சங்கமத்திற்கு செல்லும்போது ஓட்டுநரைக் கேட்டு ஒளி & ஒலி கண்டிப்பாய் இருக்காது என தெரிந்துகொண்டு தான் பேருந்தில் அவருக்குப் பின்னே இரு இருக்கை தள்ளி அமர்ந்தேன். ஐ போனில் இருந்த ஒரு ஆங்கிலப் படத்தைப் பார்க்கலாமென உத்தேசித்திருந்தேன்.
பேருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் என் பக்கத்தில் இருந்தவர் நடத்துனரை அழைத்து ஏன் படம் போடவில்லை எனக் கேட்க கேள்வியின் தொனியிலேயே அதெல்லாம் போட முடியாது எனச்சொன்னார்.
விவாதம் சூடாக ஓட்டுநர் கடுப்பாகி 'என்ன சவுண்டு அதிகமா இருக்கு, ஏறும் போதே ஒரு ஆளு படம் போடலைன்னாதான் ஏறுவேங்கற மாதிரி கேட்டுட்டு ஏர்றாரு, நீ படம் போட்டுத்தான் ஆகனும்னு சொல்ற, என்ன எல்லாரும் வெளையாடறீங்களா', என சூடாகச் சொல்ல பக்கத்திலிருந்தவர் அமைதியானார். சற்று பொறுத்து மெதுவாய் என்னிடம் 'படம் போடமாட்டாங்களான்னு கேட்டுட்டு ஏற்ன அந்த ஆளு யாராயிருக்கும்' எனக்கேட்டார். அதன்பிறகு பாட்டினைக்கூட நான் கேட்கவில்லை...
*********************
சித்தப்பா வீட்டிற்கு சென்றிருந்தேன். சித்தி சூடாக பலகாரம் செய்து தர, பாயில் அமர்ந்தவண்ணம் சாப்பிட்டுக்கொண்டு சேரில் அமர்ந்திருந்த சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். மெகா டிவியில் பழைய சிவாஜி படப் பாடல்களை ரசித்துக் கொண்டு நான் சொல்வதையும் கேட்டுக்கொண்டு இருந்தார்.
அவருக்குப் பிடித்தமான விஷயத்தைப் பற்றி (சர்வே விஷயமாய்) ஆரம்பிக்க சுவராஸ்யமாகி தம்பி விவேக்கை டிவி வால்யூமைக் குறைக்கச் சொன்னார். 'அப்பா ரிமோட் உங்ககிட்டதான் இருக்கு' எனச் சொல்ல 'கையில சவுண்ட கம்மி பண்ணு' எனச் சொன்னார்.
*********************
ஊரில் இருந்து வந்த சில நாட்கள் விஷாக்-குடன் இருக்க இயலவில்லை, சங்கமம், நண்பர்கள் என கொஞ்சம் பிஸியாயிருந்தேன். அவருக்கு விடுமுறை இல்லை என்பதால் உடன் அழைத்துச் செல்லவும் இயலவில்லை. விஷாக் என் அம்மாவிடம் சென்று 'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க' என்று சொல்ல, முதலில் அவர்களுக்கு புரியவில்லை. புரிந்து அம்மா என்னிடம் சொல்லி புளகாங்கிதப் பட்டுக்கொண்டார்.
மிச்சர்கடை
4 weeks ago
6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
//'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க'//
இன்றைக்கு குழந்தைகளின் கேள்விக்கு நாம் பதில் சொல்ல முடியாது பங்காளி...
இன்னும் ஒரு வாரம் லீவ் போட்டுட்டு மகனுடன் நேரத்தை செலவழியுங்கள்..
///'ஆயா உங்க மகனை அவரோட மகன் கூடயும் கொஞ்சம் இருக்கச்சொல்லுங்க'///
அப்புறம் சங்கமமா முக்கியம். மகனோட செலவு பண்றதை விட்டுப்புட்டு.
திரும்பும்போது இப்படி விசாரிச்சிட்டு ஏறலையோ?
சிங்கை வெறிச்சோடிவிட்டது..
எப்போது வருவீர்கள்?..
வரும்போது மறக்காமல், (0) வாங்கிவரவும்..
என்னாது சின்னப்புள்ளத்தனமாயிருக்குதுன்னு சினிமாவுலே தான் காமெடி பண்ணலாம். மெய்யாலுமே புள்ளைங்க யோசிக்கிற ரேஞ்சே வேறே நண்பரே! :-)
||கொஞ்சம் பிஸியாயிருந்தேன்||
பின்ன ஊருக்கு வந்தவுடனே ஒலகப்படம் பாக்க போனோம்ல! இல்லாட்டி கெரமாம் ’போர்’ அடிக்குதே!
Post a Comment