யதார்த்த சிரிப்புகள்...

|


கடைக்காரரும் பையனும்
ஒரு கடையில கடைக்காரர் வேலைக்கார பையன கண்ணா அத எடு, கண்ணா இவர கவனி, கண்ணா நல்லதா பாத்து கொடுன்னு சொல்லிட்டிருக்க, அந்த பையனும் துரு துருன்னு, இதோ எடுக்கறேங்கய்யா, கவனிக்கிறேங்கய்யான்னு வார்த்தைக்கு வார்த்தை அய்யா போட்டு பேச மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி ரெண்டு பேரையும் தனித்தனியா கேக்கறவரைக்கும்.
பையனை ரொம்ப மரியாதையா நடத்துறீங்கன்னு பாராட்டுனதுக்கு கடைக்காரர் சொன்னாரு, 'நீங்க வேற, அவன் எம காதகன், முட்ட கண்ணாங்கறதுல முட்டைய முழுங்கிட்டு கண்ணான்னு கூப்பிடறேன்'னு சொன்னாரு.
'அய்யா அய்யான்னு ரொம்ப பிரியமா இருக்கியே' ன்னதுக்கு பையன் சொன்னான், 'அந்த ஆளு ரொம்ப விவரமுன்னு நெனைச்சிகிட்டிருக்காரு. அய்யான்னு கூப்பிட்டாலும் மனசுக்குள்ள ங்கொய்யான்னு தான் நினைச்சுக்குவேன்' னான்.
என்ன ஆச்சு அவனுக்கு?
திடீர்னு அவனுக்கு என்னமோ ஆயிடுச்சி, வெறிச்சி வெறிச்சு பாக்குறான், யாருகிட்டயும் பேசறதில்ல, எதை கேட்டாலும் சிரிக்கிறான்... ரொம்ப பில்டப் வேணாம் மனநிலை பாதிச்சிடுச்சின்னு சுருக்கமா சொல்லுன்னு சொல்றீங்களா? சரி வெச்சுக்கோங்க.
அவனோட அப்பா பெரிய ஆளு. வெளிநாட்டுல இருந்தெல்லாம் டாக்டர வரவழைச்சி எதேதோ வைத்தியம் பண்ணினாரு. இன்னமும் சரியாகல, எப்படி ஆச்சுன்னு கண்டுபிடிக்க முடியல.
எனக்கு காரணம் தெரியும். மெதுவா உங்க காத கிட்ட கொண்டுவாங்க, உங்களுக்கு மட்டும் சொல்றேன்... அவன் பொக்கிஷம் படத்த முழுசா பாத்தான்.
(கஷ்டப்பட்டு பணம் போட்டு எடுத்த தயாரிப்பாளர் பாவம்தான், இருந்தாலும் பதிவெல்லாம் படிச்சிட்டு போஸ்டர பாக்கவே பயமா இருக்கு)

23 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

Ha...Ha....Ha.....

Last One is so nice... Hahahahaha

Raju said...

பாவம் சேரன்.
துவைச்சு தொங்கப் போடுறீங்க ஆளாளுக்கு.
:)

பிரபாகர் said...

//Last One is so nice... Hahahahaha//
நைனா,

ரசிப்புக்கு நன்றி...

பிரபாகர் said...

//துவைச்சு தொங்கப் போடுறீங்க ஆளாளுக்கு.
:)//

தம்பி துணி சுத்தமா இருந்தா, துவச்சி தொங்கப்போடனும்னு அவசியமில்ல... ரெண்டாவது, உன் பாணியில சொல்லனும்னா இது ஒரு காமெடி பீஸு....

ஈரோடு கதிர் said...

//ங்கொய்யான்னு தான் நினைச்சுக்குவேன்' //

why blood....... same blood

முதல் நகைச்சுவைக்கு சிரித்தேன்

பிரபாகர் said...

//முதல் நகைச்சுவைக்கு சிரித்தேன்//

தப்பித்தேன், படித்தவர்களில் இதுவரை ஏதாவது ஒன்றுக்கு சிரித்து விடுகிறர்கள்.

கண்டிப்பாய் இரண்டும் நன்றாக இல்லையென்றாலும் இதெல்லாம் ஒரு ஜோக்கா என சிரிப்பார்கள் என எண்ணுகிறேன் (ஆனாலும் ஒவர் நம்பிக்கைன்னு முணுமுணுக்க வேண்டாம்....)

துபாய் ராஜா said...

கலக்கல் கண்ணா!!. :))

அருமை அய்யா!!. :))

பிரபாகர் said...

//துபாய் ராஜா said...
கலக்கல் கண்ணா!!. :))//

வரவிற்கும் பகிர்வுக்கும் நன்றி...

பிரபாகர்.

கார்க்கிபவா said...

ஹிஹிஹிஹி.. இந்த பதிவ பொக்கிஷமா பார்த்துக்கொங்க..

பிரபாகர் said...

//இந்த பதிவ பொக்கிஷமா பார்த்துக்கொங்க..//

நன்றி கார்க்கி,

இந்த பின்னூட்டத்தையும்...

பிரபாகர்.

butterfly Surya said...

நல்லாயிருக்கு பிரபா.

சொந்த ஊருக்கே போகிற வரைக்கும் பதிவர்கள் சேரனை விட மாட்டாங்க போல இருக்கே..

போட்டு தாக்குங்க...

பிரபாகர் said...

நன்றி சூர்யா...

நம் பார்வையில் ஒரு நல்ல இயக்குனர் வீணாக, வீணாக்கிகொண்டிருக்கிறாரே என்னும் ஆதங்கத்தில் எழுதப்பட்ட நகைச்சுவை இது.

க.பாலாசி said...

//அய்யான்னு கூப்பிட்டாலும் மனசுக்குள்ள ங்கொய்யான்னு தான் நினைச்சுக்குவேன்' னான்.//

ஹா..ஹா...முடியல...

அருமையான நகைச்சுவை பதிவு அன்பரே.

எனக்கென்னவோ பொக்கிஷம் பட போஸ்டருல்லாம் நல்லதான் இருக்குன்னு தோணுது. ஆனா படம்தான்.....

பிரபாகர் said...

//நல்லதான் இருக்குன்னு தோணுது. ஆனா படம்தான்.....//

பாலாஜி...

பொக்கிஷம் படத்த எல்லாரும் ஓட்டறத பாத்துட்டு (நம்மளயும் சேத்து), பாக்கனும்னு கூட எண்ணம் வருது பாலாஜி... உங்களின் கருத்துக்கு நன்றி.

பிரபாகர்.

தினேஷ் said...

ரெண்டாவது ஹி ஹி ஹி

முதல்ல உண்மை . காதால் கேட்பது பொய்.

டிட்டிட்டிங்

பிரபாகர் said...

//சூரியன் said...

முதல்ல உண்மை . காதால் கேட்பது பொய்.

டிட்டிட்டிங்//


நிஜம்தான் சூரியன்...

இனிக்க இனிக்க பேசுபவர்கள், பின்னால் பேசுவதை கேட்டால் மயக்கமே வந்துவிடும்.

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி...

நாகராஜன் said...

ங்கொய்யா சூப்பருங்கோவ்...

நல்லா தான் ஓட்டறீங்க சேரனை... பாவங்க.

பிரபாகர் said...

//ங்கொய்யா சூப்பருங்கோவ்... //

நன்றி ராசுக்குட்டி...

//நல்லா தான் ஓட்டறீங்க சேரனை... பாவங்க.//

சேரனை விட படம் பாத்துட்டு புலம்புன சில அன்பு உள்ளங்கள நினச்சேன், எழுதிட்டேன் மனசுக்கு கஷ்டமா இருந்தாலும்...

நிகழ்காலத்தில்... said...

முதல் நகைச்சுவை அருமை :)))

பிரபாகர் said...

// நிகழ்காலத்தில்... said...
முதல் நகைச்சுவை அருமை :)))//

வரவிற்கும், உங்களின் அன்பிற்கும் நன்றி...

நாகராஜன் said...
This comment has been removed by the author.
நாகராஜன் said...

பிரபாகர்,

என்ன ஆச்சு? ஆளையே காணோம்... பார்த்து பத்து நாள் ஆக போகுது... நல்லா இருக்கீங்க தானே?

Information said...

ஒரே சிரிப்பா வருது

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB