எல்லோருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
பயணம் சம்மந்தமான அனுபவங்களை இந்த வரிசையில் எழுத உத்தேசம். படித்து உங்களின் மேலான கருத்துக்களைச் சொல்லுங்களேன்...
வலைப்பூவின் வழியாய் அறிமுகமாகி இன்று என் ஆருயிர் நண்பராய், உறவாய் இருக்கும் புண்ணாக்கு மூட்டை எனப் பின்னூட்டமிடும் பாலா, எனது வாழ்வின் முக்கிய அங்கமாயிருப்பவர்.
தலைவரே எனத்தான் அழைப்பார், பதிலுக்கு நானும். நைஜீரியா, சிங்கை, இந்தியா என எங்கு இருந்தாலும் வாரம் மூன்று முறையாவது அழைத்துப் பேசாமல் இருக்க மாட்டார். இருவரும் இந்தியாவில் இருப்பதால் கட்டாயம் சந்திக்கலாம் என முடிவு செய்தோம். வரும் தேதி சந்திப்பதற்கான நாள் எல்லாம் இறுதியாக சென்னை வந்து இறங்கியவுடன் அழைத்தார். அவரின் ஊரான புவனகிரிக்கு விடுமுறையில் இருந்த விஷாக்கை அழைத்துக்கொண்டு அவர் வந்த அடுத்த நாளில் கிளம்பினேன்.
சேலம் அருகே மேட்டுப்பட்டியில் சாலை மறியல் காரணமாய் ஒரு மணி நேரமாய் பேருந்து வரவில்லை என்றாலும் மகனோடு பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஏதுவாயிருந்தது.
தாமதம் சில நேரங்களில் சில அற்புதமான தருணங்களை ஏற்படுத்திக்கொடுக்கும், கொடுத்தது. வரிசையாய் வந்த மூன்று சிதம்பரம் பேருந்துகளில் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். என் அம்மாவின் வயதொத்த ஒருவர் அமர்ந்திருக்க விஷாக்கை அமரச்சொல்லி அருகில் அமர ஐபோனை வாங்கி கேம் விளையாடுவதில் மும்மரமானார்.
அம்மாவோடு பேச ஆரம்பிக்க அந்த பயணம் முழுதும் வாழ்வின் மறக்க இயலாத ஒன்றாக அமைந்தது. மெதுவாய் பொதுவான விஷயங்களைப் பேச ஆரம்பித்து பிளாக் பற்றி பேச ஆரம்பிக்க அவர் நிறைய படிப்பதாய் சொல்ல ஆச்சர்யமாய் இருந்தது. அவரின் மகன் பெங்களூரு ஐபிஎம்-ல் வேலை பார்ப்பதாயும் பிளாக், சாட் என சொல்லித் தந்ததாயும் சொன்னார். அவரிடம் பேசியதில் நிறைய தெரிந்துகொண்டேன். அது பற்றியெல்லாம் நிறைய பின்னால் எழுத உத்தேசம். ஒரு அற்புதமான ஒரு உறவினை இந்தப் பயணம் ஏற்படுத்திக் கொடுத்ததற்கு கண்டிப்பாய் கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
சென்று சேர்வதற்குள் எங்கிருக்கிறீர்கள் எனக்கேட்டு பலமுறைக் கேட்டு பதில் சொல்லியவாறு அம்மாவிடம் பேசியவண்ணம் மிகவும் மோசமானதொரு சாலயில் பயணித்த அலுப்போ, நான்கு மணி நேர பிரயாணக் களைப்போ கொஞ்சம் கூட தெரியவில்லை. இறங்கும் இடம் வந்து அவசர அவசரமாய் அம்மாவிடம் விடைபெற்று இறங்க பாலா காரில் வந்து எங்களை அழைத்துச்சென்றார்.
விருந்தோம்பலுக்கு உதாரணமாய் அற்புதமான கவனிப்பு. கோழி மீன் என நல்ல சுவையுடன் கூடிய பதார்த்தங்கள் பசிக்கு இரையாகின. விஷாக் கொஞ்ச நேரத்திலேயே பாலாவின் குழந்தைகளோடு சகஜமாய் பசக ஆரம்பித்தார். பொழுது இனிமையாய் செல்ல ஆரம்பித்தது.
மாலையில் அவரின் கொல்லைக்கு அழைத்து சென்றார். முதன் முறையாய் பாஸ்மதி விளைவித்திருப்பதைக் காட்டினார். எல்லாம் நெல் வயல்கள் விளைந்து அறுவடைக்கு தயாராய். மீன் வளர்க்கும் மீன் குட்டை இரண்டினை வைத்திருக்கிறார். குழந்தைகள் எல்லாம் கொண்டு சென்ற பந்துகளோடு விளையாட நாங்கள் வயல் வெளியினைச் சுற்றி வந்தோம்.
அடுத்த நாள். நிறைய பேசினோம். சிதம்பரம் அழைத்து சென்று அவரின் சொந்த ஊரினை, அண்ணாமலை பல்கலைக் கழகத்தை சுற்றி காண்பித்தார். தில்லைக் காளிக்கோவிலுக்கு அழைத்து சென்று 'தலைவரே இனி எல்லாம் உங்களுக்கு நல்லதாக நடக்கும்' எனச் சொல்லி சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார்.
மதியம் நண்டு, ஆம்லேட் என சரியான கவனிப்பு, சகோதரியின் கைப்பக்குவத்தில் சமையல் அற்புதமாய் இருந்தது. . 'வாழ்க்கையில் ஃபர்ஸ்ட் டைம் சாப்பிடுகிறேன், பிஷ் மாதிரியே இருக்கு' என சொல்லி விஷாக் ரசித்து சாப்பிட்டார்.
என் இனிய பாலாவிடம் நிறைய பேசி, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டு மனம் முழுதும் நிறைவாய் மாலை மூன்று மணியளவில் கிளம்பினோம். குடும்பத்தோடு எல்லோரும் சிதம்பரம் வந்து எங்களை வழியனுப்பி வைக்க, வரும்போது சந்தித்த ரேணுகா அம்மா சேலம் செல்ல அதே பஸ்ஸில். சந்தோஷமாய் பேசியவாறு ஆத்தூர் வந்து சேர்ந்தோம்.
'அப்பா, அடுத்த முறை பாலா மாமா வீட்டுக்குப் போனால் அட்லீஸ்ட் ஒன் வீக் ஸ்டே பண்ணனும்' விஷாக் என்னிடம் வேண்டுகோளாய்...
மிச்சர்கடை
4 weeks ago
6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
வாங்க வாங்க, இந்தியாவுக்கு வந்ததும் எழுதறதை மறந்திட்டீங்களோன்னு நினைச்சிட்டிருந்தேன். :-)
ப்ச். நீந்துரது, ஓடுறது, அது போடுறது,ஊர்ரதுன்னு ஒரு புடி புடிச்சாச்சி. நெதானமா தங்கி நடக்கறது பறக்கரதையும் ஒரு கை பார்த்திருக்க வேணாமா:)
ம்ம்.. பயணம் நிதானமாக...
எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்.
Nice reading your blog sir :)
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்குள்!!
என்றும் நட்புடன்..
வைகறை
வாருங்கள்: www.nathikkarail.blogspot.com
Nice Info Keep it up!
Home Based new online jobs 2011
Latest Google Adsense Approval Tricks 2011
Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
New google adsense , google adsense tricks , approval adsense accounts,
latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,
Quick adsense accounts ...
More info Call - 9994251082
Contact My Mail ID- Bharathidasan88@gmail.com
Post a Comment