கவிதை தருகிறேன், காதல் தருவாயா என்றேன்,
காதலைத் தா... பிரிவினை தருகிறேன் என்றாள்...
உயிரைத் தருவேன், உன்னைத் தருவாயா என்றேன்,
உயிரைத் தா... என் கண்ணீரைத் தருகிறேன் என்றாள்.
கண்ணாய் இருப்பேன், கருத்தாய் காப்பேன் என்றேன்,
கருத்தே இல்லை உன் காதலில் என்றாள்.
பார்க்கும் யாவிலும் பாவை நீ என்றேன்,
பார் ஒரு கண் மருத்துவரை என்றாள்...
சொல்வதெல்லாம் தேனாய் என் காதில் என்றேன்,
கவனம் கடித்துவிடும் எறும்புகள் என்றாள்...
என்ன தான் சொல்ல வருகிறாய் என்றேன்,
என்ன சொல்ல?, சொல்வதற்கில்லை என்றாள்...
மிச்சர்கடை
4 weeks ago
10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
நடத்துங்க ராசா:)
//
சொல்வதெல்லாம் தேனாய் என் காதில் என்றேன்,
கவனம் கடித்துவிடும் எறும்புகள் என்றாள்...
என்ன தான் சொல்ல வருகிறாய் என்றேன்,
என்ன சொல்ல?, சொல்வதற்கில்லை என்றாள்...//
அருமை.. வாழ்த்துக்கள்
இப்படி குழப்புவதுதான் காதலோ...?
கவிதை அருமை!!
Nice Poetry...
என்னத்தான் சொல்ல வர்றீங்க....:)) லவ்வு பண்ணலாமா வேண்டாமா??? :))
அருமையாகவுள்ளது நண்பா
சொல்வதெல்லாம் தேனாய் என் காதில் என்றேன்,
கவனம் கடித்துவிடும் எறும்புகள் என்றாள்...
இனிக்க்க்க்க்க்க்க்க்கிறது!!!
கவிதை அருமை!!
முரண்பட்ட காதல் சமயங்களில் மனதின் வலியோடு நின்றுவிடுகிறது..
/என்ன தான் சொல்ல வருகிறாய் என்றேன்,
என்ன சொல்ல?, சொல்வதற்கில்லை என்றாள்...//
இப்படி தான் பங்காளி எல்லாரும் சொல்றாங்க...
கவிதையை ரசித்தேன்...
Post a Comment