கசியும் மௌனம் - பிறந்தநாள் வாழ்த்து...

|

(கசியும் மவுனம் வலைப்பூவின் மூன்றாமாண்டு பிறந்தநாள் வாழ்த்து)

கசியும் மவுனத்தில்
கருத்தாய் கவிதைகள்
கண்ணுற்ற நண்பர்
கண்டிடச் சொல்ல
கண்டேன், வியந்தேன்...

ஈரோடு கதிரென
எழுச்சியாய் இடுகைகள்
இணைந்தேன் மகிழ்ந்தேன்
அன்றலர்ந்த நட்பு
ஆலமர விழுதாய்...

கண் தானம்பற்றி
கருத்தாய் எழுதி
மண் பெருமையை
மனிததோடு நினைந்து
மரம் நடுதலை
மகிழ்ந்து பகிர்ந்தீர்

உம்மால், உமது நட்பால்
மனம் நிறைந்து
இன்னும் பல
இனிதாய் எழுத
இறையை வேண்டுகிறேன்...

பிரபாகர்..

27 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:

குடுகுடுப்பை said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பழமைபேசி said...

வாழ்த்துகள்; ஆனா சின்ன குழப்பம்... இரண்டாம் ஆண்டா அல்லது மூன்றாம் ஆண்டா??

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துக்கள் !

பிரபாகர் said...

இரண்டாண்டு முடித்து மூன்றில் கால் வைக்கிறார் அண்ணே!...

பழமைபேசி said...

கால், கை வெக்கிறதெல்லாம் வேண்டாம்... எத்தனையாவது பிறந்த நாள்? அதைச் சொல்லுங்க...

ஈரோடு கதிர் said...

||மூன்றில் கால் வைக்கிறார்||

காலெல்லாம் வைக்கல அண்ணே!

கீபோர்டு விரல் வைக்கிறான்னு சொல்லுங்கண்ணே!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரபா!!!

ஆனா...
நான் ஒரு பச்ச மண்ணு பார்த்து பகுமானமா வாழ்த்துங்கண்ணே!

குடுகுடுப்பை said...

நான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.

vasu balaji said...

/நான் ஒரு பச்ச மண்ணு பார்த்து பகுமானமா வாழ்த்துங்கண்ணே!/

சுட்டமண்ணு ஒட்டாது பச்ச மண்ணுதான் சரின்னு தண்ணி தெளிச்சி மிதிப்பாங்க பர்வால்லியா:)).

வாழ்த்துகள் கதிர். நன்றி பிரவு.

sathishsangkavi.blogspot.com said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

settaikkaran said...

கசியும் மவுனம் கதிருக்கு நல்வாழ்த்துகள்

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.

NOVEMBER 23, 2010 11:36 PM
//

அப்ப இதென்ன பொய்யா? இதுவும் மெய்தானுப்பு...

நசரேயன் said...

//நான் உண்மையான பிறந்த நாள்னு நினைச்சிட்டேன்.//

தலைப்பை பார்த்த உடனே இடுகைய படிக்காம வாழ்த்து சொன்னா இப்பத்தான்

நசரேயன் said...

//அப்ப இதென்ன பொய்யா? இதுவும் மெய்தானுப்பு...//

மெய்யோ .. பொய்யோ மொய் வச்சாச்சி

ILA (a) இளா said...

வாழ்த்த வயசில்லை, குப்புறவுழுந்து கும்பிட்டுகிறேன்

Unknown said...

வாழ்த்துகள் கதிர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள் கதிர்.

நிலாமதி said...

மூன்றாம் ஆண்டில் காலடி
வைக்கும் கசியும் மெளனத்துக்கு
( வலைதளத்துக்கும், ஆசிரியருக்கும்) வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

வடைக்கு மொதல்ல வர்ற நம்மலால, வாழ்த்தறதுக்கு வரத்தான் தாமதமாயிடுச்சி.

’கசியும் மெளனம்’கதிருக்கு சத்தமா பிறந்தநாள் வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அன்பு கதிருக்கு நல்வாழ்த்துகள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துகள் கதிர் அண்ணா..

சங்கரியின் செய்திகள்.. said...

கதிருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

congrats...

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகளைச் சொன்ன அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள்!

ஈரோடு கதிர் said...

||வாழ்த்த வயசில்லை, குப்புறவுழுந்து கும்பிட்டுகிறேன்||

இளா,
வலையில் நீங்கதான் மூத்தவர்...

கோலா பூரி. said...

வலைத்தளத்துக்கும் ஆசிரியருக்கும்
வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

ஆருயிர் கதி்ரின் கசியும் மௌனத்தை வாழ்த்திய எல்லா நண்பர்களுக்கும் மனப்பூர்வமான நன்றி...

பிரபாகர்...

Prabakaran said...

yanakum blog create panna aasai hhelp panna mudiuma

ngl_prabakaran@yahoo.co.in

 

©2009 ”வாழ்க்கை வாழ்வதற்கே” | Template Blue by TNB