அ முதல் ஃ தானுங்க.... அதுக்கு நம்ம பதில் தானுங்க...

|
தம்பி ராஜு எழுதச்சொல்லி இந்த பதிவு ஒரு முக்கியமான நாள்ல... கடைசியா உங்களுக்கு காரணம் தெரியும்... ரெடி ஜூட்.

1. A – Avatar (Blogger) Name / Original Name : பிரபாகர்.

2. B – Best friend? : My wife, brother and my dad.

3. C – Cake or Pie? : Pie (Coconut and Pineapple)

4. D – Drink of choice?: ஐஸ் லெமன் டீ... ஃபிரஷ் ஜூஸ்.

5. E – Essential item you use every day?: செருப்பு.

6. F – Favorite color?: வெளிர் நீலம்.

7. G – Gummy Bears Or Worms : Worms

8. H – Hometown?: சேலம்/ஆத்தூர்/தெடாவூர் கிராமம்.

9. I – Indulgence?: ம்.... இருக்கலாம்.

10. J – January or February?: டிசம்பர், நான் பொறந்த மாசம்...

11. K – Kids & their names?: Sonaakshi, Vishaak, & Jayani

12. L – Life is incomplete without?: Love.

13. M – Marriage date?:‍ ஆகஸ்ட் இருபத்து மூனு.

14. N – Number of siblings?: தம்பியும் தங்கச்சியும்.

15. O – Oranges or Apple?: ரெண்டும் எல்லா பழங்களோட சேர்த்து.

16. P – Phobias/Fears?: இப்போ சினிமா விமர்சனம்.

17. Q – Quote for today?: எப்பவும், Past is Misery, Future is a Mystery, Present is a gift, that is why we call it as Present.

18. R – Reason to smile?: சோகம் இல்லாம இருக்கிறதால.

19. S – Season?: சிங்கப்பூர்ல இருக்கிற ட்ரின்க். ஓ.... அதுவா? மார்கழி.

20. T – Tag 4 People?‍: ரொம்ப நாளா ஓடிட்டிருக்கு, இன்னும் எதுக்கு நாலு பேர மாட்டிவிடனும்?

21. U – Unknown fact about me?: கொஞ்சம் பொய் சொல்லி, கொஞ்சம் ஏமாத்தற நல்லவன்.

22. V – Vegetable you don't like?: எல்லாம் பிடிக்கும், பரங்கிக்காய் கொஞ்சம் கம்மியா பிடிக்கும்.

23. W – Worst habit?: ரொம்ப பேசறது...

24. X – X-rays you've had?: இல்லாமையே பாக்கலாம்ங்கறதால எடுத்ததில்ல.

25. Y – Your favorite food? மசாலாக்கள் கம்மியாயிருக்கிற எதுவும்.

26. Z – Zodiac sign? - சிம்ம ராசி, மகம்.

1. அன்புக்குரியவர்கள் : அம்மா, அப்பா, அறிவு தந்த ஆசான், ஆருயிர் நண்பர்கள்... ம்..... அம்மணி. (நினைவூட்டலுக்கு நன்றி கதிர்...)

2. ஆசைக்குரியவர் : வசந்த்... ஒ, எனக்கா... மழலைகள்...

3. இலவசமாய் கிடைப்பது : டி.வி, வேஷ்டி, சேலை, கடைசியில் நாமம்.

4. ஈதலில் சிறந்தது : பசித்தோருக்கு பரிமாறுவது...

5. உலகத்தில் பயப்படுவது : விருதுகளுக்கு... கேவலமாகி போனதால்....

6. ஊமை கண்ட கனவு : ஈழத்துக்கு இந்தியாவின் உதவி...

7. எப்போதும் உடனிருப்பது : கனவு...

8. ஏன் இந்த பதிவு : தம்பி ராஜுவின் அழைப்பால்......

9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : குழந்தைகள்...

10.ஒரு ரகசியம் : அப்புறம் சொல்லுகிறேன்...

11.ஓசையில் பிடித்தது : உளியின் ஓசை இல்லாமல் எதுவும்.

12.ஔவை மொழி ஒன்று : இயல்வது கரவேல்...(அப்படின்னா என்ன?)

13.(அ)ஃறிணையில் பிடித்தது: கம்ப்யூட்டர்.

பின்குறிப்பு...

என் மகனுக்காக எழுதிய அ முதல் ஃ வரை இணைப்பாய் இத்தோடு...

ன்புமகன் விஷாக்
சையுடன் ஓடிவந்து
ன்முகத்தில் சிரிப்போடு
எனறு பல்காட்டி
வகையோடு உற்சாகம்
ற்றெடுக்க ஓடிவந்து
ன்மீது ஏறிட்டு
க்கமெலாம் தீருமாறு
ஸ் முத்தம் கொடுத்திட்டு
ருநொடியில் மறுபடியும்
டிடுவான் விளையாட
வென வியக்காதீர்
தவன் தினச்செயல்...

ஒரு தகவல்... மதுர சிங்கம், குஜராத் காளை... டக்ளசுன்னு சொல்லிட்டிருந்த ராஜுவுக்கு இன்று பிறந்த நாள். தம்பிய எல்லாரும் வாழ்த்துவோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
38 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஜெட்லி said...

//ஆத்தூர்//

போன மாசம் தான் பாஸ் ஆத்தூர் போனேன்

ஜெட்லி said...

//16. P – Phobias/Fears?: இப்போ சினிமா விமர்சனம்.
//

ஏன்ன்ன்???? நம்மளை தாக்குற மாதிரி இருக்கு :)

பிரபாகர் said...

// ஜெட்லி said...
//ஆத்தூர்//

போன மாசம் தான் பாஸ் ஆத்தூர் போனேன்
//

தேங்க்ஸ் சரண்... ஆத்தூர்ல இருந்து ௧௬ கி.மீ. சும்மா தல. நீங்க என்ன ஊரு? என்ன விஷயமா வந்தீரு?

படத்தோட ஒவ்வொன்னையும் பாத்து கலாய்க்கறாங்க. நீங்க எழுதறது எல்லோரும் பாக்கற பார்வையில... மத்தவங்க கோணத்த தாங்க முடியல. எனக்கு உங்க விமர்சனம் ரொம்ப பிடிக்கும்.

கிரி said...

//. M – Marriage date?:‍ ஆகஸ்ட் இருபத்து மூனு.//

Blogger anniversary date :-)

பிரபாகர் said...

//கிரி said...
//. M – Marriage date?:‍ ஆகஸ்ட் இருபத்து மூனு.//

Blogger anniversary date :-)//

நன்றி கிரி... ஒரு நல்ல நாள்ல தான் மாட்டியிருக்கோமா?

பழமைபேசி said...

//ஆகஸ்ட் இருபத்து மூனு//

பிறந்த நாள்!

//மூனு//

சபாசு!

பிரபாகர் said...

//பழமைபேசி said...
//ஆகஸ்ட் இருபத்து மூனு//

பிறந்த நாள்!

//மூனு//

சபாசு!
//

அது ஒரு தனி கதைங்க.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க....

ராசுக்குட்டி said...

விஷாக்குக்காக எழுதிய அ முதல் ஃ வரையான இணைப்பு சூப்பரோ சூப்பருங்க. பாராட்டுகள்...

உங்க பதில்களும் அருமை தான்... குறிப்பா இ, உ, ஊ...

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
விஷாக்குக்காக எழுதிய அ முதல் ஃ வரையான இணைப்பு சூப்பரோ சூப்பருங்க. பாராட்டுகள்...

உங்க பதில்களும் அருமை தான்... குறிப்பா இ, உ, ஊ...//

நன்றிங்க... உங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும்....

♠ ராஜு ♠ said...

\\ P – Phobias/Fears?: இப்போ சினிமா விமர்சனம்.\\

ஏன் கேபிளையும் ஜெட்லியையும் திட்டுறீங்க..?
:-)

\\மதுர சிங்கம், குஜராத் காளை\\

வாஙக, எதுவா இருந்தாலும் அமைதியா உக்கார்ந்து பேசித் தீர்த்துக்கலாம்.
:-)

பிரபாகர் said...

//♠ ராஜு ♠ said...
\\ P – Phobias/Fears?: இப்போ சினிமா விமர்சனம்.\\

ஏன் கேபிளையும் ஜெட்லியையும் திட்டுறீங்க..?
:-)

\\மதுர சிங்கம், குஜராத் காளை\\

வாஙக, எதுவா இருந்தாலும் அமைதியா உக்கார்ந்து பேசித் தீர்த்துக்கலாம்.
:-)//

தம்பி.... மீண்டும், பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

கேபிள் அண்ணா, ஜெட்லி லாம் பிடிச்ச விமர்சகர்கள் சாமி, பொறந்த நாளும் அதுவுமா கொத்து விடறியே?

முரளிகண்ணன் said...

நல்ல அறிமுகம் உங்களைப் பற்றி

பிரபாகர் said...

//முரளிகண்ணன் said...
நல்ல அறிமுகம் உங்களைப் பற்றி
//
நன்றி முரளிகண்ணன்.... உங்களின் முதல் வருகைக்கும், கருத்துக்கும்..

கதிர் - ஈரோடு said...

எங்க ராசா.... அன்புக்குரியவரகள் பட்டியலில் அம்மணி பேரைக் காணோம்...

விஷாக்-குக்கு எழுதிய கவிதை அனுபவித்துப் படித்தேன்

பாராட்டுகள் தோழா

கதிர் - ஈரோடு said...

குஜராத் சிங்கம் டக்ளசுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....

வாழ்க வளமுடன்

வானம்பாடிகள் said...

கவிதை அழகு.

பிரபாகர் said...

//கதிர் - ஈரோடு said...
எங்க ராசா.... அன்புக்குரியவரகள் பட்டியலில் அம்மணி பேரைக் காணோம்...

விஷாக்-குக்கு எழுதிய கவிதை அனுபவித்துப் படித்தேன்

பாராட்டுகள் தோழா//

மொத வேலையா சேத்துட்டேன்..... நன்றி கதிர்....

பிரபாகர் said...

//வானம்பாடிகள் said...
கவிதை அழகு.//
உங்கள் விமர்சனம் அதைவிட அழகு... நன்றி அய்யா....

துபாய் ராஜா said...

அனைத்து பதில்களும் அருமை. சொந்த தகவல்களை சுவைபட தந்துள்ளீர்கள்.

அன்பு மகன் விஷாக்கைப் பற்றி நீங்கள் எழுதியுள்ள கவிதை அருமை. பலரது பதிவுகளிலும் நீங்கள் பின்னூட்டங்களை கவிதை வடிவில் எழுதியிருப்பதை ரசித்து படித்துள்ளேன். ஆனால் எனக்குத் தெரிந்து இதுவரை நீங்கள் கவிதை பதிவு எழுதியதில்லை.

நீங்கள் கவிதை பதிவுகளும் எழுத வேண்டும் என்பது அன்பு கட்டளை.

வாழ்த்துக்கள் நண்பர் பிரபாகர்...

வால்பையன் said...

//என் மகனுக்காக எழுதிய அ முதல் ஃ வரை இணைப்பாய் இத்தோடு...//

செமயா இருந்தது தலைவா அந்த பாட்டு!

பிரபாகர் said...

//நீங்கள் கவிதை பதிவுகளும் எழுத வேண்டும் என்பது அன்பு கட்டளை.//

அன்புக்கு நன்றி ராஜா. கண்டிப்பாய் செய்கிறேன். மாதம் ஒரு கவிதை பதிவேற்ற முயற்சிக்கிறேன்...

பிரபாகர் said...

//வால்பையன் said...
//என் மகனுக்காக எழுதிய அ முதல் ஃ வரை இணைப்பாய் இத்தோடு...//

செமயா இருந்தது தலைவா அந்த பாட்டு! //

நன்றி அருண். ரொம்ப சந்தோசம் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும்.

நையாண்டி நைனா said...

Wow... Top class.

பிரபாகர் said...

//நையாண்டி நைனா said...
Wow... Top class.//

நன்றி நைனா... வணக்கம், வணக்கம்...(நிர்மலா பெரியசாமி மாதிரி படிக்கவும்... டி.வி.யே மெரளும் இல்ல?

கார்க்கி said...

//மதுர சிங்கம், குஜராத் காளை\\

வாஙக, எதுவா இருந்தாலும் அமைதியா உக்கார்ந்து பேசித் தீர்த்துக்கலாம்.
:-)//

அப்ப இது சிங்க இல்லை போலிருக்கே சகா? :))

வாழ்த்துகள் டக்ளஸ்

பிரபாகர் said...

//கார்க்கி said...
//மதுர சிங்கம், குஜராத் காளை\\

வாஙக, எதுவா இருந்தாலும் அமைதியா உக்கார்ந்து பேசித் தீர்த்துக்கலாம்.
:-)//

அப்ப இது சிங்க இல்லை போலிருக்கே சகா? :))

வாழ்த்துகள் டக்ளஸ்//

பொறந்த நாளு, சைலண்டா விடுவோம்.... அப்புறம் பாத்துக்குவோம். தேங்க்ஸ் சகா.... வருகைக்கும் கருத்துக்கும்....

எம்.எம்.அப்துல்லா said...

அ முதல் ஃ வரை அருமை :)

பிரபாகர் said...

//எம்.எம்.அப்துல்லா said...
அ முதல் ஃ வரை அருமை :)//

நன்றி அப்துல்லா... மிகவும் சந்தோஷமாயிருக்கிறது உங்களின் வருகை மற்றும் பாராட்டால்....

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

உங்கள் அ முதல் ஃ அருமை. உங்கள் மகனிற்கு எழுதியது நன்றாக உள்ளது.

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
உங்கள் அ முதல் ஃ அருமை. உங்கள் மகனிற்கு எழுதியது நன்றாக உள்ளது.//

நன்றி செந்தில்... மிக்க மகிழ்ச்சி உங்களின் வரவு மற்றும் கருத்தினால்..

பிரபாகர்.

ஷங்கி said...

ஓக்கே ஓக்கே!

பிரபாகர் said...

//ஷங்கி said...
ஓக்கே ஓக்கே!//
நன்றி ஷங்கி....

பிரியமுடன்...வசந்த் said...

ஆசைக்குரியவர்ன்னு எம்பேர் சேர்த்ததில எதும் உள் குத்து இருக்கா பிரபா

தங்கள் மகனுக்காக வடித்த அ தான் எனக்கு பிடித்தது....

லேட்டா வந்தாலும்(மிகுதியான பணி) லேட்ட்ஸ்ட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜூ..

பிரபாகர் said...

//ஆசைக்குரியவர்ன்னு எம்பேர் சேர்த்ததில எதும் உள் குத்து இருக்கா பிரபா

தங்கள் மகனுக்காக வடித்த அ தான் எனக்கு பிடித்தது....

லேட்டா வந்தாலும்(மிகுதியான பணி) லேட்ட்ஸ்ட்டா பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராஜூ//

ஐயோ கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்களே! நன்றி வசந்த்....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல அறிமுகம்

பிரபாகர் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்ல அறிமுகம்

October 10, 2009 3:51 AM //

வரவிற்கு என்னோட பணிவான நன்றிங்க....

நாஞ்சில் பிரதாப் said...

11.ஓசையில் பிடித்தது : உளியின் ஓசை இல்லாமல் எதுவும்.//

இது ரொம்ப டாப்பு...

உங்க எல்லா பதிவையும் படிக்கனும் முழு மூச்சுல இறங்கிருக்கேன். நேரம் அமையமாட்டேங்குது. எல்லாமே நல்லாருக்கு...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
11.ஓசையில் பிடித்தது : உளியின் ஓசை இல்லாமல் எதுவும்.//

இது ரொம்ப டாப்பு...

உங்க எல்லா பதிவையும் படிக்கனும் முழு மூச்சுல இறங்கிருக்கேன். நேரம் அமையமாட்டேங்குது. எல்லாமே நல்லாருக்கு...
//
நன்றிங்க.... ஓய்விருக்கும்போது படிச்சுட்டு உங்க கருத்த எழுதுங்க....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB