எங்கேயோ படிச்சது 7 (மாலைக்கண் நோய் மாப்பிள்ளை)

|

நம்ம ஆளுக்கு புதுசா கல்யாணம் ஆச்சு. தலைவரு மாலைக்கண் நோய் இருந்தாதால, சாயங்காலம் ஆனா சரியா கண்ணு தெரியாது. ஆனா மறைச்சிதான் மாட்டியிருக்காப்ல.

மாமனார் வீட்டில விருந்து(ஏன், எல்லோரும் மாமியார் வீடுன்னு அதிகமா சொல்றாங்க?).

மனசுக்கு புடிச்ச பொண்டாட்டி, வித விதமா கவனிப்பு... சொக்கி போயி கிடந்தாரு.

சரியா சாயங்காலம் ஆனா வீட்ட விட்டு வெளியே போகாத மாதிரி பாத்துகிட்டாரு.

விதி சும்மா விடுமா? ஒருநாள் தோட்டத்து பக்கம் போனாரு. திடீர் மழை, நகர கூட முடியாம மோட்டார் கொட்டாயில உக்காந்துட்டாரு. ஏழுக்கு மேல ஆயிடுச்சி, நல்லா இருட்டிட்டதால போறதுக்கு வழி தெரியல.

தட்டு தடுமாறி அங்கேயும் இங்கேயும் தடவி சரி வெளிய போயி நிக்கலாம்னு எழுந்திரிக்கிறப்போ கையில எதோ புசு புசுன்னு மாட்ட அது ஒரு முயல்.

மழைக்கு ஒதுங்கியிருக்கும் போக இருக்கு. நல்லா கொழு கொழுன்னு இருந்துச்சி.

காதை புடிச்சி தூக்கிட்டு நின்னுகிட்டிருக்கறப்போ, அப்போ அந்த வழியா வந்த பக்கத்து காட்டுக்காரர்,

'என்னங்க புது மாப்ள, அங்க நின்னிட்ட்ருக்கீங்க. மழதான் விட்டுடுச்சே, வீட்டுக்கு கிளம்பலையா' ன்னு கேக்க,

'எங்க கிளம்பறதுன்னு நினைச்சிட்டு', 'இல்லயில்ல கிளம்பலாம்னு வெளிய வரும்போது தூரத்துல நீங்க வர்றத பாத்துட்டு சேந்து போலாமேன்னு நின்ன்னுகிட்டிருக்கேன்'னாரு.

'ஆக, இருட்டுல கூட நாம தூரத்துல வர்ரது தெரியுதா' ன்னு ஆச்சர்யப்பட்டுகிட்டே, 'சரி வாங்க கிளம்பலாம்' னாரு.

மாப்பிள்ளை அவரு எப்பவுமே ஒரு பெரிய தடிய கூடவே வெச்சிருக்கறத முன்னாலயே கவனிச்சிருக்காரு.

'ஆமா நீங்க என்ன ஏதோ பாரம் வெச்சிருக்கிங்க போலிருக்குது'ன்னு கேக்க, 'ஆமா, தேங்கா புடுங்கிகிட்டு வந்திருக்கே' ங்கவும்,

'சரி சரி அதை கழியில நடுவில கட்டுங்க, ரெண்டு பேரும் சேந்து தூக்கிகிட்டு போகலாம்'னு சொல்லவும்,

அவரு எவ்வளவோ மறுத்தும் கேக்காம அதே மாதிரி செஞ்சி, அவர முன்னாடி நடக்க விட்டு பத்திரமா போயி சேந்துட்டாரு.

மாப்பிள்ளை வெறும் கையாலயே முயல் புடிச்ச கதை பக்கத்து வீட்டுக்காரர் சம்சாரம் புண்ணியத்துல ஊரெல்லாம் பரவ, ரொம்ப பேரு வீட்டுக்கு வந்து பாத்துட்டு போனாங்க.

மப்பிள்ளை நேரமோ என்னவோ தெரியல, அடுத்த நாளும் அதே மாதிரி மழையில மாட்டி இருட்டிடுச்சி.

இன்னிக்கு ஆபத்பாந்தவனா வந்தது கன்னுக்குட்டி. அவுத்துகிட்டு காட்டு பக்கம் ஓடி வந்துடுச்சி போலிருக்கு.

அவரு சரியா மா மான்னு கூப்பிட பக்கத்துல வரவும் கயிற கெட்டியா புடிச்சிகிட்டு முடுக்க, சரியா வீட்டுல கொண்டுவந்து விட்டுடுச்சி.

வாசல்லயே மாப்பிள்ளய காணும்னு தவிப்போட எல்லாரும் காத்திருக்க, மாமனார், 'மாப்பிள்ளை சிங்கம்டி, இந்த ஊர்லயே கையால எவென் முயல் புடிச்சிருக்கான் சொல்லு'ன்னு பீத்திக்கிட்டிருந்தாரு.

கன்னுகுட்டி மாப்பிள்ளையை இழுத்துகிட்டு ஓடி வந்ததுல மூச்சிறைக்க மூச்சிறைக்க, 'இந்த வீட்டிட யாருக்குமே என்னை தவிர பொறுப்பு கிடையாது. கன்னுகுட்டிய இப்படியா பொறுப்பில்லாம விட்டுடறது, விட்டிருந்தா காடெல்லாம் மேஞ்சிருக்கும்'னு சொல்லவும்,

'ஆஹா பொறுப்புன்னா இது தானே பொறுப்பு' ன்னு எல்லோரும் மெச்சிகிட்டாங்க, சின்ன கன்னுகிட்டி விட்டாலும் பயிர் மேயாதுன்னு தெரிஞ்சும்.

அடுத்த நாள் மாப்பிள்ளை ரொம்ப விவரமா வீட்டுலயே இருந்தாரு.

ராத்திரி சாப்பிடற வரைக்கும் ஏதும் ஆகல. வெத்தல போட்டு திண்ணையில காத்தாட உக்காந்து இருந்தப்போ திடீர்னு கரண்ட் போயிட மாப்பிள்ள சத்தம் போடாம இருந்தாரு.

அப்பொ திம் திம்னு நடந்து வர்ற சத்தம் கேக்க, எருமை மாடுதான்னு நினைச்சிகிட்டு பக்கத்துல வந்தப்போ தடவும்போது கிடைச்ச கழியால நச்சுனு ஒரு போடு போட்டாரு.

அய்யோ அம்மான்னு கத்திகிட்டு விழும்போதுதான் தெரிஞ்சது, வந்தது மாமியாருன்னு.

கரன்ட் சொல்லி வெச்ச மாதிரி வந்துடவும், மாமியார் கிழ விழுந்து கிடக்க, மப்பிள்ள கையில தடியோட நிக்க, ஆனாலும் சமாளிச்சாரு பாருங்க தெறமையா,

'பொம்பளைங்கன்னா ஒரு அடக்கம் வேணும், நடக்கும் போது ஒரு பதுவுசா நடக்கனும், இப்படி திம் திம்மு நடந்தா குடும்பம் விளங்குமா' ன்னாரு.

'ஆஹா, மாப்பிள்ளை சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம் கரைச்சு குடிச்சிருக்காரு' ன்னு எல்லாரும் பாராட்ட, தலையில இட்டிலி மாதிரி வீங்கியிருந்த மாமியார கைத்தாங்கலா உள்ளே கூட்டிட்டு போனாங்க...

13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ஈரோடு கதிர் said...

ஹி..ஹி

பிரபாகர் said...

வணக்கம் கதிர்,

வரவிற்கும் கருத்த்துக்கும் நன்றி...

Raju said...

நல்ல காமெடி கதை.
ஒரு படத்துல கவுண்டமணி கூட இப்டி நடிச்சுருப்பாப்ல.

பிரபாகர் said...

வணக்கம் டக்ளஸ்...

வரவிற்கு நன்றி...

உங்களோட ஃபிரண்ட்ஷிப் கவிதையை படிச்சுட்டு தனியா மெயில் எழுதி அனுப்ப தயார் படுத்திகிட்டு இருக்கேன். சின்ன தம்பியில கவுண்டமணி நடிச்சிருப்பாரு. இது ரொம்ப பழைய கதை, சின்ன வயசுல படிச்சது.

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net

பிரபாகர் said...

ஏற்கனவே சேத்தாச்சு ராம்...

பிரபாகர் said...

//சூரியன் said...
:)//


நன்றி சூரியன்.....

நாகராஜன் said...
This comment has been removed by the author.
நாகராஜன் said...

மாப்பிள்ளை கடைசி வரைக்கும் மாட்டாமலே தப்பிச்சுட்டாரே பிரபாகர். ரொம்ப எமகாதகரா தான் இருப்பார் போல. மாமியார் தான் பாவம்.

பழைய சுவராசியமான கதைகளை எல்லாம் நல்லா நியாபகத்தில் வைச்சுருக்கீங்க... பாராட்டுகள் பிரபாகர்.

பிரபாகர் said...

ராசுக்குட்டி,

மாட்டாத மாதிரியே படிச்சதால அவர திரும்ப மாட்ட வைக்க விரும்பல...

நன்றி ராசுக்குட்டி...

Joe said...

நல்ல நகைச்சுவையான கதை.

உங்க சொந்த அனுபவத்தில செய்ய முடியாததை, கதை நாயகன் செய்ய வைச்சிட்டீங்களோ? கடைசி சம்பவத்தைச் சொன்னேன், ஹீ ஹீ! ;-)

பிரபாகர் said...

//உங்க சொந்த அனுபவத்தில செய்ய முடியாததை, கதை நாயகன் செய்ய வைச்சிட்டீங்களோ? கடைசி சம்பவத்தைச் சொன்னேன், ஹீ ஹீ! ;-)//

ஜோ, நான் ரொம்ப நல்லவன், இந்த மாதிரியெல்லாம் சொல்லி வில்லனாக்கிடாதீங்கோ...

வரவிற்கும் 'வாழ்த்துக்கும்' நன்றி...

Unknown said...

இதுக்கு ஒரு நல்லடைட்டில் சொல்லுங்க இந்தகதைக்கு

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB