Oct
28,
2010

விருந்து...

|

விருந்து...

இனமழித்து மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று
சிறப்புறுத்தும் தாய்நாட்டின்
சிறுமையால் நாணி
சிந்தை யெல்லாம் கொதிக்க
தமிழ் காக்கா தமிழிருக்க
தலை குனிந்து வெட்கி
என் செய்வேன் தமிழே...
என்னினிய உறவே...

நிலை மாறும்...

பக்கத்தில் நெருப்பென
பராமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்...

10 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

விருந்து?

ம்ம்

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

//இனமழித்து அக மகி(ழ்)ந்தனை
இன்முகத்தில் வரவேற்று.. //

அவனுக்கு விருந்து...!!!!

(ஒரேயொரு சந்தேகம் பாஸ். வேறு வெளி நாட்டு தலைவன்களை கூப்பிட்டவங்க, அதை செய்தியா தெரிவிச்சாய்ங்க. இவனை மட்டும் ரகசியமா கூப்பிட்டு (சிறப்பு விருந்தினன்) உபசரிச்சாய்ங்களாமே. ”கள்ள உறவு” எதுவும்....?)

Unknown said...

நல்லாருக்கு

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு...

sathishsangkavi.blogspot.com said...

வாங்க பங்காளி...

ரொம்பநாள் ஆச்சு...

ரோஸ்விக் said...

//பக்கத்தில் நெருப்பென
பராமல் இருப்பாரும்
விக்கித்தி நிற்குமொரு
வேளையது வந்து சேரும்
சக்கரம்தான் வாழ்வுமது
சத்தியமாய் உணர்ந்திட
எக்கணம் ஏங்குகிறேன்
இறையவனை வேண்டுகிறேன்...//

இது யாருக்குன்னு தெரியல...

ஏன் இப்பவெல்லாம் சக்கரம் சுழலும், நிலை மாறும்னு புலம்பல்ஸ். எப்போதும் எதுவும் நிலை மாறாமல் இருக்கப்போவதில்லை. இன்று கீழுள்ளவன் நாளை மேலிருப்பான். அதில் எந்த சந்தேகமுமில்லை.

சக்கரத்துக்கு ஒழுங்க மசகு போட்டு சுமூகமா சுத்தவிடுங்க. எதுவும் நிரந்தரமில்லை... நம்ம எழுதுற ப்ளாக் உட்பட....

அந்நியன் said...

தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்

அந்நியன் said...

தொழில்நுட்ப பதிவில் முன்னிலை வகிக்கும் சசியின் வலைப்பக்கம் புறக்கணிக்கப்படுகிறது ,,சுதந்திர இலவச தளம் அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் தானா ,,, நடுநிலையாளர் என்றால் ஏன் சசியின் வலைப்பக்கம் அதில் வரவில்லை ..நண்பர்களே சிந்தியுங்கள் கண்மூடிதனாமாக இருக்காமல் விழித்துக்கொள்ளுங்கள் ..நண்பர் சசிக்கு ஆதரவு கொடுங்கள்

அந்நியன் said...

நண்பர் சசி எப்படிநம்மிடம் கூறமுடியும் அவரின் தொழில்நுட்ப சேவையை பாராட்டி நாம் அவருக்கு இந்த கைம்மாறு செய்வோம் . அவரை மேலும் உற்சாகப்படுத்தி ஆதாரவு கொடுப்போம் ...வாருங்கள் நண்பர்களே .....

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB