ப்ளாக் மெயில்...

|

அத்தியாயம் ஒன்று :

(இது தொன்னூற்று இரண்டில் எழுதிய எனது முதல் கதை. இந்த கதைக்கே ஒரு கதை இருக்கிறது, அது இதனைத் தொடர்ந்து...)

இது தேவையா என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? என்போல் தலையில் கைவைத்து உட்கார்ந்திருக்கிறீர்களா? இல்லையா? குட். நீங்களெல்லாம் பாக்கியசாலி. சரி, அப்படியே இந்த துரதிஷ்டசாலியின் கதையினைக் கொஞ்சம் கேளுங்களேன் பாஸ்...

முதலில் என்னைப் பற்றிய விவரங்களிலிருந்து ஆரம்பிக்கிறேன். ராஜாராமன், வயது முப்பத்தைந்து, மாநிறம். அழகாய் சுப்ரஜா, நான்கு வயது மகள் நல்லவேளையாய் அம்மாவின் சாயலாய் இல்லாமல் முழுக்க என்னைப்போல் இன்னும் கொஞ்சம் கலராய். நிறைய சொத்துக்களோடு வாக்கப்படப் போகிறவள். ஆனால் என்னைப்போல் அவன் இருக்கமாட்டான், கண்டிப்பாய் பெரும் அதிர்ஷ்டசாலி.

ஏன் சொல்கிறேன் என்றால் என் மனைவி நல்ல கருப்பாய் பூசிய உடம்புடன் கழுத்து நிறைய நகைகளுடன்... உங்களுக்குப் புரிவது எனக்குத் தெரிகிறது. கரெக்ட், எல்லாம் சில ஆதாயங்களுக்காக செய்த தியாகம் பாஸ். திருமணத்தின் போது சுமராய் இருந்தவள், சுப்ரஜா பிறந்ததுக்குப்பின் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாத உணவுப்பழக்கம், எல்லா வேலைகளுக்கும் ஆள் என இருந்ததால் மேற்சொன்னவாறு ஆனதால். ரொம்ப போரடிக்கிறேனா? விஷயத்துக்கு வருகிறேன்...

பேங்க்-ல் வேலை, ஆனாலும் வீட்டில் மதுரை. அவளின் ஏராளமான சொத்துக்களுக்கிடையில் என் வழியாய் வரும் வருமானங்கள் கொசு. சம்பளம் வந்தவுடன் அப்படியே கவரை அவளிடம் கொடுக்க, என் செலவுக்கென ஒரு சொற்பத் தொகையினை பரிதாபப்பட்டு தருவாள். மேற்படி தேவைப்பட்டால் அவளிடம் கெஞ்சித்தான் வாங்க வேண்டும்.

பாஸ், என்னிடம் இருக்கும் ஒரு பெரிய கெட்ட பழக்கம்... மொதல்ல ப்ராமிஸ் பண்ணுங்க, என் வைஃப்கிட்ட சொல்ல மாட்டேன் என, அப்போதுதான் சொல்லுவேன். ஓகே.... உங்களை நம்பறேன். சீட்டு பைத்தியம் நான். திருச்சியில் இருந்தாலும் மாதம் ஒருமுறை ஏதாவது சொல்லி மெட்ராஸுக்கு சென்றுவிடுவேன். சேர்த்து, கடன் வாங்கிய பணத்தோடு இரண்டு நாட்கள் மவுண்ட்ரோடில் உள்ள ஒரு லாட்ஜில். முன்பதிவு செய்த ரயிலில் ஞாயிறு இரவு கிளம்பி வழக்கத்துக்கு சென்று விடுவேன்.

எனக்கு நேரமே சரியில்லை, கொண்டு வந்த பணம் எல்லாம் காலி. கடந்த நான்கு மாத தொடர் தோல்விகளால் மொத்தக்கடன் ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. மதியம் தான் ஆகிறது, இரவு வரை என்ன செய்வது? கண்டிப்பாய் காசில்லாமல் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அறைக்கு வந்து கிளம்பி, தம்மோடு ஒரு டீ சாப்பிட வெளியே வந்த போதுதான் சிக்னலில் வெகு அருகில் நின்றிருந்த அந்த மாருதியைப் பார்த்து அதிர்ந்தேன், காரில் டிரைவர் இருக்கையில் இருந்தது மாலினி, என் மாலினி. வேறு யாராவது இருக்குமா என கூர்ந்து கவனிக்க கன்னத்தில் சிறிய மச்சத்துடன்...அவளேதான்!... மெருகு கூடி இன்னும் அழகாய் இருந்தாள். பச்சையில் வண்டி கிளம்ப உடனடியாய் எண்ணைக் குறித்துக்கொண்டேன்.

ஆர்.டி.ஓ-வில் இருக்கும் நண்பனை தொடர்புகொள்ள அவன் ஏன் பார்க்க வரவில்லை, மறந்துவிட்டாய் என்றெல்லாம் பேசி கழுத்தறுக்க, கடைசியாய் அந்த கார் பற்றிய விவரங்களை வாங்கிக்கொண்டேன். அடையாறில் இருந்தது அந்த முகவரி...

பணக்காரர்கள் மட்டுமே வசிக்கும் பகுதி என்பது ஆட்டோவில் அந்த இடத்தை நெருங்கும்போதே தெரிந்தது. பெரிய பங்களா டைப் வீடு, கேட்டிலிருந்து நிறைய உள்தள்ளி இருந்தது. கார் நிறுத்த, தோட்டம் என நிறைய இடங்களோடு விசாலமாயிருந்தது.

கேட்டில் ஆள் யாரும் இல்லை, மெதுவாய் திறந்து உள்ளே சென்று அழைப்பு மணியை அடித்தேன். சற்று கழித்து ‘கோன்’ என கேட்டவாறு திறந்த மாலினி என்னை பார்த்ததும் உடன் அடையாளம் தெரிந்து கொண்டு அதிர்ந்தாள்.

இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கு அழுத்துங்கள்...

(தொடரும்)

12 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

settaikkaran said...

வடை??
சஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்களே? :-)

Kousalya Raj said...

சிறுகதைனு சொல்லிட்டு தொடரும் போட்டுடீங்க...அப்ப இது தொடர் கதை தான். அடுத்த பாகம் எப்போது...?!!

sathishsangkavi.blogspot.com said...

பங்காளி கதை நல்ல போகுது அடுத்த பாகத்தை எதிர்பார்த்து...

ரஹீம் கஸ்ஸாலி said...

நல்லாருக்கு.....பட்டுக்கோட்டை பிராபகர் போல நீங்களும் கதையுலகில் ஜொலிக்க வாழ்த்துக்கள்.

Chitra said...

சற்றே நீளமான தொடர் "சிறு" கதையில் -- ஆரம்பமே கலக்கல்! :-)

Unknown said...

ரைட்டு..

vasu balaji said...

மேல மேல...போலாம் ரைட்.

சி.பி.செந்தில்குமார் said...

m m நடத்துங்க

சத்ரியன் said...

ப்ளாக் மெயிலா.... நடத்துங்க சாமி. நல்லாத்தான் இருக்கு!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பாலே.....

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்கு

தொடருங்க!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல நடை பிரபாகர். வேகமாகப் போகிறது கதை. இன்னும் கொஞ்சம் இந்தப் பதிவிலேயே எழுதியிருக்கலாமோ.. சீக்கிரம் முடிந்த மாதிரி உணர்வு.

அடுத்த பாகத்திற்கு வெயிட்டிங்.

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB