எங்கே செல்லும்....
முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம். இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..
முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..
இப்படித்தான் தொடர்ந்தார் பலா பட்டறை.
”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”
2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை
இந்த இரண்டாம் பாகத்தை படித்துவிட்டு தொடருங்க கீழே...
எங்கே செல்லும்...பாகம் - 3
’ஹலோ, இப்படியா ஒடற பஸ்ஸில ஏற்ரது?, எதாச்சும் ஆனா என்னாகறது?’ கேட்டது ஒரு அழகிய பெண்.
என் குழப்பம் இன்னும் அதிகமாகியது.... என்ன ஆச்சு எனக்கு, ஏன் என்னை எல்லாம் துரத்துகிறார்கள்?
பக்கத்து சீட்டில் இருந்த பெண் விழி விரிய, ‘என்னண்ணா ஆச்சு இங்க உக்காருங்க’ என கூப்பிட்டு பக்கத்தில் உட்கார சொல்ல தயக்கமாய் உட்கார்ந்தேன்.
’ஏன் இப்படி பண்றீங்க? ஏன் இப்படி அலங்கோலமா இருக்கீங்க? என்ன ஆச்சு? இப்ப எங்க இருக்கீங்க? எங்கெல்லாம் தேடறாங்க தெரியுமா?’ன்னு விடாம கேட்க, பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது.
‘போலிஸ் எல்லாம் உங்கள தேடிகிட்டு வந்தாங்க, எல்லாரும் கதிகலங்கி போயிருக்காங்க’ன்னு இன்னும் சொல்லிக்கொண்டே போக,
’ஆமாம், நீங்க யாரு? சத்தியமா யாருன்னே தெரியல’ என சொன்னேன்.
’நான் கோமதின்னா!, அய்யயய்யோ, ஏன் இப்படி கேக்குறீங்க, பக்கத்து வீட்டுப்பொண்ணு, உங்க செல்போன் என்னாச்சு, எல்லாரும் பைத்தியம் பிடிச்ச மாதிரி தேடிகிட்டிருக்காங்க ஒரு நிமிஷம்’னு சொல்லிட்டு அதோட செல்போன்ல நம்பர அழுத்தி,
‘அம்மா நான் கோமதி பேசறேன், அண்ணன் கூடத்தான் இருக்கு, ஓரற பஸ்ஸில வந்து ஏறுச்சி, ம்... இந்தா பேசுங்க’ன்னு கொடுக்க எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருந்தது.
‘எப்படிப்பா இருக்க, எங்கெல்லாம் தேடறது?ன்னு அழ ஆரம்பிக்க குழப்பம் இன்னும் அதிகமாச்சு. ‘அய்யோ, சத்தியமா எதுவுமே புரியல, அம்மான்னு சொல்றீங்கன்னு புரியுது, எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு’ன்னு சொல்லிக்கொண்டிருக்கும்போது, பஸ்ஸைத்தாண்டி அந்த கார் குறுக்கே நிற்க, டிரைவர் சட்டென பிரேக் அடித்தார்.
எல்லோரும் தடுமாற, நின்றிருந்த சிலர் முன் பக்கமாய் விழ, உட்காந்திருந்தோர் முன் கம்பிகளில் இடித்துக்கொள்ள, ஒரு குழந்தை வீலென கத்த, முன் வழியே காரிலிருந்து இறங்கிய இரண்டு பேர் என்னை நோக்கி அவசரமாக வந்தார்கள்.
சட்டென படியின் வழியே செல்போனை கையில் எடுத்துக்கொண்டு இறங்கி அவர்கள் இருவரும் என்னை துரத்த பேய்த்தனமாய் ஓட ஆரம்பித்தேன்.
மூச்சிறைக்க, இதயமே நின்றுவிடும் போலிருந்தது. உயிர் பயம் மற்றும் ஏதோ ஒன்று செலுத்த அருகேயிருந்த ஒரு சிறிய சந்தில் நுழைந்து பலவிதமாய் மாறி மாறி ஓடினேன்.
கடைசியாய் முடியாமல் அங்கிருந்த ஒரு திறந்திருந்த கேட்டின் வழியே உள்ளே நுழைந்து சுவற்றில் பல்லி போல் ஒட்டி பதுங்கி கொண்டேன். தபதவென என்னை தாண்டி செல்லும் சத்தம்.
அப்படியே கொஞ்ச நேரம் கிடக்க சப்தம் எதுமில்லாமல் இருந்தது. அயர்ச்சியில் மயங்கிய நிலைக்குப் போக ஆரம்பித்த நிலையில்,
‘அய்யோ அப்பா, இங்க பாருங்க ஒருத்தன் மயங்கி கிடக்கிறான்’ என ஒரு பெண்ணின் குரல். மெல்ல மயக்கமாகிக்கொண்டிருந்தேன்...
(தொடரும்)
விதிகள் :
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர்
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.
பழமொழி
1 month ago
22 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
அய்ய்ய்ய் இதுவும் நல்லாயிருக்கே....
அருமை..யாராவது நம்ம மூனு பேரையுமே தூக்கி சாப்பிடறா மாதிரி தொடரனும். செம ஸ்பீடு:) கலக்கிட்டீங்க பிரபா..
கதை.. ஏரியா மாறிடுச்சோன்னு ஒரு டவுட் இருக்கு (முகிலனுக்கு அடுத்து பலா எழுதின பின்னாடி)...
இருந்தாலும்.. யாராவது முன்னாடியே 4-ஆவது பாகத்துக்கு துண்டு போட்டிருக்காங்களா... பிரபாகர்?
வாயை கொடுத்து மாட்டிகிட்டேன் போல..! :)
நாந்தான் அடுத்து.....!!! :( :( :(
//
ஆ.ஞானசேகரன் said...
அய்ய்ய்ய் இதுவும் நல்லாயிருக்கே....
//
வாங்கண்ணே! வணக்கம்... நன்றி.
//
பலா பட்டறை said...
அருமை..யாராவது நம்ம மூனு பேரையுமே தூக்கி சாப்பிடறா மாதிரி தொடரனும். செம ஸ்பீடு:) கலக்கிட்டீங்க பிரபா..
//
நன்றிங்க நண்பா!
//
ஹாலிவுட் பாலா said...
கதை.. ஏரியா மாறிடுச்சோன்னு ஒரு டவுட் இருக்கு (முகிலனுக்கு அடுத்து பலா எழுதின பின்னாடி)...
இருந்தாலும்.. யாராவது முன்னாடியே 4-ஆவது பாகத்துக்கு துண்டு போட்டிருக்காங்களா... பிரபாகர்?
//
//
ஹாலிவுட் பாலா said...
வாயை கொடுத்து மாட்டிகிட்டேன் போல..! :)
நாந்தான் அடுத்து.....!!! :( :( :(
//
நீங்க தான் பாலா! ரொம்ப சந்தோஷம் தொடர்வதில்! களம் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சி!
good.
kudukuduppai said...
good.
repeatei pottukkuren
கலக்கல் பிரபா. ஆட்டம் களை கட்டுகிறது. நண்பர் சங்கருக்கு அடுத்து நீங்கள் அசத்திவிட்டீர்கள். அடுத்து ஹாலிபாலியா ரைட்டு.
பின்னீட்டீங்க நண்பரே.... ரீப்பீட்டு....
முகிலன் சார் ஆரம்பிச்சதிலர்ந்து மூனு பாகமும் விறுவிறுப்பு.வாசகர்களும் தொடர்ந்துகிட்டே இருக்கோம்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
கதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாமே பிரபாகர். சரி நம்ம பாலா எங்க கொண்டு போய்விடுறாருன்னு பாப்போம்.
