ஒரு தகவலும் எங்கேயோ கேட்டதும்...

|

ஒரு தகவல்



என்னை வாசிக்கும் உள்ளங்களுக்கு வணக்கம். கடந்த இருபது நாட்களாக ஏதும் எழுதவில்லை எனது வாழ்வில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வினால்.


ஆம், மனைவியை இழந்து இரு குழந்தைகளுடன் தனியனாய் திக்கற்று இருந்த நான், கடந்த இருபத்து மூன்றில் மணமுடித்து , இரு புதிய உறவுகளுடன் புது வாழ்வை துவக்கியிருக்கிறேன்.


வாழ்த்திய உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்கி எனது பதிவுலக வாழ்க்கையை புதுப்பொலிவோடு தொடர்கிறேன், வழக்கம்போல் உங்களின் அன்பான ஆதரவை எதிர்நோக்கி....


எங்கேயோ கேட்டது - போட்டி சாமியார்கள்...


ரெண்டு சாமியாருங்க இருந்தாங்க. எத பண்ணினாலும் காப்பியடிச்சு பண்றதுதான் ரெண்டு பேருகிட்டயும் உள்ள வழக்கம், விஜய் டி.விய கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம காப்பியடிக்கிற, சகா அவரோட பதிவுல சொன்ன மாதிரி கொஞ்ச காலம் கேப்டன் புகழ் பாடிய, சன் டிவி மாதிரி.


உதாரணம் தலைய சுத்தினானும், ரெண்டு பேருகிட்டேயும் உள்ள போட்டி எல்லா சாமியாருங்ககிடேயும் பிரசித்தம்.


மொத சாமியாரு கடவுளை நோக்கி வரம் கேட்டு அகோர தவம் செய்ய ஆரம்பிக்க, கேள்விப்பட்ட ரெண்டாவது சாமியாரும் அதே மாதிரி ஆரம்பிச்சாரு.


கடவுள் மனமிறங்கி மொத ஆளுகிட்ட 'பக்தா உங்களின் தவத்தை கண்டு மெச்சினோம். ரெண்டு பேரும் என்னை நோக்கி தவமிருந்தாலும் முதலில் ஆரம்பித்தது நீங்கள்தான் என்பதால் முதலில் உமக்கு காட்சி தந்தேன், என்ன வேண்டும் உமக்கு' ன்னு நைசா கோத்து விட்டாரு.


சொன்னத வெச்சி, ஆகா அடுத்து நம்மோட வைரிகிட்ட போகப்போறாரான்னு நினைச்சிட்டு,


'கடவுளே அவரு கேக்கறத விட எனக்கு இரு மடங்கு கொடுத்தா போதும்' னு சொல்லிட்டாரு.


சிரிச்சிகிட்டே, 'தந்தேன் பக்தா' ன்னு சொல்லிட்டு அடுத்த ஆளுக்கு காட்சியளிச்சாரு.


'பக்தா உங்களின் தவத்தை கண்டு மெச்சினோம். இப்போதுதான் மற்றவருக்கு வரமளித்து வந்தேன், உமக்கு என்ன வரம் வேண்டும் கேளுங்கள்' னு கேட்க,


'கடவுளே மொதல்ல அவரு என்ன கேட்டாருன்னு சொல்லுங்க' ன்னு கேட்க,


கடவுள் சொன்னதும் பட்டுனு, 'சாமி எனக்கு ஒரு காதும், ஒரு கையும் விளங்காம போயிடனும்' னு கேட்டாரு.


ஒரு முன்னோட்டம்...


அடுத்த பதிவு 'பேயை பார்த்த கதை'. புதுசா கல்யாணம் பண்ணின அனுபவம்னு நினைக்காதீங்க... சின்ன வயசுல நடந்த ஓர் உண்மை சம்பவம்.


'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த.....'

21 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Raju said...

சாமியார் கதை எங்கயோ கேட்டதுதான்.
Welcome Back Thala...!
:-)

பிரபாகர் said...

//ராஜு ♠ said...
சாமியார் கதை எங்கயோ கேட்டதுதான்.
Welcome Back Thala...!//


டக்ளசு ராஜுவாவே மாறியாச்சா? ரொம்ப நல்லா இருக்கு...

அதனால தான் எங்கேயோ கேட்டது....

தேங்க்ஸ் தம்பி...

ஈரோடு கதிர் said...

புது மாப்ள... வாழ்த்துகள்

அந்த கருப்பு பனியனைப் பார்த்தாலே புது மாப்ள லுக் பக்காவா தெரியுது...

//புதுசா கல்யாணம் பண்ணின அனுபவம்னு நினைக்காதீங்க...//

பிரபா,
வீட்டுல பிளாக் படிக்கிறாங்களா...

சரி... உங்களுக்கான ஆப்பை நீங்களே தேடிக்கிறீங்க...

இஃகிஃகி

கார்க்கிபவா said...

vaazthukala sagaa..

பிரபாகர் said...

//பிரபா,
வீட்டுல பிளாக் படிக்கிறாங்களா...//

நன்றி கதிர்.

முதல்ல படிக்கிறது அவங்க தான். ஆரம்பத்துல ஒன்னும் சொல்லல போகப்போக பார்ப்போம்..

பிரபாகர் said...

//கார்க்கி said...
vaazthukala sagaa..//

நன்றி கார்க்கி.

ஜெட்லி... said...

//கடவுள் சொன்னதும் பட்டுனு, 'சாமி எனக்கு ஒரு காதும், ஒரு கையும் விளங்காம போயிடனும்' னு கேட்டாரு.
//

இதாங்க தமிழன் ...

பிரபாகர் said...

//ஜெட்லி said...
//கடவுள் சொன்னதும் பட்டுனு, 'சாமி எனக்கு ஒரு காதும், ஒரு கையும் விளங்காம போயிடனும்' னு கேட்டாரு.
//

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஜெட்லி...

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திட வாழ்த்துகள்

பிரபாகர் said...

//ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
தங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்திட வாழ்த்துகள்//

செந்தில்வேலன்... உங்களின் மேலான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...

ARV Loshan said...
This comment has been removed by the author.
ARV Loshan said...

வாழ்த்துக்கள் நண்பா..

கதை கேள்விப் பட்டது தான்.. ஆனால் உதாரணம் தான் ஹைலைட்

பிரபாகர் said...

//LOSHAN said...
வாழ்த்துக்கள் நண்பா.. //

நன்றி LOSHAN ...உங்களின் அன்பான வாழ்த்துக்கும் கருத்துக்கும்....

மணிகண்டன் said...

My wishes for a great married life prabakhar.

மணிகண்டன் said...

இதே சாமியார் கதைல பல variation படிச்சி இருக்கேன். ரெண்டாவது ஆளு லைட்டா ஹார்ட் அட்டாக் வரணும்ன்னு வேண்டிப்பாருன்னு ! (முதல் ஆளுக்கு டபுள் லைட்டா வருமா, இல்லாட்டி இவரை விட அதிகமா வருமா ??)

பிரபாகர் said...

மணி,

வாழ்த்துக்கு நன்றி.

உங்களை மீண்டும் பின்னூட்டத்தில் பார்ப்பதில் அளவு கடந்த சந்தோஷம். உங்களைப் பற்றி கேபிள் அண்ணாவை சந்திக்கும்போது விவாதித்தோம்...

லைட் ஹார்ட் அட்டாக், ஒரு காலும் கையும் என பல வெர்சன் இருந்தாலும் ரொம்ப பாதிக்க கூடாதுன்னு, கையும் காதோட மாத்திட்டேன். உங்களின் தொடர்பு என் அல்லது மெயில் முகவரியை தாருங்களேன்.

துபாய் ராஜா said...

புதுவாழ்விற்கு வாழ்த்துக்கள்.

தல,நீங்களும் பேய்க்கதையா...??!!

நல்லா பீதியை கெளப்புங்க.... :))

பிரபாகர் said...

வாழ்த்துக்கு நன்றி ராஜா...

ஊரில் தம்பியிடம் பேசிக்கொண்டிருந்த போதுதான் இந்த விஷயத்தைப்பற்றி நினைவு கூர்ந்தோம்... ஆகா இது சரியான விஷயமாச்சேன்னு பதிவாக்க எண்ணி இதோ முடிக்க இன்னும் கொஞ்சம் தான் இருக்கு.

நாகராஜன் said...

வாழ்த்துக்கள் பிரபாகர். நலமோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்திட வாழ்த்துக்கள்...

சாமியார் கதை எங்கேயோ கேட்டது தான்... நான் கேட்டதில், இரண்டாவது சாமியார் எனக்கு ஒரு கண் மட்டும் போகணும்னு கேட்பார்...

மீண்டும் வாழ்த்துக்கள்... உங்க முன்னோட்டமே உங்களது அடுத்த இடுகையை எதிர் பார்க்க வைக்கிறது...

பிரபாகர் said...

நன்றி ராசுக்குட்டி...

நானும் அப்படித்தான் படித்தேன். ரெண்டு கண்ணும் போய் அவர கஷ்டப்படுத்த விரும்பல.... அதான், கை, காதுன்னு மாத்திட்டேன்.

butterfly Surya said...

Sorry for late coming.

நல்லாயிருக்கு பிரபா. வாழ்த்துகள்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB