உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்....

|

செல்போன் வந்த எல்லோரும் உபயோகப்படுத்த ஆரம்பிக்காத ஒரு சிலரே வைத்திருந்த தருணம், பேசுவதற்கும், எவராவது அழைத்தால் பதில் சொன்னாலும் காசு தான் என்ற சமயம்.

சேலம் தங்கை வீட்டுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது, ராசிபுரம் செல்லும் பஸ்ஸில் கிருஷ்ணன் வந்து கொண்டிருந்தான். அளவான கூட்டம், நான்கைந்து பேர் மட்டும் படியில் இரு பக்கங்களிலும் நின்றிருக்க, நன்கு படியினை விட்டு தள்ளி உள்ளே நின்றிருந்தான்.

அப்போதுதான் நல்ல மப்பில் இருந்த ஒரு சக பயணிக்கு ஒரு அழைப்பு வர கலாட்டா ஆரம்பமானது.

'ம்... சொல்லுடா மாப்ளே, அந்த தே...பையன் அப்படி சொல்லிட்டான்டா, அவன உண்டு இல்லன்னு பண்றேன். குளோஸ் தான், வேற வழியே இல்ல'... தொடர்பு துண்டித்துப்போக, திரும்ப இவர் அழைத்தார்.

'டேய் தே... மவனே, ஏன்டா கட் பண்ணினே? அவ்வளவு பெரிய ஆளா, உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்.... இந்த கதைல்லாம் விடாதே, எனக்கு தெரியும். என்னது கோவப்படாதவா... அத சொல்ல நீ யாரு... வெக்காத, அந்த நாயி என்ன சொன்னான் தெரியுமா?'... மறு முனையில் வைத்துவிட சற்றும் தளறாமல் திரும்பவும் அழைத்தார்.

'டேய், இந்த டகால்டியெல்லாம் எங்கிட்ட வெச்சிக்காத. என்னுதுல காசு இல்ல... அலோ..அலோ.....'

சப்தம் அதிகமாயும், அச்சேற்ற முடியாத அருவருப்பான வார்த்தைகளாலேயே அவர் பேச எல்லோருக்கும் அருவறுப்பு. சொல்வதற்கோ கண்டிக்கவோ அவரது நிலையைப் பார்த்து எல்லோருக்கும் தயக்கம். பேசும்போதெல்லாம் வெட்டு கொலை என்றுதான் அதிகமாய் வந்துகொண்டிருந்தது.

திரும்பவும் அவர் அழைக்க ஆரம்பிக்க, எல்லோருக்கும் தெரிந்தது அவர் ஒரு வெத்து வேட்டு என. அவரது வாயாலேயே பேலன்ஸ் இல்லை என சொல்லி விட்டபடியால், சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தோம். பத்துநிமிடப் பேச்சின் பிறகு எதிர்புறம் இல்லாமல் இவர் துண்டித்தார்.

மீண்டும் யாருக்கோ அழைத்த அவரின் வார்த்தைப் பிரவாகம் அதிகமாய் போக, கிருஷ்ணன் ரொம்பவும் கோபத்துடன் அருகே வந்த கண்டக்டரிடம் 'என்ன சார் இப்படி பேசிகிட்டு வர்றார் கண்டிக்க மாட்டீங்களா' எனக் கேட்க அவருக்கு வந்தது ஒரு வேகம்.

அந்த நபரின் சட்டையினை பிடித்து உலுக்கி செவட்டில் ஓங்கி ஒரு அறை விட, அவரின் போதையெல்லாம் சட்டென இறங்கி போனை பாக்கெட்டில் பாக்கெட்டில் போட்டு வாயை மூடிக்கொண்டார். டிரைவர் நிறுத்தி என்ன விஷயம் எனக்கேட்க 'ஒன்னுமில்ல வண்டிய எடு போலாம்' என கண்டக்டர் சொன்னவுடன்,

கிருஷ்ணன், 'சார் இந்த ஆளை இங்கேயே இறக்கிவிட்டுட்டு போனாத்தான் புத்தி வரும்' என மறுத்து சொன்னான்.

'அட விடுப்பா, அதான் அடிச்சவுடனே அடங்கிட்டான்ல' ஒரு பெரியவர் சொல்ல வண்டி கிளம்பியது.

கிருஷ்ணனை மாட்டிவிட்டுட்டியே என்ற ஒரு பார்வையை பார்த்துக்கொண்டே வர, அவனுக்கு கிலி கிளம்பியது.

ராசிபுரம் வந்ததும், டெப்போ பஸ் ஸ்டாப்பில் அந்த ஆள் இறங்குவாரா என பார்க்க.. இறங்கவில்லை. மாறாக, காலியான சீட்டில் சட்டென கிருஷ்ணன் உட்கார, அவரும் அவனுக்கு அருகிலேயே முறைத்தபடி உட்கார இன்னும் டரியலானது.

உன்னை கவனித்துக்கொள்கிறேன் என்பதுமாதிரியான பார்வை. சரி இன்று சங்குதான் என எண்ணியபடி பயந்து பழைய பஸ்ஸ்டாண்ட்ல இறங்கி நடந்து போயி ஆத்தூர் பஸ்ஸை பிடித்துக்கொள்ளலாம் என எண்ணி, உயிரை கையில் பிடித்தபடி இருக்க, அப்போதுதான் அந்த எதிர்ப்பாராத சம்பவம் நடந்தது.

திடீரென அந்த நபர் கிருஷ்ணனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.

'அந்த தே.. பையன் நம்ப வெச்சி கழுத்த அறுத்திட்டான், அவளை எப்படி லவ் பண்ணினேன் தெரியுமா?' என தேம்பி தேம்பி அழ

அப்புறம்தான் எல்லாம் தெரிந்தது. அவர் திட்டியதெல்லாம் அவரது தாய்மாமனை. பெண்ணை தர முடியாதுன்னு சொல்லிவிட்டாராம்.

ஐந்து நிமிடம் தோளில் சாய்ந்து அழுதவண்ணம் வர, அவரை ஒருவாறு சமதானப்படுத்த முயல அவரின் அழுகை அதிகமானவண்ணம்தான் இருந்ததேயொழிய குறையவே இல்லை.

'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என கிருஷ்ணன் சமாதானப்படுத்தினான்.

பஸ் ஸ்டான்ட் வந்தவுடன் ரொம்பவும் தெளிவானவர் போல் மலர்ச்சியுடன், 'ரொம்ப தேங்க்ஸ் பிரதர், வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்' என சொல்லி விட்டு செல்ல அவன் மனதை ஏதோ செய்தது.

28 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

அதாருங்கண்ணா....

கிருஷ்ணன்...

உங்க மனசாட்சியா!!!???

Cable சங்கர் said...

இந்தமாதிரி விஷயங்கள்.. சமயங்களில் இண்ட்ரஸ்டிங்காக இருக்கத்தான் செய்யும்.

sathishsangkavi.blogspot.com said...

நல்ல இன்ட்ரஸட்டான சம்பவம்...

அகல்விளக்கு said...

அண்ணே......

உண்மையச் சொல்லுங்க...

நீங்க யாரு அழுதவரா, இல்ல அழவச்சவரா...

நான் அவன் ணொல்லைனல்லாம் சொல்லப்படாது...

அகல்விளக்கு said...

சம்பவம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் சிரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை....

செமயா பல்பு வாங்கியிருக்காருங்கோவ்...

:-)

Anonymous said...

பாவம் அந்த ஆள். காதல்லயும் அடி வாங்கி, உங்க கிட்டயும் அடிவாங்கி.

Unknown said...

நல்ல காமெடி, வடிவேலு இதை அவர் படத்தில் சொறுகிவிடப் போகிறார்.

Raju said...

இந்த கிருஷ்ணன் பெரிய டெரர் கேரக்டரா இருப்பாரு போலயே..!
:-)

ரோஸ்விக் said...

//உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்...//

என்னைய சொன்னிங்கலோனு நினைச்சு உள்ள வந்தேன்... :-))

butterfly Surya said...

தண்டோரா அண்ணனுடன் ஒவ்வொரு பஸ் பயணத்திலும் ஒவ்வொரு நிகழ்வுகள்.. அவற்றையெல்லாம் நினைவூட்டியது.

நன்றி பிரபா.

vasu balaji said...

க்ருஷ்ண க்ருஷ்ணா:))

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்...இப்படியும் சிலபேர்....

செ.சரவணக்குமார் said...

//'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என கிருஷ்ணன் சமாதானப்படுத்தினான்.//

ஆஹா கிருஷ்ணா அண்ணே, எவ்வளவு டேலன்டா சமாளிக்கிறீங்க.

நல்ல பகிர்வு பிரபா அண்ணே. சிரிச்சி முடியல........

க.பாலாசி said...

பஸ்ல இதுமாதிரி இப்பவும் நடக்குதுங்க.. அக்கம்பக்கத்துல யாரு இருக்காங்க என்னன்னு பாக்கறதே இல்ல.

ஈரோடு கதிர் said...

//அகல்விளக்கு said...
உண்மையச் சொல்லுங்க...
நீங்க யாரு அழுதவரா, இல்ல அழவச்சவரா...
நான் அவன் ணொல்லைனல்லாம் சொல்லப்படாது...
//

யப்பா செல்லம்... எப்புடி சாமி இப்புடி கரிக்ட்டா கண்டு புடிச்சு பிரபா கழுத்துல துண்டு போட்டா....

Prathap Kumar S. said...

ஹஹஹ... வெரி இன்ட்ரஸ்டிங்க்... :-)

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
அதாருங்கண்ணா....

கிருஷ்ணன்...

உங்க மனசாட்சியா!!!???
//
கம்பனி சீக்ரட் கதிர்!

//
Cable Sankar said...
இந்தமாதிரி விஷயங்கள்.. சமயங்களில் இண்ட்ரஸ்டிங்காக இருக்கத்தான் செய்யும்.
//
நன்றிங்கண்ணா....

பிரபாகர் said...

Sangkavi said...
நல்ல இன்ட்ரஸட்டான சம்பவம்...
//
ரொம்ப நன்றிங்க...

//
அகல்விளக்கு said...
அண்ணே......

உண்மையச் சொல்லுங்க...

நீங்க யாரு அழுதவரா, இல்ல அழவச்சவரா...

நான் அவன் ணொல்லைனல்லாம் சொல்லப்படாது...
//
அழுதவரு இல்ல தம்பி. கம்பனி சீக்ரட்....

பிரபாகர் said...

//
அகல்விளக்கு said...
சம்பவம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் சிரிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை....

செமயா பல்பு வாங்கியிருக்காருங்கோவ்...

:-)
//
நன்றி உங்களின் அழகான பின்னூட்டத்துக்கு....

//
சின்ன அம்மிணி said...
பாவம் அந்த ஆள். காதல்லயும் அடி வாங்கி, உங்க கிட்டயும் அடிவாங்கி.
//
அவரோட நேரம்... ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
முகிலன் said...
நல்ல காமெடி, வடிவேலு இதை அவர் படத்தில் சொறுகிவிடப் போகிறார்.
//
நன்றிங்க முகிலன்.

//
♠ ராஜு ♠ said...
இந்த கிருஷ்ணன் பெரிய டெரர் கேரக்டரா இருப்பாரு போலயே..!
:-)
//
நன்றி என் அன்பு ராஜு...

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
//உன்னையும் குளோஸ் பண்ணிடுவேன்...//

என்னைய சொன்னிங்கலோனு நினைச்சு உள்ள வந்தேன்... :-))
//
தம்பிய அப்படி சொல்லுவேனா? சொல்லிகிட்டிருந்த ஒரு ஆளப்பத்தித்தான்...

//
butterfly Surya said...
தண்டோரா அண்ணனுடன் ஒவ்வொரு பஸ் பயணத்திலும் ஒவ்வொரு நிகழ்வுகள்.. அவற்றையெல்லாம் நினைவூட்டியது.

நன்றி பிரபா.
//
நன்றி சூர்யா... உங்களின் அன்புக்கு, பின்னூட்டத்துக்கு...

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
க்ருஷ்ண க்ருஷ்ணா:))
//
வணக்கம் அய்யா!

//
ஆரூரன் விசுவநாதன் said...
ம்ம்ம்...இப்படியும் சிலபேர்....
//

நன்றி ஆரூரன்...

பிரபாகர் said...

//
செ.சரவணக்குமார் said...
//'விடுங்க பிரதர், உங்க பெர்சனாலிட்டிக்கு சூப்பர் பொண்ணு கிடைக்கும்' என கிருஷ்ணன் சமாதானப்படுத்தினான்.//

ஆஹா கிருஷ்ணா அண்ணே, எவ்வளவு டேலன்டா சமாளிக்கிறீங்க.

நல்ல பகிர்வு பிரபா அண்ணே. சிரிச்சி முடியல........
//
ரொம்ப சந்தோஷம் தம்பி...

//
க.பாலாசி said...
பஸ்ல இதுமாதிரி இப்பவும் நடக்குதுங்க.. அக்கம்பக்கத்துல யாரு இருக்காங்க என்னன்னு பாக்கறதே இல்ல.
//
வாங்க இளவல்... சம்மந்தப்பட்டதால எழுதற மாதிரி ஆயிடுச்சி...

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//அகல்விளக்கு said...
உண்மையச் சொல்லுங்க...
நீங்க யாரு அழுதவரா, இல்ல அழவச்சவரா...
நான் அவன் ணொல்லைனல்லாம் சொல்லப்படாது...
//

யப்பா செல்லம்... எப்புடி சாமி இப்புடி கரிக்ட்டா கண்டு புடிச்சு பிரபா கழுத்துல துண்டு போட்டா....
//
ம்... முடிவோடத்தான் இருக்கீங்க!...

//
நாஞ்சில் பிரதாப் said...
ஹஹஹ... வெரி இன்ட்ரஸ்டிங்க்... :-)
//
நன்றி பிரதாப்!

ஹேமா said...

பிரபா...எப்பவும் உங்கள் அனுபவப் பதிவுகள் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு.அழகாகவும் சொல்றீங்க.

பிரபாகர் said...

//
ஹேமா said...
பிரபா...எப்பவும் உங்கள் அனுபவப் பதிவுகள் ரசிக்கக்கூடியதாகவே இருக்கு.அழகாகவும் சொல்றீங்க.
//
உங்கள் அன்பிற்கு நன்றி ஹேமா. ரொம்ப சந்தோஷம்...

புலவன் புலிகேசி said...

சுவார்ஸ்யமா சொல்லிட்டீங்க.

பிரபாகர் said...

//
புலவன் புலிகேசி said...
சுவார்ஸ்யமா சொல்லிட்டீங்க.
//
நன்றி புலிகேசி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB