விகடம் 1.1.2

|

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். தொலைக்காட்சியின் முன் இல்லாமல் குடும்பத்தோடு சந்தோஷமாய் கோவில், நண்பர்களை வரவழைத்து, நண்பர்களின் வீடுகளுக்கு சென்று உண்மையாய் தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த சிறப்பு வாழ்த்துக்கள், வணக்கங்கள். (சிரத்தையாய் நெட்டில் இருப்போருக்கும்தான்...)

*****
இந்த சம்பவத்திலும் கதாநாயகன்(ர்) என் சித்தப்பாதான். பள்ளி விடுமுறைக்கு அவரின் மகள் சுவேதா தன் சித்தியின் வீட்டிற்கு சென்றிருக்கிறாள். சித்தியின் வீடு ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் பஸ்ஸிலிருந்து இறங்கி நடந்துதான் செல்லவேண்டும். மகள் சென்று ஒரு மாதத்திற்கும் மேல் ஆனதாலும், பள்ளி திறப்பதற்கு நாள் நெருங்கிவிட்டதாலும், அழைத்துவர சென்றிருக்கிறார்.

மகளைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகவேகமாய் சித்தப்பா செல்ல, தொலைவில் அவர் வருவதைப் பார்த்து சுவேதா அழ ஆரம்பித்திருக்கிறாள். பார்த்து நெடு நாட்களாகிவிட்டதால் பாசத்தில் அழுகிறாள் என எண்ணி சித்தப்பா மேலும் பதைபதைப்பாய் செல்ல, பக்கத்தில் சென்றவுடன் ’ஏன் வந்தீங்க, நான் உங்ககூட வரமாட்டேன்’ என இன்னும் சப்தமாய் கதறி அழ மனுஷன் நொந்து நூடூல்ஸாகிப் போனாராம்.
*****
இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும். சிங்கையில் இருந்து மனைவியுடம் ஸ்கைப் -பில் சாட் செய்வது வழக்கம். அன்று அழைத்த போது மூன்று வயதிலிருந்த என மகன் விஷாக், கம்ப்யூட்டரில் விளையாடிக்கொண்டிருக்க, எனது அழைப்பைப் பார்த்து பார்த்து, ஏற்று ஹெட் போனை காதில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ’நான் சொல்லுப்பா’ என ஆரம்பிக்க, ‘அப்பா நான் விஷாக், அம்மா இல்லை’ என சிரித்துச்சொல்ல சந்தோஷத்தில் அதிர்ந்தேன்.

‘தம்பி, உங்களுக்கு அக்சப்ட் பண்ணத்தெரியுமா? எனக் கேட்க, ‘ஓ தெரியுமே, அம்மா சொல்லிக்கொடுத்தாங்க’ எனச் சொன்னார்.

’அம்மா பாத்ரூமில் இருக்கிறாங்க, நான் கம்ப்யூட்டர்ல விளையாடிட்டிருக்கேன்’ என சொல்லிவிட்டு, ‘அப்பா தனியாவா இருக்கீங்க?’ எனக்கேட்டார்.

‘ஆமாம்பா...’ என்றவுடம், ‘உங்களுக்கு பயமா இல்லையா’ எனக் கேட்டார்.

‘இல்லை சாமி’ எனச் சொன்னேன்.

‘இல்லப்பா, எனக்கு பயமா இருக்கு அதான் கேட்டேன்’ எனச் சொன்னார்.
*****

6 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

vasu balaji said...

kids:)

எஸ்.கே said...

சம்பவங்கள் இனிமை!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த திபாவளி நல்வாழ்த்துக்கள்....

மாதேவி said...

மகனுக்கு வாழ்த்துகள் பிரபா.

butterfly Surya said...

அன்பின் பிரபா, நலமா..?

வாழ்த்துகள்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனது மற்றுமோர் வலைப்பூ எண்ணத்தை எழுதுகிறேன்.. சென்றும் பாருங்களேன்...
//


பார்த்தேண்ணே.. யாரோ பயபுள்ளையோட இள வயசு போட்டோ போட்டிருக்கீங்க..

கடைசியா பதிவ போட்டது ஜூலை 12..


அப்படீனா, நாலு மாசத்துக்கு ஒரு தடவை பதிவ போடுறீங்க..

அப்பால எதுக்கு லிங்க்..?

ஒண்ணு புது பதிவ போடனும்.. இல்ல லிங்க எடுத்து விடனும்..

ஹி..ஹி

( அண்ணே .. எங்கிட்ட ஒரு சூப்பர் கவிதை இருக்கு.. திருடிடுவானுகனு பேங்க லாக்கர்ல வெச்சுருக்கேன். நீங்க ப்ரியா இருந்தா மிஸ்ட் கால் கொடுங்க. தகுந்த பாதுகாப்போட கொண்டு வரேன்..)

இது ரோஸ்விக்க்கு தெரியகூடாது.. சொல்லீட்டேன்...

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB