சாமியாட்டம் நின்னு போச்சு...

|

பக்கத்து வீட்டு அத்தைக்கு சாமி வரும்னு என்னோட 'சாமியாட்டம்' பதிவில சொல்லியிருக்கிறேன்.நானு, அம்மா, என் தம்பி, சாமியாட்டம் அத்தை எல்லாம் வாசல்ல திண்ணையில உக்காந்து பேசிட்டு இருக்கும்போது (அப்போ இருந்த வீட்டுல திண்ணை இருந்துச்சி... இப்போல்லம் யாரு வெச்சு கட்டுறா?)


அப்போ, உடுக்கை சத்தம் பலமா கேக்க ஆரம்பிச்சுது. அம்மாகிட்ட 'என்னம்மா உடுக்க சத்தம், எதாச்சும் பேயோட்டறாங்களா?'ன்னு கேட்டேன்.


'ஆமா பிரபு, மூக்காயிக்கு பேய் புடிச்சிருக்காம், அதான்'னு சொன்னாங்க.


என் தம்பி கிண்டல 'உடுக்கை சத்தம் கேட்டாவே அத்தைக்கு சாமி வரனுமே' ன்னு விளையாட்டுக்கு சொல்ல,


'ஆமாண்டா, இப்போ ஆத்தா வர்றப்போறா!' ன்னு சொல்லிட்டு வேகமா அந்த வீட்டுக்குள்ள ஓடுச்சி.


உள்ள விட முடியாதுன்னு மூக்காயி அண்ணன் சொல்ல, 'என்னயேவாடா' ன்னு பொளிச்சுன்னு ஒரு அறை வெச்சி, தள்ளிட்டு உள்ள போச்சி.


பின்னாலயே நாங்களும் ஓடினோம். 'டேய் பூசாலி, ஊரை ஏமாத்துறியாடா?' ன்னு கேட்டுகிட்டே முன்னால போயிட்டு சாமியாட ஆரம்பிச்சுது.


இத பாத்துட்டு ஏற்கனவே பயங்கரமா பேயாட்டம் ஆடிகிட்டிருந்த மூக்காயி நிறுத்திட்டு வேடிக்க பாக்க ஆரம்பிச்சுடுச்சி.


பேயோட்டறவர அப்போதான் கவனிச்சேன், நம்ம சித்ராவுக்கு ஓட்டின அதே ஆளு, கூட கிளி, முடி கொஞ்சம் அதிகமா இருந்துச்சி.


வாழ்க்கையிலயே மொத மொதலா சாமியையும் பேயையும் ஒரே இடத்துல சமாளிச்சவரு அவராத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.


'வா ஆத்தா, வந்து உட்காரு'ன்னு சொல்ல மூக்காயி ஆட அரம்பிச்சது. சவுக்கால விசிறி, 'சும்மரு, ஆத்தாவ கவனிச்சிட்டு அப்புறமா வர்றேன்' ன்னு சொல்லவும், நல்ல புள்ளயா அமைதியாயிடுச்சி.


'சொல்லு ஆத்தா, நீ யாரு?' பூசாரி


'டேய் என்னையே தெரியலயா' சாமி


'தெரியாமத்தானே ஆத்த கெக்கறேன், சொல்லு சாமி' ன்னு பணிவா கேட்டாரு.


'நாந்தான் அங்காள பரமேஸ்வரி' சாமி


'சரி ஆத்த, ஒத்துக்கறோம், நீ சாமின்னு நம்பனும்னா ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லியாகனும்' பூசாரி.


'எனக்கே பரிச்சயாடா, உலகத்துக்கே பரிச்ச வெக்கிறவ நானு' சாமி


'அது தெரியும், பொது இடத்துல நிரூபிக்கனும்ல' பூசாரி.


'ஆமா நிரூபிக்கனும்ல' கிளி.


கடைசியா 'கேளுடா அற்ப பதரே' ன்னு சொல்லவும்


'வீரங்கி அய்யனாருக்கு சோத்துக்கை பக்கம் யாரு இருக்கா, பீச்சாங்கை பக்கம் யாரு இருக்கா? இத மட்டும் சொல்லு நான் சாமின்னு நம்பறேன்' பூசாரி.


'ம், அதெல்லாம் உங்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்ல' ன்னு சொல்ல சவுக்க எடுத்து விளாச ஆரம்பிக்க,


'அய்யோ இந்த பாவி என்னை அடிச்சே கொல்றானே' ன்னு கத்த அதுக்குள்ள தகவல் போய் அவங்களோட அம்ம வந்து பூசாலிய கன்ன பின்னான்னு திட்டிட்டு கூட்டிட்டு போயிடுச்சி.


அன்னியிலிருந்து இன்னிய வரைக்கும் அத்தைக்கு சாமி வர்றதில்ல.


அப்புறம் மூக்காயிக்கு என்ன ஆச்சுங்கறீங்கள? பேயோட்டறவர்கிட்ட புடிச்சிருக்கிறது ஐம்பது பேயின்னு சொல்லி அவங்கம்மாவுக்கு ஆப்பு வெச்சிடுச்சி.


முன்னோட்டம்:


அடுத்த பதிவு... 'எனது முதல் ரயில் பயணம்'


'பங்காளி ட்ரெயின புடிச்ச மாதிரிதான்' நான்


'ஃபர்ஸ்ட் கிளாஸ் எப்படின்னா இருக்கும்'


'கொஞ்சம் கூட அறிவே இல்ல? படிச்சவங்க மாதிரி இருக்கீங்க'ன்னாரு டி.டி.ஆர். படிச்சவங்களுக்கு நிறையா அறிவிருக்கும்னு தப்பா புரிஞ்சிருப்பாரு போலிருக்கு.


29 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹா


இந்த முன்னோட்டம் ஐடியா நல்லா இருக்கே!!!!!

பிரபாகர் said...

//துளசி கோபால் said...
ஹாஹாஹாஹா


இந்த முன்னோட்டம் ஐடியா நல்லா இருக்கே!!!!!
//

வருகைக்கு நன்றி கோபால்.... இது நமக்கு நாமே வெச்சுக்கற ஆப்பு. அடுத்து அதைத்தானே எழுதியாகனும்... கொஞ்சம் சவாலாவும் இருக்கு....

துளசி கோபால் said...

சவாலே...சமாளி

சவாலைச் சமாளிச்சு ஜமாய்(ச்சுறலாம்)

பிரபாகர் said...

//சவாலே...சமாளி

சவாலைச் சமாளிச்சு ஜமாய்(ச்சுறலாம்)
//

கண்டிப்பா, உங்களைப் போன்றோர் ஆதரவு இருந்தா எல்லாம் சுலபம்தான்...

butterfly Surya said...

good. அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்...

துளசி மேடம்.... அடுத்த முறை சிங்கப்பூர் சென்றால் பிரபாவை கண்டிப்பாக பார்க்கவும்.

very interesting person.

பிரபாகர் said...

//துளசி மேடம்.... அடுத்த முறை சிங்கப்பூர் சென்றால் பிரபாவை கண்டிப்பாக பார்க்கவும். //

நன்றி சூர்யா...

துளசி மேடமா? அறிமுகமில்லததால் ...., சாரி மேடம், உங்களுக்கு என் ஸ்பெஷல் வணக்கம்.

சூர்யா, அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

butterfly Surya said...

பிரபா...

துளசி மேடம் பற்றி மேலும் அறிய இந்த வலையில் நான் எழுதிய பதிவை பார்க்கவும்.

http://thamizhstudio.com/pathivar_bloger_1.htm

பிரபாகர் said...

//பிரபா...

துளசி மேடம் பற்றி மேலும் அறிய இந்த வலையில் நான் எழுதிய பதிவை பார்க்கவும்.//

படித்தாயிற்று, பிரம்மித்தும் ஆயிற்று. நன்றி சூர்யா... நம்மையெல்லாம் இணைக்கும் தமிழ் வாழ்க...

ஈரோடு கதிர் said...

அடங்கொன்னியா... 50ம் நெம்பர்லயுமா பஸ் ஓடுச்சு..

என்ன பிரபா... கொஞ்ச நாளா பேய் பிசாசு, காத்துக் கருப்புனு....

அப்பாடி அடுத்தது ரயிலா...
ஓகே ஓகே வெயிட்டிங்...

சீக்கிரம் பச்சைக் கொடி காட்டுங்க

பிரபாகர் said...

//அடங்கொன்னியா... 50ம் நெம்பர்லயுமா பஸ் ஓடுச்சு..//

இது பஸ் நம்பர் இல்லை கதிர்... நூத்துல பாதின்னு சொல்லியிருக்கும்னு நினைக்கிறேன்.

மிக்க நன்றி கதிர்...

துபாய் ராஜா said...

அத்தை கதை அருமை.

ஆமா தல,உங்க ஊர்ல சாமி,பேயி எல்லாருக்குமே சவுக்கடிதானா.... :))

பிரபாகர் said...

//ஆமா தல,உங்க ஊர்ல சாமி,பேயி எல்லாருக்குமே சவுக்கடிதானா.... :))
//

நன்றி ராஜா..

நாம பாத்த இடங்கள்ல அப்படித்தான் நடந்துச்சி. அதுதான் வழக்கம்னு நினைக்கிறேன்....

ட்ரிப் எப்படி இருந்துச்சி?

Raju said...

பேயையே வம்புக்குஇழுத்துட்டு இருக்கீங்க..!
அம்புட்டுதேன் சொல்லுவேன்..ஆமா.
:-)

பிரபாகர் said...

//♠ ராஜு ♠ said...
பேயையே வம்புக்குஇழுத்துட்டு இருக்கீங்க..!//

தம்பி...

இத்தோட முடிச்சிகிட்டேன்... பேய் மேட்டருக்கு ஒரு ஃபுல் ஸ்டாப்..

க.பாலாசி said...

அத்தைக்கு உண்மையா சாமி வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..சும்மா பூசாரிய பயமுறித்தியிருப்பாங்க போல...

நல்ல காமடிதான் போங்க...

பிரபாகர் said...

//அத்தைக்கு உண்மையா சாமி வந்திருக்காதுன்னு நினைக்கிறேன்..சும்மா பூசாரிய பயமுறித்தியிருப்பாங்க போல...//
தேங்க்ஸ் பாலாஜி...

சாமியட்டம் பதிவை படியுங்க

நாகா said...

//அடங்கொன்னியா... 50ம் நெம்பர்லயுமா பஸ் ஓடுச்சு..//

கதிரண்ணா, எங்கூருக்கும் பொள்ளாச்சிக்கும் 51 இப்பவும் ஓடுதுங்ணா.. ஆனா என்ன எல்லாப் பேயிங்களும் லேடீஸ் காலேஜ் வந்ததுமே எறங்கிடும் :)

//என்ன பிரபா... கொஞ்ச நாளா பேய் பிசாசு, காத்துக் கருப்புனு....//

அவ்வளவுதான் ஒரு மாசம் ஆச்சுல்ல, இனி வெளிய வந்துருவாரு :)

பிரபாகர் said...

//அவ்வளவுதான் ஒரு மாசம் ஆச்சுல்ல, இனி வெளிய வந்துருவாரு :)//

நன்றி நாகா...

அதான் வந்துட்டேன்ல... அடுத்த பதிவு ரயில் அனுபவத்த பத்தியாக்கும்...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

நல இருக்கு பிரபா சார் .அடுத்த பதிவு தலைப்பு போட்டுடீங்கன்னா யாரவது தலைப்ப திருடிட போறாங்க சார் ..

பிரபாகர் said...

//நல இருக்கு பிரபா சார் .அடுத்த பதிவு தலைப்பு போட்டுடீங்கன்னா யாரவது தலைப்ப திருடிட போறாங்க சார் ..//

பதிவுத்திருட்டுல ரொம்பத்தான் பயந்து போயிருக்கீங்க.... தலைப்புத்தானே போனா போகுது... மேட்டர் நம்மகிட்ட இல்ல இருக்கு.

நன்றி கிருஷ்ணா... வருகைக்கும் கருத்துக்கும்...

வால்பையன் said...

ஏன் உங்ககிட்ட சொல்ல முடியாதுன்னு சொல்லுச்சு அங்காளபரமேஸ்வரி!?

அங்க ஆத்தா வந்தப்ப பேய் பிடிச்சிருந்த ஆளுக்கு என்ன ஆச்சு?

பிரபாகர் said...

// வால்பையன் said...
ஏன் உங்ககிட்ட சொல்ல முடியாதுன்னு சொல்லுச்சு அங்காளபரமேஸ்வரி!?

அங்க ஆத்தா வந்தப்ப பேய் பிடிச்சிருந்த ஆளுக்கு என்ன ஆச்சு?//

நன்றி அருண், வருகைக்கும் பின்ன்னூட்டத்துக்கும்.

ரெண்டுமே பொய்யிங்கறதுதான் மேட்டரே...

ஈரோடு கதிர் said...

//நாகா said...
எங்கூருக்கும் பொள்ளாச்சிக்கும் 51 இப்பவும் ஓடுதுங்ணா.. ஆனா என்ன எல்லாப் பேயிங்களும் லேடீஸ் காலேஜ் வந்ததுமே எறங்கிடும் :)
//

இது சூப்பரோ சூப்பர் நாகா

பிரபாகர் said...

////நாகா said...
எங்கூருக்கும் பொள்ளாச்சிக்கும் 51 இப்பவும் ஓடுதுங்ணா.. ஆனா என்ன எல்லாப் பேயிங்களும் லேடீஸ் காலேஜ் வந்ததுமே எறங்கிடும் :)
//

இது சூப்பரோ சூப்பர் நாகா

//

ரெண்டு பேரும் பண்ற அழும்பு தாங்கல...

நாகராஜன் said...

சாமியாட்டம் கலக்கலுங்கோவ்... அத்தை சூப்பர்ங்க... இதே இப்போவா இருந்திருந்தால் லகலகலகலகலக-ன்னு சொல்லிருந்திருக்கலாம்...

உங்கள் இடுகை "கலகலகலகல"

பிரபாகர் said...

//ராசுக்குட்டி said...
சாமியாட்டம் கலக்கலுங்கோவ்... அத்தை சூப்பர்ங்க... இதே இப்போவா இருந்திருந்தால் லகலகலகலகலக-ன்னு சொல்லிருந்திருக்கலாம்...

உங்கள் இடுகை "கலகலகலகல"//

வழக்கம்போல் என் மனமார்ந்த நன்றி ராசுக்குட்டி..

மணிகண்டன் said...

உங்க பேயாட்டம் பதிவுகள் எல்லாமே சூப்பர் பிரபாகர் :)- சிங்கப்பூர் பேய்களை பத்தியும் எழுதுங்க.

பிரபாகர் said...

//மணிகண்டன் said...
உங்க பேயாட்டம் பதிவுகள் எல்லாமே சூப்பர் பிரபாகர் :)- சிங்கப்பூர் பேய்களை பத்தியும் எழுதுங்க//

தேங்க்ஸ் மணி...

இங்க பேயெல்லாம் வித்தியாசமா இருக்கு மணி, கன்ட்ரி வேற இல்லயா? கொஞ்சம் ஸ்டடி பண்ணனும்...(அதுக்குத்தானே இங்கே வந்திருக்கோம்னு உள் மனசு முனகுறது கேக்குதா?)

Cable சங்கர் said...

:)

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB