எங்கேயோ கேட்டது 1 - ஜீ.ரா.வும் கன்னம் வைத்த திருடனும்...

|

(இந்த கதைய என்னோட பத்து வயசுல ரொம்ப அழகா, அருமையா நிறைய நாளைக்கு சிரிக்கிற மாதிரி சொன்ன மாமாவோட ஃபிரண்டு சின்னதுரை மாமாவுக்கு எனது மனமார்ந்த நன்றி)
ஜோ.ரா மாதிரி இல்லாம ஒரு ஜீரோவா இருந்தாரு இன்னோரு ராஜா. அவர நாம ஜீ.ரான்னு வெச்சுக்குவோம்.(வேறென்ன ஜீரோ ராஜா). வழக்கம்போல அவரோட மந்திரி அதி புத்திசாலி, அதனால நம்ம ஜீ.ரா எப்படி சொதப்புனாலும் சமாளிச்சாரு.
ஒருநாள் ஒரு திருடன் ஒரு வீட்டுல கன்னம் (அதாங்க, செவுத்த ஓட்ட போட்டு திருடுறது) வெச்சி திருடறப்போ பழய செவுருங்கறதால இடிஞ்சி விழுந்து அங்கயே மண்டையை போட்டுட்டான்.
இந்த தகவல் நம்ம ஜீ.ராவுக்கு வந்து சேர, ஆளு கொதிச்சு போயிட்டாரு.
'என்ன, கன்னம் வைதது திருடும் ஒரு திருடர் தனது தொழில் செய்யும்போதே இறந்து விட்டாரா, அய்யகோ நாட்டிற்கு எவ்வளவு பெரிய இழப்பு' அப்படின்னு சத்தமா கத்த,
மந்திரி மன்னர சமாதானம் செய்யும் முயற்சில ஏதோ சொல்லப்போக, 'மதியூக மந்திரி, நீங்கள் எனது எண்ணத்தை புரிந்து பேசுபவர். இதற்கு காரணமானவர்களை உடனே தண்டிக்க வேண்டும் எனத்தானே சொல்ல வருகிறீர்கள்' என கேட்க,
சல்லி காசுக்கு உதவாத விஷயம்னு சொல்ல வந்தவரு, 'ஆமாம் மன்னா, நினைத்ததை சொல்லுவதே உங்களின் திறமை' மன்னரை பராட்டினாரு.
'இருக்கட்டும் இருக்கட்டும், அதிகமாக புகழாதீர், அந்த படுபாதக செயலை செய்தவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்' அப்படின்னு சொல்லி, ஆள அனுப்பி அந்த வீட்டோட சொந்தக்காரர இழுத்து வர சொன்னாரு.
வீடு மாதிரியே வீட்டுக்காரரும் பழசா, அதாங்க வயசாகி இருந்தாரு.
'நீர் தான் அந்த வீட்டுக்காரரோ?'ன்னு கட்டபொம்மன் மாதிரி கேட்டுட்டு,'உமது வீட்டினை சரிவர பராமரிகாமல் விட்டிருக்கிறீர்கள், திருடனின் கன்னத்தை தாங்காத சுவர் இடிந்து விழ, அந்தோ பரிதாபம், அதே இடத்தில் இறந்து விட்டார். நீர்தான் குற்றவாளி. உமக்கு விசாரணை இன்றி மரண தண்டனை விதிக்கிறேன்'
'மன்னா ஒரு விஷயம்'னு வீட்டுக்காரர் சொல்ல 'எதுவும் சொல்ல வேண்டாம், இழுத்துச் செல்லுங்கள் இந்த வயோதிகனை'ன்னு சொன்னாரு.
'மன்னா, அவர் ஏதோ சொல்ல வருகிறார், என்னவென்றுதான் கேட்போமே?'ன்னு மந்திரி சொல்ல, 'சரி சொல்லும்' என சொல்ல,
'மன்னா, வீடு என்னுடையது தான், மறுப்பதற்கில்லை, ஆனால், கட்டியது நானில்லையே?' இதில் நான் எங்கே குற்றவாளியாகிறேன்?' னு கேக்க,
ஜீ.ரா இதுவும் சரிதானேன்னு 'ஆம், நீர் சொல்வது சாலச் சரி. இழுத்து வாருங்கள் அந்த வீடு கட்டிய கொத்தனாரை' ன்னு உத்தரவு போட்டாரு.
வீடு கட்டுனவரு வந்த உடனே திரும்பவும் முன்னால சொன்னதையே மூச்சு வாங்க சொல்லிட்டு, '...இறந்துவிட்டார். எனவே நீர் வீடு கட்டியது சரியில்லை, எனவே உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' ன்னு இந்த தடவ கொஞ்சம் விவரமா கேட்டாரு.
'ஆம் மன்னா, வீடு கட்டியதில் குற்றமில்லை, மண் குழைந்து கொடுத்தவர் தண்ணிரை அதிகமாய் ஊற்றி குழைந்து கொடுத்ததால்தான் சுவர் வலுவில்லாமல் போய்விட்டது' ன்னு சொல்ல, வழக்கம்போல சே.கூ.அ.வ.சொ, மண்ண குழைஞ்சவரு வந்தாரு.
வழக்கமான வசனத்த பேசிட்டு, '...இறந்துவிட்டார். எனவே நீர் மண் குழைந்தது சரியில்லை, எனவே உனக்கு மரண தண்டனை விதிக்கிறேன். ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?' ங்கவும்
'ஆம் மன்னா, மண் குழையும்போது சல் சல் என சலங்கையோடு சிரிப்புச் சத்தம், சிலுக்கோ என திரும்பி பார்த்தேன். ஆனால் அங்கு வந்தது நமது நடனப்புயல் கருப்பாயி. அவளை பார்த்து மெய் மறந்து தண்ணிரை நிறைய ஊற்றிவிட்டேன்' னு கருப்பாய கோத்துவிட்டாரு.

ஜீ.ரா திரும்பி சேவகன பாக்க, ஆளு அவரு சொல்லறதுக்கு முன்னாலயே கருப்பாயை கூப்பிட போயிருந்தாரு.
ஜோ.ரா பெருமையா மந்திரிய பாக்க,'இந்த நாட்டில் புல் பூண்டு கூட உங்களின் மனம் புரிந்து நடக்கிறது' ன்னு பதிலுக்கு ஏத்தி விட்டாரு.
கருப்பாயி கலக்கலா நடந்து வர, பார்த்து மன்னர் பேச மறந்து மந்திரியை பாக்க, அவரு எல்லாத்தையும் சொல்லி முடிக்க, மன்னர் தொடர்ந்தாரு.
'எனவே, நீ தெருவில் மற்றோரை இம்சிக்கும் வகையில் சிரித்திருக்கிறாய்.... அதைப்பார்த்து மண் குழைபவர்... எனவே உனக்கு மரண தண்டனை அளிக்கிறேன்' னு சொல்லவும்
கருப்பாயி குலுங்கி சிணுங்கி , 'தெருவில் சிரித்தது உண்மைதான் மன்னா... ஆனால் உடன் வந்த எனது மாமா என்னை கிச்சு கிச்சு மூட்டினார், அதனால் தான்' னு சொன்னாப்ல.
கடைசியா கருப்பாயி மாமன் தான் குற்றவாளி என முடிவு செஞ்சி தூக்கு தண்டனை வழங்கிட்டாரு ஜீ.ரா.
மன்னர எதுத்து யாராலும் பேச முடியல, தலை விதின்னு எல்லாரும் நொந்துகிட்டாங்க.
ஆனா கருப்பாயி மாமாவோட நண்பருங்க ரெண்டு பேரு கொதிச்சு போயி ஏதாச்சும் செஞ்சி காப்பாத்தனும்னு முடிவு பண்ணி ராத்திரி நகர் வலம் வர்றப்போ அவரு கண்ணுல படற மாதிரி ஒரு மரத்தடியில நின்னு சத்தமா பேசிட்டாங்க.
ஜீ.ராவும் மந்திரியும் பாக்குறப்போ ரெண்டு பேரும் நாந்தான் முதல சாவேன்,இல்லையில்ல நாந்தான் சாவேன்' னு சொல்லவும் ரெண்டு பேருக்கும் ஆச்சர்யமாயிடுச்சி.
கேட்டதுக்கு, 'மன்னா இன்னிக்கி சித்திரா பவுர்ணமி, அதுவுமில்லாம இன்னிக்கு இந்த மரத்துல தூக்கில் தொங்கி சாவறவங்க என்ன நினைச்சிகிட்டு செத்தாலும் அடுத்து வர்ற ஏழு ஜன்மத்துக்கும் அப்படியே நடக்கும். நான் இந்த நாட்டுக்கு மன்னனாகனும்னு சாகப்போகிறேன், இவனும் அதற்காகவே அடம் பிடிக்கிறான்' னு சொல்ல
'என்ன மந்திரி, இது உண்மையா'ன்னு கேட்டாரு.
'ஆம் மன்னா நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், இந்த மரத்துக்கு அப்படி ஒரு விசேஷம், அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது போல் வரும்' னு அவரு பங்குக்கு தெளிச்சி விட்டாரு.
'நான் இருக்கும்போது இன்னொருவர் மன்னனாவதா? நானே தூக்கிட்டு சாகிறேன், அடுத்து வரும் ஏழு பிறவியிலும் மன்னனாகவே இருப்பேன், அப்போதும் நீர்தான் எனது மந்திரி' ன்னு சொல்லிட்டு தூக்குல தொங்கிட்டாரு, மக்களெல்லாம் நிம்மதியா வாழ்ந்தாங்க.
இதுதான் மாமா சொன்ன கதை. நாம ஜீ.ராவை அவ்வளவு சீக்கிரமா சாகடிச்சிட்டா பின்னால அவர வெச்சு கதை எழுத முடியாதுங்கறதால இதோ புது முடிவு.
மன்னன் கழுத்தில மாட்டுனதுக்கு பின்னாடி, சட்டுனு யோசிச்சி மந்திரியையும் கூப்பிட்டு 'நீரும் என்னோடு வாரும், மந்திரியாக வேண்டும் என நினத்துக்கொள்ளும், அப்போது தான் ஏழு பிறவியிலும் மந்திரியாக இருப்பீர்கள்' னு சொல்ல மந்திரி ஆடிப்போயிட்டாரு.
அப்புறமா மூனு பேரும் சேர்ந்து சக்கரவர்த்தியாக இன்னொரு யோசனை இருக்கிறதுன்னு சொல்லி, இன்னிக்கு யாரவது சாகனும் அல்லது தூக்குக்கு போறவங்க காப்பாத்தப்படனும்னு ஒரு புது கதைய விட்டு கருப்பாயி மாமாவை நைச்சியமா விடுவிச்சாங்க.
புது முடிவு எப்படி இருக்குன்னு உங்களோட பின்னூட்டத்துல சொல்லுங்க.

