சாவியாடிய மனசு...

|

அப்போது படித்து முடித்து வேலையில்லாமல் சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்.

ஊருக்கு வந்த போது என் சித்தியின் நாத்தனார், எனக்கு அத்தை முறை, உடல்நலம் குன்றி இறந்த தகவலைச் சொல்லி போய் பார்த்து விசாரித்து வர சொன்ன அன்னையின் ஆணைக்காக, எனது நெருங்கிய நண்பர், வயதில் மூத்த மாமாவிடம் பைக்கை கேட்டு வாங்கி கிளம்பும் சமயத்தில் எனது உயிர் நண்பன் மணி வந்தான்.

அவன் 'ஆத்தூர் செல்கிறாயா' எனக் கேட்க இல்லையில்லை என விவரத்தை சொல்ல, 'என்னை தலைவாசலில் இறக்கி விட்டுவிடு அங்கிருந்த ஆத்தூர் போய்க்கிறேன்' எனச் சொன்னான்.

துணைக்காச்சு என அவனையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினேன். ஊர் தாண்டியவுடன் மணி வண்டியை ஓட்டுகிறேன் என சொல்ல, 'ஓட்ட தெரியும்ல மணி' என சந்தேகமாய் கேட்க, 'என்னய்யா இப்படி கேட்டுட்ட, அருமையா ஓட்டுவேன்' என சொல்லி ஓட்ட ஆரம்பித்தான்.

கொஞ்சம் தூரம் பேசிக்கொண்டே வண்டியை ஓட்டி வர, வழியில் ஒரு கிராமத்தின் வழியே செல்லும் போது திடீரென ஒரு பன்றிக்கூட்டம் சாலையில் வருவதை கவனிக்காமல், வண்டியை அவற்றின் மேல் விடாமல் எவ்வளவோ முயன்றும் கடைசியில் ஒரு பன்றிக்குட்டியின் மேல் விட்டுவிட்டான். முன்னால் வீல் மேலே ஏறி அடிபட்டாலும் பலமாய் கத்திக்கொண்டு ஓடி விட்டது.

மணி, சப்தம் கேட்டு யாரும் பார்ப்பதற்குள், வண்டியை விரட்டி ஊரைத்தாண்டினான். வெலவெலத்துப்போய், 'என்ன மணி இப்படி பண்ணிட்டே' என கேட்டதற்கு,

'திடீர்னு வந்தா நான் என்ன பண்றது, என்னால ஓட்ட முடியாது நீயே ஒட்டு என என்னிடம் கொடுத்துவிட்டான்.

'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, எனக்கு பயமா இருக்கு, இன்னிக்கு என்ன ஆகுமோ' என சொல்ல, கோபமான அவன்,

'என்னய்யா, இவ்வளவு படிச்சிருக்க, கொஞ்சம் கூட அறிவே இல்ல?, சொல்றவன் ஆயிரம் சொல்லுவான், நமக்கு புத்தி வேணும்' என லெக்சர் அடிக்க ஆரம்பித்தான்.

'சரிப்பா போதும் ஆள விடு' என சொல்லி அவனை தலைவாசல் பஸ் ஸ்டாண்டில் விட்டுவிட்டு கொஞ்ச தூரம்தான் சென்றிருப்பேன், வண்டி கிறுக்க ஆரம்பித்தது.

பின் டயர் பங்க்சர். நல்ல வேளையாய் அருகிலேயே பஞ்சர் கடை இருக்க, தள்ளிச்சென்று இருந்த முப்பது ரூபாயில் பத்தை அழுது, சரிசெய்து கிளம்பினேன்.

கிராமச்சாலையென்றாலும் நன்றாக இருக்க வண்டியை சரியான வேகத்தில் வண்டியினை விரட்ட காற்றாய் பறந்தது. சிறு சிறு மேடுகளில் வண்டி தூக்கிப்போட அது குதிரையில் செல்கிறார்போல் இருந்தது (குதிரையில் சென்ற அனுபவம் இருக்கிறதா என கேட்காதீர்கள், படித்ததுதான்).

வண்டியை சித்தியின் வீட்டில் நிறுத்தி ஆஃப் செய்வற்கு கையை வைத்தால் பக்கென்றிருந்தது. சாவி இல்லை, வந்த வேகத்தில் எங்கோ விழுந்திருந்தது.

வண்டியின் முதல் சாவியை முதலிலேயே தொலைத்த புண்ணியவான் நான் தான். அப்போது ஒன்றும் சொல்லாமல், 'விடு பரவாயில்லை' என சொல்லி இருந்த மாற்று சாவியை தந்து உபயோகப்படுத்த சொன்னார்.

இப்போது மீண்டும் தொலைத்து மாமாவின் நம்பிக்கைக்கே உலை வைத்த மாதிரி ஆயிற்றே என நினைக்கும்போதே பதைத்தது. சித்தி வீட்டில் எல்லோரும் என்னை வாவென வரவேற்க, தலையை கடமைக்கு ஆட்டி இதோ வருகிறேன் என தம்பியை அழைத்துக்கொண்டு இருவரும் வண்டியில் ஆளுக்கொரு பக்கமாய் பார்வையை செலுத்தி தலைவாசல் வரை சென்று பார்த்தும் கிடைக்கவில்லை.

இருந்த ஓர் கடையில் விசாரித்ததற்கு வண்டியின் எல்லா பூட்டுக்களையும் மாற்ற வேண்டும் என சொல்லி அதற்கு ஆகும் செலவினை தோராயமாய் சொல்லி புளியை கரைத்தார்கள். செலவுக்கே வீட்டில் காசு வாங்கி சமாளிக்கும் அந்த சமயத்தில் நிஜமாய் அழுகை அழுகையாய் வந்தது.

திரும்ப சென்று அத்தை இறந்த துக்கத்தை விசாரிக்க செல்லும்போது சாவி தொலைந்த துக்கம் மேலோங்கி நிற்க, என்னை பார்த்து அத்தை வீட்டில் எல்லோரும் அழ நானும் வெடித்து அழ ஆரம்பித்தேன்.

'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம், தான் ஆடுலன்னாலும் சதை ஆடுது பாரு' என்று ஒரு பாட்டி சொன்னது சாவியாடிய என் மனசுக்குள் கேட்டது...

42 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???

ஈரோடு கதிர் said...

//'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம்,//

அத்தைக்கு பொண்ணு இல்லையோ

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???
ரிபீட்டேய்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ அத்தைக்கு பொண்ணு இல்லையோ/

இதுக்கும் ரிபீட்டேய்.

அழகு நிலவன் (Azahgu Nilavan) said...

மாமாகிட்ட வாங்குன டோஸ் பத்தி சொல்லவயில்ல

மந்திரன் said...

//சாவியாடிய என் மனசுக்குள் கேட்டது... //
வார்த்தை பிரயோகம் அருமை

/ அத்தைக்கு பொண்ணு இல்லையோ/

கண்ணா பின்னவென்று repeat செய்கிறேன்

vasu balaji said...

ங்கொய்யால. தலைவாசல் தாண்டிதான பங்சர் ஆனது. அப்புறம் எதுக்கு தலைவாசல் வரைக்கும் சாவி தேடிட்டு போறது. ஆத்தூருல பெட்ரோல் கிணறு இருக்கோ? வெண்ண!

பிரபாகர் said...

//
ஈரோடு கதிர் said...
//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???
//
ஹி...ஹி..

//
ஈரோடு கதிர் said...
//'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம்,//

அத்தைக்கு பொண்ணு இல்லையோ
//
அப்போ எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்ச்சி கதிர்!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...

//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???
ரிபீட்டேய்
//

நன்றிங்கய்யா!

//
வானம்பாடிகள் said...
ஈரோடு கதிர் said...

/ அத்தைக்கு பொண்ணு இல்லையோ/

இதுக்கும் ரிபீட்டேய்.
//
இதுக்கும் ஒரு தனி நன்றிங்கய்யா!

பிரபாகர் said...

//
அழகு நிலவன் said...
மாமாகிட்ட வாங்குன டோஸ் பத்தி சொல்லவயில்ல
//
அது இன்னொடு தனி இடுகையில... நன்றி நண்பா!

//
மந்திரன் said...
//சாவியாடிய என் மனசுக்குள் கேட்டது... //
வார்த்தை பிரயோகம் அருமை

/ அத்தைக்கு பொண்ணு இல்லையோ/

கண்ணா பின்னவென்று repeat செய்கிறேன்
//
நன்றி மந்திரன், அன்புக்கு கருத்துக்கு!

பிரபாகர் said...

//
வானம்பாடிகள் said...
ங்கொய்யால. தலைவாசல் தாண்டிதான பங்சர் ஆனது. அப்புறம் எதுக்கு தலைவாசல் வரைக்கும் சாவி தேடிட்டு போறது. ஆத்தூருல பெட்ரோல் கிணறு இருக்கோ? வெண்ண!
//
அய்யா, தலைவாசல் தாண்டின்னா ரொம்ப தூரமில்ல, கொஞ்ச தூரம்தான். அதனாலதான் கடை பக்கத்துலயே இருந்துச்சி. ரெண்டாவது வண்டிய ஸ்டார்ட் பண்ணின இடம் வரைக்கும் தேடினோம், அதனால்தான். நன்றிங்கய்யா!

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல நகைச்சுவை.....

புலவன் புலிகேசி said...

//ஈரோடு கதிர் said...

//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???
//

ஹா ஹா ஹா

எவ்வளவு பாசம் உங்களுக்கு

க.பாலாசி said...

எங்கப்பத்தாலும் காமடியாவே இருக்கே... காமடி வாரமோ???....

//அழகு நிலவன் said...
மாமாகிட்ட வாங்குன டோஸ் பத்தி சொல்லவயில்ல//

அட நீங்கவேற உண்மையெல்லாம் சொல்லமுடியுமா?

தராசு said...

சும்மா இருங்க தல,

அத்தை பொண்ணுமுன்னால கெத்தா போY இறங்கணும்னு தான வண்டி எடுத்துட்டு போனீங்க,

ஆனா, பாவம், பண்ணி பல்பு குடுத்துடுச்சோ.

Paleo God said...

//வண்டியின் முதல் சாவியை முதலிலேயே தொலைத்த புண்ணியவான் நான் தான்.//

// அப்போது ஒன்றும் சொல்லாமல், 'விடு பரவாயில்லை' என சொல்லி இருந்த மாற்று சாவியை தந்து உபயோகப்படுத்த சொன்னார்.//

இது வேறையா..::))

வண்டிய funny யா விட்டாலும் பன்னி மேல விட்டாலும் எதுவேனா ஆகலாம் வண்டிக்கும், நமக்கும், பன்னிக்கும்..:))

நசரேயன் said...

//ஈரோடு கதிர் said...

//'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம்,//

அத்தைக்கு பொண்ணு இல்லையோ
//

மறுக்க ௬விக்றேன்

நிலாமதி said...

அத்தை யின் இறப்பில் உங்க துயரமும் தீர்ந்தது ....இப்படித்தாங்க சில சமயம் மனசு ரொம்பவே உடைஞ்சு போயிடறது.எல்லாம் அவன் செயல். ...உனர்வுடன் கதை கேட்டது போல இருக்கு........

பிரபாகர் said...

//
ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல நகைச்சுவை.....
//
நன்றி ஆரூரன்...

//
புலவன் புலிகேசி said...
//ஈரோடு கதிர் said...

//'மணி பன்னி மேல விட்டா ஆகாதுன்னு சொல்லுவாங்க, //

யாருக்கு பன்னிக்கா!!!???
//

ஹா ஹா ஹா

எவ்வளவு பாசம் உங்களுக்கு
//
நன்றி புலிகேசி...

பிரபாகர் said...

//
க.பாலாசி said...
எங்கப்பத்தாலும் காமடியாவே இருக்கே... காமடி வாரமோ???....

//அழகு நிலவன் said...
மாமாகிட்ட வாங்குன டோஸ் பத்தி சொல்லவயில்ல//

அட நீங்கவேற உண்மையெல்லாம் சொல்லமுடியுமா?
//
பாலாசி, அடுத்த பகுதியில கண்டிப்பா என்ன ஆச்சுன்னு பிறகு சொல்றேன்...

//
தராசு said...
சும்மா இருங்க தல,

அத்தை பொண்ணுமுன்னால கெத்தா போY இறங்கணும்னு தான வண்டி எடுத்துட்டு போனீங்க,

ஆனா, பாவம், பண்ணி பல்பு குடுத்துடுச்சோ.
//
கெத்தா போவனும்னு நினைச்சதுதான், கம்பனி சீக்ரட், கப்சிப்... நன்றிங்கண்ணா...

பிரபாகர் said...

//
பலா பட்டறை said...
//வண்டியின் முதல் சாவியை முதலிலேயே தொலைத்த புண்ணியவான் நான் தான்.//

// அப்போது ஒன்றும் சொல்லாமல், 'விடு பரவாயில்லை' என சொல்லி இருந்த மாற்று சாவியை தந்து உபயோகப்படுத்த சொன்னார்.//

இது வேறையா..::))

வண்டிய funny யா விட்டாலும் பன்னி மேல விட்டாலும் எதுவேனா ஆகலாம் வண்டிக்கும், நமக்கும், பன்னிக்கும்..:))
//
சரிதாங்க. நல்ல விளக்கம்...

//
நசரேயன் said...
//ஈரோடு கதிர் said...

//'பிரபுவுக்கு அத்தை மேல் எவ்வளவு பாசம்,//

அத்தைக்கு பொண்ணு இல்லையோ
//

மறுக்க ௬விக்றேன்
//
நன்றிங்க நசரேயன்...

//
நிலாமதி said...
அத்தை யின் இறப்பில் உங்க துயரமும் தீர்ந்தது ....இப்படித்தாங்க சில சமயம் மனசு ரொம்பவே உடைஞ்சு போயிடறது.எல்லாம் அவன் செயல். ...உனர்வுடன் கதை கேட்டது போல இருக்கு........
//
நன்றி சகோதரி. அன்பிற்கும் கருத்துக்கும்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சோகத்தையும் நல்ல காமெடி யா சொல்ல உங்களால மட்டும் தான் முடியும் ...

Prathap Kumar S. said...

//யாருக்கு பன்னிக்கா!!!???//

ஐ கதிரண்ணே நல்லாவே டமாஷ் பண்றோங்கோ... நானும் ரிப்பிட்டேய்

பன்னியை அடிச்ச வண்டிய உடனே வித்துறுவாங்கன்னு கேள்விப்ட்டிருக்கேன். அந்த வண்டி என்னாச்சுண்ணே...

sathishsangkavi.blogspot.com said...

உங்கள பாத்ததுக்கு அப்புறம் பன்றி நிலமை.........?

ரோஸ்விக் said...

நல்ல கூத்து ராசா... ம்ம்ம்

பிரபாகர் said...

//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
சோகத்தையும் நல்ல காமெடி யா சொல்ல உங்களால மட்டும் தான் முடியும் ...
//
நன்றி ஜெய்... அன்பிற்கு கருத்துக்கு...

//
பா.ராஜாராம் said...
:-))
//
ரொம்ப நன்றிங்க...

பிரபாகர் said...

//
நாஞ்சில் பிரதாப் said...
//யாருக்கு பன்னிக்கா!!!???//

ஐ கதிரண்ணே நல்லாவே டமாஷ் பண்றோங்கோ... நானும் ரிப்பிட்டேய்

பன்னியை அடிச்ச வண்டிய உடனே வித்துறுவாங்கன்னு கேள்விப்ட்டிருக்கேன். அந்த வண்டி என்னாச்சுண்ணே...
//
இன்னுமொடு இடுகையில சொல்றேன் பிரதாப். இன்னும் பேலன்ஸ் இருக்கு.

//
Sangkavi said...
உங்கள பாத்ததுக்கு அப்புறம் பன்றி நிலமை.........?
//
ம்.. சரிதான், அதுக்கு நேரம் சரியில்ல! இந்த ஆங்கிள்ல யோசிக்கவே இல்ல!

//
ரோஸ்விக் said...
நல்ல கூத்து ராசா... ம்ம்ம்
//
நன்றி ரோஸ்விக்...

குடுகுடுப்பை said...

இன்ஸ்பையர்டு பை கலகலப்பிரியா? நல்லா வந்திருக்கு.

பிரபாகர் said...

//குடுகுடுப்பை said...
இன்ஸ்பையர்டு பை கலகலப்பிரியா? நல்லா வந்திருக்கு.
//

சரியா கண்டுபிடிச்சிட்டீங்க, கு.ஜ.மு.க தலைவர்னா சும்மாவா?

தங்கையின் இடுகை படித்தவுடன் அந்த பாதிப்பில் இதை எழுதினேன்

துபாய் ராஜா said...

எனக்கும் படித்ததும் கலகலப்ரியாவின் இடுகைதான் நினைவிற்கு வந்தது. :))

கூடவே "டேய் நரி,ஊளையிடுறா ராசா" என்று கூறி கடன் வசூல் செய்யப்போகும் கவுண்டமணியின் காமெடியும் நினைவிற்கு வர வாய் விட்டு சிரித்துவிட்டேன். :))

Unknown said...

எனக்கும் அந்த கடைசி வரி - அத்தை மேல் எவ்வளவு பாசம் - படிச்சதும் கலகலப்ரியா இடுகை தான் நினைவுக்கு வந்தது.

முதல்ல தலைப்பைப் படிச்சதும் ஏதோ புரியாத கவிதை எழுதியிருப்பாரு அப்பாலிக்க பாக்கலாம்னு விட்டுட்டேன். இப்ப உள்ள வந்தா சோக்குல்ல அடிச்சிருக்கீங்க.

ஹேமா said...

ரொம்ப பாசம்...
பிரபாவுக்கு அத்தை மேல !

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))))

பிரபாகர் said...

//
துபாய் ராஜா said...
எனக்கும் படித்ததும் கலகலப்ரியாவின் இடுகைதான் நினைவிற்கு வந்தது. :))

கூடவே "டேய் நரி,ஊளையிடுறா ராசா" என்று கூறி கடன் வசூல் செய்யப்போகும் கவுண்டமணியின் காமெடியும் நினைவிற்கு வர வாய் விட்டு சிரித்துவிட்டேன். :))
//
நன்றி ராஜா... சகோதரியின் இடுகையை படித்தவுடன் எனக்கு நடந்த ஒன்று நினைவிற்கு வர எழுதியது தான் இது...

//
முகிலன் said...
எனக்கும் அந்த கடைசி வரி - அத்தை மேல் எவ்வளவு பாசம் - படிச்சதும் கலகலப்ரியா இடுகை தான் நினைவுக்கு வந்தது.

முதல்ல தலைப்பைப் படிச்சதும் ஏதோ புரியாத கவிதை எழுதியிருப்பாரு அப்பாலிக்க பாக்கலாம்னு விட்டுட்டேன். இப்ப உள்ள வந்தா சோக்குல்ல அடிச்சிருக்கீங்க.
//
நன்றி முகிலன் உங்களின் அழகான பின்னூட்டத்துக்கு...

பிரபாகர் said...

//
ஹேமா said...
ரொம்ப பாசம்...
பிரபாவுக்கு அத்தை மேல !
//
நன்றி சகோதரி, உங்களின் ஆதரவிற்கு, அன்பிற்கு...

//
T.V.Radhakrishnan said...
:-))))
//
நன்றிங்கய்யா!

cheena (சீனா) said...

அன்பின் பிரபாகர்

பன்னி மேலே ஏத்தினா ஆகாதே - அத்த மேல எவ்ளோ பாசம் - சதையாடும் இடத்தில் சாவியாடியது - ரசிச்சுச் சிரிச்சேன்

நல்வாழ்த்துகள் பிரபாகர் -

ஆமா தலவாசல் தாண்டறதுக்குக் கூட வானம்பாடிகள் கிட்டே பர்மிஷன் வாங்கணுமா

பிரபாகர் said...

//cheena (சீனா) said...
அன்பின் பிரபாகர்

பன்னி மேலே ஏத்தினா ஆகாதே - அத்த மேல எவ்ளோ பாசம் - சதையாடும் இடத்தில் சாவியாடியது - ரசிச்சுச் சிரிச்சேன்

நல்வாழ்த்துகள் பிரபாகர் -

ஆமா தலவாசல் தாண்டறதுக்குக் கூட வானம்பாடிகள் கிட்டே பர்மிஷன் வாங்கணுமா
//
நன்றிங்கய்யா! நம்ம நலன்ல உண்மையான அக்கறை இருக்கிறவங்ககிட்ட பெரியவங்ககிட்ட வாங்கறதுல தப்பே இல்லங்கய்யா... பெருமையா நினைக்கிறேன். எழுத வந்ததின் பெருமையாய் உங்களை, வானம்பாடிகள் அய்யாவின் அன்பினைத்தான் நினைக்கிறேன்....

சாமக்கோடங்கி said...

நீங்களும் அழவில்லை, உங்கள் அத்தை வீட்டிலும் அழவில்லை, கமெண்ட் போட்டவர்கள் கூட யாரும் அழவில்லை, அனால் நான் அழுகிறேன்...

பாவம் அந்த குட்டி பன்றிக்காக... அதன் வலி எனக்கு உறைத்தது...

காமெடி'யான ஒரு அரட்டையில், கொஞ்சம் சீரியஸ்'ஆக எழுதுவதற்கு மன்னிக்கவும்.

அனாலும் உங்கள் காமெடி அருமை...

Raju said...

ஆனாலும் இவ்ளோ பாசம் அத்தை மேல ஆகாதுங்க அண்ணே.

எல்லாத்தவிட உங்க காமெடி சூப்பர் நண்பா!

//
♠ ராஜு ♠ said...
ஆனாலும் இவ்ளோ பாசம் அத்தை மேல ஆகாதுங்க அண்ணே.
//
ம்... கம்பனி சீக்ரட்! வெளிய விட வேணாம்... நன்றி தம்பி...

மதார் said...

ஆபீஸ்ல இருந்து சிரிக்க முடியல , பயத்துல ரொம்ப அழுதுடீங்களா?

கலகலப்ரியா said...

//பிரபாகர் said...

//குடுகுடுப்பை said...
இன்ஸ்பையர்டு பை கலகலப்பிரியா? நல்லா வந்திருக்கு.
//

சரியா கண்டுபிடிச்சிட்டீங்க, கு.ஜ.மு.க தலைவர்னா சும்மாவா?

தங்கையின் இடுகை படித்தவுடன் அந்த பாதிப்பில் இதை எழுதினேன்
//

:).. nallarukkunnaa..

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB