என்னை கவர்ந்த தாத்தாக்கள்.

|

சின்ன வயசுல நம்மள கவர்ந்த தாத்தாங்க சில பேரை பார்ப்போம், அம்மா வழி, அப்பா வழி தாத்தாக்கள தவிர்த்து.

பூசாரி தாத்தா...

ஊர்ல இருக்கிற முருகன் கோவில், மாரியம்மன் கோவில், விநாயகர் கோயில்னு எல்லாத்துக்கும் அவருதான் பூசாரி (எல்லா கோயிலுக்கும்னு ஒரு வார்த்தையில சொல்லிட வேண்டியதுதானேன்னு மொறைக்காதீங்க). விவரம் தெரியாதவரைக்கும் தான் அவரு நமக்கு பூசாரி தாத்தாவா இருந்துட்டு, அப்புறம் புருடா தாத்தாவா மாறிட்டாரு.

அது அம்மாவோட தாத்தா இறந்த சமயம். அவருதான் ஊருக்கு பெரிய கவுண்டர். ரொம்ப சிறப்பா சமாதி எல்லாம் கட்டி அடக்கம் பண்ணினாங்க. நம்ம பூசாரி தாத்தா தினமும் மாலை கொண்டுவந்து வீட்டுல அவரோட படத்துக்கு போட்டுட்டு சாயந்திரம் சுடுகாட்டுல அவரோட சமாதியில படைச்சிட்டு வருவாரு.

தினமும் ராத்திரியில தாத்தாவ சுடுகாட்டுல சந்திச்சி பேசறதா சொல்லுவாரு. அப்படியே சிரிச்ச முகத்தோட தும்பைப்பூ மாதிரி வேஷ்டி சட்டை போட்டுக்கிட்டு இருந்தாருன்னு சொல்வாரு. எங்களையெல்லாம் கவலைப்படாம இருக்க சொல்லிட்டு அவரு சொர்க்கத்துல சந்தோஷமா இருக்கிறார்னு சொன்னதோட இல்லாம அங்க அவரு எப்படி இருக்கிறார்னு வேற சொல்லுவாரு.

'பிரபு உன்னை நல்லா படிக்க சொன்னாரு, மலரு நீ ஃபர்ஸ்ட் மார்க் எடுப்பே' ன்னு எங்கிட்டயும் சித்திகிட்டையும் சொன்னாரு. இன்னன்ன தேதில மழைவரும், புயல் வரும்னு கேக்கறதுக்கெல்லாம் கேட்டுட்டு வந்து பதில் சொல்லி புல்லரிக்க வெச்சாரு.

காணாம போன என்னோட பேனாவ யார் எடுத்தாங்கன்ன கேட்டதுக்கு, அடுத்த நாள் கேட்டுட்டு வந்து உங் கிளாசில இருக்கிற ஒருத்தந்தான்னு சொன்னாரு. ரொம்ப நம்பினோம் அவர, பரீட்சை ரிசல்ட் வர வரைக்கும். சொல்றது எதுவும் நடக்காம போக அவர நம்பறத விட்டுட்டோம். ஏதாவது சொல்ல வந்தாலும் ஓட ஆரம்பிச்சிடுவோம்.

ஆலயமணி தாத்தா.

இவரு ஆலயமணி சின்னத்துல வார்டு எலக்சன்ல நின்னு ஜெயிச்சதால இந்த பேரு. சிரிச்ச முகத்தோட இருப்பாரு. ஒரு வேலையும் இல்லன்னாலும் ரொம்ப பிசியா இருப்பாரு, வார்டு மெம்பராச்சே? இவரு எலெக்சன்ல நிக்கும்போது இவரு அடித்த நோட்டீஸ்தான் ரொம்ப பிரபலம்.

விவரம் தெரியாத அந்த வயசிலேயே அவரு அள்ளிவிட்ட வாக்குறுதி இன்னும் நினைவில. வீட்டுக்கு வீடு ஒரு மணி தருவேன்னு ஆரம்பிச்சி, பள்ளி சுத்தியும் சுவர் எழுப்பறேன், வீட்டுக்கு வீடு கழிப்பிட வசதி, பசுமாட்டு லோன் அது இதுன்னு அள்ளிவிட்டிருந்தாரு. குறிப்பா இன்னும் மறக்க முடியாதது அந்த நோட்டிஸ்ல கொட்டை எழுத்துல உங்களின் பொன்னான வாக்கு ஆலயமணியின் சின்னத்தில் போட்டியிடும் 'நடுத்தெரு நாராயணனுக்கே' என்பதே.

விவரம் தெரியாம அவருகிட்ட இது யாருன்னு கேக்க, சிரிச்சிகிட்டே, 'நான்தான் பேராண்டி, என் பேரு நாராயணன்தான்னு உனக்கு தெரியாதா' ன்னு கேட்டுட்டு, 'நம்ம வீடு இருக்கிறது நடுத்தெருவிலதானே' ன்னு சொன்னாரு.

சுகர் (தாத்தா)

தாத்தா மாதிரி வயசானவருதான். இவர யாரும் தாத்தான்னு கூப்பிட மாட்டோம். சுகர்னு தான் கூப்பிடுவோம், அவரு பேரு சக்கரைங்கறதால. அம்மி கொத்தறது, சிற்ப வேலை, கல்லு உடைக்கிறதுன்னு எல்லாம் செய்வாரு. அம்மி உரல்னும் செய்வாரு. ரொம்ப நல்லா பாடுவாரு. தினமும் சித்திங்க என்ன அவர அழைச்சிகிட்டு வர சொல்லி பாட்டுப் பாட சொல்லுவாங்க. ’பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர் புண்ணியமின்றே விலங்குகள் போல்' னு கணீர்னு பாடுவாரு.

பாடும்போது வாயை அசைக்கிறது தான் ரொம்ப காமெடியா இருக்கும். நாலு சிவாஜிங்க சேர்ந்த மாதிரி இருக்கும். அத பாத்து விழுந்து விழுந்து சிரிப்போம். கண்டுக்காம பாடிகிட்டிருப்பாரு. தினமும் கேட்போம், சலிக்காம பாடுவாரு.

பொட்டையன் தாத்தா

இவரு பேரு என்னான்னு தெரியாது. இப்படித்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க. கண்ணு கண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுவாரு. இவரு சத்தம் போட்டு மிரட்டினாக்கூட எந்த ஒரு புள்ளங்களும் பயப்படாது, குரல் அப்படி. ரொம்ப சாதுவானவரு...

பசங்ககெல்லாம் இவரு வரத பாத்தா, ஹேய் ’பொட்டயன் தாத்தா வர்றாரு’ன்னு சத்தம் போட்டுகிட்டு ஓடுவோம், குச்செடுத்துகிட்டு தொறத்துவாரு. வீட்டுல வந்து ஆயாகிட்ட ‘அண்ணியா, பிரபு கூட என்ன கிண்டல் பண்ணுது’ ன்னு கம்ப்ளைய்ண்ட் பண்ணுவாரு. ஆயா என்ன மிரட்டற மாதிரி நடிப்பாங்க.

இந்த மாதிரி நிறைய நம்ம மனசில நிறைஞ்சிருக்கிறவங்க இருக்காங்க. அதையெல்லாம் நினைச்சிப்பாக்குறதுல ஒரு சுகம்தானே?

34 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கலகலப்ரியா said...

சுகமான நினைவுகள் அண்ணா...

Chitra said...

இந்த மாதிரி நிறைய நம்ம மனசில நிறைஞ்சிருக்கிறவங்க இருக்காங்க.

......... :-)

Anonymous said...

இந்த மாதிரி நிறைய தாத்தா பாட்டிக்கள் எல்லா ஊரிலயும் இருக்காங்கா.

புலவன் புலிகேசி said...

அண்ணன் எங்க ஊரு ஆரோக்யம் தாத்தாவ நினைவு படுத்திட்டீங்க...

அன்புடன் மலிக்கா said...

எனக்கும் எங்க ஃபாதரின் அப்பாவை[தாத்தா]ரொம்ப பிடிக்கும் அண்ணா..

நல்ல நினைவுகள்

vasu balaji said...

:)

ஈரோடு கதிர் said...

பிரபாகர் தாத்தா பத்தி வருங்காலம் வரலாறு எழுத வேண்டும்

க.பாலாசி said...

நமக்கும் இதுமாதிரி நெறய தாத்தாக்கள் இருக்காங்கண்ணா... நினைவு மலர்கள் அருமை....

வால்பையன் said...

அப்போ காந்தி தாத்தா பிடிக்காதா!?

ரோஸ்விக் said...

அண்ணே! அந்த லாரா தத்தா புடிக்காதா?? (ஓ நீங்க சொல்றது தாத்தாகளோ... ) :-)) சும்மா தமாசுக்கு...

Paleo God said...

புரியிது, யுவராஜ் சச்சின தாத்தான்னு சொன்னதுக்கு எதிர் வினைதான இந்த பதிவு.::)))

அண்ணனா ஒரு தம்பிய நீங்க அரவணைக்கிற பாசம் இருக்கே சூப்பர் :))

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தாத்தாக்களை வைத்து பதிவு எழுத முடியும்னு நிரூபிசிடீங்க சார் சூப்பர் ...

ஜீவன்பென்னி said...

எனக்கு எங்க ஊரு கிள்ளுத்தாத்தாவ நினைக்க வச்சுட்டீங்க. சாப்பிடல, படிக்கலனா அவர வ்ச்சுத்தான் பயம் காட்டுவாங்க. அவரு ஒரு சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்தவர் என்றும், வாழ வழியில்லாம பிச்சையெடுத்தார்னும் பல வருடங்களுக்கு பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

Prathap Kumar S. said...

//ஒரு வேலையும் இல்லன்னாலும் ரொம்ப பிசியா இருப்பாரு, வார்டு மெம்பராச்சே?//

அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே... :)

அண்ணோ உங்கூர்ல பாட்டிகளே கிடையாதா??? :))

நாகராஜன் said...

நிஜமாலுமே ஒரு சுகமான அனுபவம் தாங்க இந்த மாதிரி தாத்தாக்களை எல்லாம் நினைவு கூர்வது... கொசு வத்தி சுத்த வைச்சுட்டீங்க போங்க... :(... இனி வரும் காலங்களிலும் நம் தலை முறையினரிடம் இது தொடரும்படி செய்ய வேண்டியது நமது கடமைன்னு நினைக்கறேன்.

settaikkaran said...

சில மனிதர்களைப் பற்றி யாராவது சொல்லும்போது நமக்கும் அவர்களோடு ஒரு பரிச்சயம் இருப்பது போலத் தோன்றும். இதைப் படித்தபோது எனக்கும் சில தாத்தாக்களின் நினைவு வந்தது.

ஹேமா said...

என்னோட தாத்தா ஞாபகம் வந்திடிச்சு.ஆச்சி...ஆத்தான்னுதான் கூப்பிடுவார்.

Unknown said...

பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள் பிரபாகர்.. :)

Unknown said...

எல்லா ஊர்லையும் இருக்காங்க இப்படி பட்ட தாத்தாங்க...

முரட்டு சிங்கம் said...

இப்ப எனக்கு பிடிச்ச தாத்தாங்க Listல நீங்களும் சேந்துட்டீங்க.......

கார்க்கிபவா said...

என் ராமசாமி தாத்தா படிச்சி இருக்கிங்களா?

பிரபாகர் said...

//
கலகலப்ரியா said...
சுகமான நினைவுகள் அண்ணா...
//
நன்றி சகோதரி!

//
Chitra said...
இந்த மாதிரி நிறைய நம்ம மனசில நிறைஞ்சிருக்கிறவங்க இருக்காங்க.
......... :-)
//
ரொம்ப நன்றிங்க சித்ரா...

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
இந்த மாதிரி நிறைய தாத்தா பாட்டிக்கள் எல்லா ஊரிலயும் இருக்காங்கா.
//
நன்றிங்க சின்ன அம்மிணி...

//
புலவன் புலிகேசி said...
அண்ணன் எங்க ஊரு ஆரோக்யம் தாத்தாவ நினைவு படுத்திட்டீங்க...
//
நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

//
அன்புடன் மலிக்கா said...
எனக்கும் எங்க ஃபாதரின் அப்பாவை[தாத்தா]ரொம்ப பிடிக்கும் அண்ணா..
நல்ல நினைவுகள்
//
நன்றி சகோதரி...

//
வானம்பாடிகள் said...
:)
//
நன்றிங்கய்யா....

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
பிரபாகர் தாத்தா பத்தி வருங்காலம் வரலாறு எழுத வேண்டும்
//
அப்போ கதிர் தாத்தாவும் அதுல இருப்பாரு...

//
க.பாலாசி said...
நமக்கும் இதுமாதிரி நெறய தாத்தாக்கள் இருக்காங்கண்ணா... நினைவு மலர்கள் அருமை....
//
நன்றி இளவல்...

பிரபாகர் said...

//
வால்பையன் said...
அப்போ காந்தி தாத்தா பிடிக்காதா!?
//
அவரு குஜராத் தாத்தால்லா, இவங்கெல்லாம் நம்மூரு...

//
ரோஸ்விக் said...
அண்ணே! அந்த லாரா தத்தா புடிக்காதா?? (ஓ நீங்க சொல்றது தாத்தாகளோ... ) :-)) சும்மா தமாசுக்கு...
//
நன்றி ரோஸ் விக்...

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
புரியிது, யுவராஜ் சச்சின தாத்தான்னு சொன்னதுக்கு எதிர் வினைதான இந்த பதிவு.::)))
அண்ணனா ஒரு தம்பிய நீங்க அரவணைக்கிற பாசம் இருக்கே சூப்பர் :))
//
நன்றி ஷங்கர்...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
தாத்தாக்களை வைத்து பதிவு எழுத முடியும்னு நிரூபிசிடீங்க சார் சூப்பர் ...
//
நன்றி ஜெய்...

பிரபாகர் said...

//
ஜீவன்பென்னி said...
எனக்கு எங்க ஊரு கிள்ளுத்தாத்தாவ நினைக்க வச்சுட்டீங்க. சாப்பிடல, படிக்கலனா அவர வ்ச்சுத்தான் பயம் காட்டுவாங்க. அவரு ஒரு சுதந்திர போராட்டத்துல பங்கெடுத்தவர் என்றும், வாழ வழியில்லாம பிச்சையெடுத்தார்னும் பல வருடங்களுக்கு பின்னாடி தெரிஞ்சுக்கிட்டேன்.
//
ஓ, உண்மையான சுதந்திர போராட்டக்கரார்கள் நிறைய பேர் அப்படித்தான் இருந்திருக்காங்க...

//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-)))
//
நன்றிங்கய்யா...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
//ஒரு வேலையும் இல்லன்னாலும் ரொம்ப பிசியா இருப்பாரு, வார்டு மெம்பராச்சே?//
அரசியல்ல இதெல்லாம் சகஜம்ணே... :)
அண்ணோ உங்கூர்ல பாட்டிகளே கிடையாதா??? :))
//
இருக்காங்க. அவங்கள வெச்சும் ஒரு இடுகை போட்டிடுவோம்...

//
ராசுக்குட்டி said...
நிஜமாலுமே ஒரு சுகமான அனுபவம் தாங்க இந்த மாதிரி தாத்தாக்களை எல்லாம் நினைவு கூர்வது... கொசு வத்தி சுத்த வைச்சுட்டீங்க போங்க... :(... இனி வரும் காலங்களிலும் நம் தலை முறையினரிடம் இது தொடரும்படி செய்ய வேண்டியது நமது கடமைன்னு நினைக்கறேன்.
//
ஆமாங்க, சரியாய் சொன்னீங்க...

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
சில மனிதர்களைப் பற்றி யாராவது சொல்லும்போது நமக்கும் அவர்களோடு ஒரு பரிச்சயம் இருப்பது போலத் தோன்றும். இதைப் படித்தபோது எனக்கும் சில தாத்தாக்களின் நினைவு வந்தது.
//
நன்றி சேட்டை...

//
ஹேமா said...
என்னோட தாத்தா ஞாபகம் வந்திடிச்சு.ஆச்சி...ஆத்தான்னுதான் கூப்பிடுவார்.
//
நன்றி சகோதரி...

பிரபாகர் said...

//
முகிலன் said...
பழைய நினைவுகளைத் தூண்டிவிட்டீர்கள் பிரபாகர்.. :)
//
நன்றி நண்பா...

//
பேநா மூடி said...
எல்லா ஊர்லையும் இருக்காங்க இப்படி பட்ட தாத்தாங்க...
//
நன்றி ஆனந்த்...

பிரபாகர் said...

//
முரட்டு சிங்கம் said...
இப்ப எனக்கு பிடிச்ச தாத்தாங்க Listல நீங்களும் சேந்துட்டீங்க.......
//
ஆகா, வாங்க சிங்கம், வந்தவுடனே கவுத்துரீங்களே?

//
கார்க்கி said...
என் ராமசாமி தாத்தா படிச்சி இருக்கிங்களா?
//
இல்லை சகா, படிக்கிறேன்....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

இந்தியாகுள்ள போயிட்டு வந்த பீலிங்க கொண்டுவந்துட்டீங்க..
சூப்பர்னே...

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB