ஐம்பதாவது பதிவில் அனைவருக்கும் நன்றி...

|


அப்படியும் இப்படியுமாய் எழுதி இது என்னுடைய ஐம்பதாவது பதிவு.
தினமும் ஒரு பதிவிடுகிறோமே, கடைசி வரையிலும் நம்மால் இவ்வாறு முடியுமா எனும் கேள்வி என்னுள் எழுந்தபோது, நண்பர்கள் கொடுக்கிற உற்சாகம், நினைவுகளை நிரடும்போது எழுது எழுது என தூண்டும் பல நினைவுகள், கண்டிப்பாய் இயலும் என்ற எண்ணத்தை உறுதி செய்ய, தொடர்கிறேன்.
மற்றுமொரு நாள் இது தான் என்னுடைய ஐம்பதாவது பதிவு என மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்காத வகையில் இருக்கவேண்டும் எனும் எண்ணத்துடன் எழுதுவதால் இந்த பதிவில் விஷயங்கள் ஏதுமின்றி, அடுத்து எழுதப்போகும் பதிவிற்கான ஒரு முன்னோட்டமாகவும் எனக்கு தமிழை கற்றுத்தந்த மிக முக்கியமான ஐந்து அன்பு இதயங்களுக்கு நன்றி செலுத்தும் வண்ணமாகவும் இருக்க எண்ணிட, இதோ ஒவ்வொருவராய்.
முதலில் என்னுடைய நினைவு தெரிந்த முதல் ஆசிரியர், இரண்டாவது வரை பயிற்றுவித்த குருமூர்த்தி சார். அவரப்பற்றித்தான் என்னுடைய அடுத்த பதிவு 'நின்னு போச்சு ரயிலு வண்டி', குரு வணக்கமாக.
அடுத்தது என்னுடைய அம்மா வழி பொன்னுசாமி தாத்தா. தமிழ் படிக்க கற்று கொடுத்து மேடையில் பேசும் அளவிற்கு சிறு வயதில் தயார் படுத்தியவர்(அவர் சொல்லி கொடுத்தவாறு மேடையில் கல்லூரி பேச்சுப்போட்டியின் போது பேச ஆரம்பிக்க, மேலே பேச விடாமல் என்னை மேடையை விட்டு இறக்கி ஓட விட்டதை தனி பதிவில் சொல்லுகிறேன்).
தமிழை தப்பில்லாமல் படிக்க கற்று தந்தவர். நிறைய பாடல்களை சொல்லிக்கொடுத்து என்னை எல்லோர் முன்னிலும் பலமுறை பாடச்செய்து மேடை பயத்தை அறவே போக்கியவர். நிறைய கதைகளை சொல்லி ஆரம்ப தாகத்தை ஏற்படுத்தியவர்.
என்னுடைய சிஷ்யன் என்று எல்லோரிடமும் பெருமையா சொல்லிக்கொண்டிருப்பவர். நானும் என்னுடைய குரு என எனது நெருங்கியவர்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அப்பா வழி வையாபுரி தாத்தா. அவர் அதிகம் படிக்கவில்லை எனினும் அனுபவக் கதைகள், அறிவுறைகள் என நிறைய அவரிடம் பெற்றிருக்கிறேன்.
என் தந்தை. எனது எழுத்துக்களை முதலில் படித்து விமர்சிப்பவர். அவரிடமிருந்துதான் எழுத கற்றுக்கொண்டேன். நிறைய கவிதை, கதைகள் எழுதுவார். அவரின் கவிதைகளின் தாக்கமே, இன்று எனது வெளிப்பாடுகள்...
இறுதியாய் எனது சம்பத் மாமா. சிறு வயதிலிருந்து இன்று வரை எனது உதாரண நபர். இவரிடமிருந்து கற்றுக் கொண்டது ஏராளம். என்னிடமிருக்கும் குறைகளை நேரிலும் நிறைகளை மற்றோரிடமும் சொல்லுவார்.
என்னை கதை புத்தகங்கள் படிக்க நூலகம் அழைத்து சென்று பழக்கியவர். கதை புத்தகம் நிறைய படிக்கிறான் என மற்றோர் குறை சொன்னாலும், என்னிடம் பாட புத்தகத்தையும் படி என்றுதான் சொல்லியிருக்கிறார். (மதிப்பெண் குறைந்தால் அடி பின்னி எடுத்துவிடுவார் அது தனி கதை)
பதிவுலகில் எனக்கு உறுதுணையாய் இருப்பவர்களை சொல்ல வேண்டுமானால் சொல்லிக்கொண்டே போகலம்.
ஏற்கனவே பிளாக்கின் நன்றியில் குறிப்பிட்டது போல என்னை பதிவெழுத ஊக்குவித்து தூண்டுகோலாய் இருந்த லக்கி. இவரிடமிருந்து வேலைப் பளுவால் அதிக பதிவில்லை. எழுதும் நாளை எதிர் நோக்கியிருக்கிறேன்.
படித்து நன்றாக இருப்பின் முதல் ஆளாய் பாராட்டும் வண்ணத்து பூச்சியார் என்கிற சூர்யா. இவரது நந்தவனத்தில் உலக சினிமாக்களை காண்பதில்தான் எத்தனை சந்தோஷம்?
அரவணைத்து பாராட்டும் கேபிள் அண்ணா. இவரை வாசிக்கும்போது இவரது விவரிப்புகளால் விழி விரிந்து உற்சாகமாய் உணர்வேன்.
அன்பு தோழனாய் ஒரு ஊரில் நாகா. பள்ளி நினைவுகளை எழுத சொல்லி எனது நினைவுகளை கிளர்ந்து நிறைய எழுத வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தவர். விஷயங்களை பகிர்ந்து கொள்ள எனக்கு கிடைத்திட்ட ஒரு இனிய தோழர்.
ஜோ, இவரின் எழுத்துக்களொடு செய்துவரும் நல்ல காரியங்களும் நிறைய பிடிக்கும். நண்பர்களின் மூலம் கேள்வியுற்று சந்திக்க, பேச ஆவலாய் இருக்கிறேன்.
கசியும் மௌனத்தால் கட்டிப்போடுமென் ஈரோடு கதிர். இவரின் எழுத்துக்குத்தான் எத்தனை ஈர்ப்பு. தனி பாணியில் எழுதுகிறர். மறந்த விஷயங்களை நினைவு கூர்ந்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். பழகுவதற்கு இனிய நண்பர்.
தமிழ் வலையுலகம் மணி. இவரை புகைப்படத்தில் பார்க்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரியாய் தான் தோன்றுகிறது. கேட்டு விசாரிக்க வேண்டும். மறந்து போய்விடும் போலிருக்கு மணி, மவுனத்தை கலைத்து வலையுலகில் வலம் வாருங்கள்.
சங்கர் அண்ணா, எழுதவேண்டும் எனும் எண்ணம் ஏற்பட இவர்தான் மூல காரணம். படிக்கும்போதே புத்தகங்களை எழுதி அசத்தியவர். 'பட்டைய கிளப்பு' மூலம் பவனி வந்தாலும் அதிக பதிவுகளை நேரமின்மையால் தர இயலாமல் இருக்கிறார்.
டக்ளசு ராஜூ தம்பி. சிறு வயதிலேயே இந்த பாய்ச்சலா என வியந்து கொண்டிருக்கிறேன். காதலை பற்றிய சமீபத்திய ஒரு பதிவை படித்து பிரம்மித்திருக்கிறேன்.
ராசுக்குட்டி. நண்பரை பற்றி அதிகம் தெரியாது. தெரிந்து கொள்ள விரும்பும் நபர். படித்து இவர் எழுதும் பின்னூட்டங்கள் நாம் எழுதியதைவிட சுவராஸ்யமாக இருக்கும்.
நையாண்டி நைனா, 'ரவுசு பார்ட்டி'. இதுவரை நல்ல தமிழில் எழுதிவந்த நான், இவரைப்பற்றி எழுதும்போதே தடுமாறுகிறேன் பாருங்கள், அதுதான் இவரின் வெற்றி. இவருக்கு இடும் பின்னூட்டங்களை கவிதையாகவே செய்வது என முடிவெடுத்து செய்து வருகிறேன், யாரும் என்னை உதைக்காத வரை.
நிறைய படிக்கிறேன், பின்னூட்டமிடுகிறேன், மனதிற்கு நிறைவாய் இருக்கிறது.
இன்னும் நிறைய பேரை அடுக்கிக்கொண்டே போகலாம். எழுதாததால் மறந்ததாய் இல்லை. என்னை வாசிக்கும் எல்லோருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

42 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கதிர் - ஈரோடு said...

முதலில் வாழ்த்துக்கள் பிரபாகர்..

படித்து விட்டு பின்னூட்டம் போடுகிறேன்

Prabhagar said...

வாழ்த்துக்கு நன்றி கதிர்.

டக்ளஸ்... said...

வாழ்த்துக்கள் தலைவா...!

வண்ணத்துபூச்சியார் said...

பிரபா. வாழ்த்துகள்.

முன்னூட்டமே ஆவலைதூண்டுகிறது.

எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.

Prabhagar said...

//டக்ளஸ்... said...
வாழ்த்துக்கள் தலைவா...!//

வாழ்த்துக்கு நன்றி தம்பி...

Prabhagar said...

//முன்னூட்டமே ஆவலைதூண்டுகிறது.

எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.//

வாழ்த்துக்கு நன்றி சூர்யா,

எண்ணத்தை எழுத்த்தாக்கிக்கொண்டிருக்கிறேன்... பதிவில் விரைவில்..

நையாண்டி நைனா said...

நானும் இனி கவுஜையிலே சொல்றேன்.

----------
----------

அட போப்பா...
கவிதை எழுதுனா கை சுளுக்குது... அப்பாலிக்கா வாறேன் கவிதையோடு.

Prabhagar said...

வரவிற்கு நன்றி நைனா...

Anonymous said...

Find lot of maturity in the writings. Good keep it up.

Sampath said...

Good writing. Keep it up. Best regards and wishes.

Prabhagar said...

//Anonymous said...
Find lot of maturity in the writings. Good keep it up.
//
Thanks a lot.

Prabhagar said...

// Sampath said...
Good writing. Keep it up. Best regards and wishes.
//

Thanks for your blessing...

கதிர் - ஈரோடு said...

உங்களையும் என்னையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திய நாகாவிற்கு முதல் நன்றி... நன்றி... நாகா

50வது பதிவு என்பது நம் போன்ற இளம் பதிவர்களுக்கு ஒரு தொடர் ஓட்டப்பந்தயத்தின் முதல் இலக்கு மாதிரி..

அடையும் இலக்கு அருகில் இருக்கும் மொழுது ஒரு சுகமான பதட்டமும், மனதிற்குள் வெதுவெதுப்பான சூடும் இருப்பது இயல்பு...

50வது பதிவில் மிக அழகாக மற்ற பதிவர்களை இனம் கண்டு அடையாளப் படுத்தியுள்ளீர்கள்...

என் அலைபேசிக்கு அழைத்து நீங்கள் ஊக்கப்படுத்திய விதத்திற்கு கடமைப்பட்டுள்ளேன்...

பாராட்டுக்களும் நன்றிகளும்


50வது பதிவு முன்னிறுத்தி உங்களை வாழ்த்தும் இந்த இனிய வேளையில் நீங்கள் அனைத்து துறையிலும் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்ட வேண்டும், தங்கள் குடும்பம் மிகச்சிறந்த மகிழ்ச்சிகளை கொண்டாட வேண்டும் என் வாழ்த்துகிறேன்.

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்தேனோ....

நன்றி தோழா

Prabhagar said...

அன்பின் கதிர்,

உங்களின் அன்பினில் நனைந்து திக்கு முக்காடி போயிருக்கிறேன். உங்களின் வாழ்த்துக்களை ஆதாரமாகக் கொண்டு மேன்மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க முயலுவேன்.

உஙகளின் நட்புக்கு தலை வணங்குகிறேன்...

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் பிரபாகர்..;-))))

யுவகிருஷ்ணா said...

அதுக்குள்ளே ஐம்பதா? :-)

பிரபாகரன் எக்ஸ்பிரஸ்க்கு வாழ்த்துகள்!

sambasivamoorthy said...

Congrats Prabhagar!!! half century :)

Cheers!!

Yeppo party :P

Prabhagar said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துகள் பிரபாகர்..;-))))//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. கார்த்திகைப் பாண்டியன்

Prabhagar said...

//அதுக்குள்ளே ஐம்பதா? :-)//

குருவே,

எல்லாம் உங்களின் ஆசி... உங்களின் எழுத்துக்களை படித்து நிறைய பின்னூட்டமிடவேண்டுமென ஆவலாயிருக்கிறேன்... ப்ளீஸ், சீக்கிரம் ஆரம்பியுங்கள்...

Prabhagar said...

//eppo party//

Moorthy, Thanks a lot. eppo party?

sambasivamoorthy said...

To celebrate 50th blog, When is the party!!!

Prabhagar said...

//To celebrate 50th blog, When is the party!!!//

புரியுது மூர்த்தி, தப்பிச்சிக்கலாம்னு பாத்த விடமாட்டீங்க போலிருக்கு. வெகு சீக்கிரம்...

ராசுக்குட்டி said...

வாழ்த்துக்கள் பிரபாகர்.

அதி விரைவு புகை வண்டி வேகத்தில் பதிவுகளை (அருமையான) எழுதியிருக்கிறீர்கள். இருப்பினும் புகை வண்டி பயணம் எத்தனை சுவாரசியமாகவும் அனுபவிக்கும் வண்ணமும் இருக்குமோ அப்படியே உள்ளன உங்கள் பதிவுகளும். பாராட்டுகள்... ஐம்பதாவது பதிவும் அருமை.

இப்படியே நல்ல பதிவுகளை தொடர்ந்து எழுதி வெகு விரைவில் 100, 200, 500, 1000, etc., பதிவுகள் போடவும்... கலக்குங்க பிரபாகர். (உங்கள் முந்தைய பதிவுகள் அனைத்தும் படித்து முடித்தாயிற்று... அனைத்தும் அருமை...)

Prabhagar said...

அன்பான ராசுகுட்டி,

நன்றிகள் பல. எல்லாம் உங்களின் அன்பான ஆதரவில் தான். உங்களோடு தொடர்பு கொள்ள வேண்டும், விவரங்களை அனுப்புங்கள்.
(prabhagar@gmail.com )

Cable Sankar said...

அம்பது மேலும் குட்டி போட வாழ்த்துக்கள்.

டம்பி மேவீ said...

valthukkal thala ..... unga blog pakkam ippo than vanthen.... super ah eluthiringa.....

Prabhagar said...

//அம்பது மேலும் குட்டி போட வாழ்த்துக்கள்.//

கேபிளண்ணா,

உங்களின் அன்புக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி.

Prabhagar said...

//டம்பி மேவீ said...
valthukkal thala ..... unga blog pakkam ippo than vanthen.... super ah eluthiringa.....//
ரொம்ப நன்றிங்க... உங்களின் வரவு என் பாக்கியம்...

சங்கா said...

ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்! மேலும் உங்கள் மனதுக்கினிய சிகரம் தொட வாழ்த்துகள்.

Prabhagar said...

//ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துகள்! மேலும் உங்கள் மனதுக்கினிய சிகரம் தொட வாழ்த்துகள்.//

வாழ்த்துக்கு நன்றி சங்கா... உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஊக்கம், ஐம்பதென்ன ஐநூறு எழுதலாம் எனும் உறுதியை தருகிறது...

தமிழ் வெங்கட் said...

விரைவில் 100வது பதிவு போட
வாழ்த்துகள்...!

Prabhagar said...

//தமிழ் வெங்கட் said...
விரைவில் 100வது பதிவு போட
வாழ்த்துகள்...!//

வரவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி தமிழ் வெங்கட்....

கார்க்கி said...

வாழ்த்துகள் சகா..

Prabhagar said...

//கார்க்கி said...
வாழ்த்துகள் சகா..//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கார்க்கி... நிறைய சந்தோஷமாய் உணர்கிறேன்...

blogpaandi said...

விரைவில் நூறாவது பதிவு எழுத வாழ்த்துக்கள்.

Prabhagar said...

//blogpaandi said...
விரைவில் நூறாவது பதிவு எழுத வாழ்த்துக்கள்.//

நல்வரவு blogpaandi...

வாழ்த்துக்கு நன்றி...

ஜெட்லி said...

வாழ்த்துக்கள் பிரபாகர்....
நிறைய எழுதுங்கள்....

Prabhagar said...

//ஜெட்லி said...
வாழ்த்துக்கள் பிரபாகர்....
நிறைய எழுதுங்கள்....//

வரவிற்கு நன்றி ஜெட்லி...

அன்பான வாழ்த்திற்கு என் பணிவான நன்றி...

nilaa said...

CONGRATS PRABHU

ungal yennangalum,yezhuthukalum sindhanaiyai thundugirathu. ungal payanam inidhey thodara en vazhthukal.

--nilaa--

nilaa said...

CONGRATS PRABHU

ungal yennangalum,yezhuthukalum sindhanaiyai thundugirathu. ungal payanam inidhey thodara en vazhthukal.

--nilaa--

nilaa said...

CONGRATS PRABHU

ungal yennangalum,yezhuthukalum sindhanaiyai thundugirathu. ungal payanam inidhey thodara en vazhthukal.

--nilaa--

பிரபாகர் said...

//nilaa said...
CONGRATS PRABHU
//

Thanks a lot. எல்லாம் நட்பினால் வெளிக்கொணரும் நினைவுகள். வாழ்த்துக்கு நன்றி...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB