கல்மாடியோடு ஒரு (கற்பனை) சந்திப்பு

|

ஆசானின்  கதிரோட கலக்கல் கற்பனை(?)ப் பேட்டியைப் படித்துவிட்டு நம் பங்குக்கு ஒரு போட்டிக்காய் ஒரு பேட்டி இடுகை..

காமென்வெல்த் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கல்மாடியுடன் ஒரு சிறப்புப் பேட்டி(கற்பனை).

(நேயர்களுக்கு டெல்லியிலிருந்து இந்த பிராடு பீதாம்பரத்தின் அன்பு கலந்த வணக்கங்கள்!... இந்த நேரடி ஒளிபரப்பில், நமது 'நம்பினா நம்புங்க' டிவியின் பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில், காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான சுரேஷ் கல்மாடி அவர்களை சந்தித்து பேச இருக்கிறோம்)

பி.பீ : வணக்கம் கல்மாடி ஜீ, பிரபலங்களோடு பேசலாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டமைக்கு எங்களது மனமார்ந்த நன்றி. பேட்டியை ஆரம்பிக்கலாமா?

கல்மாடி : தாராளமாய். ஒலிம்பிக் போட்டிகளை வேறு நடத்திக்கொண்டிருக்கிறோம், பரபரப்புக்கு இடையில் இங்கு வந்திருக்கிறேன்.

பி.பீ : என்னது ஒலிம்பிக்கா?

கல்மாடி : மன்னிக்கனும், குழப்பத்தில் சொல்லிவிட்டேன். தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்.

பி.பீ : (நமக்கு இன்னிக்கு நேரமே சரியில்லை) சரி, காங்கிரஸை நடத்திச் செல்லும் அன்னை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கல்மாடி : தற்பொழுதைய காங்கிரஸ் தலைவி இந்திரா காந்தி மிகவும் திறமையானவர்.அவரின் அரவணைப்பால்தான் கட்சி இன்று சிறப்பாய் இருக்கிறது.

பி.பீ : அருமை. உங்களின் கட்சியினைப் பற்றிய மேலும் சில விஷயங்களை எங்களின் நேயர்களுக்காக சொல்லுங்களேன்.

கல்மாடி : நான் சார்ந்திருக்கும் திராவிட இயக்கமான பா.ஜா.கா. மத சார்பற்றது. நாட்டு மக்களுக்காக, உழைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. உலக சுதந்திரத்துக்காகப் பாடுபட்டது...

பி.பீ : சரி, காமன்வெல்த் சம்மந்தமாய் ஒரு கேள்வி. நீங்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்து கட்டுமானம் சரியில்லாத்தால் கூரை இடிந்து பிழைத்துக்கொண்டாதாய் சரத்பவார் நக்கல் செய்திருக்கிறாரே, அது பற்றி உங்கள் கருத்து?

கல்மாடி : இது ஜனநாயக நாடு. எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். குறிப்பாய் எதிர் கட்சியினர் பேசுவதை நாம் பொருட்படுத்தக்கூடாது.

பி.பீ : எப்படி சார் இப்படியெல்லாம் தகவல்களை அள்ளி விடுகிறீர்கள்? சரி உங்களின் எதிர்காலத்திட்டங்கள் என்ன?

கல்மாடி : ராஜீவ் காந்தியை பிரதமராக்கனும். வர இருக்கிற எல்லா விளையாட்டுப் போட்டிகளுக்கும் நான் ஒருங்கிணைப்பாளராய் இருந்து, கலக்க வேண்டும்.

பி.பீ : கண்டிப்பாய், நாங்களெல்லாம் கலங்கித்தான் போயிருக்கிறோம் கல்மாடி ஜி... உங்களுக்கு எங்களின் நம்பினா நம்புங்க டிவியின் மனமார்ந்த நன்றி.

கல்மாடி : நானும் இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஸ்டார் ப்ளஸ் நேயர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

(பீதாம்பரம் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்டுடியோவை விட்டு தலைதெறிக்க ஓடுகிறார்)

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

நல்ல வேளை! அவருக்கு ஐடியா கொடுத்தது நான்தான்னு உண்மையை சொல்லலே! :-)

ஈரோடு கதிர் said...

||பீதாம்பரம் இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் ||

பீதாம்பரம் மட்டுமா!!!??

இப்படி பின்னூட்டம் போடட்டுமா பிரவுண்ணே!!!!

vasu balaji said...

:)) நல்ல கூத்து

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கல்மாடி.. டயானாவை நினைவுபடுத்தினது இவ்வளவு விவகாரமாப் போகும்னு நினைச்சே பார்த்திருக்கமாட்டார்.

கலக்கல் பேட்டி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல் பேட்டி.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB