என் அத்தை மக சித்ரா என்ன விட ரெண்டு வயசுக்கு பெருசு. பேர சொல்லித்தான் கூப்பிடுவேன்.
காலேஜ் முடிச்சி வீட்டுக்கு வந்தப்போதான் சொன்னாங்க, சித்ராவுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு.
என்னால நம்ப முடியல. ஏன்னா சித்ரா பயங்கரமா மன தைரியம் உள்ள பொண்ணு.
காட்டுக்கு ஒரு தடவ போயிருந்தப்போ, செங்கமுள் புதர கொளுத்தும்போது, வெளியே வந்த நிறைய பாம்பு குட்டிங்கள, ஒரு பெரிய பாம்ப அடிச்சி அப்படியே நெருப்பில போட்டத கிலியா பாத்துகிட்டிருந்திருக்கிறேன்.
'தானா சிரிக்குதாம், புருஷன், மாமனார், மாமியார்னு எல்லாத்தையும் பேர சொல்லி கூப்பிடுதாம், குவார்டர், சுருட்டு எல்லாம் கேக்குதாம்' அப்படின்னு பல கதைங்கள ஆயா அழுதுகிட்டே சொல்லுச்சி.
சித்ராவ கொண்டுவந்து அவங்க அம்மா வீட்டுல அதாங்க என் அத்த வீட்டுல விட்டுட்டு போயிட்டாங்க.
இங்க வந்ததுக்கு அப்புறம் பரவாயில்ல, அடிக்கடி கத்துது, ஆவேசமா அழுவுதுன்னு புது தகவல சொன்னாங்க.
பிராக்டிகல் சமயம், கொஞ்சம் பிஸியா இருந்ததால நேர்ல போய் பாக்க முடியல.
எங்கெங்கேயோ விசாரிச்சி கடைசியா ஒரு பேயோட்டறவர பாக்க அவரு பேயோட்டறதுக்கு வெள்ளிக்கிழம ராத்திரி வர்றேன்னு சொல்லியிருக்கிறதா சொன்னாங்க.
என்னதான் நடக்குதுன்னு பாக்கனும்னு சீக்கிரமா பிராக்டிகல முடிச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
அத்த வீடே அமர்க்களமா இருந்துச்சி. எட்டு மணிக்குத்தான் பூசாரி வருவாராம்.
சித்ராவ ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் பாத்தேன். ஆளு மெலிஞ்சி போயிருந்துச்சி. முகம் பூராவும் கவலை. என்ன பாத்தா எப்பவும் நல்லா பேசும், அன்னிக்கு தீர்க்கமா மொறைச்சி பாத்துச்சி.
நானும் அத மொறைச்சி பாக்க, தலைய குனிஞ்சிகிச்சி. கொஞ்ச நேரத்துல தலை முடிய அவுத்து போட்டுட்டு அப்படியே ஆட ஆரம்பிச்சிடுச்சி.
'ஆத்தா கொஞ்சம் நேரம் பொறுமையா இரு, உன் மாமன் வர்றான் உன்ன கவனிக்க' ன்னு சொல்லிச்சி.
'மாமனா?' ன்னு குழம்ப அப்புறம்தான் பூசாரின்னு தெரிஞ்சது.
பத்து நிமிஷத்துக்கு முன்னாலயே வந்தாப்ல. 'எல்லா தயாரா' ன்னு கேட்க,
'வாட என் தே.... மவனே' ன்னு ஒரு கெட்ட வார்த்தையை சொல்லி சித்ரா, சாரி பேய் வரவேற்பு கொடுக்க,
'எங்கிட்டயே உன் வேலையை காட்டறியா, இரு நான் யாருன்னு காமிக்கிறேன்' னு சொல்லிட்டு, ஒரு சாமி படம், வெச்சி கையை கிழிச்சி ரத்ததால பொட்டு வெச்சி, எலுமிச்சம்பழம், குங்குமம், சரக்கு, சுருட்டு, தாயத்து இன்னும் பல விஷயங்களையும் எடுத்து வெச்சி, வேலைய ஆரம்பிச்சாரு.
அத்தை, ஆயா, அவரோட கிளி (உதவி செய்யற சின்ன பூசாரி?) மட்டும் தான் இருந்தாங்க. நானும் கூட இருக்கிறேன்னு சொன்னதுக்கு, படிச்ச புள்ளங்க பாக்கக்கூடாதுன்னுட்டாரு.
அத்த என்ன ஜன்னல் வழியா பாக்க சொல்லிடுச்சி. பூசாரிக்கு பின்னால இருந்து பாக்க ஆரம்பிச்சேன்.
உடுக்கைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சாரு. சத்தத்த கேட்டதும், எழுந்து நின்னு கத்திகிட்டு ஆட ஆரம்பிச்சிச்சு.
அவரு 'ஜக்கம்மா' ன்னு சொல்லிட்டு தமிழான்னு கேக்கிற ஒரு பாஷையில பாட ஆரம்பிச்சிட்டாரு.
'நீ, யாரு ஏன் இந்த பொண்ண பிடிச்சிருக்க?' ன்னு அதட்டி கேக்க,
'போடா மயிராண்டி உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல' ன்னு சொல்லிச்சி.
'ஓ, எங்கிட்டயே வேலைய காட்டறியா? எட்றா அத, பாத்துடலாம்' னு சொல்லிட்டு, கிளி கொடுத்த சவுக்கால விளாச ஆரம்பிச்சிட்டாரு.
சித்ரா இன்னும் ஆவேசமா கத்த(வலி தாங்காம?) 'அடிக்காத சொல்றேன், நாந்தான் சாந்தியோட ஆவி வந்திருக்கேன். புள்ளத் தாச்சியா இருந்த என்ன என் புருஷன் கொடுமை பத்தி சாவடிச்சான், அதான் இவ புள்ள பெக்கக்கூடாதுன்னு புடிச்சிகிட்டிருக்கேன்' னு சொல்லுச்சி.
'சரி மொத்தம் எத்தன பேய் பிடிச்சிருக்குன்னு சொல்லு' ன்னு அடுத்த கேள்விய கேட்டாரு.
'ரெண்டு பேய்டா' ன்னு சொல்லிச்சி.
'மரியாதையா சொல்லு' ன்னு சவுக்கால விளாச,
'ரெண்டு பேயிங்க சார்' னு சொல்லிச்சி.
'கிண்டலா பண்றே? உண்மையான கணக்கை சொல்லு' ன்னு கேக்க
'பதிநாலு பேயி' ன்னு சொல்லிச்சி.
'அடிக்க அடிக்கத்தான் உண்மை வருது. ம்... உண்மையை சொல்லு' ன்னு திரும்ப திரும்ப விளாச, பதினெட்டுன்னு சொல்லிச்சி. கடைசியா முப்பத்ரெண்டு பேய்' னு சொல்லவும் அடிக்கிறத நிப்பாட்டிட்டு 'சரி இந்த குவாட்டர குடி' ன்னு சொன்னாரு.
வாயிலேயே மூடிய கடிச்சி துப்பிட்டு, ஒரே மூச்சில குடிச்சிட்டு 'இன்னும் வேணும்' னு கேக்க,
'வேணுமா?' ன்னு விளாச 'அய்யய்யோ போதும்' னு சொல்லிடுச்சி.
'சரி, இந்த சுருட்ட குடி' ன்னு சொல்லவும், ஸ்டைலா பத்தவெச்சி,
'ரசினி ஸ்டைல புடிக்கிறேன்' னு சொல்லி அது ஸ்டைல்ல ஏதோ பண்ணுச்சி.
அப்புறம் நடந்ததெல்லாம் சுருக்கமா சொன்னா, பேய ஓட்டிட்டு மயிர கொஞ்சம் வெட்டி தயத்த சேத்து போன பதிவில பாத்த அரச மரத்துல போயி அடிச்சிட்டு வந்து, கோழி கறி, சரக்கு எல்லாம் சாப்பிட்டுட்டு ஒரு தாயத்து செஞ்சி கட்டிட்டு, வேஷ்டி சட்டைன்னு வாங்கிகிட்டு,
'எல்லாம் சரியாயிடுச்சி, நான் வர்றேன்' னு கிளம்பிட்டாரு.
அப்புறம் சித்ரா பழயபடி ஆயிடுச்சி, புருஷன் வீட்டுக்கும் போயிடுச்சி.
அடுத்த ஏழு மாசத்துல உண்டாகி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு வந்தப்போதான் பார்த்தேன். இப்போ நல்லா குண்டா, குழந்தைய சுமக்கிற பூரிப்புல இருந்துச்சி.
'என்னா சித்ரா, நல்லாருக்கியா? பேயெல்லாம் போயிடுச்சா?' ன்னு கேட்டேன்.
நக்கலா சிரிச்சிட்டு, 'யாருகிட்டயும் சொல்லாத, நீயும் நம்பிட்டியா?' ன்னு கேக்க,
'நம்பல அதான் கேட்டேன்' னு சொன்னேன்.
'கொழந்தையே இல்லன்னு எல்லாரும் குத்தி காட்டிகிட்டு இருந்தாங்க. அவருக்கு வேற கல்யாணம் பண்றதா பேசிட்டிருந்தாங்க. அதான் எல்லாத்தையும் ஒரு கலக்கு கலக்கிபுட்டேன்' ன்னு சொல்லுச்சி.
'சரி அதென்ன முப்பத்திரெண்டு பேய்' னு கேக்க,
'பேய்க்கு நூறு ரூபாயாம், ஒட்டறதுக்கு. கம்மியா சொல்ல சொல்ல அடி பின்னிகிட்டிருந்தான், சரி அதிகமா சொன்னாத்தான் விடுவான்னு சொன்னேன்' னுச்சி.
'ஆமா, அதென்ன 2, 14, 18, கடைசியா 32ன்னு பேய் கணக்கு' ன்னு ஞாபகப்படுத்தி கேட்டேன்.
'உனக்கு புரியலையா? நம்ம ரூட்டுல ஓடற டவுன் பஸ்ஸு நம்பருங்க' ன்னு சிரிச்சிச்சு.
'அதென்ன குறுக்க ஒரு 14, நம்ம ரூட்டுல வரலியே?'
'அது எங்க கடம்பூருக்கு வர்ற டவுன் பஸ்ஸு' ன்னு சொல்லிச்சி.
முன்னோட்டம்.
அடுத்த பதிவு, 'சாமியாட்டம் நின்னு போச்சு'
'டேய் எங்கிட்டயே கேள்வி கேக்குறியா? நான் ஆத்தாடா'ன்னு பூசாரிய பாத்து ஆவேசமா கேட்டுச்சி.
35 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//'ரசினி ஸ்டைல புடிக்கிறேன்' //
பேய் கூட ரஜினி விசிறி போல....
Congrats Prabhagar - All the best
//வாயிலேயே மூடிய கடிச்சி துப்பிட்டு, ஒரே மூச்சில குடிச்சிட்டு 'இன்னும் வேணும்' னு கேக்க,//
I am wondering how she had it Raw 180 ml in a single gulp. This is something unbelievable. That too she was acting like a abnormal person. This shows how much pressure she had due to society. As you said she is brave enough n extraordinary person so she managed the scene and made it everything.
தல நான் இதே மாதிரி ரெண்டு தடவ நேர்ல பார்த்திருக்கேன் ரெண்டும் 32 தான் , ரெண்டும் குவார்ட்டர் சுருட்டுதான்..
ஒரு வேளை நீங்க சொல்றதுதான் காரணமா இருக்குமோ..
இதுவரை நான் நம்பிட்டுல இருந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஜெட்லி said...
//'ரசினி ஸ்டைல புடிக்கிறேன்' //
பேய் கூட ரஜினி விசிறி போல..//
நன்றி ஜெட்லி...
கிராமங்களில் முன்னாளில் எம்.ஜி.ஆரும் நடுவில் ரஜினியும் இப்போது விஜய்(?)யும் பிரசித்தம்.
தம் அடிப்பதற்கு ஒரே உதாரணம் ரஜினிதான்...
//I am wondering how she had it Raw 180 ml in a single gulp. This is something unbelievable.//
நன்றி மூர்த்தி,
மற்றவர்களிடம் அங்கீகாரம் கிடைக்காதவர்கள், இது போன்ற சமயங்களில் அபரீதமாக நடந்துகொள்ளுவார்கள்...
//இதுவரை நான் நம்பிட்டுல இருந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
நன்றி சூரியன்.
காரணமின்றி காரியமில்லை என அணுகினால், எல்லாவற்றிற்கும் விடை கிடைக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.
அடப் பாவிகளா..
இப்படியெல்லாம் இருக்கா?
எங்க ஊர்ல இதுமாதிரி நிறைய தடவ பார்த்திருக்கேன்... உண்மையிலே பேய் தான் பிடிச்சிருக்கோனு நம்பிட்டனே..
ஆனா 14ம் நெம்பர் பஸ் நெம்பர் சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா
//ஆனா 14ம் நெம்பர் பஸ் நெம்பர் சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா//
நன்றி கதிர்.
கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளில் பல மிக சுவராஸ்யமாக இருக்கும்...
படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையில் அந்த பெண்ணின் அவல நிலை குறித்து மனது கணத்துப் போனது.
//படிப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் உண்மையில் அந்த பெண்ணின் அவல நிலை குறித்து மனது கணத்துப் போனது.//
நண்பா,
உங்களின் முதல் வருகைக்கு நன்றி. உங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... நல்ல உக்தியை தான் உபயோக படுத்தியிருக்காங்க சித்ரா. சாமி, பூதம், பேய் இப்படி சொன்னா தான் நமக்கு கொஞ்சம் பயம் வரும், அதை நல்லா பயன்படுத்தியிருக்காங்க...
ஆனா என்ன, நீங்க அவங்களோட பேர், மத்த விபரங்களை தவிர்த்துட்டு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு அப்படின்னு சொல்லியிருந்திருக்கலாமோ? அதுனால உங்களையும், உங்க சொந்தங்களையும் தெரிஞ்ச ஒருத்தர் இந்த இடுகையை படித்தாலும் அவங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாம போகும்... இது என்னோட கருத்து மட்டும் தாங்க பிரபாகர்... ஒரு வேளை அவங்க உங்களுக்கு சொன்ன ரகசியம் இப்போ ஊரறிந்த ஒண்ணா இருந்தா ஒரு கவலையும் இல்லை...
//மரியாதையா சொல்லு' ன்னு சவுக்கால விளாச,
'ரெண்டு பேயிங்க சார்' னு சொல்லிச்சி//
- நச்..சரியான கிண்டல்!
//ஆனா என்ன, நீங்க அவங்களோட பேர், மத்த விபரங்களை தவிர்த்துட்டு, எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு அப்படின்னு சொல்லியிருந்திருக்கலாமோ? //
ராசுக்குட்டி,
உங்களின் இளகிய மனதினையும் பெருந்தன்மையையும் காட்டுகிறது. எல்லோருக்கும் இந்த விஷயம் தெரியும். ரெண்டு பசங்க, ஹை ஸ்கூல்ல படிச்சிகிட்டிருக்காங்க... சோ, நோ பிராப்ளம்.
//velji said...
//மரியாதையா சொல்லு' ன்னு சவுக்கால விளாச,
'ரெண்டு பேயிங்க சார்' னு சொல்லிச்சி//
- நச்..சரியான கிண்டல்!//
வேல்ஜி,
உங்களின் முதல் வருகைக்கும், ரசிப்புக்கும் எனது பணிவான வணக்கங்கள்...
சான்ஸே இல்ல.. அல்டிமேட் காமெடி :)
//நாகா said...
சான்ஸே இல்ல.. அல்டிமேட் காமெடி :)
//
நாகா,
வேலைப்பளுவெல்லாம் சரியாகிவிட்டதா? கிராமத்து நிகழ்வுகளை நிறைய பதிக்க எண்ணம்... உங்களின் விமர்சனம் எனக்கு எப்போதும் உற்சாக டானிக்...
என்னடா இது புதுசா வாழ்கைய ஆரம்பிச்சிட்டு 32 பேய் பிடிச்சிருக்குன்னு ஆரம்பிச்சீங்களே..பாத்தேன்.. அப்பாடி..
அருமையா எழுதியிருக்கீங்க.. எதிர்பார்த்த முடிவுதான். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா ஒரு சிறுகதை கிடைச்சிருக்கும்.
கேபிள் சொன்னா மாதிரி ஒரு சிறுகதை ட்ரை பண்ணியிருக்கலாம் அண்ணே..!
//கொஞ்சம் மெனக்கெட்டிருந்தா ஒரு சிறுகதை கிடைச்சிருக்கும்//
நீங்க இந்த மாதிரி சொல்றதே பெரிய பரிசுண்ணா! சொல்லிட்டிங்கல்ல, கண்டிப்பா முயற்சி பண்றேன்....
//கேபிள் சொன்னா மாதிரி ஒரு சிறுகதை ட்ரை பண்ணியிருக்கலாம் அண்ணே..!//
நன்றி தம்பி, மொத தடவையா என் தம்பி லேட்டா பின்னூட்டம் போடறது இதுக்குத்தான்...
//என்ன பாத்தா எப்பவும் நல்லா பேசும், அன்னிக்கு தீர்க்கமா மொறைச்சி பாத்துச்சி.
நானும் அத மொறைச்சி பாக்க, தலைய குனிஞ்சிகிச்சி...//
அதானே எங்ககிட்டேவா ..... :))
//'மரியாதையா சொல்லு' ன்னு சவுக்கால விளாச,
'ரெண்டு பேயிங்க சார்' னு சொல்லிச்சி.
'கிண்டலா பண்றே? உண்மையான கணக்கை சொல்லு' ன்னு கேக்க
'பதிநாலு பேயி' ன்னு சொல்லிச்சி.//
நல்ல நகைச்சுவை. :)))))
//'பேய்க்கு நூறு ரூபாயாம், ஒட்டறதுக்கு. கம்மியா சொல்ல சொல்ல அடி பின்னிகிட்டிருந்தான், சரி அதிகமா சொன்னாத்தான் விடுவான்னு சொன்னேன்' னுச்சி.//
சிரிச்சி முடியல. :)))))))
//'உனக்கு புரியலையா? நம்ம ரூட்டுல ஓடற டவுன் பஸ்ஸு நம்பருங்க' ன்னு சிரிச்சிச்சு.
'அதென்ன குறுக்க ஒரு 14, நம்ம ரூட்டுல வரலியே?'
'அது எங்க கடம்பூருக்கு வர்ற டவுன் பஸ்ஸு' ன்னு சொல்லிச்சி. //
நல்லாத்தான் யோசிக்கிறாய்ங்க... :))
//அடுத்த பதிவு, 'சாமியாட்டம் நின்னு போச்சு'
'டேய் எங்கிட்டயே கேள்வி கேக்குறியா? நான் ஆத்தாடா'ன்னு பூசாரிய பாத்து ஆவேசமா கேட்டுச்சி.//
டிரெயிலரே அட்டகாசம் .
பட்டைய கெளப்புங்க தலைவா... :))
ராஜா,
உங்களின் விரிவான விமர்சனத்துக்கு எனது நன்றி. பின்னூட்டத்தில் மிக அழகாய் உங்களின் ரசனையை வெளிப்படுத்துகிறீர்கள். நண்பனாய் இருப்பதில் பெருமை அடைகிறேன். பின்னூட்டத்திற்காக அல்ல, உமது பதிவுகள் அனைத்தையும் படித்து வருகிறேன்.
இந்த வாரம் பேய். பூத வாரம்
//இந்த வாரம் பேய். பூத வாரம்//
Krishna, சாமியையும் சேத்துக்கோங்க... அடுத்த பதிவு சாமியாட்டத்தப்பத்தி.
//'நீ, யாரு ஏன் இந்த பொண்ண பிரிச்சிருக்க?' ன்னு அதட்டி கேக்க,
'போடா மயிராண்டி உங்கிட்ட சொல்லனும்னு அவசியமில்ல' ன்னு சொல்லிச்சி.//
சந்தடியில அந்த சாமியாரையும் நல்லா திட்டியிருக்காங்க.
அப்டியே அவன புடிச்சி நாலு வாங்கு வாங்கியிருந்தா நல்லாயிருந்திருக்கும்..
அடி வாங்கும் போதும் அந்த அக்காவுக்கு பஸ் நம்பரெல்லாம் ஞாபகம் வந்திருக்கு...ம் பரவாயில்ல.
சரி, எப்படி குவாட்டரு, சுருட்டுல்லாம் தைரியமா குடிச்சாங்கன்னு கேட்டீங்களா?
நல்லாருக்கு...பேய் கதைன்னா கொஞ்சம் பயம் அதனால லேட் ஆயிடுச்சு...
//சரி, எப்படி குவாட்டரு, சுருட்டுல்லாம் தைரியமா குடிச்சாங்கன்னு கேட்டீங்களா?//
நன்றி பாலாஜி...
போட்ட வேஷத்தை மெயின்டைன் பண்ணனும்ல...
அடுத்த பிளாக்கும் சாமியாட்டத்தை பத்திதான்...
நல்ல நகைச்சுவை
PEACE TRAIN,
உங்களின் முதல் வருகைக்கு நன்றி நண்பரே!
கிட்டத்தட்ட ஓரளவுக்கு உங்களை உள் வாங்கி விட்டேன்.
பெண்கள் நல்வாழ்வுக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது! பாவம்!!
Post a Comment