குரு வணக்கம் (தொடர்ச்சி) - நின்னு போச்சு ரயிலு வண்டி..-II

|

(முதல் பகுதிய படிக்கலன்னா, ப்ளீஸ், இதோட முதல் பாகத்த படிச்சிட்டு படிங்களேன்)


'எங்க போனாலும் உங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க' ன்னு சொல்லிட்டு, 'முடிஞ்சா திரும்பி வரும்போது எனக்கு காதுக்கு ஒரு மெஷின் வாங்கிட்டு வாங்க' ன்னு சொன்ன்னாரு. சொல்லிட்டு உடனே, 'அவசரமில்ல, நீங்க வரும்போது வாங்கிட்டு வாங்க, நான் காசு கொடுத்துடறேன்' னு சொன்னாரு.


இது நடந்தது ஆகஸ்ட் மாசம். சிங்கப்பூர் வந்து மொத மூனு மாசம் வேலையில்லாம, நல்ல வேலையில சேர நவம்பர் ஆயிடுச்சி.

என் மனைவிக்கு தலை பிரசவம், போறதுக்கு வழியுமில்ல, காசுமில்ல. பையன் பொறந்ததா ஃபோன் தகவல், சந்தோஷமான அழுகையோட எனது மனைவியோட பேச்சு. அத பத்தி தனியா பகிர்ந்துக்கறேன்.

டிசம்பர் மாசம் ஒன்னாம் தேதி. முதல் மாச சம்பளத்த வாங்கிட்டு, நேரா முஸ்தபா போனேன். மொதல்ல நான் வாங்கினது சாருக்கு காது மெஷின் தான், அடுத்து தான் என் பையனுக்கு.

ரொம்ப கேள்வி கேட்டு, பாத்து பாத்து வாக்கறத பாத்துட்டு கவுன்ட்டர்ல இருந்த பெரியவர் 'யாருக்கு தம்பி வாங்குறீங்க' ன்னு கேட்டாரு.

'என்னோட வாத்தியாருக்கு' ன்னு சொல்லவும், 'இந்த காலத்துலயும் இப்படி ஒரு புள்ளயா'ன்னு ஆச்சர்யப்பட்டு அவரு ரொம்ப நேரம் எடுத்துகிட்டு நல்லா டெஸ்ட் பண்ணி கொடுத்தாரு.

லீவ் கிடைச்சி சைனீஸ் நியூ இயர் சமயத்துல ஊருக்கு போனேன். என் வாரிச உச்சி மோந்துட்டு, சட்டுனு வெளிய கிளம்பினேன். 'வந்த உடனே என்ன அவசரம்' னு கேக்க, 'வந்து சொல்றேன்' னுட்டு வண்டிய எடுத்து நேரா சார் வீட்டுக்கு போனேன்.

'வாங்க வாங்க நல்லாருக்கீங்களா?' சிரிப்போட உள்ள அழைச்சிட்டு போனாரு. மனைவி மொதல்லயே இறந்துட்டாங்க, தனியா தான் தங்கியிருந்தாரு.

ஒரு நிமிஷம் உக்காருங்கன்னு சொல்லிட்டு என்ன பேச விடாம உள்ள போயி பால காய்ச்சி கொண்டு வந்து கொடுத்தாரு. 'சக்கரை சரியா இருக்கா'ன்னு கேட்க, நல்லா இருக்குன்னு சத்தமா சொன்னேன்.

'வேல போக்குவரத்து எல்லாம் எப்படி'ன்னு கேட்டாரு, பதில் சொன்னேன்.


'பொறந்த உடனே ஆஸ்பத்திரியில போய் உங்க பையனை பாத்தேன், உங்களை மாதிரியே அழகா இருக்காரு, பெரிய ஆளா வருவாரு'ன்னு சொல்ல, பொய்யும் இனிப்பா இருந்துச்சி.

அவரு கையில கொண்டு போன மெஷின கொடுத்தேன். ஆர்வமா, சந்தோஷமா வாங்கிட்டாரு. ஆன் பண்ணி அவருக்கு கதுல வெச்சு காமிச்சேன்.

'சார் எப்படி இருக்குது'ன்னு கேக்க, 'ஏன் இப்படி சத்தமா பேசுறீங்க, மெதுவா பேசுங்க' ன்னு வழக்கம்போல ரொம்ப சத்தமா சொன்னாரு.

'எல்லா சத்தமும் கிளியரா கேக்குது' ன்னு சொல்லிட்டு, 'ஆமா எவ்வளொ'ன்னு அடுத்த கேள்வியை கேட்டாரு. 'அதெல்லாம் ஒன்னும் வேனாம்' னு சொல்லிட்டு 'அப்புறமா பாக்கறேன் சார்' னு சொல்லிட்டு வந்துட்டேன்.

மத்தியானம் வாக்குல வீட்டுக்கு வந்தாரு. ரப்பர் பேண்டுல கட்டி நூறு ரூபா நோட்டு கத்தையை என் கையில கொடுக்க வந்தாரு. கேட்டதுக்கு 'மெஷினுக்கு பணம்'னு சொன்னாரு. 'சார் உங்களால தான் இந்த நிலைமையில இருக்கேன், என் ஞாபகமா வெச்சுக்கோங்க' ன்னு சொல்லி மறுத்திட்டேன். அப்புறமா அம்மாகிட்ட, அப்பாகிட்ட காசு கொடுக்க எல்லாரும் மறுத்துட்டாங்க.

நான் அவரு கால தொட்டு கும்பிடறத பாத்துட்டு பசங்க, என்னடா, 'பிரபண்ணன் இந்த மாதிரில்லாம் பண்ணுது'ன்னு கிண்டலா சொல்லுவானுங்க. அவனுங்களும் ஒரு நாளைக்கு வருத்தப்படுவானுங்கன்னு நினைச்சுக்குவேன்.

ரிட்டயர்டு ஆனதுக்கப்புறம் பசங்க அவர எங்க பாத்தாலும் 'ரயிலு வண்டி வருதுடோய்' னு சொல்லி கிண்டல் பண்ணுறதா கேக்கும் போது கஷ்டமா இருக்கும்.

சாரு எல்லாத்துகிட்டயும், 'என் மாணவன் சிங்கப்பூர்ல இருந்து வாங்கிகிட்டு வந்து கொடுத்தது'ன்னு பெருமையா ரொம்ப நாளைக்கு சொல்லிட்டிருந்திருக்காரு.

அதிர்ச்சியான தகவலோட ஒரு நாள் ஃபோன் வந்துச்சி, சார் எங்களையெல்லாம் விட்டுட்டு போயிட்டார்னு. சந்தோஷமா ஓடிக்கிட்டிருந்த அந்த ரயிலு வண்டி நின்னு போச்சி.

காலையில எழுந்து குளிச்சி பூஜையெல்லாம் முடிச்சிட்டு சாப்பிட போகும்போது வேஷ்டி தடுக்கி கீழ விழுந்து உடனே இறந்துட்டாராம்.

போக முடியல, ஏன்டா வெளிநாட்டுக்கு வந்தோம்னு நினைச்சு மொதல்ல அழுதது அன்னிக்குத்தான்.

அன்னிக்கி முழுசும் அவர் நினைவாவே இருந்தேன். ஆபிஸ்ல என்னோட நிலைமைய பாத்துட்டு வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க.

எல்லாரும் ரொம்ப நல்ல சாவுன்னு ரொம்ப நாளைக்கு பேசிட்டாங்க. நல்லவங்களுக்கு எப்பவுமே நல்ல சாவுதான்.

ஏணியா இருந்து எல்லோரையும் மேலேத்திவிட்ட அந்த ரயிலு வண்டி ஆழப் புதைஞ்சது இந்த மண்ணில் மட்டுமல்ல, என் மனசுலயும் தான்.

சார், என் உயிர் இருக்கிற வரைக்கும் உஙகளை, உங்களோட கள்ள மில்லா சிரிப்பை, மனப்பூர்வமான வாழ்த்தை நினைச்சிகிட்டே இருப்பேன். உங்களோட ஆசிர்வாதம் கடைசி வரைக்கும் எனக்கு வேணும்...


18 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

கிறுக்கல்கள்/Scribbles said...

Really touching. Has very good in depth student - teacher relation. Very rare to find such relationship nowadays as everything become materilaistic now. I could enjoy this episode fully as I know both you very well. GOOD. Keep it up. Blessings again.

பிரபாகர் said...

Thanks uncle...

Thanks for your blessing...

நையாண்டி நைனா said...

கலக்கல்.
என் கண்கள்
கலங்கல்.

பிரபாகர் said...

சோகத்தையும் கலக்கலாய் சொல்வதே எங்கள் நைனா....

நன்றி நைனா...

Raju said...

\\ நல்லவங்களுக்கு எப்பவுமே நல்ல சாவுதான்.\\

இது 100 % உண்மை.
ரொம்ப எதார்த்தமா இருக்கு இந்த பதிவு.

பிரபாகர் said...

நன்றி தம்பி...

உன் அன்புக்கு நான் அடிமை...

ஈரோடு கதிர் said...

பிரபா...
மனது கனக்கும் பதிவு நண்பா...

உங்களின் உணர்வுகளை அப்பட்டமாக பகிர்ந்துள்ளீர்கள்..

என்னுடன் பேசும்போது இந்த விசயத்தைப் பகிர்ந்து கொண்டீர்கள், ஆனால் அப்போது எனக்கு இவ்வளவு பாராமாக தெரியவில்லை..

படித்து முடிக்கும் போது...
ஒரு பாரம் என்னை அழுத்துகிறது..
மௌனம் என்னை சூழ்கிறது...
வெறுமை மனதில் பரவுகிறது...

தொடர்ந்து எழுதுங்கள்
பிரபா

பிரபாகர் said...

நன்றி கதிர்....

உங்களை போன்ற நல்ல இதயங்களோடு பழகுதல்தான் நிறைய நினைவுகளை கிளர்தலுக்கு ஏதுவாக ஆகிறது...

நாகராஜன் said...

பிரபாகர்,

ரொம்பவுமே மனசை தொடர மாதிரி எழுதிருக்கீங்க. படிக்கற எங்களுக்கே என்னமோ மாதிரி இருக்குதுன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்னு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கடைசி வரை நல்லவங்களாவே இருந்துட்டு போறது வெகு சிலர் தான் அந்த வெகு சிலரில் உங்க வாத்தியாரும் ஒருத்தர். உங்களை போலே இதை எல்லாம் நினைவில் வைத்திருப்பவர்களும் சிலரே என்று நினைக்கிறேன். கண்டிப்பா உங்க வாத்தியார் நினைப்பு நிறைய நாளைக்கு எங்கள் மனதை விட்டு நீங்காது என்று நினைக்கிறேன். யாரு சுருட்டு குடிக்கறதை பார்த்தாலும் அல்லது கேட்டாலும் ஒரு கணமாவது இவரது நினைப்பு வந்து போகும் என்று நினைக்கிறேன். ஒரு நல்ல ஆத்மாவை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு மிகுந்த நன்றிங்க.

பிரபாகர் said...

ராசுக்குட்டி,

உங்ககிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே, என் எழுத்த என் அளவிற்கு உள் வாங்கிக்கிறவங்கள்ல நீங்களும் ஒருத்தருங்கறதுதான்.

உங்களின் நட்பினால் நான் பெருமையடைகிறேன்.

சங்கர் தியாகராஜன் said...

ரியலி டச்சிங், பிரபு

பிரபாகர் said...

நன்றி அண்ணா...

மூன்று வார்த்தைகளில் சொன்னாலும், அதன் முழு அர்த்தமும் புரிகிறது....

sambasivamoorthy said...

One request Prabhagar.

உங்க ரயிலு வண்டிக்கு ஒரு கவிதை எழுதுங்க பிரபா!!

பிரபாகர் said...

Sure Moorthy,

I will do it for U soon.

Anonymous said...

vanakkam,nenjai thotta pathivu indria kalakattathil aacriyarai pattri pathivu miga arumai

பிரபாகர் said...

//Anonymous said...
vanakkam,nenjai thotta pathivu indria kalakattathil aacriyarai pattri pathivu miga arumai//

நன்றி அனானி....

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

It is very touching.
I will come back to read all your postings.

இராஜராஜேஸ்வரி said...

ஆசிரியரின் மதிப்பு உயர்கிறது..

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB