சிவாவின் பாய் பேரம்

|

இதுவும் தேனாம்பேட்டையில தங்கியிருக்கும்போது நடந்ததுதான். ரூம்ல சிவான்னு ஃபிரண்டோட ஃபிரண்டா வந்து சேந்தான். விசாரிச்சா அவனும் ஆத்துர்தான்.
கருப்பா குண்டா இருப்பான். கொஞ்சம் கூட யோசிக்காம ரொம்ப அழகா இருக்கிறதா எல்லாத்துகிட்டேயும் பீத்திக்குவான். காக்கைக்கும் தன் குஞ்சு?
அழகென்ற சொல்லுக்கு சிவா, ஆத்துர் சிவான்னு அடிக்கடி பாடி வெறுப்பேத்துவான். பாக்கறவங்கள எல்லாம் சரி ஓட்டு ஓட்டுவான்.
உதாரணமா மொத மொதலா வீட்டுக்கு வந்தப்போ என் தம்பியை பாத்துட்டு 'ஏன் இப்படி துரும்பா இளைச்சி போயிட்டிங்க' ன்னு கேக்க, அவன் ஷாக்காயிட்டான்.
ஏன்னா வாழ்க்கையிலயே கொஞ்சம் பூசுன மாதிரி இருந்தது அந்த சமயத்திலேதான். ரெண்டாவது என் தம்பிய முன்ன பின்ன சிவா பாத்ததே கிடையாது.
எற்கனவே அவன பத்தின ரெண்டு விஷயம் பேசிட்டிருந்தாங்க, என்னால நம்ப முடியல.
ஒன்னு, என் ஃபிரண்டோட அண்ணன்கிட்ட போயி அவரோட ட்வின் பிளேடு ரேசர எடுத்து பாத்துகிட்டிருந்துட்டு 'அண்ணா இதுக்குள்ள அடுத்த சேவிங்குக்கு பிளேட எப்படி போடறது' ன்னு கேட்டானாம்.
ரெண்டாவது, முறுக்கு சாப்பிட்டதுக்கு அப்புறம் அவனோட பல்லு ஒன்னு காணும்னு ஃபிரண்டுங்க சொல்லும்போது, முறுக்கோட சேத்து முழுங்கியிருப்பேன்னு சொன்னானாம்.
அவங்கிட்ட இத பத்தி கேட்டப்போ, 'ஆமா அண்ணன் எந்த அளவுக்கு இருக்காரு' ன்னு டெஸ்ட் பண்ணினேன்னு சொன்னான். ரெண்டாவதுக்கு 'ஆமா கடிச்சி முழுங்கிட்டேன்' னான்.
அப்படிபட்ட சிவா, 'கோரை பாயில படுக்கறது உடம்புக்கு ரொம்ப நல்லது, ரத்தத்தை சுத்தப்படுத்தும், நல்ல கனவா வரும், நினைச்சிகிட்டு படுத்தவங்க கனவில வருவாங்க' ன்னு நம்ம லக்கி ரேஞ்சுக்கு விளம்பரம் பண்ண (கோவிச்சுக்காதீங்க குருஜி, விளம்பரம்னாலே உங்க ஞாபகம் தான் வருது) நாங்களும் நம்பிட்டு அவனையும் அழைச்சிகிட்டு ரங்கனாதன் தெருவில பாய் வாங்க போனோம்.
சிவா எம்.பி.ஏ படிச்சிருக்கோம்ங்ற ஓவர் கான்பிடன்ட்ல ரொம்ப நல்லா பேசறதா பேசிட்டிருப்பான்.
கடைக்காரர் ஒன்னு எழுவது ரூபா சொன்னாரு. ரெண்டு வாங்கறதா சொன்னதும், உங்களுக்காக கொறச்சி நூத்தி இருபத்தஞ்சின்னாரு. அதுக்கு பின்னால எவ்வளவோ பேசியும் குறைக்க முடியாதுன்னுட்டாரு.
அப்போதான் சிவா சீன்ல வந்தான். 'என்னங்க பிரதர், அதெல்லாம் தரலாம், உங்களுக்கு கட்டுப்படி ஆகும், என் மாமா திருச்சில பாய் ஃபேக்டரி வெச்சிருக்காரு, எல்லாம் எனக்கு தெரியும் பிரதர்' னான்.
'அப்போ அங்கயே போயி வாங்கிக்க வேண்டியதுதானே?' ன்னு கடுப்பா சொல்ல அவன் அசரல.
'பிரதர், இந்த பாயோட மகிமைய பத்தி சொல்லி வாங்கறதுக்கு நாந்தான் கூட்டிட்டு வந்திருக்கேன். இன்னும் பத்து பதினைஞ்சி பேருக்கு மேல வர சொல்லுவேன், உங்ககிட்ட விசிட்டிங் கார்ட் இருக்கா' ன்னான்.
'விலாசமே இல்ல, மொதல்ல ரெண்ட வாங்குங்க' ன்னாரு.
இப்படியே போயிட்டிருக்கும்போது, சிவா பொது மனுஷனா 'சரிங்க பிரதர், உங்களுக்கும் வேணாம் இவங்களுக்கும் வேணாம் ஒன் ஃபிப்டிக்கு கொடுங்கன்' னு சொல்லவும், பாய்க்காரர் நாங்க எல்லாரும் சேந்து கண்ணுல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சோம். நாங்க கேட்டது நூறு, அவரு சொன்னது நூத்தி இருபத்தஞ்சு.
சிவா புரியாம திரி திருன்னு முழிக்கிறத பாத்துட்டு இன்னும் சிரிப்பு அதிகமாயிருச்சி.
கடைக்காரர் சிரிச்சி களைச்சி போயி, 'வயிறெல்லாம் வலிக்குது, நூறை கொடுத்துட்டு மொதல்ல வாங்கிட்டு போங்க' ன்னாரு.
சிவா அப்புறமும் அடங்கல. 'என்னோட திறமைய பாத்தியா, அவர சிரிக்க வெச்சு நான்கேட்டத விட இன்னும் அம்பதுக்கு கம்மியா வாங்கி கொடுத்துட்டேன்' னான்.

12 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

நையாண்டி நைனா said...

ha ha ha ha ha.....

பிரபாகர் said...

வணக்கம் நைனா... வரவு நல்வரவாகுக....

Raju said...

\\கடைக்காரர் சிரிச்சி களைச்சி போயி, 'வயிறெல்லாம் வலிக்குது, நூறை கொடுத்துட்டு மொதல்ல வாங்கிட்டு போங்க' ன்னாரு.\\

கடைசியில நல்லதுதான் செஞ்சுருக்காப்ல.. நாரதர் கலகம்...?

\\சிவா அப்புறமும் அடங்கல. 'என்னோட திறமைய பாத்தியா, அவர சிரிக்க வெச்சு நான்கேட்டத விட இன்னும் அம்பதுக்கு கம்மியா வாங்கி கொடுத்துட்டேன்' னான்.\\

இதெல்லாம் ரொம்ப ஓவரு.

பிரபாகர் said...

வணக்கம் தம்பி,

ஓவரா நடந்ததையில்ல நாம இங்க சொல்லுறோம்...

சிவா இப்போ ஒரு பேங்க்ல பெரிய ஆளா இருக்கான். ரிஷிமூலம்?

ஈரோடு கதிர் said...

என்ன பிரபா...

போகிறபோக்குல சிரிப்பை தெளிச்சு விடறீங்க

சிவாவோட ரவுசு தாங்கல...

ஆனா சிவா 150க்கு கேக்கலனா.... எப்படி 100க்கு கிடைச்சிருக்கும்...

அறிவாளிய!!! வாழ உடுங்கப்பா

பிரபாகர் said...

நன்றி கதிர்.

ஒத்துக்கறேன், ரிசல்ட் அவராலதான். ஆனா, சிவாவ பத்தின அடுத்து ஒரு விஷயத்த எழுதறேன். அப்புறம் சொல்லுங்க.

நாகராஜன் said...

ஹா ஹா ஹா...

உங்களுக்கு மட்டும் இல்லை உங்க நண்பர்களுக்கும் நகைச்சுவை உணர்வு கொஞ்சம் அதிகம் தான் போல இருக்கு...

பிரபாகர் said...

நன்றி ராசுக்குட்டி.

பூவோடு சேர்ந்த நார்...

நார் நண்பர்களல்ல, நான்...

பீர் | Peer said...

ஹாஹா... செம காமெடி பிரபாகர்.

//காக்கைக்கும் தன் குஞ்சு//

பி.ந வாதிகள் கண்ணில் பட்டால்...

பிரபாகர் said...

//பீர் | Peer said...
ஹாஹா... செம காமெடி பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பீர்...
ரொம்ப சந்தோஷம்.

Natraj said...

Hahaha.

பிரபாகர் said...

//Natraj said...
Hahaha.
//
வருகைக்கு நன்றி நாகராஜ்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB