ஒவ்வொரு மாதத்திலும் ஒன்று மற்றும் பதினைந்து தேதிகளில் இரு வாரங்களில் நிகழ்ந்த மனதை இடறிய, வருடிய, நெருடிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள எண்ணி இந்த தலைப்பில் ஒரு இடுகையாய் பகிர எண்ணம். முதலாய் இன்று ஆரம்பித்து அடுத்த மாதம் முதல் சரியான தேதிகளில் தொடரலாமா என்பதை முடிவு செய்யப்போவது இதை படிக்கும் என் அன்பான நீங்கள்தான்.
கிரிக்கெட்:
வெறித்தனமாய் பார்த்ததெல்லாம் அந்த காலம். டிவியில் பார்க்க வீடு வீடாய் அலைந்து, கண்கள் வலிக்க பார்த்து, ஜெயித்தாலும் தோற்றாலும் கண்களுக்கு வலி மட்டும் நிச்சயம். மனதிற்கு தோற்றால் மட்டும்.
இந்தியா தென்னாப்பிரிக்கா 13 ஒவரில் ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி என இருக்கும்போது கவனித்து டி.வியை ஆன் செய்தேன். வெற்றிபெற வேண்டும் எனும் தவிப்பாய் நெடு நாட்களுக்குப் பின் பார்க்க ஆரம்பிக்க வழக்கமாய் செய்யும் எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தேன். கன்னத்தில் கைவைத்து பார்ப்பது, ஒவ்வொரு ஓவருக்கும் இடத்தை மாற்றுவது என. சச்சினை ஏன் இன்னும் போட விடவில்லை என தோனியை திட்ட அடுத்த ஓவரிலேயே வாய்ப்பு தர, ஊராயிருந்தால் பார்க்கும் மற்றவர்களிடம் சொன்னேன்லன்னு பந்தாவா சொல்லியிருப்பேன்.
இதில் வெற்றி பெற்றால்தான் முதலிடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதால் இன்னமும் பதட்டம். அம்லாவும் மோர்க்கலும் ரொம்ப கூலாக விளையாட டென்ஷன், கடுப்பு, எரிச்சல் என ஒரு சேர இருக்கும் அந்த சமயத்துல அருமையாய் ஒரு பந்தைப் போட்டு பஜ்ஜி கலக்க, LBW! சந்தோஷத்தில் கத்தினேன்.
என்ன நடந்தாலும் கேக்காத பக்கத்து வீட்டு சீன தாத்தா என்னவோ ஏதோ என்று வந்து கேட்டுவிட்டு போகிற மாதிரி ஆகிவிட்டது. என்ன ஒரு அருமையான வெற்றி... சச்சின் கடைசி பந்து வரை வெற்றிக்கு வாய்ப்பிருந்தது என சொன்னது (சச்சினை ரொம்ப பிடிக்கும், எனது நண்பர்கள் கூட உன் தம்பி இன்னிக்கு சென்சுரி என போன் செய்வார்கள்) ரொம்ப பிடித்திருந்தது!
பயம்:
3 இடியட்ஸ் படத்தை யார் யாரோ நடிக்கிறார்கள் என படிக்கையில் நிஜமாய் பீதி கிளம்பியது. தியேட்டரில் பார்த்ததோடல்லாமல் DVD வாங்கியும் ரசித்து பார்த்த படங்களில் இதுவும் ஒன்று. முன்னா பாய் பார்த்துவிட்டு கமல் நடித்தும் வசூல்ராஜா பிடிக்கவில்லை. ஹீரோயிசத்துக்காக கதையை பலிகொடுக்க நம்மாட்களுக்கு சொல்லியாத் தரவேண்டும்?
பிடித்த இடுகையாளர்:
ஆரம்ப அசத்தல் பதிவர்களில் என்னை மிகவும் கவர்ந்தவர் தம்பி சேட்டைக்காரன்தான். வலைச்சரத்திலேயே சொல்லியிருந்தாலும் இன்னொருமுறை சொல்லுவதற்கு காரணம் அவர் வெரைட்டியாய் எழுதுதுவது ரொம்ப பிடித்திருக்கிறது. மிகவும் அருமையான எதிர்காலம் இருக்கிறது, இவருக்கு. நகைச்சுவையை மிக நாகரிகமாய் ஆபாசம் கலக்காமல் அசத்தலாய் சொல்லுகிறார். மூன்று நாட்கள் இவரை பார்க்கவில்லை என்றால் ஐந்து இடுகைகளை தவற விட்டுவிடுவீர்கள், அவ்வளவு விரைவாய் இடுகையிட்டு அசத்துகிறார். பிப்ரவரிக்கு இருபத்தெட்டு தேதிதான், ஆனால் இருபது தேதியிலேயே முப்பத்து நான்கு இடுகையிட்டிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
இந்த மூன்று இடுகைகளையும் படித்துப் பாருங்கள். கண்டிப்பாய் அதன் முந்தைய பாகங்களைத் தேடிப்படிக்கத் துண்டும்...
ஆந்தைக்குளம் ஐயாக்கண்ணு.03
ஜிம்மாயணம்-02
அப்பா என்றால்....?
அடுத்த எண்ணச்சிதறல்களில் மார்ச் ஒன்றில் சந்திக்கலாமா?
மிச்சர்கடை
4 weeks ago
35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
நான் தான் இன்றைக்கு முதல் ஆள்...
கிரிக்கெட் நல்லா சொன்னீங்க நண்பா நாம ஸ்கூல் கட் அடிச்சிட்டு மேட்ச் பார்த்தா நம்ம ஜடேஜா ஜெய்க்கிற மாதிரி வந்து தோக்கடிச்சிருவாரு... இப்ப கிரிக்கெட் பார்ப்பது இல்லை...
சேட்டைக்காரன் நல்ல அறிமுகம்... அவர் பதிவிற்கு அடிக்கடி போனது இல்லை இனி பாத்துருவோம்....
அன்பின் பிரபாகர்
நல்லா இருக்கு எண்ணச் சிதறல்கள்
தொடர்க - நல்வாழ்த்துகள்
சிதறல்கள் நன்றாயிருக்கு..தொடருங்கள்!!சேட்டைகாரன் அவர்களின் நல்ல அறிமுகத்திற்க்கு நன்றி சகோ!!
கிரிக்கெட் பற்றி எழுதியது பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. ஆனால், இப்பொழுது கிரிக்கெட்டைத் தொடர்வது இல்லை.
இந்த எண்ணச் சிதறல்கள் நன்றாக இருக்குங்க பிரபாகர்.
சிறந்த முத்து சிதறல்கள்.
நானும் சேட்டைக்காரன் விசிறிதாங்க! :)
எண்ணம் சிதறக்கூடாதும்பாங்க.. ஆனா இந்த சிதறல் நல்லாருக்கு.
தல நல்லா இருக்கு...வெறியோட கிரிக்கெட் பார்த்த காலமெல்லாம் போச்சு..காரணம் அங்கும் அரசியல். இப்பல்லாம் விளையடுறதோட நிறுத்திக்கறது.
தொடருங்கள்..
ஹி ஹி, பதிவுல ஏறுமுன்னாலயே நான் பாத்து கமெண்ட் போட்டுட்டேன். அதுனால நாந்தான் முதல். :))
கிரிக்கெட் பாக்கறது இல்லை பிரபாகர் அது மனசுல வன்முறைய தூண்டுது..:)
----
(ஆடத்தெரியாது என்பதை எப்படியெல்லாம் சொல்ல வேண்டிகிடக்கு..ஹும்ம்..)
----
சேட்டைகாரர் - படிக்கிறேன்..:)
----
டிஸ்கி: முகிலன் பக்கத்துல போட்டதுதான்.
//ஹீரோயிசத்துக்காக கதையை பலிகொடுக்க நம்மாட்களுக்கு சொல்லியாத் தரவேண்டும்?//
சரியாச்சொன்னீஙகணோவ்... எனக்கு வசூல்ராஜா பிடிக்கலை. ஒரு தாதா ஏதோ கெளகார் பேட்டை சேட்டு மாதிரி இருந்தாரு கமல்...
சேட்டைக்காரனின் சேட்டையை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றிங்ணோவ்...
ஆமா... முதல்ல கமண்ட் போட்டா அவார்டு கொடுக்குறாயங்களா? நான் ஒன்பதாவதுங்கோ... அவார்டு பாதில கொடுத்தாலும் ஓகே...
நகைச்சுவை என்ற முகமூடிக்குள்ளே இந்த சேட்டைக்காரனின் கண்களிலிருந்து இரு சொட்டுக்கள் ஆனந்தக்கண்ணீர்! அவற்றை விட உங்களுக்கு நன்றி சொல்ல பொருத்தமான வார்த்தைகள் இல்லை.
நாஞ்சிலு, பத்து இடுகையா தொடர்ந்து முதல் கமெண்ட் போடுறவுங்களுக்கு அண்ணன் சிங்கப்பூர்ல இருந்து கேமரா வாங்கித் தர்றாரு. இந்த விசயம் உங்களுக்குத் தெரியாதா??
// முகிலன் said...
நாஞ்சிலு, பத்து இடுகையா தொடர்ந்து முதல் கமெண்ட் போடுறவுங்களுக்கு அண்ணன் சிங்கப்பூர்ல இருந்து கேமரா வாங்கித் தர்றாரு. இந்த விசயம் உங்களுக்குத் தெரியாதா??//
ஆகா...அப்படி கதிரண்ணனுக்கு கேமரா வாங்கிகொடுத்ததுல இதான் ரகசியமா??? நமக்குத்தெரியாம போச்சே???
எண்ணச்சிதறல்கள் நல்லா இருக்கு பிரபா.
இங்கயும் க்ரிக்கெட்டா... ஆ... நல்லாருக்கு....
எண்ணச் சிதறல்களில் சேட்டைக்காரன் நல்ல அறிமுகம்.
//அடுத்த எண்ணச்சிதறல்களில் மார்ச் ஒன்றில் சந்திக்கலாமா? //
அப்போ அதுவரைக்கும் வெட்டாப்பா!!!???
சேட்டைக்காரன் ஒரு நல்ல இடுகையாளர் . அவரது சேட்டைகளை (இடுகைகள்) அனைத்தையும் ரசிப்பவன் .
நல்லாருக்கு எண்ணச் சிதறல்கள். கலக்குங்க நண்பா பிரபாகர்.
//
Sangkavi said...

நன்றி நண்பா! கண்டிப்பா பாருங்க, கலக்கிகிட்டிருக்காரு!
//
cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்
நல்லா இருக்கு எண்ணச் சிதறல்கள்
தொடர்க - நல்வாழ்த்துகள்
//
நன்றிங்கய்யா, கண்டிப்பாய் உங்கள் ஆசியுடன்...
//
February 21, 2010 1:26 AM
Mrs.Menagasathia said...
சிதறல்கள் நன்றாயிருக்கு..தொடருங்கள்!!சேட்டைகாரன் அவர்களின் நல்ல அறிமுகத்திற்க்கு நன்றி சகோ!!
//
நன்றி சகோதரி!
//
ச.செந்தில்வேலன் said...
கிரிக்கெட் பற்றி எழுதியது பழைய நினைவுகளை அசைபோட வைத்தது. ஆனால், இப்பொழுது கிரிக்கெட்டைத் தொடர்வது இல்லை.
இந்த எண்ணச் சிதறல்கள் நன்றாக இருக்குங்க பிரபாகர்.
//
நன்றிங்க செந்தில்...
//
Chitra said...
சிறந்த முத்து சிதறல்கள்.
//
ஆஹா, ரொம்ப நன்றிங்க!
//
அநன்யா மஹாதேவன் said...
நானும் சேட்டைக்காரன் விசிறிதாங்க! :)
//
நன்றிங்க, உங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்...
//
வானம்பாடிகள் said...
எண்ணம் சிதறக்கூடாதும்பாங்க.. ஆனா இந்த சிதறல் நல்லாருக்கு.
//
நன்றிங்கய்யா!
//
புலவன் புலிகேசி said...
தல நல்லா இருக்கு...வெறியோட கிரிக்கெட் பார்த்த காலமெல்லாம் போச்சு..காரணம் அங்கும் அரசியல். இப்பல்லாம் விளையடுறதோட நிறுத்திக்கறது.
தொடருங்கள்..
//
நன்றி புலிகேசி!
//
முகிலன் said...
ஹி ஹி, பதிவுல ஏறுமுன்னாலயே நான் பாத்து கமெண்ட் போட்டுட்டேன். அதுனால நாந்தான் முதல். :))
//
நன்றிங்க நண்பா!
//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
கிரிக்கெட் பாக்கறது இல்லை பிரபாகர் அது மனசுல வன்முறைய தூண்டுது..:)
----
(ஆடத்தெரியாது என்பதை எப்படியெல்லாம் சொல்ல வேண்டிகிடக்கு..ஹும்ம்..)
----
சேட்டைகாரர் - படிக்கிறேன்..:)
----
டிஸ்கி: முகிலன் பக்கத்துல போட்டதுதான்.
//
ம்... நன்றி சேம் பிளட்...
//
நாஞ்சில் பிரதாப் said...
//ஹீரோயிசத்துக்காக கதையை பலிகொடுக்க நம்மாட்களுக்கு சொல்லியாத் தரவேண்டும்?//
சரியாச்சொன்னீஙகணோவ்... எனக்கு வசூல்ராஜா பிடிக்கலை. ஒரு தாதா ஏதோ கெளகார் பேட்டை சேட்டு மாதிரி இருந்தாரு கமல்...
சேட்டைக்காரனின் சேட்டையை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றிங்ணோவ்...
//
வாங்க தம்பி! ரொம்ப சந்தோசம்...
//
நாஞ்சில் பிரதாப் said...
ஆமா... முதல்ல கமண்ட் போட்டா அவார்டு கொடுக்குறாயங்களா? நான் ஒன்பதாவதுங்கோ... அவார்டு பாதில கொடுத்தாலும் ஓகே...
//
அண்ணனின் அன்பென்ற அவார்ட் எப்பவும் உண்டு...
//
சேட்டைக்காரன் said...
நகைச்சுவை என்ற முகமூடிக்குள்ளே இந்த சேட்டைக்காரனின் கண்களிலிருந்து இரு சொட்டுக்கள் ஆனந்தக்கண்ணீர்! அவற்றை விட உங்களுக்கு நன்றி சொல்ல பொருத்தமான வார்த்தைகள் இல்லை.
//
பெரிய வார்த்தைகள் தேவையில்லை நண்பா! உங்களிடம் அவ்வளவு விஷயம் இருக்கு, அதான்!
//
முகிலன் said...
நாஞ்சிலு, பத்து இடுகையா தொடர்ந்து முதல் கமெண்ட் போடுறவுங்களுக்கு அண்ணன் சிங்கப்பூர்ல இருந்து கேமரா வாங்கித் தர்றாரு. இந்த விசயம் உங்களுக்குத் தெரியாதா??
//
ம்... இப்படியெல்லாம் பீதிய கிளப்புறாங்கப்பா!
//
நாஞ்சில் பிரதாப் said...
// முகிலன் said...
நாஞ்சிலு, பத்து இடுகையா தொடர்ந்து முதல் கமெண்ட் போடுறவுங்களுக்கு அண்ணன் சிங்கப்பூர்ல இருந்து கேமரா வாங்கித் தர்றாரு. இந்த விசயம் உங்களுக்குத் தெரியாதா??//
ஆகா...அப்படி கதிரண்ணனுக்கு கேமரா வாங்கிகொடுத்ததுல இதான் ரகசியமா??? நமக்குத்தெரியாம போச்சே???
//
ஆஹா, மொட்டத்தலக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடறாங்களே!
//
செ.சரவணக்குமார் said...
எண்ணச்சிதறல்கள் நல்லா இருக்கு பிரபா.
//
நன்றி நண்பா!
//
கலகலப்ரியா said...
இங்கயும் க்ரிக்கெட்டா... ஆ... நல்லாருக்கு....
//
நன்றி சகோதரி!
//
மாதேவி said...
எண்ணச் சிதறல்களில் சேட்டைக்காரன் நல்ல அறிமுகம்.
//
நன்றி சகோதரி!
//
ஈரோடு கதிர் said...
//அடுத்த எண்ணச்சிதறல்களில் மார்ச் ஒன்றில் சந்திக்கலாமா? //
அப்போ அதுவரைக்கும் வெட்டாப்பா!!!???
//
கழட்டி விட்டிடுவீங்க போலிருக்கு! இதுக்கு மட்டும்...
//
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
சேட்டைக்காரன் ஒரு நல்ல இடுகையாளர் . அவரது சேட்டைகளை (இடுகைகள்) அனைத்தையும் ரசிப்பவன் .
நல்லாருக்கு எண்ணச் சிதறல்கள். கலக்குங்க நண்பா பிரபாகர்.
//
நன்றி ஸ்டார்ஜன்! அன்பிற்கு, வருகைக்கு...
எனக்கு அந்த பதட்டம் 20 ஓவர்களாகவே இருந்தது.... நேற்றய ஆட்டத்தில் 320 லிருந்து 350 ஓட்டங்கள் எடுத்திருக்கலாம் ஆரம்பத்தில் வாய்ப்பிருந்தது...
பகிர்வுக்கு நன்றி.
பிரபாகர் சார், நல்லா இருக்கீங்களா?
எண்ணச்சிதறல்கள் நல்ல யோசனைங்க பிரபாகர். தொடர்ந்து உங்களோட எண்ணங்களை சிதறுங்கள் நாங்களும் ரசிக்கிறோம். சேட்டைக்காரனையும் இனிமேல் படிக்க ஆரம்பிச்சர வேண்டியது தான்.
//
சி. கருணாகரசு said...
எனக்கு அந்த பதட்டம் 20 ஓவர்களாகவே இருந்தது.... நேற்றய ஆட்டத்தில் 320 லிருந்து 350 ஓட்டங்கள் எடுத்திருக்கலாம் ஆரம்பத்தில் வாய்ப்பிருந்தது...
பகிர்வுக்கு நன்றி.
//
நன்றிங்க, அதைவிட நேற்று கொடுமை. ஒரு ரன்னில்!
//
குடுகுடுப்பை said...
பிரபாகர் சார், நல்லா இருக்கீங்களா?
//
இருக்கேன் பாஸ். கூப்பிடுங்க!
//
ராசுக்குட்டி said...
எண்ணச்சிதறல்கள் நல்ல யோசனைங்க பிரபாகர். தொடர்ந்து உங்களோட எண்ணங்களை சிதறுங்கள் நாங்களும் ரசிக்கிறோம். சேட்டைக்காரனையும் இனிமேல் படிக்க ஆரம்பிச்சர வேண்டியது தான்.
//
நன்றி ராசுக்குட்டி... கண்டிப்பா படிங்க, நகைச்சுவைக்கு நான் கேரண்டி...
சிதறல்கள் நன்றாக இருக்கு
தொடர்ந்து சிதறட்டும்... வாழ்த்துகள்.
Post a Comment