எந்திரன் பற்றி எல்லோரும் பிரித்து அலசிவிட்டதால் நம் பங்குக்கும் பார்த்ததை பகிர்ந்துகொள்ளலாமென இந்த இடுகை.
பிடித்த விஷயங்கள்:
ரஜினி - இந்த வயதிலும் தலைவர் துள்ளலாய் அசத்தியிருப்பது.
ஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.
ஏ.ஆர்.ரஹ்மான் - இசையால் படம் முழுதும் ஆள்வது.
கிளிமாஞ்சாரோ பாடல் - எடுத்த விதம், ஐஸ்வர்யாவின் நடனம் அத்தோடு தலைவரின் பெர்ஃபார்மன்ஸ்.
சங்கர் - இதுபோல் பிரம்மாண்டமாய் ஒரு தமிழ்ப்படம் எடுக்கமுடியுமென நிரூபித்துக் காட்டியது.
ரத்தினவேலு - கண்களுக்கு இதமான, அழகான காட்சிகளை கேமிராவில் சிறைபிடித்தது.
வசனம் - தலைவர் சுஜாதாவல் எழுதப்பட்டது என தனித்து தெரியும் வசனங்கள் மட்டும்.
கிளைமாக்ஸ் - அடிக்க வராதீங்க... காமெடி இல்லை என்ற குறையை தீர்த்ததனால்.
பிடிக்காத விஷயங்கள்:
விளம்பரம் - எரிச்சலூட்டும் வண்ணம் திரும்பத் திரும்ப போரடிக்கும் வண்ணம் இருப்பது.
சந்தானம் & கருணாஸ் : வரும் ஒரு சில காட்சிகளிலும் சூப்பராய் சொதப்புவது.
சன் பிக்சர்ஸ் - ரொம்பவும் ஓவாராய் பீத்திக்கொள்வது.
டிக்கெட் விலை - பத்து டாலருக்கு இருந்த டிக்கெட் விலை பதினைந்தாக ஆனது.
கொசு பிடித்தல் - ரஜினி கொசுபிடிக்கும் காட்சி... ரொம்பவும் நெளிய வைத்தது. இந்த சீனுக்கு ஐடியா கொடுத்தவருக்கு நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யவேண்டும்.
புறக்கணிப்பு - சுஜாதாவின் பங்களிப்பினை மிக லேசாய் சொல்லி, மறந்தது.
சனி இரவு என்பதால் அரங்கு தொன்னூறு சதம் நிறைந்திருந்தது, நிறைய தமிழர்களும் பார்த்தார்கள். எந்தவொரு சப்தமும் இல்லாமல் பார்த்த முதல் ரஜினி படம். மொத்தத்தில் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களையும் நிறைய கவரும்.
3 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
எந்திரன் பார்த்தவைங்கள்ளாம் ஒரு மார்க்கமாத்தான் திரியிறாய்ங்க. நீருமா:))
ஐஸ்வர்யா - என் வயதிலும் இன்னும் அழகாயிருப்பது.
//
அடப்பாவிகளா.. நீர் 18 முடிஞ்சு..19 வயசுல நுழைஞ்சிருக்கீங்கனு நினச்சேன்...
சீனியர் சிட்டிஷனா?...
வணக்கம் அண்ணாத்தே...
வணக்கம் இந்த பின்னுட்டம் இந்த பதிவுக்கு இல்லை
Post a Comment