கதை நல்லா இன்ரஸ்டிங்கா போகுது ..
தொடருங்கள் ...
//
kudukuduppai said...
good.
//
நன்றிங்க!
//
வானம்பாடிகள் said...
kudukuduppai said...
good.
repeatei pottukkuren
//
நன்றிங்கய்யா!
//
செ.சரவணக்குமார் said...
கலக்கல் பிரபா. ஆட்டம் களை கட்டுகிறது. நண்பர் சங்கருக்கு அடுத்து நீங்கள் அசத்திவிட்டீர்கள். அடுத்து ஹாலிபாலியா ரைட்டு.
//
நன்றி சரவணக்குமார்!
//
Sangkavi said...
பின்னீட்டீங்க நண்பரே.... ரீப்பீட்டு....
//
நன்றி நண்பா!
//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
முகிலன் சார் ஆரம்பிச்சதிலர்ந்து மூனு பாகமும் விறுவிறுப்பு.வாசகர்களும் தொடர்ந்துகிட்டே இருக்கோம்.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்
//
வணக்கங்க! உங்க முதல் வருகை மற்றும் பின்னூட்டத்துக்கு நன்றிங்க.
//
VISA said...
கதையை இன்னும் கொஞ்சம் நகர்த்தியிருக்கலாமே பிரபாகர். சரி நம்ம பாலா எங்க கொண்டு போய்விடுறாருன்னு பாப்போம்.
//
சாரிங்க. இன்னும் எழுதலாம்னுதான் இருந்தேன். ஏற்கனவே கதைய கன்னா பின்னான்னு சுத்த விட்டாச்சி, அதிகம் வேண்டாமேன்னுதான். உங்களின் முதல் வருகைக்கும் அன்பிற்கும் நன்றிங்க!
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதை நல்லா இன்ரஸ்டிங்கா போகுது ..
தொடருங்கள் ...
//
நன்றி ஸ்டார்ஜன்...
////////
01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
////////
பிரபாகர்..
இந்த ரெண்டு விதிகளும் கான்ஃப்ளிக்ட் ஆகுது கவனிச்சீங்களா???
இப்ப நான் மத்தவங்களே கை தூக்க வெய்ட் பண்ணனுமா, அல்லது நானே இன்னொருத்தரை செலக்ட் பண்ணனுமா?
அன்பு பாலா...
மடலில் அனுப்பியிருக்கிறேன் எனது கருத்தை... முடிவு செய்து இங்கு பின்னூட்டத்தில வெளியிடலாமே?
அண்ணா.. கலக்கல்... எங்கே செல்லும் இந்தப் பாதை... டைட்டில் நல்லாத்தான் வச்சிருக்காய்ங்கய்யா... =))
இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..
http://www.hollywoodbala.com/2010/01/4.html
ஆகா... ஓடினேன் ஒடினேன் வாழ்க்கையின் எல்லைக்கு ஓடினேன்...
எலே பசுபதி அடுத்தது விட்றா வண்டியை தல ஹாலிபாலி வூட்டுக்கு....
//
கலகலப்ரியா said...
அண்ணா.. கலக்கல்... எங்கே செல்லும் இந்தப் பாதை... டைட்டில் நல்லாத்தான் வச்சிருக்காய்ங்கய்யா... =))
//
நன்றி சகோதரி!
//
ஹாலிவுட் பாலா said...
இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..
http://www.hollywoodbala.com/2010/01/4.html
//
படிச்சாச்சு பாஸ், அற்புதம்.
//
நாஞ்சில் பிரதாப் said...
ஆகா... ஓடினேன் ஒடினேன் வாழ்க்கையின் எல்லைக்கு ஓடினேன்...
எலே பசுபதி அடுத்தது விட்றா வண்டியை தல ஹாலிபாலி வூட்டுக்கு....
//
நன்றி பிரதாப்...
Post a Comment