26 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

Joe said...

வழக்கம் போல கலக்கிட்டீங்க, பிரபாகர்!

புதிய முடிவு அருமை!

பிரபாகர் said...

// Joe said...
வழக்கம் போல கலக்கிட்டீங்க, பிரபாகர்!

புதிய முடிவு அருமை!//

ஜோ,

கொஞ்ச நாளா உங்களை காணவில்லை, பிஸி? நன்றி ஜோ, உங்களின் ஊக்கத்திற்கு.

Raju said...

\\இதுதான் மாம சொன்ன கதை. நாம ஜீ.ராவை அவ்வளவு சீக்கிரமா சாகடிச்சிட்டா பின்னால அவர வெச்சு கதை எழுத முடியாதுங்கறதால இதோ புது முடிவு.\\

நல்லாத்தான்யா அரசியல் பண்றீங்க..!
ஆனாலும் முடிவு சூப்பர்.

பிரபாகர் said...

//நல்லாத்தான்யா அரசியல் பண்றீங்க..!
ஆனாலும் முடிவு சூப்பர்.//

தம்பி அரசியல்ல இதெல்லாம் சகஜம். ராஜா சம்மந்தமா ரெண்டு வகையான கதைகளை எழுதலாம்னு இருக்கேன். ஒன்னு ஜோ.ரா - புத்திசாலி ராஜா. இன்னொன்னு ஜீ.ரா முட்டாள் ராஜா. அதனாலதான் காப்பத்தி அடுத்த கதைக்கு அட்வான்ஸ் புக்கிங் போட்டுட்டேன்.

ஈரோடு கதிர் said...
This comment has been removed by the author.
ஈரோடு கதிர் said...

//நடனப்புயல் கருப்பாயி//
இஃகி..இஃகி

//புது முடிவு எப்படி இருக்குன்னு உங்களோட பின்னூட்டத்துல சொல்லுங்க.//

ஜீ.ரா வுக்கு அட்வான்ஸ் கொடுத்திட்டீங்க...

அதே மாதிரி கரெக்டா சம்பளம் கொடுத்துடுங்க... இல்லனா உங்களுக்கு தண்டணை கொடுத்திடப்போறாரு

பிரபாகர் said...

//அதே மாதிரி கரெக்டா சம்பளம் கொடுத்துடுங்க... இல்லனா உங்களுக்கு தண்டணை கொடுத்திடப்போறாரு//

நன்றி கதிர்.

பரிசெல்லாம் விமர்சித்து வரும் பின்னூட்டங்கள் தான். உங்களின் தொடந்த அன்பிற்கும் ஆதரவிற்கும் எனது நன்றி...

இப்பொழுது இருக்கிற ஒரு சில அரசியல்வாதிகளுக்கு ஜீ.ரா பெட்டரா இருக்காரு....

Jana said...

இந்த கதையில் வரும் மன்னர் போல இன்றைய உலகிலும் பல ஜனாதிபதி, பிரதம மந்திரிகள் உள்ளனர் பிரபாகர்.
சில பொழுதுகளில் மன்னரைவிடக் கேவலமாகவும் நடக்கின்றனர்.

பிரபாகர் said...

//Jana said...
இந்த கதையில் வரும் மன்னர் போல இன்றைய உலகிலும் பல ஜனாதிபதி, பிரதம மந்திரிகள் உள்ளனர் பிரபாகர்.
சில பொழுதுகளில் மன்னரைவிடக் கேவலமாகவும் நடக்கின்றனர்.//

மிகச் சரி ஜனா... உஙகளின் வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி...

Unknown said...

வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

நையாண்டி நைனா said...

போயி..கொஞ்சம் ஜீரா தண்ணி குடிச்சிட்டு வாறேன்...

கதை அம்சம்.

கார்க்கிபவா said...

நல்லா வந்திருக்கு சகா.. அதுவும் முடிவும் சூப்பர்..

பிரபாகர் said...

//நையாண்டி நைனா said...
போயி..கொஞ்சம் ஜீரா தண்ணி குடிச்சிட்டு வாறேன்... //

ஜோரா குடிச்சிட்டு வாங்க நைனா...
ராத்திரி பேசும் போது கேபிளண்ணா 200 -ஏ ரொம்ப அதிகம்பான்னாரு, 355 வரைக்கும் போனது தெரியாம.

நன்றி நைனா...

பிரபாகர் said...

//நல்லா வந்திருக்கு சகா.. அதுவும் முடிவும் சூப்பர்..//
நன்றி கார்க்கி...

நைனா பின்னி பெடலெடுத்திருக்காரு, கொஞ்சம் அவர கவனியுங்களேன், உங்களுக்காகத்தான் வெயிட்டிங்...

நாஞ்சில் நாதம் said...

கத நல்லா வந்திருக்கு. அதுவும் ரெண்டாவது முடிவு சூப்பர்.. அடிக்கடி ஜீ.ரா கத எழுதுங்க

பிரபாகர் said...

//நாஞ்சில் நாதம் said...
கத நல்லா வந்திருக்கு. அதுவும் ரெண்டாவது முடிவு சூப்பர்.. அடிக்கடி ஜீ.ரா கத எழுதுங்க//

நன்றிங்க உங்கள் வரவிற்கும் கருத்துக்கும். கண்டிப்பாய் எழுதுகிறேன்

மண்குதிரை said...

rasiththeen

பிரபாகர் said...

// மண்குதிரை said...
rasiththeen//
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே...

கிறுக்கல்கள்/Scribbles said...

கதை நன்றாகவே உள்ளது.
என் நண்பரின் நினைவு கிள்ளுது.
வாழ்க!

பிரபாகர் said...

நன்றி மாமா...

சின்னதுரை மாமாவை சந்திக்கனும் போல் இருக்கிறது. அவரின் தொடர்பு எண்ணுக்கு ஏற்பாடு செய்யுங்கள்...

க.பாலாசி said...

//'என்ன, கன்னம் வைதது திருடும் ஒரு திருடர் தனது தொழில் செய்யும்போதே இறந்து விட்டாரா, அய்யகோ நாட்டிற்கு எவ்வளவு பெரிய இழப்பு' அப்படின்னு சத்தமா கத்த,//

Aamama... romba periya izhappulla.

Nalla azhagana pathivu. rasithu padithen. vazhthukkal anbarey. thodarndhu ezhuthungal thottu varukiren.

Nandri,
ka. balaji

பிரபாகர் said...

// vazhthukkal anbarey. thodarndhu ezhuthungal thottu varukiren. //
நன்றி பாலாஜி...

நீங்களெல்லாம் தொடர்வதால்தான் என்னால் உற்சாகமாக நிறைய எழுத முடிகிறது. ஊக்குவிப்புக்கு நன்றி...

Prapa said...

நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....
நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,
வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.

பிரபாகர் said...

பிரபா,

இதோ உங்களை என்னோடு இணைத்திருக்கிறேன், தொடர்கிறேன். படிக்க வந்து 6 மாதங்களும், எழுதத் தொடங்கி 3 மாதமும் தான் ஆகிறது. இனி, உங்களை தொடர்ந்து வாசிப்பேன், வரவிற்கு நன்றி...

நாகராஜன் said...

நல்லா இருக்குங்க பிரபாகர்... ஜோ. ரா. போலவே, இப்போ ஜீ.ரா-வும் ரொம்போ ஜோரா இருக்கறார்... இருந்தாலும் என்னமோ குறையற மாதிரி இருக்குங்களே...

எப்படியோ ஜீ.ரா-வை பிழைக்க வைச்சுட்டீங்க... ரொம்ப நல்லதா போச்சு. இல்லாட்டி மறுபடியும் மறுபடியும் அவரோட சாகசங்களை கேட்க/படிக்க முடியாம போயிருக்குமே !!!

பிரபாகர் said...

//இருந்தாலும் என்னமோ குறையற மாதிரி இருக்குங்களே... //

ராசுக்குட்டி,

எனக்கு நீங்க பின்னூட்டம் போடாத வரைக்கும், நீங்க படிக்காதது.

உங்களுக்கு என்னன்னு தெரியலயே?

நன்றி ராசுக்குட்டி. எழுதியதின் நிறைவு உங்களைப்போன்றோரின் வரவால் தான் ஏற்படுகிறது...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB