸ்யூமையெல்லாம் குப்பைலதான் போட்டிருப்பாங்க!

பிரபாகர் said...

//
ஹெஹ்ஹெஹ்ஹெ!
சின்னப் பிள்ளைங்களுக்குக் கதை சொல்றதை விட அவங்க சொல்ற கதைகளைக் கேட்பது சுகம்!//

மிகச்சரி. என் தங்கை மகள் தர்ஸ்டி க்ரோ ன்னு ஆக் ஷனோட சொல்றத பாத்துட்டு மெய் மறந்து நின்னேன்.

நன்றி ஷங்கி..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB