சென்றவருடம் ஒவ்வொரு நிகழ்வையும் செல்பேசியில் கதிர், ஆரூரன், பழமைபேசி அண்ணா என எல்லோரிடமும் பேசி சந்தோசித்த நாம் இந்த வருடம் கலந்துகொள்ளப் போகிறோம் என எண்ணும்போதே மனதிற்குள் மெல்லிய சந்தோச உணர்வுகள் தலைத்தூக்க, எதிர்ப்பார்ப்புகள் என்னுள் எழ ஆரம்பித்தன.
ஈரோடு ஒன்றும் நமக்கு புதிதல்ல, ஆறு மாதங்கள் பார்த்த வேலை, ஜூனியரோடு பதிவர்களை சந்தித்த அனுபவம் என இருக்க கிளம்பினேன். மாலை ஐந்து மணிக்கு ‘பங்காளி’ என பாசத்தோடு பேருந்து நிலையத்திலேயே சங்கவியை சந்தித்தேன்.
அப்பாவை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துவந்திருந்தார். அவரோடு மருத்துவமனைக்கு சென்று சந்தித்து வணக்கம் சொல்லி சிற்றுண்டி முடித்து ஆட்டோவில் விழா நடக்கும் சாயம் & கெமிக்கல்ஸ் மண்டபத்திற்க்கு கிளம்பினேன். ஆட்டோ நெருங்கவதற்குள் எதிரிலேயே வரவேற்க கதிர் வந்தார். ஆட்டோவை பாதியிலேயே அனுப்பி அவருடன் மண்டபம் செல்ல, தாமோதர் அண்ணா, ஆரூரன், ஜாஃபர், பாலாசி, ராஜா என எல்லோரையும் சந்தித்தேன்.
முட்டை தோசை, கறிக்குழம்பு என அற்புதமான இரவு உணவு. உணவின் சுவையோடு பரிமாறிய அன்பும் கலந்து இருந்ததால் தேவாமிர்தம். முடித்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஷண்முகா லாட்ஜிற்கு சங்கவி, கா.பா, ஸ்ரீராமோடு சென்றோம். அங்கு ஏற்கனவே தங்கியிருந்த குடந்தையூர் வலைப்பூவை வைத்திருக்கும் சரவணன் தங்கியிருந்த அறையில் சங்கவியும் நானும் இணைந்து கொண்டோம்.
சரவணன் புதிதாய் வலைப்பூவுக்கு வந்த அதீத ஆர்வத்துடன் இருந்தார். நிறைய பேசினோம், நெடு நாட்கள் பழகிய உணர்வு. காலையில் கிளம்பி அம்மா மகி கிரானி அவர்களை சந்திக்க, இன்ப அதிர்ச்சி. எல்லா வலைப்பூக்களையும் படிக்கும் அவர் எனது எழுத்துக்களைப் படித்து எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருந்து வாஞ்சையாய் பேச ஆரம்பித்தார்.
மீண்டும் மண்டபம், காலை உணவு. இட்லி, தோசை தக்காளி குருமாவோடு இதுவரை கேள்விப்படாத முட்டை பூரி. ரசித்து ருசித்து சாப்பிட்டோம். விழா இனிதே ஆரம்பிக்க புகைப்படம் எடுக்க ஆயத்தமானேன். ஆரூரன் ‘பிரபா இதைப் படியுங்களேன்’ என ஒரு துண்டுச்சீட்டை நீட்ட படித்தேன். ‘சரி, இந்த தமிழ் வணக்கத்தை படித்துவிடுங்கள்’ என அன்புக்கட்டளையிட அதை படித்தலோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
நிகழ்ச்சிகள் பற்றிய தெளிவான விவரங்கள் கதிரின் இடுகையில். இன்னும் சில விவரங்கள் பங்காளி சங்கவியிடமிருந்து.
அய்யா முருகன் அவர்கள் பேசும்போது குறிப்பெடுத்துக்கொண்டிருந்த பரிசல் அண்ணாவைக் கவனித்தேன். என்ன அழகாய் தொகுத்த்திருக்கிறார் என்பதை இங்கு பாருங்கள்.
நிறைய எழுதலாம். நீளம் கருதி விழாத்துளிகளாய் கீழே…
சுறுசுறுப்பான ஜாஃபர், பாலாசி, ராஜா, கணபதி ஆகியோரைப் பார்க்கும்போது நமக்கும் உற்சாகம் பற்றிக்கொள்ளும்போல் இருந்தது. தேனிக்களைக்கூட இவர்களுக்கு உதாரணம் சொல்ல இயலாது, அதற்கும் மேல்.
கண்டிப்பு, மெலிதான கடுமை, அவ்வப்போது சிரிப்பு என இருந்த கதிர். விழா நாயகர் அல்லவா, சரிவர முடிக்கவேண்டுமே என கவனத்தில் இருந்தார்.
கலகலக்க வைத்த கந்ததாமி அய்யா, எல்லா நிகழ்வுகளையும் கேமிராவால் சுட்டுக்கொண்டிருதார். இவரின் பகிர்வினை இங்கே பாருங்களேன்...
ஸ்டார் ஆஃப் த ஷோ என் இனிய ஜாக்கி அண்ணா, ’டேய் மச்சி’ என ஆரம்பித்து சொந்த உறவாய். என்ன ஒரு கைத்தட்டல் அவர் பேசும்போது… அவர் பேசினால் எல்லோரும் கவனிக்கிறார்கள் என்பதே அவரின் வெற்றி.
கனிவாய் சீனா அய்யா, அம்மா, கார்த்திகை பாண்டியன், ஸ்ரீராம். கலக்கலாய் பரிசல் அண்ணா, வெயிலான்.
புகைப்படம் எடுப்பது எப்படி என எனக்கு சொல்லித்தந்த கார்த்தி, சுரேஷ். நிறைய கற்றுக்கொண்டேன் பாஸ். விரைவில் உங்கள் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.
இயல்பாய், ஆளுமையோடு ஆரூரன், பாசத்தோடு தாமோதர் அண்ணா.
ஒரு ருபாய் சாப்பாடு வெங்கடேசன் அண்ணா கடையில் பரோட்டா இரவு உணவு, இரவு கதிரின் வீட்டில் தங்கி காலையில் டிஃபன் முடித்து இந்த இடுகையினை இட்டு மனம் நிறைய சந்தோஷங்களை மட்டும் நிரப்பிகொண்டு கிளம்பும் நான் உண்மையில் பாக்கியசாலி.
இறுதியாய் எல்லோருக்கும் எனது நன்றியைச் சொல்லி, இதையெல்லாம் ஏதுவாய் செய்த வலையுலகத்திற்கு தலைவணங்கி, இது போன்ற நிகழ்வுகளில் எப்போதும் கலந்துகொள்ள இறைவன் அருள் புரியவேண்டும் என இறைஞ்சி பயணிக்கிறேன்...
(எனது மற்றும் கதிரின் கேமிராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு பாருங்களேன்...)
மிச்சர்கடை
4 weeks ago
14 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
மகிழ்ச்சிங்க பிரபாகர்.
மகிழ்வாய் உணர்கிறேன்...
ஆமா, மெருகு கூடியிருக்கு உங்க முகத்துல; பாசக்கார ஊர்க்காரவுகளைப் பார்த்ததும் அப்படி ஆயிடிச்சோ??
பங்காளி,
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி... இரவு தூங்காமல் விடிய விடிய பேசியதில் மிக்க மகிழ்ச்சி...
நீங்களும் ரொம்ப அழகா சொல்லிருக்கீங்க .!
இந்த வாய்ப்பை தவற விட்ட வருத்தம் தான் மிஞ்சுகிறது...
உங்களை பார்க்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி பிரபு . தனியாக சிங்கபூருக்கெல்லாம் வர முடியாது இல்லையா . காலை ஐந்து மணிக்கே மொபைலில் தொடர்பு கொண்டவுடன் பதில் பேசிய பிரிய பாலாசி , lodge இல் அந்நேரத்துக்கு ரெடியாக இருந்த அன்பு jaffar , ( சென்னை வந்து சேர்ந்த தகவலையும் கேட்டு தெரிந்து கொண்டார் பின்னர்). பதிவர்கள் குறிப்பிட்டு இருந்ததைப்போல் ஓடி ஓடி வேலை செய்த ஈரோடு வலைபதிவர்கள் அனைவருக்கும் மனதார நன்றி சொல்லிக் கொள்கிறேன். ( நான் முருங்கக்காய் கட்டுடன் பார்த்தது பாலசியை மட்டும் ) மற்றவர்களும்சேர்ந்து கூட்டாக வேலை செய்ததால் மட்டுமே இது சத்தியமாகிருக்கிறது .நன்றி மக்களே.
kalanthu kolla mudiyamal poivitthatu.. personall velaiyal..
இப்பதான் பாதி தோசைன்னு பறந்ததுக்கு அர்த்தம் புரியுது:))
சந்திப்பு குறித்த இடுகைகளை வாசிக்க வாசிக்க, கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமாகவும் இருக்கிறது. அதிலும், சாப்பாட்டு மெனு அறிந்ததிலிருந்து ஏ...க்கமாய் இருக்கிறது. :-)
அண்ணா.. ரொம்ப சந்தோஷம்.. எங்களோட தோளுக்கு வலுசேர்த்த உங்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்கிறேன்.
சூப்பர் தம்பி அசத்தி புட்ட.. ரொம்ப நன்றி.. நல்ல நினைவுகள்..
நல்லாருக்கீங்களா பிரபா. ஈரோடு சங்கமத்துல அசத்தியிருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளும் அன்பும்.
பகிர்வுக்கு நன்றி.
nalla ninaivukaLai pakirnthukontathaRku nanRi
பகிர்வுக்கு நன்றி.
உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி இரவு தூங்காமல் விடிய விடிய பேசியதில் மகிழ்ச்சி
Post a Comment