ஆண்டி தியோவின் பயணக் குறிப்புகள்...

|

இன்றுதான் அறைத்தோழராய் அறிமுகமான நண்பர் முத்து அவரது ஊருக்கு அவரது சீன முதலாளியை அழைத்துச் சென்று ஒரு கலக்கு கலக்கிய விஷயத்தை ரொம்பவும் சுவராஸ்யமாய் சொல்ல, யாவும் எனக்கு பிரமிப்பாக இருந்தது. அவர் மற்றும் சீன முதலாளியின் அனுமதியோடு அவர்களிடம் இருந்து கிடைத்த புகைப்படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்தில் கிடைத்த ஒரு ஒப்பந்த வேலையினை மிகச் சிறப்பாய் முடித்துத் தர எல்லோருக்கும் போனஸ் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் வேலை செய்து வரும் ஒருவரின் திருமணத்தை முன்னிட்டு முத்து மற்றும் மூர்த்தியை தனது சொந்த செலவில் அழைத்துக்கொண்டு இந்தியா கிளம்பியிருக்கிறார். திருச்சிக்கு பக்கத்தில் ஊர் என்பதால் முத்து வழக்கமாய் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் சென்றிடுக்கிறார்.

செல்லும்போதே மூன்று பேரின் அப்பாக்களுக்கும் தலா முன்னூற்று பத்து டாலர் செலவில் (இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய்) சரக்கு வாங்கிக்கொண்டும், ஐநூறு டாலருக்கு சாக்லேட் வாங்கிக்கொண்டும் சென்றிருக்கிறார்.

திருச்சி ஏர்போர்ட்டில் இரு சீனர்கள், நம்மவர் மற்றும் சிங்கப்பூர் அரசு அதிகாரி(கலெக்டர் என முத்து சொன்னார்). அவரை அரசு மரியாதையுடன் அழைத்து சென்றிருக்கிறார்கள். (நம்மூர் ஆட்கள் இவ்வாறு எளிமையாய் செல்வார்களா?) வரிசையில் இருந்த தியோவின் முறை வந்த போது தங்கும் இடங்களைப்பற்றிய விவரங்களைப் பற்றி அவர் அளித்த விளக்கங்கள் புரியாததால் முத்து தனது முதலாளி, சுற்றுலாவுக்கு வந்திருக்கிறார் என விளக்கி, விவரங்களை சொல்லியிருக்கிறார்.

திருச்சியில் ஒரு நல்ல ஓட்டலின் தங்கி மேற்கொண்ட அவரின் ஒரு வார பயணவிவரங்கள் இதோ கீழே.

தியோவிற்கு பிள்ளையார் ரொம்ப பிடிக்குமாம், பிள்ளையார் பக்தர். எனவே முதலில் அவர் சென்றது பிள்ளையார்ப் பட்டி. அங்கு சாமி கழுத்தில் இருந்த மாலையை இவர் கழுத்தில் போட, அவரோ எல்லோருக்கும் பிள்ளையாரின் அருள் கிடைக்க வேண்டும் என ஒவ்வொருவருக்கம் போட்டு விட்டிருக்கிறார், அழைத்து வந்த டிரைவர் உட்பட. சிறு பிள்ளை போல் குச்சி ஐஸ், இளநீர் என பார்க்கும் ஒவ்வொன்றையும் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

அவருக்காக மாலை மரியாதை, தாரை தப்பட்டை என ஆரவாரமான வரவேற்பெல்லாம் கொடுத்ததோடிலாமல் வரவேற்பு போர்டுகள் பத்துக்கும் மேல் ஊரெல்லாம் வைத்து முதலாளிக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள்.

வரவேற்பு

திருமணத்திற்கு முதல் நாள் அழைப்பிலிருந்து கடைசிவரை உடன் இருந்து அசத்தியதோடு மட்டுமல்லாமல், மணவறையில் மாலையோடு உட்கார்ந்து கலக்கியும் இருக்கிறார்.

எல்லோரோடும் உட்கார்ந்து பந்தியில் ரசிக்கும்படி சாப்பிட்டு, மாப்பிள்ளைக்கு அன்பளிப்பாக ஒரு லட்சம் (சிங்கப்பூர் டாலர் 3000) கொடுத்திருக்கிறார்.

மாப்பிள்ளை ஊர்வலத்தில்

மூவரின் அம்மாக்களுக்கு வளையல் வாங்க எண்ணி கை அளவு குழப்பத்தால் பணமாய் ஒரு கவரில் கொடுத்திருக்கிறார்.

முத்துவின் குடும்பத்தாரோடு

ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சென்று ஒருவேளை சாப்பிட்டுவிட்டு மொழி தெரியவில்லை என்றாலும் சைகையிலும், மொழிபெயர்ப்பு உதவியோடும் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

மூர்த்தியின் வீட்டில்

முத்து வீடு சாதாரண ஒரு கூரை வீடு. இங்கெல்லாம் சாப்பிடுவாரா என ஏதும் செய்யாமல் இருக்க, சமைக்கச் சொல்லி காத்திருந்து ஐந்து மணி நேரம் வீட்டிலேயே படுத்திருந்து ஓய்வெடுத்து சாப்பிட்டுத்தான் வந்திருக்கிறார். ஓய்வெடுக்கும் போது மூன்று ஃபேன் வைத்திருந்தும் கரெண்ட் இல்லாத போது விசிறியால் விசிறி அவரது தூக்கம் கலையாமல் பார்த்துக்கொள்ள முத்து முயற்சிக்க, ‘டோண்ட் டூ லா’ என மறுத்திறுக்கிறார்.

அந்த ஊரில் இருந்த கோவிலுக்கு சென்று கால் ஊனமான அங்கிருந்த பூசாரிக்கு பணம் கொடுத்து உதவி அசத்தியிருக்கிறார். கோவிலுக்கும் நன்கொடை கொடுத்தும், பள்ளிக்கு ஒரு கட்டிடம் கட்ட நிதியும் அளித்திருக்கிறார்.

குதிரைகளோடு எடுக்க சொன்னாராம்

எல்லோரையும் அழைத்துக்கொண்டு கொடைக்கானல் சுற்றுலா வேறு. ’முத்து நெக்ஸ்ட் இயர் நியூ ஹவுஸ்’ என சொல்லி அதற்கான எல்லா உதவியும் செய்வதாய் சொல்லியிருக்கிறார். செல்போனில் அவரின் அனுமதியை பெற்றுத்தான் வெளியிடுகிறேன், ஞாயிறு வீட்டிற்கு சந்திக்க வருகிறார். சந்தித்த பின் இன்னும் விவரங்களோடு, புகைப்படங்களோடு எழுதுகிறேன்.

எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...

45 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

அகல்விளக்கு said...

உண்மையிலேயே மிக நல்ல மனிதர்....

உங்களது சந்திப்பை பற்றிய பதிவையையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...

vasu balaji said...

அருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))

settaikkaran said...

சரியான கேரக்டர் இந்த மனிதர். புகைப்படத்திலே அவரோட புன்னகையிலே ஒரு குழந்தை தெரியுது. :-)). பதிவைப் படித்தபோதும், படங்களைப் பார்த்தபோதும் அந்தப் புன்னகையோட அழகு இன்னும் அதிகமாய்த் தெரியுது. அருமையான பதிவு! அழகு சேர்க்கும் படங்கள்!

கார்க்கிபவா said...

வாவ்வ்வ்வ்வ்வ்

Raju said...

அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி, `சந்தோஷப்படுறது பெரிய சந்தோஷம்ன்னு சும்மாவா சொன்னாங்க..!

சூப்பர் தியோலா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வித்தியாசமான (நல்ல மனிதரை அப்படித்தானே சொல்வோம்?) மனிதரைப் பற்றிய ஒரு இடுகை. இப்படி சிலர் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும் இடுகை :)

Prathap Kumar S. said...

அணணே சூப்பர்...

பெரிய மனுசன் எப்பவுமே பெரியமனுசன் தாம்ணே...அது எந்த நாட்டுக்காரன்ஆனாலும் சரி...
புதுப்பணக்காரனுங்க தான் அலப்பறை பண்ணுவானுங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் இடுகை

ஹேமா said...

நல்லதொரு பாராட்டுப் பதிவு போல அமைந்திருக்கிறது பிரபா.நம்மவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் இப்படியான நிறைந்த நல்ல மனிதர்களை இங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.

க.பாலாசி said...

அட பார்றா.... இப்டியுமா??....

சூப்பர் மேன்....

Paleo God said...

வானம்பாடிகள் said...
அருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:)//

எதுக்கு வம்பு ஐயா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..:)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

சீனர் ஒருவர் இப்படி அன்பு செலுத்துகிறார் என்றால் நம்ம பிள்ளைகள் ரொம்ப நல்லவர்கள்

Menaga Sathia said...

உண்மையிலேயே அவர் பெரிய மனிதர்தான்.பெரிய மனுஷன் எப்பவும் பெரிய மனுஷந்தான்...

செ.சரவணக்குமார் said...

//எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...//

எங்கள் மனதிலும்.

நாகராஜன் said...

மிக நல்ல பண்பான மனிதர் ஒருவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க பிரபாகர்... நாங்கள் எல்லோரும் அவரை விசாரித்ததாக நீங்கள் நேரில் சந்திக்கும் போது கூறுங்கள். உங்களது சந்திப்பு குறித்த இடுகையை இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்தாயிற்று. நிறைய படங்களுடம் எழுதுங்கள்.

சரக்கு வாங்கிக்கொண்டு வந்தது மட்டும் தான் மனதிற்கு இடறுகிறது... அந்த காசையும் அவர் செய்த மற்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்... இது என் கருத்து மட்டுமே... இந்த கருத்து மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்.

Venkat M said...

லக்கி கைஸ், நல்ல முதலாளி.
Convey my wishes to him when you meet him.

பிரபாகர் said...

//
அகல்விளக்கு said...
உண்மையிலேயே மிக நல்ல மனிதர்....
உங்களது சந்திப்பை பற்றிய பதிவையையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...
//
நன்றிங்க ராஜா. சீக்கிரம் எழுதறேன்.
//
வானம்பாடிகள் said...
அருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))
//
ம்.... கண்டிப்பா, அவங்களோட அன்பில நெகிழ்ந்துட்டதா போன்ல சொன்னாரு.

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
சரியான கேரக்டர் இந்த மனிதர். புகைப்படத்திலே அவரோட புன்னகையிலே ஒரு குழந்தை தெரியுது. :-)). பதிவைப் படித்தபோதும், படங்களைப் பார்த்தபோதும் அந்தப் புன்னகையோட அழகு இன்னும் அதிகமாய்த் தெரியுது. அருமையான பதிவு! அழகு சேர்க்கும் படங்கள்!
//
நன்றி சேட்டை நண்பா... கேட்டு பிரம்மித்துத்தான் எழுதினேன்.
//
கார்க்கி said...
வாவ்வ்வ்வ்வ்வ்
//
நன்றி சகா...

பிரபாகர் said...

//
♠ ராஜு ♠ said...
அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி, `சந்தோஷப்படுறது பெரிய சந்தோஷம்ன்னு சும்மாவா சொன்னாங்க..!
சூப்பர் தியோலா.
//
தேங்க்ஸ் தம்பி...
//
ச.செந்தில்வேலன் said...
வித்தியாசமான (நல்ல மனிதரை அப்படித்தானே சொல்வோம்?) மனிதரைப் பற்றிய ஒரு இடுகை. இப்படி சிலர் இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்தும் இடுகை :)
//
நன்றிங்க செந்தில்.

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
அணணே சூப்பர்...
பெரிய மனுசன் எப்பவுமே பெரியமனுசன் தாம்ணே...அது எந்த நாட்டுக்காரன்ஆனாலும் சரி...
புதுப்பணக்காரனுங்க தான் அலப்பறை பண்ணுவானுங்க...
//
நன்றி பிரதாப். உங்கள் இடுகைக்கு ஆபிஸ்ல இருந்து பின்னூட்டம் போட முடியல அதே பக்கத்துல கமென்ட் விண்டோ இருக்கிறதால.

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
சூப்பர் இடுகை
//
ரொம்ப நன்றிங்கய்யா....

பிரபாகர் said...

//
ஹேமா said...
நல்லதொரு பாராட்டுப் பதிவு போல அமைந்திருக்கிறது பிரபா.நம்மவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டாலும் இப்படியான நிறைந்த நல்ல மனிதர்களை இங்கும் காணக்கூடியதாக இருக்கிறது.
//
ஆம் சகோதரி, அந்த நிறைவில் தான் எழுதினேன்.
//
க.பாலாசி said...
அட பார்றா.... இப்டியுமா??....
சூப்பர் மேன்....
//
நன்றி இளவல்...

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
வானம்பாடிகள் said...
அருமையான மனிதர். ஹி ஹி. சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:)//
எதுக்கு வம்பு ஐயா சொன்னதையே நானும் சொல்லிக்கிறேன்..:)
//
நன்றி நண்பா...
//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
சீனர் ஒருவர் இப்படி அன்பு செலுத்துகிறார் என்றால் நம்ம பிள்ளைகள் ரொம்ப நல்லவர்கள்
//
ஆம், கம்பெனிக்காக கடுமையாய் உழைக்கிறார்கள்.

பிரபாகர் said...

//
Mrs.Menagasathia said...
உண்மையிலேயே அவர் பெரிய மனிதர்தான்.பெரிய மனுஷன் எப்பவும் பெரிய மனுஷந்தான்...
//
நன்றிங்க சகோதரி.
//
செ.சரவணக்குமார் said...
//எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்...//
எங்கள் மனதிலும்.
//
நன்றி சரவணக்குமார்.

பிரபாகர் said...

//
ராசுக்குட்டி said...
மிக நல்ல பண்பான மனிதர் ஒருவரை அறிமுகம் செய்தமைக்கு நன்றிங்க பிரபாகர்... நாங்கள் எல்லோரும் அவரை விசாரித்ததாக நீங்கள் நேரில் சந்திக்கும் போது கூறுங்கள். உங்களது சந்திப்பு குறித்த இடுகையை இப்போதிருந்தே எதிர்பார்க்க ஆரம்பித்தாயிற்று. நிறைய படங்களுடம் எழுதுங்கள்.
சரக்கு வாங்கிக்கொண்டு வந்தது மட்டும் தான் மனதிற்கு இடறுகிறது... அந்த காசையும் அவர் செய்த மற்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று ஒரு எண்ணம்... இது என் கருத்து மட்டுமே... இந்த கருத்து மற்றவர்களுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். மன்னிக்கவும்.
//
சரக்கு வாங்கித்தருவது அவர்களின் வழக்கம். முன்னதாக சாப்பிடுவார்களா எனக் கேட்டு வாங்கி சென்றிருக்கிறார்.
//
Venkatesan said...
லக்கி கைஸ், நல்ல முதலாளி.
Convey my wishes to him when you meet him.
//
நன்றி வெங்கடேஷ், கண்டிப்பாய் சொல்கிறேன்.

தாராபுரத்தான் said...

நல்லவங்களை பாராட்டியே ஆகணும்.

sathishsangkavi.blogspot.com said...

இப்படி ஒரு முதலாளி கிடைப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...

VR said...

வணக்கம் பிரபாகர் அண்ணே,

நல்ல இடுகை. ஆண்டி அவர்களின் நல்ல எண்ணத்துக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சல்லுயுட். அவரின் பண்புகளுக்கு நான் தலை வணங்குகிறேன். மறக்காமல் என் அன்பை கன்வே பண்ணவும்.

பிரபாகர் said...

//
தாராபுரத்தான் said...
நல்லவங்களை பாராட்டியே ஆகணும்.
//
கண்டிப்பா, ரொம்ப நன்றிங்கய்யா...
//

Sangkavi said...

இப்படி ஒரு முதலாளி கிடைப்பதற்கு கொடுத்து வைத்து இருக்க வேண்டும்...
//

சத்தியமான வார்த்தை. இதைத்தான் முத்துவிடம் சொன்னேன்....

பிரபாகர் said...

//
V R said...
வணக்கம் பிரபாகர் அண்ணே,

நல்ல இடுகை. ஆண்டி அவர்களின் நல்ல எண்ணத்துக்கும் மனித நேயத்துக்கும் ஒரு சல்லுயுட். அவரின் பண்புகளுக்கு நான் தலை வணங்குகிறேன். மறக்காமல் என் அன்பை கன்வே பண்ணவும்.
//
வாங்க V.R... உங்க முதல் வருகைக்கு சந்தோசம்.... கண்டிப்பாய் அவரிடம் உங்களின் அன்பினை சொல்லுகிறேன்.

Chitra said...

//////////சைனாக்காரய்ங்களுக்கே ஃப்ளெக்ஸ் பேனர் வச்ச பரம்பரைங்க நாங்கன்னு மார்தட்டிக்கலாம் போலயே:))///////

..........ஹா,ஹா,ஹா,ஹா.......

///////////எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் எல்லோரிடமும் அன்பாய் பழகி, எல்லோர் மனத்திலும் இடம் பிடித்த தியோ, என் மனத்திலும் ஆழமாய்.../////////

.......... வரவேற்கத்தக்கது

ஈரோடு கதிர் said...

ஒரு அருமையான இடுகை இட்டதற்கு பாராட்டுகள் பிரபா

நாகா said...

கட் அவுட்டு பட்டாசு.. நல்ல இடுகையும் அறிமுகமும்..!

Unknown said...

வாவ்.. நல்ல மனிதர்.

ரொம்ப நன்றிங்க சித்ரா...

//
ஈரோடு கதிர் said...
ஒரு அருமையான இடுகை இட்டதற்கு பாராட்டுகள் பிரபா
//
அன்பிற்கு, பாராட்டிற்கு நன்றி கதிர்!

பிரபாகர் said...

//
நாகா said...
கட் அவுட்டு பட்டாசு.. நல்ல இடுகையும் அறிமுகமும்..!
//
வணக்கம் நாகா! ரொம்ப நாளாச்சு! ரொம்ப நன்றி.

//
முகிலன் said...
வாவ்.. நல்ல மனிதர்.
//

வியந்து எழுதியதுதான் இது முகிலன்...

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

நலல் மனிதர்கள் உலகில் எங்கும் உள்ளனர். தம்மிடம் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரைப் பாராட்ட்டும் முகமாக - முதலாளி இவ்வளவும் செய்கிறார் என்றால் - ... முத்து கொடுத்து வைத்தவர்.

நலல்தொரு மனைதரைப் பற்றிய இடுகை

புலவன் புலிகேசி said...

தல உண்மையிலேயே அந்த சீன முதலாலிக்கு ஒரு சல்யூட்...இப்பதான் முதன்முறை இதுபோல் கேள்வி படுறேன்..

ரோஸ்விக் said...

I can not wish / appreciate him in a Single word / Sentence.

I would like to keep up the humanity and helping tendency in myself with that I salute him.

Thanks for bringing up this touching incident.

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பதிவு.

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் கழுத்தில் மாலையோடும்,கையில் பூச்ச்செண்டோடும் உள்ள போட்டோ மிக மிக அருமை.

நம்மாள்களும் பிளெக்ஸ் போர்டு வச்சு கலக்கிட்டாங்க... :))

மிகவும் எளிமையான மனிதர்.நேரில் சந்திக்கும்போது எங்கள் அன்பையும் தெரிவிக்கவும்.

ஜெட்லி... said...

நல்ல முதலாளி....
பகிர்வுக்கு சந்தோசம் அண்ணே.....
ஆனா நம்ம ஆளுங்கல பேனர் வைக்கிறதுல
யாரும் அடிச்சுக்க முடியாது....:))

கலகலப்ரியா said...

படங்களும் முதலாளியும் அருமை அண்ணா...

ரொம்ப நன்றிங்கய்யா!

//
புலவன் புலிகேசி said...
தல உண்மையிலேயே அந்த சீன முதலாலிக்கு ஒரு சல்யூட்...இப்பதான் முதன்முறை இதுபோல் கேள்வி படுறேன்..
//
நன்றி புலிகேசி!

பிரபாகர் said...

//
ரோஸ்விக் said...
I can not wish / appreciate him in a Single word / Sentence.

I would like to keep up the humanity and helping tendency in myself with that I salute him.

Thanks for bringing up this touching incident.
//
Thanks Rosevic, I will convey your message...

//
துபாய் ராஜா said...
நெகிழ்ச்சியான பதிவு.

புகைப்படங்கள் அனைத்தும் அருமை. மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்தில் கழுத்தில் மாலையோடும்,கையில் பூச்ச்செண்டோடும் உள்ள போட்டோ மிக மிக அருமை.

நம்மாள்களும் பிளெக்ஸ் போர்டு வச்சு கலக்கிட்டாங்க... :))

மிகவும் எளிமையான மனிதர்.நேரில் சந்திக்கும்போது எங்கள் அன்பையும் தெரிவிக்கவும்.
//
கண்டிப்பாய் ராஜா! அவசியம் சொல்கிறேன்.

பிரபாகர் said...

//
ஜெட்லி said...
நல்ல முதலாளி....
பகிர்வுக்கு சந்தோசம் அண்ணே.....
ஆனா நம்ம ஆளுங்கல பேனர் வைக்கிறதுல
யாரும் அடிச்சுக்க முடியாது....:))
//
நன்றி ஜெட்லி! ஆமாம், நமக்கு நிகர் நாமத்தான்.

//
கலகலப்ரியா said...
படங்களும் முதலாளியும் அருமை அண்ணா...
//
நன்றி சகோதரி!

பழமைபேசி said...

ஆகா...பார்க்க, படிக்க, பரவசம்!

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB