வெறுமை

|

தாயோடு இயைந்த
சேயது வெளியில்
சுகமாய் வந்தபின்
கருவறை வெறுமை..

தேர்வுகள் முடித்து
திரும்ப வரும்வரை
ஆர்ப்பாட்டம் அடங்கி
வகுப்பறை வெறுமை

தேர்தலின் தோல்வி
திரும்பவும் பதவி
வருடங்கள் ஐந்தாம்
வாட்டிடும் வெறுமை...

காலையில் பட்டினி
மதியமும் தொடர
கனவு வாழ்வினில்
காண்பதெல்லாம் வெறுமை

காசுக்கு கண்டதும்
கவிதையாய் மாற
கற்பனைக் குறைவால்
கவிதையில் வெறுமை...

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா இருக்குங்க பிரபாகர்.

ஒவ்வொரு வெறுமைக்கும் ஒவ்வொரு அர்த்தம்..

settaikkaran said...

சில நாட்களாய் உங்கள் வலைப்பூவில் (நீங்கள் எழுதாததால்) இருந்த வெறுமையை நீக்கி விட்டீர்கள் நண்பரே!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

என்னமோ போங்க..!!

sathishsangkavi.blogspot.com said...

//காலையில் பட்டினி
மதியமும் தொடர
கனவு வாழ்வினில்
காண்பதெல்லாம் வெறுமை//

உண்மை தான்...

ரொம்ப நாளைக்கு அப்புறம் மீண்டும் வலைப்பதிவில் பங்காளி...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

""""""""காலையில் பட்டினி
மதியமும் தொடர
கனவு வாழ்வினில்
காண்பதெல்லாம் வெறுமை"""""

உண்மை.. கவதை நல்லாயிருக்கு...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB