பேயை பார்த்த அனுபவம்...

|


அப்போ பத்தாவது படிச்சிகிட்டிருந்தேன். களத்துல தாத்தா நெல்லுக்கு காவலிருக்க, ராத்திரி சாப்பாடு கொண்டுபோற மாதிரி ஆயிடுச்சி.

ஆயா வழக்கமா கொடுத்தனுப்பற ஆளுங்க யாரும் இல்லாததால மகள் வழி பேரன் பாலுவ கேக்க, 'அதெல்லாம் முடியாது, ஏன் பிரபுவை போகச்சொல்லேன்'னு சொல்லவும்,

'சங்கமாரி, அது படிக்கிற புள்ள, அவன ஏன் இழுக்கிற, உனக்கு சினிமாவுக்கு காசு தரலாம்னு இருந்தேன்'னு ஆயா சொன்னுச்சி,

உடனே, 'எடுத்துட்டு போவலன்னா சொன்னேன், அரசமரத்துகிட்ட மோகினி பிசாசு இருக்கு, தொணைக்கு பிரபுவையும் வரச் சொல்லு, தனியா போனா அடிச்சிடும்' னு கேக்கவும்,

'அதெல்லாம் இல்ல, நீ போனா போ இல்ல வேற ஆளை பாத்துக்கறேன்' னு கராறா சொல்லிடுச்சி.

அதுக்குள்ள நான், 'ஆயா கொடுத்துட்டு உடனே வர்ற வேலைதானே நானும் போறேன்' னு சொல்ல, மொதல்ல மறுத்த ஆயா கடைசியா ஒத்துகிச்சி.

நெத்தியில நீறு வெச்சி, 'பாலு நீதான் தூக்கனும், பிரபுகிட்ட கொடுக்கக் கூடாது, சீக்கிரம் வந்துடனும், கண்ட கண்ட கதையெல்லாம் சொல்லக்கூடாது' னு நிறையா கண்டிஷன் போட்டு அனுப்பிச்சுச்சு.

நான் ஒம்பதாவது வரைக்கும் அம்மாவழி தத்தாகிட்ட வளர்ந்ததால சாமி, பேய் நம்பிக்கை இல்லாம இருந்தேன்.

'கல்லெல்லாம் சாமியா மண்ணெல்லாம் பூமியா... ஆடு வெட்ட சொல்லுதா கோழி வெட்ட சொல்லுதா, நட்டு வெச்ச கல்லு சாமி' ன்னு நிறைய பாட்டுங்களையும், கதைங்களையும் சொல்லியிருந்தாரு.

ஊரைத் தாண்டி மாட்டுவண்டி பாதையில போனா அரசமரம், ஒட்டினாப்ல பெரிய ஆறு, ஆத்துலேயே நடந்து தூரமா போனா கழுங்கு மேடு, அதை தாண்டி போன காடு.

வண்டித்தடத்துல போகும்போது மெதுவா ஆரம்பிச்சேன். 'மாமா, எதோ மோகினி பிசாசுன்னு சொன்னியே'.

'அதெல்லாம் பேசக்கூடாதுன்னு ஆயா சொல்லியிருக்கு, எனக்கும் இப்போ பயமா இருக்கு, காலையில சொல்றேன்' னு சொல்லிச்சி.

அரசமரத்துகிட்ட போனோம். அதுல மாடு கன்னு போட்டதும், செத்தையை வைக்கோல்ல கட்டி தொங்க விட்டிருப்பாங்க. பால் வர்ற மரத்துலதான் கட்டனுமாம்.

ராத்திரியில பாக்க விக்கிரமாதித்தன் கதையில படிச்ச வேதாளங்க தலை கீழா தொங்கற மாதிரி இருந்துச்சி. அதுவுமில்லாம பேய ஓட்டிட்டு மயிரு தாயத்தெல்லாம் சேத்து ஆணியில அடிச்சி வெச்சிருந்தது அனாவசியமா ஞாபகத்துக்கு வந்துச்சி.

அரசமரத்த தாண்டி ஆத்துல இறங்கினோம். நல்லா கும்மிடுட்டு. கதைக்குன்னு வேணும்னா அமாவாசைன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு கும்மிருட்டுல்ல, ஆன எதுத்தாப்ல எதுவும் தெரியல. ஆத்துல சல சலன்னு தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சி. நல்லா வெத வெதப்பா, ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சி.

தவளைங்க, சில்வண்டுங்க சத்தம் எல்லாம் கலந்து கொஞ்சம் அடி வயத்துல எதோ அவஸ்தையை ஏற்படுத்த முருகா, முருகான்னு சொல்லிகிட்டு விடு விடுன்னு நடக்கும்போதுதான் தூரத்துல அத பாத்தோம்.

சுமாரா ஒரு ஒன்னரை அடி உயரத்துக்கு வெள்ளையா எதோ ஒரு உருவம் கொஞ்ச தூரத்துல தெரிஞ்சது. அப்படியும் இப்படியும் லேசா ஆடிகிட்டிருந்துச்சி. டக்குனு இடத்த மாத்திகிச்சி.

'மாமா அங்க பாரு'ன்னு பயந்து போய் காமிக்க, 'பிரபு அது செத்து போன தூங்கான் கிழவாடியோட ஆவி'ன்னு சொல்லி பீதிய கிளப்புச்சி.

'தல இருக்குதா பாரு'ன்னு கேக்க, 'தெரியல' ன்னு சொன்னேன்.

'உனக்கு சரியா தெரியல, தலை இல்லாத முண்டமா இருக்குது' ன்னு சொல்லுச்சி.

அந்த உருவம் இப்போ சட்டுனு அஞ்சடி உயரத்துக்கு பெரிசா வளந்துச்சி. தல மட்டுமில்ல, காலு கையு மில்ல. புகை வேற கிளம்ப ஆரம்பிச்சுது. அதுவுமில்லாம எங்கள நோக்கி வர ஆரம்பிச்சது.

அவ்ளோதான், பிடறியில கால் பட தூக்கு போனியை தூக்கிகிட்டு ஓட ஆரம்பிச்சோம்.

'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த....., 'எப்பா நில்லுங்கப்பா, நான் தான் கோயிந்தன்' ன்னு கத்தறது கேட்டுச்சி.

'யேய், அது தூங்கான் ஆவிதான், வேற பேர்ல சொல்லி நம்மல அடிக்க பாக்குது. திரும்பி பாக்காம ஓடு' ன்னு சொல்லவும், கண்ண மூடிட்டு கழுங்குமேடு வரைக்கும் ஓடி, களைச்சி போயி திரும்பி பாத்தோம், சுவடே தெரியல.

பக்கத்துல இருந்த மோட்டார் கொட்டாயில வெளிச்சம் தெரிய கொஞ்சம் நிம்மதியாச்சு. அப்பாடா தப்பிச்சோம்னு நினைச்சிட்டே, சாமி பேர சொல்லிட்டே காட்டுக்கு பக்கமா போயிட்டோம்.

தாத்தா என்ன பாத்துட்டு அதிர்ச்சியாயிட்டு, 'நீ ஏப்பா வந்தே, உங்க ஆயா அனுப்பிச்சாளா? வந்து வெச்சிக்கிறேன்' ன்னு வாஞ்சையா மயிர கோதி விட்டாரு.

விவரத்த சொல்லவும், 'வேற எதாச்சும் பாத்து பயந்திருப்பீங்க, ஒன்னும் ஆகாது'ன்னு சமாதானப்படுத்தினாரு.

தாத்தாகிட்ட வயித்த கலக்குதுன்னு சொல்ல, 'பாலு, பிரபுவ பெராச்சி மோட்டுக்கு பக்கத்துல வெளிச்சமா இருக்கும், முன்னாலயே கூட்டிகிட்டு போ' ன்னு சொன்னாரு.

போயிட்டு வந்தப்போ, தாத்தாவோட கட்டில்ல இன்னொருத்தர் இருந்தாப்ல. வெள்ளை வேஷ்டி, பனியன், ஆளு நல்லா கருப்பு. அவரு பேசறத மெதுவா கவனிச்சோம்.

'அப்புறம் மாமா, ரெண்டு பேரு, என்னையே பாத்துகிட்டு இருந்தாங்க. எனக்கு பயமா போயிடுச்சி. எழுந்து ஒரு பீடிய பத்த வெச்சிட்டு அவங்க கிட்ட போனேன், ஓட ஆரம்பிச்சிட்டானுங்க, நான் கோயிந்துன்னு சொல்லிகிட்டு பின்னாலேயே ஓடறேன், ஒரே நிமிஷத்துல மாயமா மறைஞ்சிட்டானுங்க. கை காலெல்லாம் ஒதற, சாமி பேர சொல்லிகிட்டு இப்போதான் வந்து சேர்ந்தேன்'

தாத்தா எங்கள பாத்துட்டு, 'பிரபு, பாலு பாத்துக்கோங்க தூங்கான் ஆவிகிட்டத்தான் பேசிட்டிருக்கேன்' னாரு.

முன்னோட்டம் : அடுத்த பதிவு 'முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு'

'ஏய் சித்ரா, நிஜமா சொல்லு உனக்கு பேய் பிடிச்சது உண்மைதானா' ன்னு கேட்டேன்.


35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Raju said...

ஹா..ஹா..ஹா.
செம காமெடி தல.
அடுத்து 32 பேயா.?
ஒரு முடிவாத்தான் இருக்கீங்க போலயே..!

பிரபாகர் said...

நன்றி தம்பி.

ஒரு வாரம் இந்த மாதிரி பொழப்ப ஓட்டலாம்னு இருக்கேன்.

ஈரோடு கதிர் said...

மல மல மல மல மருதமல
அடச் சீ...

பேய் பயத்துல என்ன என்னவோ பாட்டுவருது...

சூப்பர் பிரபா...

நானும் நிறைய பேய்க்கதை கேட்டிருக்கேன்... எல்லாம் டெர்ரரா இருக்கும்

ஆனா இவ்வளவு சிரிப்பு வந்ததில்ல..

அப்புறம்
தூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா?

துபாய் ராஜா said...

அருமையான எழுத்து நடை.

நல்லதொரு அனுபவப் பகிர்வு.

நம்ம பேய் கதையெல்லாம் படிச்சீங்களா

மோகினியை கண்டேன்...
http://rajasabai.blogspot.com/2009_09_01_archive.html

முறுக்கு முனி
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_9239.html
http://rajasabai.blogspot.com/2009/09/blog-post_12.html

ஆமா,நீங்க எந்த ஊரு.. ??!!. எழுத்துலே நம்ம ஊரு வாடை அடிக்குதே... ??!! :))

துபாய் ராஜா said...

//முன்னோட்டம் : அடுத்த பதிவு 'முப்பத்திரெண்டு பேய் பிடிச்சிருக்கு'//

முப்பத்திரெண்டு பேயா.... ??!!


//ஏய் சித்ரா, நிஜமா சொல்லு உனக்கு பேய் பிடிச்சது உண்மைதானா' ன்னு கேட்டேன்.//

அப்ப மோகினியா இருக்குமோ... ??

நையாண்டி நைனா said...

இப்பவே பயமா இருக்கே.... அடுத்து... 32 பேயா.... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

க.பாலாசி said...

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் அப்டின்னு சொல்லுவாங்க...அதுபோலதான் உங்களது அனுபவமும்...சில நேரங்கள்ல இதுபோல நானும் பயந்துகிட்டு இருந்திருக்கேன்...ஒரு அனுபவ முதிர்ச்சி வந்த பிறகு நம்மள பாத்துட்டு பேய் பயப்படாம இருந்தா சரிதான்னு தோணுது...

விருவிருப்பான எழுத்துநடை இறுதியில் சிரிப்பை வரவழைக்கும் முடிவு....அருமை நண்பரே...

தினேஷ் said...

தல நான் 64 பேய்லாம் பாத்திருக்கேன் , இருந்தாலும் உங்க 32க்கு வெயிட்டிங்..

பிரபாகர் said...

//தூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா?//

இன்னும் இருக்கார். இப்போ ரொம்ப வயசாயிடுச்சு. நடை இல்லை. படுக்கையில் தான் எல்லாம். இந்தமுறை சென்றபோது பார்த்துவிட்டு வந்தேன்.

பிரபாகர் said...

//ஆமா,நீங்க எந்த ஊரு.. ??!!. எழுத்துலே நம்ம ஊரு வாடை அடிக்குதே... ??!! :))//

நன்றி ராஜா...

நம்ம ஊர் சேலம் ஆத்தூர் பக்கத்துல தெடாவூர் கிராமம்.

உங்களின் எல்லா பதிவையும் படித்து வருகிறேன்...

பிரபாகர் said...

// நையாண்டி நைனா said...
இப்பவே பயமா இருக்கே.... அடுத்து... 32 பேயா.... ஆஅவ்வ்//

நன்றி நைனா...

இதுவும் ஒரு காமெடி பீஸ்தான். பேயோட்டத்துக்கு அப்புறம் நம்ம சி.பி.ஐ வேலை...

பிரபாகர் said...

//ஒரு அனுபவ முதிர்ச்சி வந்த பிறகு நம்மள பாத்துட்டு பேய் பயப்படாம இருந்தா சரிதான்னு தோணுது...

விருவிருப்பான எழுத்துநடை இறுதியில் சிரிப்பை வரவழைக்கும் முடிவு....அருமை நண்பரே...//

அன்பிற்கு நன்றி பாலாஜி. உங்களின் விமர்சனம் மிக அருமை.

ஊக்கமாய் இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...

பிரபாகர் said...

//தல நான் 64 பேய்லாம் பாத்திருக்கேன் , இருந்தாலும் உங்க 32க்கு வெயிட்டிங்..//
நன்றி சூரியன்.

32 பேய் என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. கேட்டவுடன் கண்ணில் நீர் வர சிரித்தேன். கொஞ்சம் பொறுங்கள்...

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்..

அடுத்த பேய் வருவதற்குள் நான் எஸ் ஆகுறேன்

ஜெட்லி... said...

சிரிப்பு போலீஸ் மாதிரி
சிரிப்பு பேயா???...
நடக்கட்டும்

பிரபாகர் said...

//அடுத்த பேய் வருவதற்குள் நான் எஸ் ஆகுறேன்//

நன்றி சகா...

ஒன்ன எழுதினா வரிசையா நிறைய ஞாபகம் வருதில்ல...

பேயோட்டுவதை பற்றி ஒரு அனுபவம் சகா அடுத்து...

பிரபாகர் said...

//சிரிப்பு போலீஸ் மாதிரி
சிரிப்பு பேயா???...
//

நன்றி ஜெட்லி...

பெரும்பாலான பேய் கதைகளை ஆராய்ந்தோமென்றால் ஏதொ ஒரு காமெடியான காரணம் இருக்கும் நண்பா....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//'பயத்துல நாங்க பயந்து ஓட, பின்னாலேயே எங்களை துரத்த....., 'எப்பா நில்லுங்கப்பா, நான் தான் கோயிந்தன்'ன்னு கத்தறது கேட்டுச்சி.//
சூப்பர் ...
//தூங்கான் ஆவி... ச்சீ கோவிந்தன் நல்லா இருக்காரா?//

அன்பு


நிஜமா நீங்க சூப்பெர் மனிதர் தான் பிரபா சார்

பிரபாகர் said...

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி கிருஷ்ணா...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சார் அது என்ன?
//36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்.

மணிகண்டன் said...

புது மாப்பிள்ளை இந்த தலைப்புல எழுதறது ரொம்பவே ஓவர்.

நாகா said...

கோயிந்து பயங்கரமான பேயா இருப்பாரு போலிருக்கே :)

பிரபாகர் said...

// krishna said...
சார் அது என்ன?
//36 வயதான(மனதால் 27 மட்டும்)இளைஞன்//

இன்னமும் உங்களை மாதிரி யூத்துனு சொல்லிக்கிறதுக்குதான்....

பிரபாகர் said...

//
மணிகண்டன் said...
புது மாப்பிள்ளை இந்த தலைப்புல எழுதறது ரொம்பவே ஓவர்//

அப்படியில்ல மணி, முதல்ல மாதிரி வலையில் உலாவ முடியல. நேரப் பற்றாக்குறை. தண்ணியடிக்கிறவங்க கூட போயிட்டு ஸ்னாக்ஸும் கோக்கும் சாப்பிடறதில்லயா? அது மாதிரி சந்தோஷத்தில பேயப்பத்தி எழுதறேன்...

பிரபாகர் said...

//நாகா said...
கோயிந்து பயங்கரமான பேயா இருப்பாரு போலிருக்கே :)//

நல்வரவு நாகா...

அடுத்த பதிவுல வர்றத பாருங்க... டரியலா இருக்கும்...

நாகராஜன் said...

ஹா ஹா ஹா ஹா... இதுவே ஒரு டரியலா இருக்கு... அடுத்த பதிவு இதுக்கும் மேலே ஒரு டரியலா? கலக்குங்க நீங்க பிரபாகர்...

நல்லா சூப்பரா இருந்துச்சுங்கோவ்... பின்னங்கால் பிடரியில் பட ஓடி போனது கோயிந்துவை பார்த்துதானா... நல்ல வர்ணனை...

பிரபாகர் said...

//நல்லா சூப்பரா இருந்துச்சுங்கோவ்... பின்னங்கால் பிடரியில் பட ஓடி போனது கோயிந்துவை பார்த்துதானா... நல்ல வர்ணனை..//

நன்றி ராசுக்குட்டி. கிராமங்களில் பேய் சம்மந்தமான வதந்திகள் மிக அதிகம், கதைகளும் நிறைய கிடைக்கும். மாதமொருமுறை இதுபோல் ஏதாவது ஒன்றை எழுத உத்தேசம்...

chidambararajan said...

super nalla pathivu,nalla saspans keepit

பிரபாகர் said...

// chidambararajan said...
super nalla pathivu,nalla saspans keepit//

எனது பதிவில் உங்களின் முதல் கருத்துக்கு நன்றி நண்பரே!

ers said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

மணிஜி said...

நல்லாயிருக்கு பிரபா

பிரபாகர் said...

//நல்லாயிருக்கு பிரபா//

நன்றி மணிஜி...

உங்களின் பாராட்டுக்கள் என்றும் எனக்கு உற்சாக டானிக்....நன்றி மணிஜி...

உங்களின் பாராட்டுக்கள் என்றும் எனக்கு உற்சாக டானிக்....

வால்பையன் said...

தொங்குவதெல்லாம் பாம்பல்ல!

ஜோதிஜி said...

இப்போது தான் உங்கள் மொத்த இடுகை தலைப்புகளை பார்த்துக்கொண்டே வந்தேன். இந்த பேய் கதை மிக சுவாரசிய நடையில் இருந்தது. இது வரை இது போன்ற கதைகளை மட்டுமே பல இடங்களில் பல பேர்களிடம் கேட்டு இருக்கின்றேன். சந்திக்க வேண்டும் பிரபா. கடிதம் எழுதி ராஜபக்சேயிடம் சேர்க்க வேண்டும்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமையான எழுத்து. இத்தனை நாள் உங்கள் வலையத்தையறியாமல் போய் விட்டது. வலைச் சரத்திலிருந்து வருகிறேன். வாழ்த்துகள் பிரபா. உங்கள் தொடர் கதையும் ( பாகம்) படித்தேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB