கதையின் கதை...

|

இளங்கலை கணிப்பான் பொறியியல் முடித்த சமயத்தில் எழுதவேண்டுமென ஆர்வம் மிக அதிகமாய் இருந்தது. சட்டைப் பையில் பேனாவும் மடித்து வைக்கப்பட்ட ஒரு தாளும் எப்போதும் இருக்கும். ஏதேனும் தோன்றினால் உடன் குறிப்பெடுத்து வைக்கவேண்டுமல்லவா?

நிறைய யோசித்து ‘பிளாக்மெயில்’ (முந்தைய இடுகை) என்று பல தாள்களை வீணாக்கி, மாற்றங்கள் செய்து ஒரு வழியாய் எனது முதல் சிறுகதையை எழுதி முடித்தேன். கையெழுத்துப் பிரதியான அதை பலரிடம் கொடுத்து படித்து கருத்து சொல்லச் சொல்ல வந்த விமர்சனங்களைப் பாருங்களேன்...

‘இதெல்லாம் ஒரு கதையா?’ ஒரு சீனியர்.

‘படிக்க எல்லாம் பொறுமை இல்ல, அப்படியே படிச்சி காட்டு மச்சி’. ஆர்வமாய் படித்துக்காட்ட, ’நீ பிறவிக் கலைஞன் - டா, இனிமே வாழ்க்கையிலயே கதை அது இதுன்னு படிச்சி காட்டாத’ அறைத்தோழன்.

பக்கத்தில் இருந்த இன்னொருவன் ஆரம்பித்தவுடன் தூங்கி, முடிக்கும்போது முழித்து வாயோர எச்சிலைத் துடைத்து ‘கதை சூப்பர்-டா’

‘இது சமூக நாவல் மாதிரி இருக்கு, க்ரைம், ப்ளாக்மெயில்-னு ட்ரை பண்ணுடா’ பால்ய நண்பன் மணி.

‘கவிதை சூப்பரா இருக்கு’(பாவி மக்கா படிச்சிப் பாக்காமயே வழக்கமா தர்ற கவிதைன்னு டெம்ப்ளேட் விமர்சனமா?)-வெங்கடேசன்.

படித்து பாருங்கள் எனச் சொல்லி கொடுத்து, அடுத்த நாள் எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு, ’அற்புதமா இருக்கு. எழுத்தாளரா வரவேண்டியன் நீ... அப்படியே மறக்காம கரெண்ட் பில் கட்டிடு’ கடைக்கார மாமா...

‘இந்த ஆர்வத்த படிப்பில காட்டியிருக்கனும்’ மாமா.

’நல்லாருக்கு, எங்கிட்ட இருக்கட்டும், நீ தொலைச்சிடுவே’ வருங்கால டைரக்டாக ஆவதற்கு ஆயத்தமாயிருந்த இப்போது எனக்கு அந்த காப்பியை அனுப்பி வைத்து எழுத உதவிய என் நண்பன் வேல்முருகன்.

படிச்சிட்டீங்கல்ல!... நீங்க என்ன சொல்றீங்க?

5 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

/படிச்சிட்டீங்கல்ல!... நீங்க என்ன சொல்றீங்க?/

எழுதிட்டீங்கல்ல!...நீங்க ஏன் கொல்றீங்க?:))

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹி..ஹி.. அண்ணே நாங்க என்னத்த செல்ல.. அது தான் அவங்களே சொல்லிட்டாங்களே...

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

நிலாமதி said...

அவர்கள் இந்தக் கலைஞ்சனை ....கவிஞ்சனை ....எழுத்தாளனை இனம் கண்டு கொள்ள்வில்லை. இருப்பினும் உங்கள் விடாமுயற்சி .....இதுவரை கொண்டுவந்துவிட்டு உள்ளது.இனிய புதுவருடம் அமைய என் பிரார்த்தனைகள்.வாழ்த்துக்கள்.

Admin said...

தொடர்ந்து எழுதுங்கள்... வாசிக்க அடிக்கடி வருகிறேன்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB