பட்ட காலில்...

|

என்னோட ஃபிரண்டு ரவியோட அப்பா பயங்கரமான குடிகாராரு. போதையில்லாம அவரே அவர பாத்திருக்கமாட்டாருன்னா பாத்துக்குங்களேன்.

ஒருநா அவன பாக்க அவன் வீட்டுக்கு போனா வாசல்லயே டிராயர் போட்டுகிட்டு உக்காந்திருந்தாரு. 'யாரு அந்த வெட்டியோட ஃபிரண்டா' ன்னு கேக்க தலையாட்ட 'அந்த சனியன் அப்படித்தான் கேக்கும் உள்ள வாடா' ன்னு உள்ள இருந்து குரல் கொடுத்தான். ’பெத்த அப்பன பேசறத பாரு, ஒரு சம்மந்தமில்லாத நாயி முன்னாடி’ ன்னாரு. 'யேய் என்ன அங்க சத்தம்’னு உள்ளருந்து நம்மாளோட குரல் வர, ’ஒன்னுமில்லங்க சார்’ னு பதில் சொல்லிட்டு ’உள்ள போங்க சார் துரை மொறைக்கிறாரு’ ன்னு சொன்னாரு.

பசங்ககிட்ட சொன்னப்போ நம்ம செட்டுலயே ரொம்ப டீசன்ட்டா உங்கிட்டத் தான் பேசியிருக்காருன்னு சொல்லி பீதிய கிளப்புனாங்க. இது நடந்தது நான் ப்ளஸ் டூ படிக்கிறப்போ.

அதுக்கப்புறமா, பசங்க கூட அவ்வளவா தொடர்பில்ல. எப்பவாச்சும் பாத்துக்குவோம்.

காலேஜ்ல படிக்கிறப்போ லீவ்ல வந்தப்போ பசங்கள பாக்க வழக்கமா போக நான் வர்றேன்னு தெரிஞ்சி நம்ம கூட படிச்ச அஷோக், பாலு, மணி எல்லாம் காத்துட்டு இருந்தானுங்க.

அஷோக்க பாத்துட்டு ஆடி போயிட்டேன். பஞ்சத்துல அடிப்பட்டமாதிரி இருந்தான். கையில மாவுக்கட்டு. கன்னத்துல சிறாய்ச்சி ஆறிக்கிட்டிருந்த பெரிய அடையாளம்.

என்னடா ஆச்சுன்னு கேட்டதுக்கு, அது ஒரு பெரிய கதை. ரவியோட அப்பா செத்து போயிட்டாரு தெரியுமா?ன்னு அஷோக் கேட்டான்.

'அச்சச்சோ, தெரியாதுடா, குடியால தானே?' ன்னு கேக்க, தலையாட்டிட்டு,

'ஆமாம். மனுஷன் படாத பாடு படுத்திட்டு போயிட்டாரு' ன்னு நடந்த சம்பவத்த சுத்த ஆரம்பிச்சான்.

'ரவி, அவங்க அப்பாவுக்கு ரொம்ப சீரியஸ்னு போன் பண்ணினான். நானும் இவனுங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போனோம். மொத தடவையா அவரோட திட்டு வாங்காம நுழைஞ்சோம், சுய நினைவே இல்லாம கேவி கேவி மூச்சுவிடுகிட்டிருந்ததால.

ஆத்தூருக்கு ஆட்டோவில போயிட்டு அங்கருந்து ஆம்னி புடிச்சி சேலம் கொண்டுட்டு போலாம்னு முடிவு பண்ணினோம்.

ஆட்டோவ அலஞ்சி திரிஞ்சி புடிச்சிட்டு பின்னால அவர, அம்மாவ, ரவிய உக்கார வெச்சிட்டு நான் முன்னால டிரைவரோட அட்ஜஸ் பண்ணி உக்காந்துட்டேன். இவனுங்க ரெண்டு பேரும் பைக்குல முன்னாடி போயி கார ரெடி பண்றதுக்கு போயிட்டானுங்க.

ஸ்டார்ட் பண்றப்போ கிக்கர் (ஆட்டோவில ஸ்டார்ட் பண்றதுங்க) வேகமா கையோட வந்தாலும் வண்டி ஸ்டார்ட் ஆயிடுச்சி. திட்டிகிட்டே வண்டிய எடுத்த டிரைவர் ஊரத் தாண்டி இருக்கிற பாலத்துகிட்ட வரும்போது ரெண்டு ஆடுங்க சண்ட போட்டுகிட்டு திடீர்னு குறுக்க வர மெரண்டு போயி சட்டுனு பிரேக் அடிச்சி வண்டிய திருப்பிவிட நான் அப்படியே தவறி விழுந்து பாலத்துக்கு கீழ கிடக்கிறேன். கை முறிஞ்சி கன்னத்துல காயம். ரத்தம் ஊத்துது. வலிய பொறுத்துகிட்டு தலையில ரத்தம் வராம கர்சீப்பால கட்டிகிட்டேன். ரவிய அப்பத்தான் பாக்கிறேன் வாயெல்லாம் ரத்தம். அவன் புடிச்சிகிட்டு வந்த கம்பில பட்டு முன்னால இருந்த ரெண்டு பல்லு புட்டுகிச்சி. ஆட்டோவ தள்ளி ஸ்டார்ட் பண்ணி,மெதுவா கிளம்பினோம்.

சரியான வலி, உயிர் போற மாதிரி இருந்துச்சி. ஒடஞ்ச கையோட அப்படியே என்ன ஆஸ்பத்திரியில விட்டுட்டு இவனுங்க ரெண்டு பேரும் ஒரு ஆம்னிய புடிச்சி சேலம் கூட்டிகிட்டு போனானுங்க'.

அடுத்து பாலு ஆரம்பிச்சான். 'வண்டி பத்து கிலோ மீட்டர்தான் போயிருக்கும், திடீர்னு முன்னாடி டயர் வெடிச்சி கிறுக்கிகிட்டு போயி ஒரு மரத்துல மோதி நின்னுடிச்சி. நல்லவேளை முன்னால எந்த ஒரு வண்டியும் வரல. டிரைவர் பக்கத்துல முன்னாடி இருந்த எனக்கும், பின்னால இருந்த ரவி அம்மாவுக்கும் சரியான அடி. வண்டி நசுங்கினதுல என் காலு சிக்கி நல்லா பிசகிகிச்சு.

அம்மா மயக்கமாயிட்டாங்க. அவருக்கு இளைப்பு நின்னு நார்மலுக்கு வந்துட்டாரு. நான் அப்படியே வந்த ஒரு பைக்குல ஆத்தூர் வந்து அஷோக் கூட சேந்துட்டேன். ஹேர் ஃபிராக்சர். இன்னும் ஒழுங்கா நடக்க முடியல. அதுக்கப்புறம் மணிதான் கூட்டிட்டு போனான்'.

மிச்சத்த மணி தொடர்ந்தான். ’அப்புறம் வந்த ஒரு சுமோவில மயக்கமா இருந்த அம்மா, அவன், அப்பா எல்லாத்தையும் கூட்டிகிட்டு போனோம். ஒரு வழியா ஆஸ்பத்திரிக்குள்ள நுழையிறோம், அவர ஸ்ட்ரெச்சர்ல வெச்சி கொண்டுபோறதுக்குள்ள இறந்து போயிட்டாரு. அப்புறம் அம்மா ஒரு வாரம் நினைவில்லாம இருந்தாங்க. இப்போ பரவாயில்ல. ஒருவழியா எல்லாம் முடிஞ்சது' ன்னு முடிச்சான்.

ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. 'நல்ல வேலை மணி உனக்குத்தான் ஒன்னும் ஆகலன்னு சொல்ல',

'யாரு சொன்னா, திரும்பி வீட்டுக்கு வர்றப்போ அவங்கள மார்ச்சுவரி வண்டில அனுப்பிட்டு பஸ்ஸில வந்தேன். படியில வந்தேன், சரியான கூட்டம். தொங்கிட்டு வர்றப்போ செருப்பு வழுக்கி தடுமாறி கீழ விழுந்து கம்பிய புடிச்சிகிட்டாலும் காலு கீழ உரசி ரெண்டு விரலு போயிடுச்சி' ன்னு கால காமிச்சான்.

30 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஆரூரன் விசுவநாதன் said...

சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.......

vasu balaji said...

ஆஆ. அசோக்கு, ரவி, பாலு எல்லாரையும் பார்த்து எவ்ளோ நாளாச்சி. என்னா கூத்துடா சாமி.:))

கலகலப்ரியா said...

:(... ஆரூர் சொன்னது... ரிப்பீட்டு... :((

துபாய் ராஜா said...

ஆஹா... இந்த கதையை கேட்டு, எழுதின உங்களுக்கும், படிக்கிற எங்களுக்கும் ஒண்ணும் ஆகாதே...

இருக்கும் போது திட்டிகிட்டிருந்த ஆளு போகும்போது எல்லோரையும் கட்டு போட வச்சுட்டாரே...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

உங்களை ஓவரா டேமேஜ் பண்ணியிருந்தாலும் கடைசியில் பரிதபப்படும்படி ஆகிவிட்டார்....

இராகவன் நைஜிரியா said...

என்னக் கொடுமையா இருக்குங்க..

படிக்கவே பயங்கரமா இருக்கே.. நேர்ல கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.

செ.சரவணக்குமார் said...

அய்யோ, பயங்கரமா இருக்கே தல.

சங்கர் said...

அண்ணே, நாடோடிகள் படம் பார்த்த மாதிரி இருக்கு (அந்த இடைவேளைக்கு முந்தைய காட்சி )

vasu balaji said...

இதயெல்லாம உலகம் நம்புது:))

செந்தில் நாதன் Senthil Nathan said...

நல்லாத்தான் இருக்கு... ஆனா வருஷ ஆரம்பத்துல எழுதுற மொத கதைலயே ஏன் இந்த இரத்த வெறி?

இராகவன் அண்ணே,

//வகை : சிறுகதை...//

இத பார்க்கலையா?

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
சிரிப்பதா? அழுவதா? என்றே தெரியவில்லை.......
//
அந்த நிலைதான் எனக்கும் அன்று... கேட்குபோது எனக்கு.

//
வானம்பாடிகள் said...
ஆஆ. அசோக்கு, ரவி, பாலு எல்லாரையும் பார்த்து எவ்ளோ நாளாச்சி. என்னா கூத்துடா சாமி.:))
//
நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
:(... ஆரூர் சொன்னது... ரிப்பீட்டு... :((
//
நன்றி சகோதரி!

//
துபாய் ராஜா said...
ஆஹா... இந்த கதையை கேட்டு, எழுதின உங்களுக்கும், படிக்கிற எங்களுக்கும் ஒண்ணும் ஆகாதே...

இருக்கும் போது திட்டிகிட்டிருந்த ஆளு போகும்போது எல்லோரையும் கட்டு போட வச்சுட்டாரே...
//
அன்று அவரது நிகழ்வில் சம்மந்தப்பட்ட எல்லோருக்கும் ஏதோ ஒன்று நடந்தது! நன்றி ராஜா!

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
உங்களை ஓவரா டேமேஜ் பண்ணியிருந்தாலும் கடைசியில் பரிதபப்படும்படி ஆகிவிட்டார்....
//
பசங்க அந்த சம்பவத்த சொல்லும்போது சிரிப்பாய்தான் இருந்தது பரிதாபத்தைவிட.

//
இராகவன் நைஜிரியா said...
என்னக் கொடுமையா இருக்குங்க..

படிக்கவே பயங்கரமா இருக்கே.. நேர்ல கேட்ட உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்.
//
கஸ்டமா இருந்தாலும் காமெடியா இருந்துச்சிங்கண்ணே. அவரு இறந்து போனதுக்கு அவரோட மனைவி, பையனே வருந்தல. ரொம்ப பட்டுட்டாங்க மொதல்லயே.

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
அய்யோ, பயங்கரமா இருக்கே தல.
//
நன்றி சரவணக்குமார்....!

//
சங்கர் said...
அண்ணே, நாடோடிகள் படம் பார்த்த மாதிரி இருக்கு (அந்த இடைவேளைக்கு முந்தைய காட்சி )
//
ம்... புத்தக கண்காட்சியெல்லாம் முடிஞ்சதா? நன்றி சங்கர்!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
இதயெல்லாம உலகம் நம்புது:))
//
அய்யா, இது முழுக்க உண்மை.

//
செந்தில் நாதன் said...
நல்லாத்தான் இருக்கு... ஆனா வருஷ ஆரம்பத்துல எழுதுற மொத கதைலயே ஏன் இந்த இரத்த வெறி?

இராகவன் அண்ணே,

//வகை : சிறுகதை...//

இத பார்க்கலையா?
//
வாங்க செந்தில், வகையை மாற்றிவிட்டேன், ஆனாலும் இது ஒரு உண்மை சம்பவம்.

செந்தில் நாதன் Senthil Nathan said...

மன்னிக்கணும் பிரபாகர்...வகை சிறுகதைனு பார்த்து புனைவுனு நெனசுபுட்டேன்...

புலவன் புலிகேசி said...

என்ன கொருமைங்க இது...Final Decision படம் மாதிரி நடந்துருக்கே...

Unknown said...

இது தான் செத்தும் கெடுத்தான் சீதக்காதியா?

சிங்கக்குட்டி said...

//நம்ம செட்டுலயே ரொம்ப டீசன்ட்டா உங்கிட்டத் தான் பேசியிருக்காருன்னு//

உண்மை உண்மை, சிறு வயதில் நிறைய முறை இது போல் என் நண்பர்களிடம் கேட்டு இருக்கிறேன்

Cable சங்கர் said...

thalaivare ithu nijamave nadanthathaa..?

ஈரோடு கதிர் said...

அப்பாடா..... கத கேட்ட உங்களுக்கு ஒன்னும் ஆகலையே....

பிரபாகர் said...

//
செந்தில் நாதன் said...
மன்னிக்கணும் பிரபாகர்...வகை சிறுகதைனு பார்த்து புனைவுனு நெனசுபுட்டேன்...
//
இதிலென்ன, சகஜம் செந்தில்.

//
புலவன் புலிகேசி said...
என்ன கொருமைங்க இது...Final Decision படம் மாதிரி நடந்துருக்கே...
//
ஆமாம் புலிகேசி, அன்றைய தினம் அவ்வாறுதான் நடந்திருக்கிறது.

பிரபாகர் said...

//
முகிலன் said...
இது தான் செத்தும் கெடுத்தான் சீதக்காதியா?
//
ஆமாம் முகிலன்! சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்.

//
சிங்கக்குட்டி said...
//நம்ம செட்டுலயே ரொம்ப டீசன்ட்டா உங்கிட்டத் தான் பேசியிருக்காருன்னு//

உண்மை உண்மை, சிறு வயதில் நிறைய முறை இது போல் என் நண்பர்களிடம் கேட்டு இருக்கிறேன்
//
நன்றி சிங்கக்குட்டி! வருகைக்கு கருத்துக்கு!

பிரபாகர் said...

//
Cable Sankar said...
thalaivare ithu nijamave nadanthathaa..?
//
ஆமாங்கண்ணா, உங்க பாணியில் சொல்லனும்னா, மிகையாயிருக்குமுன்னு சிலவற்றை எடிட் செய்த பின் வந்த இடுகை இது.

//
ஈரோடு கதிர் said...
அப்பாடா..... கத கேட்ட உங்களுக்கு ஒன்னும் ஆகலையே....
//
நல்ல வேளை ஒன்னும் ஆகல, நன்றி கதிர்.

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

அழகு நிலவன் (Azahgu Nilavan) said...

இத அப்படியே கொஞ்சம் build up பண்ணி - மர்ம தேசம், நடந்தது என்ன, திகில் மனிதன் -ன்னு போட்டு ஏதாவது தலைப்பு போட்டு TV-காரனுகளுக்கு குடுத்திங்கன்ன - சும்மா தமிழ்நாடே அதிருமுல்ல.

குடுகுடுப்பை said...

ஏம்னே சோகம் சொக்குது.
என்கிட்ட ஒரு கதி இது மாதிரி இருக்கு, ரொம்ப நாளா எழுதனும்னு யோசிக்கறேன். இன்னும் கைகூடல.

பிரபாகர் said...

//
சங்கர் said...
அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com
//
நன்றி சங்கர், பார்க்கிறேன்.

//
அழகு நிலவன் said...
இத அப்படியே கொஞ்சம் build up பண்ணி - மர்ம தேசம், நடந்தது என்ன, திகில் மனிதன் -ன்னு போட்டு ஏதாவது தலைப்பு போட்டு TV-காரனுகளுக்கு குடுத்திங்கன்ன - சும்மா தமிழ்நாடே அதிருமுல்ல.
//
ஐடியா எல்லாம் நல்லாருக்கு, சம்மந்தப்பட்ட நம்ம பிரண்டு பின்னிடுவாருல்ல!

//
குடுகுடுப்பை said...
ஏம்னே சோகம் சொக்குது.
என்கிட்ட ஒரு கதி இது மாதிரி இருக்கு, ரொம்ப நாளா எழுதனும்னு யோசிக்கறேன். இன்னும் கைகூடல.
//
சீக்கிரம் எழுதுங்க, சோகம் கூட சுகமாகும் பகிர்ந்துக்கறப்போ!

நிலாமதி said...

பட்ட காலிலே படும் என்றால் இது தானா? உண்மைக்கதையா ?

பிரபாகர் said...

//
நிலாமதி சைட்...
பட்ட காலிலே படும் என்றால் இது தானா? உண்மைக்கதையா ?
//
நண்பனுக்கு நிகழ்ந்த உண்மயான ஒன்றுதான்.

பிரபகர்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB