எங்கும் ஊழல் எதிலும் ஊழல்... பத்திரிக்கைகளைத் திறந்தால் ஸ்பெக்ட்ரம், கார்கில் வீடு ஒதுக்குதல், குடும்பத்துக்கு நிலம் ஒதுக்குதல் என பக்கத்துப் பக்கம் நாறிக்கிடக்க அதையெல்லாம் பார்த்த ராகவன் கொதித்துப்போயிருந்தார்.
டிவியிலும் அது சம்மந்தமான செய்திகளே வர, நொந்து போய் காப்பி கொடுக்கவந்த மனைவியின் மீதும், பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்கவந்த மகனின் மீதும் தேவையில்லாமல் எரிந்து விழுந்தார்.
நேராய் குளியலறைக்கு சென்றவர் சில்லென தண்ணீரில் சூடு குறைய குளித்து கொஞ்சம் மனம் லேசாகி வந்தார். வரவேற்பறையில் காத்திருந்த அந்த நபரை புன்னகைத்து கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி பூஜை அறைக்குள் நுழைந்து மனமுருக பூஜித்து மனம் லேசாகி வந்தார்.
‘மன்னிச்சிக்குங்க, ஆபிஸ் விட்டு வந்ததும் குளிச்சி பூஜை செய்யலைன்னா வேலையே ஓடாது’ என்றவர் ‘காபி கொடுத்தாங்களா?’ எனக் கேட்க
‘ஆச்சுங்க, வந்த உடனே அம்மா கொடுத்தாங்க, இந்தாங்க நீங்க கேட்டது இருக்கு’ என ஒரு கவரைக் கொடுக்க,
‘என்னய்யா, எல்லாம் சரியா இருக்குல்ல? இனி கவலைப்படாத, செவ்வாக்கிழமைக்குள்ள பர்பெஃக்டா முடிச்சிக்கொடுத்திடறேன், ஆபிஸ்ல வெச்சி வாங்கறது நம்ம ரெண்டு பேருக்குமே நல்லதில்ல அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன்’ எனச் சொல்லி ‘பாக்கியம் இத பத்திரமா பீ்ரோவில வை’ என்றார்.
𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆
3 days ago
13 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
பத்திரமா வெய்யுங்க ...தாயீ!
அருமை...
//இத பத்திரமா பீ்ரோவில வை//
திருடனுக வந்து திருடிட்டு போகட்டும்... போகும் போது லஞ்சம் வாங்குன கைய முறிச்சிட்டு போகட்டும்...
gud story.........
அருமை...
athu sari:)
நண்பரே, அது அப்படித்தான்! :-)
சொத்தக் கத்திரிக்கா - கள்ள நோட்டு மாதிரி இதுவும் சகஜம்ங்ணா!
good business... worst govt employ
athu neegalaa?
சூப்பருங்கோ.
ஹூம்..
இனி நடக்க இருப்பதை முன்கூட்டிய சொல்லியது போன்று உள்ளது தங்களின் கதை அருமை நண்பரே . மீண்டும் வருவேன்
Post a Comment