சுரேந்திரன் அடிச்ச பிட்...

|

அஞ்சாவது படிக்கும் போது ஹெட் மாஸ்டர் பாலசுப்ரமணியம் சார் கிளாஸ் டீச்சர் (டி.வி.எஸ் வெச்சுருந்தாரே அவர் தான். இன்னும் தெரியலன்னா வாத்தியார் Vs டி.வி.எஸ் 50   படிங்க). அவரை நினைச்சாலே இன்னமும் பயமா இருக்கு. ரொம்ப ஸ்டிரிக்ட். எதாவது தப்பு பண்ணினா அடி பின்னிடுவாரு.

படிக்கல, வீட்டுப்பாடம் எழுதலன்னா தொலைஞ்சோம். நல்லா படிக்கிற பசங்க கூட அவர் கிட்ட பயந்துகிட்டு தான் இருப்பாங்க. சுரேந்திரன் என் கிளாஸ்மேட். படிக்கவே மாட்டான். எழுத்து கூட்டி தப்பு தப்பா படிப்பான், அதுவும் எங்ககிட்ட மட்டும். படம் வரைந்தேன்னு எழுதச் சொன்னா, 'பாடாம் வறைந்தெண்' னு எழுதுவான். தப்பில்லாம ஒரு வார்த்தைய கூட எழுதத் தெரியாது. வாத்தியாரு கேட்டா பேசவே மட்டான்.

நாலாவது வரைக்கும் எப்படியோ தப்பிச்சுட்டு வந்தவன் வசமா அஞ்சாவதுல சிக்கிட்டான். சுரேந்திரான்னு கேள்வி கேட்டாலே கையை நீட்டி அடி வாங்க தயாராகிடுவான்.

'வலிக்குது சார் மெதுவா அடிங்க சார், போதும் சார்'... இதுதான் அவன் அதிகமா பேசற வார்த்தைகள். பாடம் நடத்தும்போது அடிக்கடி ஒன்னாச்சி போறேன்னு கேட்பான்.

விளையாட்டுக்கு சார் ஒருநாள், 'எத்தனை தடவை போவே, பேசாம ஒரு டப்பாவ கட்டிட்டு வந்துடு' ன்னாரு. அடுத்த நாள் கிளாஸ் முடியற வரைக்கும் அவன் ஒன்னாச்சிக்கு கேட்கவே இல்ல.

சார் ஆச்சர்யப்பட்டு, 'டேய் என்னது அதிசயமா இருக்கு, மொத தடவையா வெளிய போறதுக்கு கேக்காம இருக்க, பரவயில்லயே' ன்னாரு.

அவன் ஒன்னுமே பேசலை. வழக்கம்போல அவன் வீட்டு பாடம் எழுதிட்டு வரலை. பென்ச்-ஐ விட்டு வெளியே வர சொன்னாரு, அடி போடறதுக்கு. ஒரு மாதிரிய காலை கிளப்பிட்டு வெளியே வந்தான்.

டிராயர்ல ஏதோ புடைச்சிட்டு இருக்கவும் தட்டி பாத்தாரு. டங்குனு சத்தம் கேட்டுச்சி.

என்னடான்னு டிராயர அவுக்க சொல்லி பாத்தா நேத்து சார் சொன்ன மாதிரி உள்ள சின்னதா ஒரு காலி எக்காலக்ஸ் டப்பாவை கயிறு போட்டு அரைஞான் கயித்துல கட்டிட்டு வந்திருந்தான். பாதி நிரம்பியிருந்துச்சி.

சார் விழுந்து விழுந்து சிரிச்சு அன்னைக்குதான் நாங்க எல்லாரும் பாத்தோம். (இதை படிக்கும்போது இது எப்படி சாத்தியம்னு கேட்கத்தோன்றும். உண்மையில் நடந்தது) ஆனா பரிட்சையில மட்டும் பதில் எழுதி பாஸ் மார்க் வாங்கிடுவான்.

சாருக்கு ரொம்ப நாளா சந்தேகம் எப்படி பரீட்சையில மட்டும் எழுதறான்னு. எங்ககிட்ட விசாரிச்சாரு, தெரியாதுன்னு சொல்லிட்டோம்.

அன்னிக்கு மாதந்திர பரீட்சை. மரத்தடியிலதான் வரிசையா உட்காந்து எழுதுவோம். அட்டை பேப்பர் எல்லாம் எடுத்துட்டு, வரிசையா கிளம்பிட்டு இருக்கறப்போ அவன் ஹேர் ஸ்டைல பாத்துட்டு ஹெட்மாஸ்டர் சுரேந்திரன் கிட்ட வந்தாரு.

தலையை தூக்கி சீவி, சிவாஜி ஸ்டைல்ல முன்னாடி குருவிக்கூண்டு மாதிரி சீவியிருந்தான். அந்த மாதிரியெல்லாம் சீவக்கூடாது, ஒழுங்கா படிய, எண்ணை வெச்சு தான் சீவிகிட்டு வரனும்.

திட்டி அவன் தலை மயிரை புடிச்சி அப்படியே ஆட்டி அடி விடும்போதுதான் தலை முடிக்குள்ளருந்து ஒரு பிட் பேப்பர் விழுந்துச்சி.

எடுத்து பாத்துட்டு ரொம்ப டென்ஷன் ஆயிட்டாரு. 'அஞ்சாவதிலேயே உனக்கு பிட்டு கேக்குதா' ன்னு கன்னத்திலே பொளேர்னு அறை விட்டுட்டு பிரம்பெடுத்து விளாச ஆரம்பிச்சிட்டாரு.

வேற எங்கெல்லாம் வெச்சுருக்கன்னு கேட்டு செக் பண்ண, சட்டை மடிப்புல, டிராயர் மடிப்புல, பென்சில் பாக்ஸ்லன்னு நிறையா வெச்சுருந்தான். ரொம்ப ஆவேசமாயிட்டாரு. சும்மா பின்னியெடுத்துட்டாரு. பிரம்பு உடைஞ்சு போச்சு. அடிச்சி களைச்சி போய், உன் அப்பாவ கூட்டிட்டு தான் கிளாசுக்கு வரனும்னு சொன்னாரு.

சுரேந்திரன் கதறிக்கிட்டே,'சார் நாளைக்கு கூட்டிட்டு வர்றேன், இன்னைக்கு பரிட்சை எழுதிட்டு போறேன் சார்'னான். 'சரி எழுதித் தொலை' ன்னுட்டு உள்ள போயிட்டாரு.

அதுக்குள்ளா நாங்க எல்லாம் மரத்தடியில உக்காந்து எழுத ஆரம்பிச்சுட்டோம். சார் அந்த பக்கம் போன உடனே, கண்ணை தொடைச்சிட்டு, எங்களை ரகசியமா பாத்து சிரிச்சான்.

என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்.

நிறைய மாற்றங்களுடன் கூடிய மீள் இடுகை...

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Anonymous said...

பிட் அடிக்கறது மன்னனா இருந்திருப்பான் போலிருக்கு. பழைய ஞாபகங்கள் என்னைக்கும் இனிமைதான்.

புலவன் புலிகேசி said...

தல என்னைய விட பயங்கரமான ஆளா இருந்திருக்காரே. இப்ப என்ன பன்றாரு?

cheena (சீனா) said...

ஆகா ஆகா அஞ்சாம் கிளாசிலேயே பிட்டா - பரவால்லயே - நாங்க எல்லாம் சிலேட்டு குச்சி தான் - பிட் எங்கே அடிக்கறது

நல்லாருக்கு பிரபாகர்

நல்வாழ்த்துகள்

Raju said...

எங்க ஊர்ல வாட்டர்கேன்தான் கட்டச் சொல்லுவாங்க..!

Unknown said...

பயங்கரமான ஆளா இருக்காரே உங்க நண்பர்...

நானெல்லாம் ரொம்ப நல்ல பையன் அஞ்சாங்கிளாஸில்..

ஈரோடு கதிர் said...

//இதை படிக்கும்போது இது எப்படி சாத்தியம்னு கேட்கத்தோன்றும். உண்மையில் நடந்தது//

செரி... கேட்கல

//என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்//

அட இதெல்லாம் நீங்க வச்சிருந்த ’பிட்’டா பிரபா

எப்படியோ சுரேந்தர் வாழ்க

sathishsangkavi.blogspot.com said...

நாங்க எல்லாம் பிட் அடிக்கமாட்டோம் முன்னாடி இருக்கறவங்கிட்ட பேப்பர பிடுங்கிக்குவோம்.....

நண்பரே உங்கள் அனுபவம் கலக்கல்....

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

சங்கர் said...

நாங்கல்லாம் எட்டாங்கிளாசில் தான் ஆரம்பிச்சோம், ஆனாலும் நீங்க ரொம்ப பாஸ்டு

வால்பையன் said...

உண்மைய சொல்லுங்க, டப்பா கட்டிட்டு போனது யாரு!?

vasu balaji said...

ங்கொய்யால முன்னாடி போட்ட இடுகைய பிட்டடிச்சி ஜாயின் பண்ணி போட்டு மீள் பதிவா! சுரேந்திரனே தேவலாம்:))

முனைவர் இரா.குணசீலன் said...

சுரேந்திரன் கதறிக்கிட்டே,'சார் நாளைக்கு கூட்டிட்டு வர்றேன், இன்னைக்கு பரிட்சை எழுதிட்டு போறேன் சார்'னான். 'சரி எழுதித் தொலை' ன்னுட்டு உள்ள போயிட்டாரு.//

எவ்வளவு நல்ல ஆசிரியர் இதுகப்பறமும் எழுதச் சொல்லியிருக்காரு பாருங்க.

முனைவர் இரா.குணசீலன் said...

என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்.//

எவ்வளவு பெரிய புத்திசாலி !!

கலையரசன் said...

உங்க பேரை போட்டு எழுதுனாலும் ஒன்னும் சொல்லமாட்டோம்! ஏன் நண்பர் பேரை மாட்டி விடுறீங்க???

தராசு said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

//என்னடான்னு டிராயர அவுக்க சொல்லி பாத்தா நேத்து சார் சொன்ன மாதிரி உள்ள சின்னதா ஒரு காலி எக்காலக்ஸ் டப்பாவை கயிறு போட்டு அரைஞான் கயித்துல கட்டிட்டு வந்திருந்தான். பாதி நிரம்பியிருந்துச்சி.//

ஆனாலும் இம்புட்டு அழும்பு ஆவாதுங்க... சரியான காமெடி,.,

ஹேமா said...

பிரபா பழைய நினைவுக் கிளறல்கள் அருமை.உங்கள் நண்பர் இப்போ எங்கே என்ன செய்திட்டு இருக்கார் ?

இனிய தமிழர் திருநாள்
வாழ்த்துக்கள் பிரபா.

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
பிட் அடிக்கறது மன்னனா இருந்திருப்பான் போலிருக்கு. பழைய ஞாபகங்கள் என்னைக்கும் இனிமைதான்.
//

ஆமங்க. ரொம்ப நன்றிங்க சின்ன அம்மணி.

//
புலவன் புலிகேசி said...
தல என்னைய விட பயங்கரமான ஆளா இருந்திருக்காரே. இப்ப என்ன பன்றாரு?
//

இன்னிக்கு நல்லா வெல் செட்டில்ட். மளிகைக் கடை வெச்சிருக்காப்ல. பார்க்க சந்தோஷமா இருக்கு.

பிரபாகர் said...

//
cheena (சீனா) said...
ஆகா ஆகா அஞ்சாம் கிளாசிலேயே பிட்டா - பரவால்லயே - நாங்க எல்லாம் சிலேட்டு குச்சி தான் - பிட் எங்கே அடிக்கறது

நல்லாருக்கு பிரபாகர்

நல்வாழ்த்துகள்

//
நன்றிங்கய்யா. நாங்க படிச்ச சமயத்துல நாலாவதுல இருந்து நோட்டுல தான் எழுதனும்.

//
♠ ராஜு ♠ said...
எங்க ஊர்ல வாட்டர்கேன்தான் கட்டச் சொல்லுவாங்க..!
//
இது அவரோட சொந்த ஐடியா ராஜு! சார் எதாச்சும் கட்டிட்டு வான்னு சொன்னதுக்கு அவரோட கண்டுபிடிப்பு.

பிரபாகர் said...

//
முகிலன் said...
பயங்கரமான ஆளா இருக்காரே உங்க நண்பர்...

நானெல்லாம் ரொம்ப நல்ல பையன் அஞ்சாங்கிளாஸில்..
//
ஒத்துக்கறோம் முகிலன் அஞ்சாங்கிளாசில்...

//
ஈரோடு கதிர் said...
//இதை படிக்கும்போது இது எப்படி சாத்தியம்னு கேட்கத்தோன்றும். உண்மையில் நடந்தது//

செரி... கேட்கல

//என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்//

அட இதெல்லாம் நீங்க வச்சிருந்த ’பிட்’டா பிரபா

எப்படியோ சுரேந்தர் வாழ்க
//
வணக்கம் கதிர். அவரு கடைசி கட்டமா அங்கயும் வெச்சிருந்தாரு...

பிரபாகர் said...

//
Sangkavi said...
நாங்க எல்லாம் பிட் அடிக்கமாட்டோம் முன்னாடி இருக்கறவங்கிட்ட பேப்பர பிடுங்கிக்குவோம்.....

நண்பரே உங்கள் அனுபவம் கலக்கல்....

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

//
நன்றிங்க. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொஙல் நல் வாழ்த்துக்கள்.

//
சங்கர் said...
நாங்கல்லாம் எட்டாங்கிளாசில் தான் ஆரம்பிச்சோம், ஆனாலும் நீங்க ரொம்ப பாஸ்டு
//
நாம காலேஜ்லத்தான்... நன்றி தம்பி. பொங்கல் வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
வால்பையன் said...
உண்மைய சொல்லுங்க, டப்பா கட்டிட்டு போனது யாரு!?
//
சத்தியமா நான் இல்லை வாலு!

//
வானம்பாடிகள் said...
ங்கொய்யால முன்னாடி போட்ட இடுகைய பிட்டடிச்சி ஜாயின் பண்ணி போட்டு மீள் பதிவா! சுரேந்திரனே தேவலாம்:))
//
எனது ஆட்காட்டி விரலை என்னை நோக்கிக்காட்டி, இது உனக்கு தேவையா... சாரிங்கய்யா.. ஹி.. ஹி..

பிரபாகர் said...

//
முனைவர்.இரா.குணசீலன் said...
சுரேந்திரன் கதறிக்கிட்டே,'சார் நாளைக்கு கூட்டிட்டு வர்றேன், இன்னைக்கு பரிட்சை எழுதிட்டு போறேன் சார்'னான். 'சரி எழுதித் தொலை' ன்னுட்டு உள்ள போயிட்டாரு.//

எவ்வளவு நல்ல ஆசிரியர் இதுகப்பறமும் எழுதச் சொல்லியிருக்காரு பாருங்க.
//
நன்றிங்கய்யா. அதுக்கப்புறமும் அவன் பாஸ் மார்க் வாங்க கேக்கறத விட்டுட்டாரு.

//
முனைவர்.இரா.குணசீலன் said...
என் பக்கத்தில இருந்த மரத்தடியில உட்காந்து சுத்தியும் பாத்துட்டு, மண்ணை தோண்டி பிட் பேப்பரை எடுத்து பாத்து எழுத ஆரம்பிச்சுட்டான்.//

எவ்வளவு பெரிய புத்திசாலி !!
//
ஆமங்கய்யா, இப்போ நல்ல நிலைமையில இருக்கிறார்.

பிரபாகர் said...

//
கலையரசன் said...
உங்க பேரை போட்டு எழுதுனாலும் ஒன்னும் சொல்லமாட்டோம்! ஏன் நண்பர் பேரை மாட்டி விடுறீங்க???
//

கலை, நாம காலேஜ்ல பிட் அடிச்சி வசமா சிக்கினது இருக்கு. அத பத்தி தனியா எழுதறேன்.

//
தராசு said...
பொங்கல் வாழ்த்துக்கள்.
//
நன்றிங்கண்ணா. உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
//என்னடான்னு டிராயர அவுக்க சொல்லி பாத்தா நேத்து சார் சொன்ன மாதிரி உள்ள சின்னதா ஒரு காலி எக்காலக்ஸ் டப்பாவை கயிறு போட்டு அரைஞான் கயித்துல கட்டிட்டு வந்திருந்தான். பாதி நிரம்பியிருந்துச்சி.//

ஆனாலும் இம்புட்டு அழும்பு ஆவாதுங்க... சரியான காமெடி,.,
//
நன்றி இளவல்.
//
ஹேமா said...
பிரபா பழைய நினைவுக் கிளறல்கள் அருமை.உங்கள் நண்பர் இப்போ எங்கே என்ன செய்திட்டு இருக்கார் ?

இனிய தமிழர் திருநாள்
வாழ்த்துக்கள் பிரபா.
//

நன்றி சகோதரி, உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

Prathap Kumar S. said...

உங்க அனுபவத்துல வர்ற ஒவ்வொரு ஆளுங்களும் ஒவ்வொரு மாதிரி எல்லாருக்கும் அனுபவம் இருக்குண்ணே... பழசுல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... டப்பா மேட்டரு செம காமெடி...

கலகலப்ரியா said...

நல்லாருக்குண்ணா..

வாழவந்தான் said...

ரொம்ப மகிழ்ச்சி நண்பா
113 பின்தொடர்வோர், இன்னுமொரு வலை பூ..
நிறைய நல்ல விஷயங்கள்...
வாழ்த்துக்கள்!

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
உங்க அனுபவத்துல வர்ற ஒவ்வொரு ஆளுங்களும் ஒவ்வொரு மாதிரி எல்லாருக்கும் அனுபவம் இருக்குண்ணே... பழசுல்லாம் ஞாபகம் வந்துடுச்சு... டப்பா மேட்டரு செம காமெடி...
//
நன்றி பிரதாப்...

//
கலகலப்ரியா said...
நல்லாருக்குண்ணா..
//
நன்றி சகோதரி!

//
வாழவந்தான் said...
ரொம்ப மகிழ்ச்சி நண்பா
113 பின்தொடர்வோர், இன்னுமொரு வலை பூ..
நிறைய நல்ல விஷயங்கள்...
வாழ்த்துக்கள்!
//
நன்றி நண்பா. ஆரம்ப நாட்களில் என்னை ஊக்குவித்த நீர் ஏழு மாத இடைவெளியில் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி...

புலவன் புலிகேசி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பிரபாகர் said...

//புலவன் புலிகேசி said...
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
//
நன்றி புலிகேசி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB