சுப்பிரமணியும் ஸ்டவ்வும்...

|

மாமாவும் நானும் காலேஜ்ல நடந்த ஒரு காதல் கலாட்டாவ பத்தி மாடியில அவரோட வீட்டு வாசல்ல கட்டில்ல உக்காந்து பேசிட்டிருந்தோம்.

கீழ கொசுவலை தறி வெச்சுட்டு, நாப்பது பேருக்கு வேலை கொடுத்துட்டு வியாபார காந்தமா இருக்காரு. ரெண்டு பேரும் சேர்ந்துட்டா ஒரே அதகளம்தான்.

காலேஜ்ல அப்போ நான் செகண்ட் இயர். பேச்சு வாக்குல கேட்டார்.

'பிரபு, ஜுஜூபி, ஜுஜூபின்னு சொல்றங்களே? அப்படின்னா என்னா?'

'ஏன் மாமா இந்த திடீர் சந்தேகம்' னேன்.

'இல்ல, நேத்து சாயங்காலம் பஸ்ஸில வரும்போது காலேஜ் பசங்க எதுக்கெடுத்தாலும் இதையே சொல்லிட்டு வந்தாங்க' ன்னாரு.

அப்போ சுப்பிரமணி கீழ தறியில இருந்து வந்தான்.

'அண்ணா பதினாலுக்கு பதினைஞ்சி ஸ்பேனர் வேணும்' னான்.

'உள்ள பொட்டியில இருக்கு எடுத்துட்டு போ', 'ஆமா, நீ பதில் சொல்லு'.

டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,

'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.

'இந்த ஜுஜூபி மேட்டரத்தான் நான் தெரிஞ்சுக்காம இருந்தேனா' ங்கும்போது சுப்பு திரும்பவும் வந்தான்.

'அண்ணா, பதினேழுக்கு பதினெட்டு ஸ்பேனர் வேணும்'.

'சும்மா சும்மா என்னா, எடுத்துகிட்டு போ' சொல்லிட்டு பேச்சை தொடர்ந்தோம். திரும்பவும் வந்தான்.

'அண்ணா ஸ்டவ் பின் வேணும்' னான். கை, முகமெல்லாம் கரி.

இருக்கிற இடத்தை சொல்லி ஒரு பாக்கெட் எடுத்துட்டு போக சொன்னாரு.

கொஞ்ச நேரம் போனதும், மாமா திடீர்னு,  'ஆமா பிரபு எதுக்கு அவன் சும்மா சும்மா வந்து எடுத்திட்டு போனான், வா கீழ போய் பாக்கலாம்' னாரு.

தறியில ஊசி உடைஞ்சு போச்சுன்னா ஊசியை மாத்திட்டு டை செட்ல ஃபிட் பண்ணி ஈயத்த உருக்கி ஊத்துவாங்க.

ஈயத்த உருக்க பம்பிங் ஸ்டவ்வதான் யூஸ் பண்ணுவாங்க, நல்லா பிரஷர்ல ஈயம் உருகுங்கறதால.

நம்மாளு ஈயம் காய்ச்சற அந்த ஸ்டவ்லதான் இவ்வளோ நேரம் வேலை பாத்திருக்கான்னு போயி பார்த்தப்போதான் தெரிஞ்சது.

தரையெல்லாம் கரி. ஸ்டவ்வ அக்குவேறா பிரிச்சி மாட்டியிருந்தான். ஸ்டவ் பின் பத்துக்கு மேல உடைஞ்சி கிடந்தது.

'அண்ணா, நான் இனிமே வேலைக்கே வரப்போறதுல்ல... இந்த ஸ்டவ்வ மாத்து, இல்லன்னா ஆள உடு'  ன்னான்.

'பம்ப் பண்ணா காத்தெல்லாம் ஏறுதா' ன்னாரு.

'அந்த எழவுக்குத்தான், பத்து தடவைக்கு மேல வந்து ஸ்பேனர், நெருப்பெட்டி,  பின்னுன்னு எதுத்துட்டு வந்தேன்' னான்.

அப்போதான் மாமாவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ தூக்கி ஆட்டி பாத்தாரு, சுத்தமா எண்ணையே இல்ல...

21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Paleo God said...

என்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))

இன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இருக்குங்க பிரபாகர். எனக்கு அடுப்பு என்றதும் ஏதாவது ஏடா கூடமாக ஆகுமோன்னு பயந்துட்டே படித்தேன். பொசுக்குனு போயிடுச்சு :)

துபாய் ராஜா said...

குபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.

//ஷங்கர் said...
என்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))

இன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)//

ரிப்ப்ப்ப்ப்பீபீட்டேய்ய்ய்ய்ய்.....

Unknown said...

கடைசியில இப்பிடி முடிச்சிருந்துருக்கலாம்..
//அப்போதான் மாமவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ ஆட்டி பாத்துட்டு அவர் மொறச்ச மொறைல சுப்பிரமணி எண்ணெய் இல்லாமலே எரிஞ்சான்//

Anonymous said...

:)

யாசவி said...

go ahead

hilarious :)

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல்ல காமெடி ...

மணிஜி said...

இங்கன ஒரு ஸ்மைலியை போடறேன்!

மங்குனி அமைச்சர் said...

//டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,

'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.//

வணக்கம் சார்
அது எப்படி தல சைக்கிள் கேப்ல 3 ஆடோ, 4 தண்ணி லாரி (குடிக்கிற தண்ணி, நீங்களும் இத தான நினசிங்க )
வோட்ரிங்க

தராசு said...

)))))))))

settaikkaran said...

மாமா மண்ணெண்ணெய் இல்லைன்னு கண்டு பிடிச்சதும் முகத்துலே விளக்கெண்ணை வழிந்ததா? :-))

Anonymous said...

//துபாய் ராஜா said...
குபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.//

repeat.....

oru chinna Suggestion.. unga photo romba close up la eduthadha podadhinga, konjam bayama iruku paakradhuku..

நாகராஜன் said...

வழக்கம் போல நல்லா இருக்குங்க பிரபாகர்... இருந்தாலும் என்னோமோ கொஞ்சம் குறையற மாதிரி தெரியுது... கோர்வையா இல்லையோ?

பிரபாகர் said...

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
என்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))
இன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)
//
நன்றி ஷங்கர்... கண்டிப்பா...
//
ச.செந்தில்வேலன் said...
நல்ல இருக்குங்க பிரபாகர். எனக்கு அடுப்பு என்றதும் ஏதாவது ஏடா கூடமாக ஆகுமோன்னு பயந்துட்டே படித்தேன். பொசுக்குனு போயிடுச்சு :)
//
ஆமாங்க, பொசுக்குனு இருக்கு! இன்னும் சுவராஸ்யமா சொல்ல முயற்சிக்கிறேன்.

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
குபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.
//ஷங்கர் said...
என்ன இப்பிடி அசால்டா அடி பின்றீங்க.. நல்லா இருக்குங்க பிரபாகர்..:))
இன்னும் நிறைய இந்தமாதிரி சிரிப்ஸ் போடுங்க..::)//
ரிப்ப்ப்ப்ப்பீபீட்டேய்ய்ய்ய்ய்.....
//
நன்றி ராஜா....

//
முகிலன் said...
கடைசியில இப்பிடி முடிச்சிருந்துருக்கலாம்..
//அப்போதான் மாமவுக்கு லேசா சந்தேகம் வந்தது. டக்குனு ஸ்டவ்வ ஆட்டி பாத்துட்டு அவர் மொறச்ச மொறைல சுப்பிரமணி எண்ணெய் இல்லாமலே எரிஞ்சான்//
//
இதுவும் அருமையாத்தான் இருக்கு முகிலன், கருத்துக்கு நன்றிங்க....

பிரபாகர் said...

//
சின்ன அம்மிணி said...
:)
//
நன்றிங்க சின்ன அம்மிணி...

//
யாசவி said...
go ahead
hilarious :)
//
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
நல்ல காமெடி ...
//
நன்றி ஜெய்...

//
தண்டோரா ...... said...
இங்கன ஒரு ஸ்மைலியை போடறேன்!
//
நன்றிங்கண்ணா....

பிரபாகர் said...

//
மங்குனி அமைச்சர் said...
//டக்குனு பதில் சொல்ல தடுமாறி, 'அது வந்து, சாதாரணமா சொல்றது, ம்.... உதாரணமா அர்ஜன்ட்டா ஆயிரம் ரூபா உங்ககிட்ட கேக்கறேன்... உங்ககிட்ட இருந்துச்சின்னா,
'ஜுஜூபி, ஆயிரம்தானே, இப்பவே தர்ரேன்' நீங்க சொல்லலாம், அப்புறம்'னு இழுத்தேன்.//
வணக்கம் சார்
அது எப்படி தல சைக்கிள் கேப்ல 3 ஆடோ, 4 தண்ணி லாரி (குடிக்கிற தண்ணி, நீங்களும் இத தான நினசிங்க )
வோட்ரிங்க
//
வருகைக்கும் உங்க பின்னூட்டத்துக்கும் நன்றிங்க...

//
தராசு said...
)))))))))
//
நன்றிங்கண்ணே...

பிரபாகர் said...

//
சேட்டைக்காரன் said...
மாமா மண்ணெண்ணெய் இல்லைன்னு கண்டு பிடிச்சதும் முகத்துலே விளக்கெண்ணை வழிந்ததா? :-))
//
நன்றி சேட்டை நண்பா...
//
Sachanaa said...
//துபாய் ராஜா said...
குபீர் என்று சிரித்தேன். செந்தில் கவுண்டமணி போல் நல்ல காமெடி. இயல்பான எழுத்து நடையில் காட்சிகள் கண்முன்.//
repeat.....
oru chinna Suggestion.. unga photo romba close up la eduthadha podadhinga, konjam bayama iruku paakradhuku..
//
மாத்திட்டேங்க....
//
ராசுக்குட்டி said...
வழக்கம் போல நல்லா இருக்குங்க பிரபாகர்... இருந்தாலும் என்னோமோ கொஞ்சம் குறையற மாதிரி தெரியுது... கோர்வையா இல்லையோ?
//
இல்லைஎன்று தான் நினைக்கிறேன். அடுத்து கோர்வையாய் தர முயற்சிக்கிறேன்.

ரோஸ்விக் said...

இதெல்லாம் சுப்புக்கு ஜூஜுபி-யா இருந்திருக்குமோ...?

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB