கிராமங்கள்ல நாம சின்ன பசங்களா இருக்கிறப்போ பெருசுங்க உடற ரவுச புரியலன்னாலும் பாத்துகிட்டிருப்போம், கேட்டுகிட்டிருப்போம். அதுல நாம பாத்த சிலத பகிர்ந்துக்கலாம்னு.
அந்த தாத்தா எல்லாத்துக்கும் முன்னால ரொம்ப நல்ல பேசுவாரு. அந்தாண்ட போனதுக்கு அப்புறமா அப்படியே மாத்தி பேசுவாரு..... ஒரு சின்ன சம்பவத்த பாருங்களேன்...
'வாடா முருகேசா, எப்படி இருக்க, என்னா காட்டுக்கு மாடு ஓட்டிட்டு போறியா?'
'ஆமாம் தாத்தா'
'நல்லது, அப்புறம் ஒன் மவன் அருமையா படிக்கிறான் போலிருக்கு, பேசிக்கிட்டாங்க'
'அப்படியா? ரொம்ப சந்தோஷம் தாத்தா'
அந்தாண்ட போனதும் பக்கத்துல இருக்கிறவருகிட்ட, 'அவன் மவன் உருப்படுவாங்கறே, சந்துல பீடி குடிச்சிகிட்டிருக்கா' ம்பாரு.
தெருவில வர ஒரு பொம்பளயப்பாத்து, 'மூக்காயி, சும்மா ஜம்முனு கிளம்பி லட்சுமி கலாட்சரமா கிளம்பிட்ட?'
'அம்பாயிக்கு கட்டி சோரு கட்டறாங்கல்ல, அதுக்குத்தான்'
அந்தாண்ட போனதுக்கப்புறம், 'யார கவுக்க இப்படி அலையுதோ, ஒடம்பெல்லாம் திமிறு' ம்பாரு.
இன்னும் சில பெருசுங்க இருக்காங்க. தினமும் ஒரே கதையை சலிக்காம பேசிகிட்டிருப்பாங்க.
'பஞ்சபாண்டவங்க காட்டுக்கு போயிருந்தப்போ அங்க ஒரு மரத்துல ஒரு மாங்கனி இருந்துச்சி. அத அர்ச்சுனன் வில்லால ஒரே அடி. அப்புறம் தான் தெரிஞ்சது அது ஒரு அதிசய மாங்கனி, ஒரு முனிவரு விசேஷமா வளர்த்துகிட்டிருக்காருன்னு.
அய்யோ சாபம் விட்டுருவாருன்னு பயந்துகிட்டிருந்தப்போ, கிருஷ்ணர் 'உத்தது சொன்னா அத்தது பொருந்தும்'னு சொன்னாரு. ஒவ்வொருத்தரா...' அப்படின்னு ஒரு நாளைக்கு கேக்கலாம், ரெண்டு நாளைக்கு கேக்கலாம். ஆனா ஒரு மாசத்துக்கு கேட்டோம்னா பாத்துக்கோங்களேன். அதனாலத்தான் இன்னும் ஞாபகம் இருக்கோ என்னமோ...
சில பெருசுங்க சீட்டாடிகிட்டிருக்கும்போது பக்கத்துல போனா விடவே மாட்டாங்க. படிக்கிற பையன் இங்க வரப்படாதுன்னு விரட்டி விட்டிடுவாங்க. பேரன் பக்கத்துல இருந்தாத்தான் ராசின்னு வெச்சிகிட்டு விளையாடறவங்களும் இருந்தாங்க. பேரன் கையால ஒரு சீட்டு எடுத்துக் கொடுன்னு சொல்லி விளையாடறவங்களும் இருந்தாங்க.
ஊர்ல இருக்கிற சாமிங்களப்பத்தி கதை கதையா சொல்லுவாங்க. தப்பு செஞ்சா கண்ணை குத்திடும், நல்லா படிக்கணும்னுலாம் அறிவுரை சொல்லுவாங்க. அவங்க காலத்துல செஞ்ச சாகசங்களை எல்லாம் ரொம்ப சுவைபட சொல்லுவாங்க. மாதா பிதா குரு தெய்வம்னு சொல்லுவாங்க.
நாமல்லாம் கேட்டுகிட்டிருந்தது அப்போ! இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு சொல்றாப்ல.
மிச்சர்கடை
4 weeks ago
35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//இன்னும் சில பெருசுங்க இருக்காங்க. தினமும் ஒரே கதையை சலிக்காம பேசிகிட்டிருப்பாங்க.//
சரியாச் சொன்னீங்க! எங்க ஊருலே ஒரு தாத்தா ரௌலத் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்துலே துப்பாக்கிச்சூடு பட்ட காயமுன்னு புதுசா வர்ற போஸ்ட்மேனுக்குக் கூடக் காட்டிக்கிட்டு இருந்தாரு! "அது அவுங்க ஐயா சூடு வச்சதப்பு,"ன்னு அவரது மனைவியே ஒரு நாள் குட்டை உடைத்து விட்டார்.
சுவாரசியமான பதிவு! தாத்தா சம்பந்தப்பட்டதாயிற்றே! :-))
இந்த மாதிரி பெருசுங்க விடுற கதைக எல்லாம் ரீலா இருந்தாலும் ரொம்ப சுவரஸ்யமானவைங்க பிரபா. :)
=)) நல்லாருக்கு அண்ணா..
நம்ம மாதிரியா இப்ப உள்ள புள்ளைங்க.அதுக புத்திசாலிங்க.தாத்தா கதை கவைக்கு உதவாதுன்னு புரிஞ்சுகிருச்சுக
தாத்தா தாத்தாதான்.
நல்ல பகிர்வு பாஸ்.
பிரபா..பெரியவர்களின் கதைகளோ பழக்க வழக்கங்களோ சிலநேரம் எரிச்சலைத் தந்தாலும் ஏதோ நன்மையே சொல்லிச் செல்லும்.
அலுக்க வேணாம்.இன்னும் 2-3 தலைமுறக்குப் பின் இன்னும் வருந்துவோம்.
இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு சொல்றாப்ல.
............எல்லாம் நவீனத்துவம் முன்னேற்றம் என்று இருந்தாலும், ஏதோ ஒன்றை இழந்து கொண்டு வருவதை உணர முடிகிறது.
//
சேட்டைக்காரன் said...

நன்றி சேட்டை. பின்னுட்டத்திலும் உங்களின் தனி முத்திரை. கலக்குகிறீர்கள் இளம் புயலாய்!
//
ச.செந்தில்வேலன் said...
இந்த மாதிரி பெருசுங்க விடுற கதைக எல்லாம் ரீலா இருந்தாலும் ரொம்ப சுவரஸ்யமானவைங்க பிரபா. :)
//
ஆமாங்க செந்தில். இதையெல்லாம் இன்றைய குழந்தைகள் இழந்து வருகின்றன...
//
கலகலப்ரியா said...
=)) நல்லாருக்கு அண்ணா..
//
நன்றி சகோதரி.
//
க.நா.சாந்தி லெட்சுமணன். said...
நம்ம மாதிரியா இப்ப உள்ள புள்ளைங்க.அதுக புத்திசாலிங்க.தாத்தா கதை கவைக்கு உதவாதுன்னு புரிஞ்சுகிருச்சுக
//
ஆமாங்க. ஆனா மெஷின் தனமா இருக்கிறத பார்த்தா பரிதாபமா இருக்கு.
//
அக்பர் said...
தாத்தா தாத்தாதான்.
நல்ல பகிர்வு பாஸ்.
//
நன்றி சினேகிதா, தொடர் ஆதரவுக்கு, அன்பிற்கு.
//
வானம்பாடிகள் said...
:))
//
நன்றிங்கய்யா....
//
ஹேமா said...
பிரபா..பெரியவர்களின் கதைகளோ பழக்க வழக்கங்களோ சிலநேரம் எரிச்சலைத் தந்தாலும் ஏதோ நன்மையே சொல்லிச் செல்லும்.
அலுக்க வேணாம்.இன்னும் 2-3 தலைமுறக்குப் பின் இன்னும் வருந்துவோம்.
//
ஆம் சகோதரி. உறவு முறைகள், அவைகளுக்குள் இருக்கும் பந்தம் நாகரிக மாற்றத்தால் மாறி சிதைந்து வருகிறது.
//
Chitra said...
இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு சொல்றாப்ல.
............எல்லாம் நவீனத்துவம் முன்னேற்றம் என்று இருந்தாலும், ஏதோ ஒன்றை இழந்து கொண்டு வருவதை உணர முடிகிறது.
//
மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்...
:-))
//அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு//
உண்மைதான் தல..ஆனா அதுல இருக்குற பாசமும் பரிவும் இப்பல்லம் இல்ல..கதை சொல்வதில் கிடைத்த சுகம் கம்பியூட்டரில் இல்லை
தாத்தாக்களின் குறும்பு பேச்சுகளைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.
//தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா!//
ஒதுக்கும் குழந்தைகளுக்கு அப்படியில்லை எனப் புரியவைக்க இந்த தலைமுறைக்கு நேரமில்லை:(!
சுவாரஸ்யம் பிரபா
ஆனால் நிறைய விஷயங்கள் அவர்களிடம் பொறுமையாய் பேசும்போது கிடைக்கும்...:)
எனக்கு இந்த மாதிரி பெரியவர்களிடம் பேச மிகவும் பிடிக்கும் பிரபாகர். (லொள்ளு பேசறவங்க இல்ல:)
தாத்தாக்களிடம் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே...
அவர்களது அனுபவமும், 75 வயதிற்கு மேலும் ஆரோக்கியத்துடன் இருப்பது என பல சுவரஸ்யமான விசயங்களை சொல்வார்கள்.. இன்னும் மேலே போனால் அவர்கள் 50 வருடங்களுக்கு முன் பழனி கோயிலுக்கு மாட்டு வண்டியிலேயே செல்வோம் என்று அவர்கள் அனுபவங்களை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்... தாத்தாக்களை ஞாபகப்படுத்திதற்கு நன்றி பிரபாகர்...
முதிர்ச்சியான பதிவு பிரபாகர். உங்களைப் போன்ற பெரியவர்களின் இந்த பதிவுகளை வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்.
(உங்க வயது 67தானே 37ன்னு தப்பாயிருக்கு பாருங்க. மாத்திடுங்க)
//இன்னும் சில பெருசுங்க இருக்காங்க. தினமும் ஒரே கதையை சலிக்காம பேசிகிட்டிருப்பாங்க.//
தாத்தாக்கள் இப்போ குறைஞ்சதுல வருத்தம் இருக்கு.
இப்போ, சில இளைஞர்களே, தாத்தாக்கள் சொல்ற மாதிரி... சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க... :-))
பல சமயங்கள்ல இந்த தாத்தாக்கள் பண்ணுகிற குசும்பு ரொம்ப ரசிக்கத் தக்கதா இருக்கும். நல்லா சொல்லி இருக்கீங்க...
நல்லா சொன்னீங்க,....
அந்தகாலம் என்றாலும் அசத்தல்காலமாக இருக்கும்
இந்தகாலம்
என்னத்தசொல்ல..
நல்லயிருக்க்கு பிரபாண்ணா
//'உத்தது சொன்னா அத்தது பொருந்தும்'னு //
பிரபாண்ணே இதுக்கும் அர்த்தம் என்னன்னு நீங்க கடைசிவரை சொல்லவே இல்ல... :)
நீங்க முதல்ல சொன்ன பெருசு கதை உண்மைதான்... லொள்ளு பிடிச்சு பெருங்க நிறைய பாத்திருக்கேன்....
//இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா!//
அப்டியே அப்பா மாதிரி....
நமக்கு எந்த தாத்தாவும் கதையெல்லாம் சொல்லலீங்க....
//
T.V.ராதாகிருஷ்ணன் said...
:-))
//
நன்றிங்கய்யா...
//
புலவன் புலிகேசி said...
//அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா! எதாச்சும் டவுட்டுன்ன உங்களுக்குத்தான் போன் பண்ணி கேக்க வேண்டியிருக்கு, அவரு சொல்ற கதையெல்லாம் ரொம்ப போரடிக்குதப்பா, கம்ப்யூட்டர் சுத்தமா தெரியல, நான் அவருக்கு சொல்லித் தரேன்'னு//
உண்மைதான் தல..ஆனா அதுல இருக்குற பாசமும் பரிவும் இப்பல்லம் இல்ல..கதை சொல்வதில் கிடைத்த சுகம் கம்பியூட்டரில் இல்லை
//
ஆமாம் புலிகேசி... நன்றி...
//
ராமலக்ஷ்மி said...
தாத்தாக்களின் குறும்பு பேச்சுகளைச் சொல்லியிருக்கும் விதம் அருமை.
//தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா!//
ஒதுக்கும் குழந்தைகளுக்கு அப்படியில்லை எனப் புரியவைக்க இந்த தலைமுறைக்கு நேரமில்லை:(!
//
இல்லைங்க, சொன்னாலும் புரிஞ்சிக்கிற மாதிரி அவங்க இல்ல, தலைமுறை இடைவெளி...
//
ஈரோடு கதிர் said...
சுவாரஸ்யம் பிரபா
//
நன்றி கதிர்!
//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
ஆனால் நிறைய விஷயங்கள் அவர்களிடம் பொறுமையாய் பேசும்போது கிடைக்கும்...:)
எனக்கு இந்த மாதிரி பெரியவர்களிடம் பேச மிகவும் பிடிக்கும் பிரபாகர். (லொள்ளு பேசறவங்க இல்ல:)
//
ஆமாம் ஷங்கர்... எனக்கும்தான்... சேம் பிளட்..
//
Sangkavi said...
தாத்தாக்களிடம் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் நண்பரே...
அவர்களது அனுபவமும், 75 வயதிற்கு மேலும் ஆரோக்கியத்துடன் இருப்பது என பல சுவரஸ்யமான விசயங்களை சொல்வார்கள்.. இன்னும் மேலே போனால் அவர்கள் 50 வருடங்களுக்கு முன் பழனி கோயிலுக்கு மாட்டு வண்டியிலேயே செல்வோம் என்று அவர்கள் அனுபவங்களை கேட்க கேட்க இனிமையாக இருக்கும்... தாத்தாக்களை ஞாபகப்படுத்திதற்கு நன்றி பிரபாகர்...
//
நன்றி நண்பா! பழையதை கிளறினால் என்றுமே மனதிற்கு ஒரு ஆறுதல், ஆனாலும் வலி...
//
அகநாழிகை said...
முதிர்ச்சியான பதிவு பிரபாகர். உங்களைப் போன்ற பெரியவர்களின் இந்த பதிவுகளை வாழ்க்கைப் பாடமாக எடுத்துக் கொள்கிறோம்.
நன்றி வணக்கம்.
(உங்க வயது 67தானே 37ன்னு தப்பாயிருக்கு பாருங்க. மாத்திடுங்க)
//
ஆஹா, கேபிளோட தம்பிய போயி... ம்... என்ன செய்யறது? சமயத்துல ஒத்துத்தான் ஆகவேண்டியிருக்கிறது!
//
ரோஸ்விக் said...
//இன்னும் சில பெருசுங்க இருக்காங்க. தினமும் ஒரே கதையை சலிக்காம பேசிகிட்டிருப்பாங்க.//
தாத்தாக்கள் இப்போ குறைஞ்சதுல வருத்தம் இருக்கு.
இப்போ, சில இளைஞர்களே, தாத்தாக்கள் சொல்ற மாதிரி... சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காங்க... :-))
பல சமயங்கள்ல இந்த தாத்தாக்கள் பண்ணுகிற குசும்பு ரொம்ப ரசிக்கத் தக்கதா இருக்கும். நல்லா சொல்லி இருக்கீங்க...
//
நன்றி தம்பி!
//
அண்ணாமலையான் said...
நல்லா சொன்னீங்க,....
//
நன்றிங்க... வரவில் ரொம்ப சந்தோஷம்...
//
அன்புடன் மலிக்கா said...
அந்தகாலம் என்றாலும் அசத்தல்காலமாக இருக்கும்
இந்தகாலம்
என்னத்தசொல்ல..
நல்லயிருக்க்கு பிரபாண்ணா
//
நன்றிங்க சகோதரி!
//
நாஞ்சில் பிரதாப் said...
//'உத்தது சொன்னா அத்தது பொருந்தும்'னு //
பிரபாண்ணே இதுக்கும் அர்த்தம் என்னன்னு நீங்க கடைசிவரை சொல்லவே இல்ல... :)
நீங்க முதல்ல சொன்ன பெருசு கதை உண்மைதான்... லொள்ளு பிடிச்சு பெருங்க நிறைய பாத்திருக்கேன்....
//
தனியா மெயில்ல சொல்லட்டுமா?
//
க.பாலாசி said...
//இன்னிக்கு பசங்க வேறமாதிரி இருக்காங்க. நம்ம வாண்டு 'அப்பா தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியலப்பா!//
அப்டியே அப்பா மாதிரி....
நமக்கு எந்த தாத்தாவும் கதையெல்லாம் சொல்லலீங்க....
//
அதெல்லாம் கடந்த பத்து வருஷத்துல காணாம போயிடுச்சி இளவல்...
ஒரே கதைன்னாலும் சலிக்காத அளவுக்கு சொல்லற திறமை அவங்களுக்கு இருந்துச்சுங்க... எத்தனை அனுபவங்கள் அவர்களுக்கு... இந்த கால குழந்தைகளுக்கு குடுத்து வைக்கலைன்னு தான் நான் சொல்லுவேன்... இப்பவும் தாத்தாக்கள் கதைகள் சொல்ல தயாரா தான் இருப்பாங்க ஆனா குழந்தைகளுக்கு தான் பொறுமை இல்லைன்னு நினைக்கறேன்... நல்ல இடுகை... நம்மை சுத்தி இருந்த பெரியவங்களை நினைவு கூற வைச்சுட்டீங்க.
//ராசுக்குட்டி said...

ரொம்ப நன்றிங்க! ஜெனெரேசன் கேப்... நாம ஒன்னும் செய்ய முடியாது!
எங்க ஊரு பெரிசுகளைப்பத்தி நினைக்க வைச்சுட்டீங்களே.பெரிசுகளோட கெட்ட கமேண்டுகளை ரசிக்கவே எங்க ஊரில் ரசிகர் மன்றம் வளச்சுட்டோமில்லோ.
//தாராபுரத்தான் said...
எங்க ஊரு பெரிசுகளைப்பத்தி நினைக்க வைச்சுட்டீங்களே.பெரிசுகளோட கெட்ட கமேண்டுகளை ரசிக்கவே எங்க ஊரில் ரசிகர் மன்றம் வளச்சுட்டோமில்லோ.
//
அதையெல்லாம் எழுத வெக்கமா இருக்குங்கய்யா... உங்க முதல் வருகைக்கு நன்றி....
இன்றைய தலைமுறை இழந்தது ஏராளம். நாளைய தலைமுறை பற்றி நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. :((
//
துபாய் ராஜா said...
இன்றைய தலைமுறை இழந்தது ஏராளம். நாளைய தலைமுறை பற்றி நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. :((
//
ஆம் ராஜா! நம் செல்வங்களுக்கு முடிந்த அளவுக்கு அறிவுறுத்துவோம். அன்பிற்கு நன்றி...
Post a Comment