ரமேஷுக்கு தலை கால் புரியாமல் இருந்தான். சும்மாவா, நான்கு மாதமாய் உருகி உருகி காதலித்த வித்யா காதலுக்கு ஓகே சொன்னது மட்டுமல்லாமல் மனம் விட்டு பேசுவதற்கு மாலை கடற்கரைக்கும் வரச் சொல்லியிருக்கிறாள்.
அடிக்கடி கிள்ளிப் பார்த்துக்கொண்டான். நல்லவேளை பெரிதாய் ஏதும் வேலை இல்லை. புது ப்ராஜெக்ட் விஷயமாய் படிக்க மட்டும் சொல்லியிருந்தார்கள். கம்ப்யூட்டர், கையில், மொபைலில், சுவற்றில் என பலவாறு நேரத்தை தவிப்போடு பார்த்துக்கொண்டிருந்தான்.
கடற்கரை, கூட்டம் வர ஆரம்பித்த மாலை நேரம். மிக அழகாய் வித்யா, அவளைப்பார்த்தவண்ணம் ரமேஷ்.
'தேங்க்ஸ் வித்யா, பேச்சே வரலை, தேங்க்ஸ்.... தேங்க் யூ சோ மச்'... என நிறைய 'தேன்க்'க ஆகா பரவாயில்லை அருமையான காதல் ஜோடி என நீங்கள் நினைப்பது தெரிகிறது. நானும்தான் நினைத்தேன், அடுத்து நடந்த உரையாடல்களை கேட்கும் வரை.
'உங்களுக்கு பிடித்த நடிகை யார்?', முதலில் அவள் ஆரம்பிக்க பதிலுக்கு அவன் 'லேடிஸ் ஃபர்ஸ்ட், உனக்கு பிடித்த நடிகரை நீ முதல்ல சொல்லு' என்று கேட்டான்.
'எனக்கு சூர்யான்ன உயிரு. ஹி இஸ் ஹேண்ட்சம், ஃபர்ஸ்ட் சிக்ஸ் பேக் ஆக்டர் சவுத் இந்தியாவில இருந்து... அவரோட ஸ்டைலு, ஆக்டிங், ஃபைட், வாவ் ஆவ்சம். அவரு கல்யாணம் பண்ணிகிட்ட அன்னிக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா? ரெண்டு நாள் சாப்பிடவே இல்ல. அவரைப் பத்தின எல்லா விவரமும் துல்லியமா தெரியும். ஜோதிகாவ எனக்கு ரொம்ப பிடிக்கும், சூர்யாவ கல்யாணம் பண்ற வரைக்கும். நவ் ஐ ஹேட் ஹெர்'
'வெயிட், வெயிட்... நடிகர பிடிக்கலாம் ஆனா இந்த அளவுக்கா'
'ஆமாங்க, தப்பா நினைச்சிக்காதீங்க... சூர்யாவுக்காக நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்கள கூட எனக்கு பிடிச்சதுக்கு காரணம், சூர்யாவோட சாயல் லேசா இருக்கு'
'ஓ..., என்ன பிடிச்சதுக்கு அதான் காரணமா? சரி அதுக்கு ஏன் நாலு மாசம் எடுத்துகிட்ட?'
'உங்களோட வேலை பத்துன விவரங்கள், வசதி வாய்ப்புன்னு எல்லா விவரமும் எனக்கு தெளிவா தெரியிற வரைக்கும் காத்திருந்தேன், தெரிஞ்சது, ஓகே சொல்லிட்டேன்... சரி உங்களுக்கு பிடிச்ச நடிகை'
'நீதான், தேங்க்ஸ்... பை' எனச் சொல்லி எழுந்து மணலை வெறுப்பாய் தட்டிவிட்டுக்கொண்டு ஊசி குத்திய பலூன் போல உற்சாகமின்றி நடந்தான்.
இந்த முடிவு பிடிக்கவில்லை என்றால் இன்னொன்று கீழே. படித்து உங்களின் கருத்தை பின்னூட்டுங்களேன்...
அவன் சென்றதும் கொஞ்சம் தொலைவிலிருந்த அவளின் தோழிகள் அவளருகே வர, 'இல்லப்பா ஒத்து வராது. ஆளு ரொம்ப பொசசிவ், முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு'
இந்த இடுகை உங்களுக்கு பிடிச்சிருந்தா என்னை மேம்படுத்த உங்க கருத்துக்களையும், உற்சாகப்படுத்த ஓட்டையும் போடுங்களேன்!
52 : பேர் படிச்சிட்டு சொல்றாங்க...:
ரெண்டு முடிவுமே நல்லா இருக்கு.
//கடற்கரை, மாலை நேரம். கூட்டம் வர ஆரம்பித்த நேரம். மிக அழகாய் நித்யா, அவளைப்பார்த்தவண்ணம் ரமேஷ்.//
இங்கே மட்டும் நித்யான்னு இருக்கு.
சின்ன அம்மணி....ரொம்ப நன்றிங்க... திருத்திடறேன்...
ரெண்டும் ஓகேதான்
ஹைய்.....
இரண்டு முடிவுங்கறது சூப்பரா இருக்கே...
சின்னகதை
ரசித்தேன்
பாராட்டுகள் பிரபா
பிரபாகர், குட்டி குமுதம் கதை. நல்லா இருக்கு.
இந்த பத்தி தேவையில்லை.
***
இந்த முடிவு பிடிக்கவில்லை என்றால் இன்னொன்று கீழே. படித்து உங்களின் கருத்தை பின்னூட்டுங்களேன்...
***
ஒரே ஆளே வேறுவிதமா ரியாக்ட் பண்ணினா தான் ரெண்டு முடிவுன்னு சொல்லலாம். அவன் போனவன் போனவன் தான !
//'நீதான், தேங்க்ஸ்... பை' எனச் சொல்லி எழுந்து மணலை வெறுப்பாய் தட்டிவிட்டுக்கொண்டு ஊசி குத்திய பலூன் போல உற்சாகமின்றி நடந்தான்.//
எனக்கு இந்த முடிவுதான் பிடித்திருக்கிறது..நல்ல கதை நண்பரே..
கவிதையில் கலக்கி
கதையில் அசத்துகிறீர்!
கதிருக்கு எச்சரிக்கை
கட்டுரைக்கும் சவால்!
நாங்களும் கவிதை(?)யில் பின்னூட்டம் ட்ரை பண்ணுவோம்ல. சூப்பர் ப்ரபாகர்
ரெண்டு முடிவும் ஓகே....
பிரபா..மெருகேறிகிட்டே இருக்கு எழுத்து.வாழ்த்துக்கள்
//வானம்பாடிகள் said...
கதிருக்கு எச்சரிக்கை
கட்டுரைக்கும் சவால்!//
அண்ணே... பிராபாகிட்ட கத்தி கதறிப் பார்த்துட்டேன்... எழுதமாட்டேங்குறாரே...
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... பிராபாகிட்ட கத்தி கதறிப் பார்த்துட்டேன்... எழுதமாட்டேங்குறாரே.../
எழுதுவாருங்க.:)
'காதலில் விழுந்தேன்' என்று எத்தனை காலம்தான் அழ முடியும்.ஆராய்ச்சி தேவைதான்.
இரண்டு முடிவு என்பது நல்லாயிருக்கு.
அருமை பிரபாகர்.
ரெண்டு முடிவுகள், வித்தியாச முயற்சி. ஆனால் இன்னொரு முடிவை வாசகனின் ஊகத்துக்கு விட்டிருக்கலாம்.
//ஸ்டைலு, ஆக்டிங், ஃபைட், வாவ் ஆவ்சம். அவரு கல்யாணம் பண்ணிகிட்ட அன்னிக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா? //
அடப்பாவமே...நீ பாலாசிய பாத்ததில்லையா...
முடிவுகள் இரண்டும் நன்றாயிருக்கிறது. இரண்டாம் முடிவு இன்னும் நன்றாயிருக்கிறது. பட் என்னோட கவலை அந்த மேன் பத்தினது.
சிறுகதை சிறப்பு....
நடையில் முன்பைவிட முன்னேற்றம் இருக்கிறது பிரபா.
வேறு களங்களையும் எடுங்கள் அது உங்களுக்கே தெரியாத உங்களின் திறமையை வெளிக்கொணரும்.
பிரபாகர், நல்லாயிருக்குங்க. ரெண்டுமே நல்லா இருக்கு.
//ஆ.ஞானசேகரன் said...
ரெண்டும் ஓகேதான்
//
நன்றிங்க ஞானசேகரன்... உங்க கருத்து எனக்கு இன்னும் சிறுகதை எழுத வேண்டும் எனும் எண்ணத்தை தூண்டுகிறது.
//கதிர் - ஈரோடு said...
ஹைய்.....
இரண்டு முடிவுங்கறது சூப்பரா இருக்கே...
சின்னகதை
ரசித்தேன்
பாராட்டுகள் பிரபா//
ரசிப்புக்கு நன்றி கதிர்.
// மணிகண்டன் said...
பிரபாகர், குட்டி குமுதம் கதை. நல்லா இருக்கு.
இந்த பத்தி தேவையில்லை.
***
இந்த முடிவு பிடிக்கவில்லை என்றால் இன்னொன்று கீழே. படித்து உங்களின் கருத்தை பின்னூட்டுங்களேன்...
***
ஒரே ஆளே வேறுவிதமா ரியாக்ட் பண்ணினா தான் ரெண்டு முடிவுன்னு சொல்லலாம். அவன் போனவன் போனவன் தான !
//
கருத்துக்கு நன்றி மணி. மிகவும் ஏற்புடையதாயிருக்கிறது. அடுத்தமுறை கண்டிப்பாய் கவனம் செலுத்துகிறேன்....
// புலவன் புலிகேசி said...
//'நீதான், தேங்க்ஸ்... பை' எனச் சொல்லி எழுந்து மணலை வெறுப்பாய் தட்டிவிட்டுக்கொண்டு ஊசி குத்திய பலூன் போல உற்சாகமின்றி நடந்தான்.//
எனக்கு இந்த முடிவுதான் பிடித்திருக்கிறது..நல்ல கதை நண்பரே..
//
நன்றி என் நண்பா. உங்களின் தொடர் பின்னூட்டம் மற்றும் ஆதரவுக்கு நன்றி...
//
வானம்பாடிகள் said...
கவிதையில் கலக்கி
கதையில் அசத்துகிறீர்!
கதிருக்கு எச்சரிக்கை
கட்டுரைக்கும் சவால்!
நாங்களும் கவிதை(?)யில் பின்னூட்டம் ட்ரை பண்ணுவோம்ல. சூப்பர் ப்ரபாகர்
//
மிக்க நன்றி அய்யா. எல்லாம் நீங்கள் தரும் ஊட்டம் தான். மெருகேற்றுவதற்கு நன்றி அய்யா...
//
ஜெட்லி said...
ரெண்டு முடிவும் ஓகே....
//
நன்றி நண்பா... ஊக்கமாய் இருக்கிறது, இன்னும் சிறுகதை எழுத...
//
தண்டோரா ...... said...
பிரபா..மெருகேறிகிட்டே இருக்கு எழுத்து.வாழ்த்துக்கள்
//
நன்றி அண்ணா, வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும்.
//
கதிர் - ஈரோடு said...
//வானம்பாடிகள் said...
கதிருக்கு எச்சரிக்கை
கட்டுரைக்கும் சவால்!//
அண்ணே... பிராபாகிட்ட கத்தி கதறிப் பார்த்துட்டேன்... எழுதமாட்டேங்குறாரே...
//
கண்டிப்பா கதிர். விரைவில் எழுத ஆரம்பிக்கிறேன்.
//
வானம்பாடிகள் said...
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... பிராபாகிட்ட கத்தி கதறிப் பார்த்துட்டேன்... எழுதமாட்டேங்குறாரே.../
எழுதுவாருங்க.:)
//
உங்களின் நம்பிக்கையை காப்பாற்றுவேன் அய்யா...
//
velji said...
'காதலில் விழுந்தேன்' என்று எத்தனை காலம்தான் அழ முடியும்.ஆராய்ச்சி தேவைதான்.
இரண்டு முடிவு என்பது நல்லாயிருக்கு.
//
நன்றி வேல்ஜி... வருகைக்கும் நம்பிக்கையுட்டும் பின்னூட்டத்துக்கும்.
//
தராசு said...
அருமை பிரபாகர்.
ரெண்டு முடிவுகள், வித்தியாச முயற்சி. ஆனால் இன்னொரு முடிவை வாசகனின் ஊகத்துக்கு விட்டிருக்கலாம்.
//
நன்றிங்கண்ணே, முடிவில கொஞ்சம் குழப்பமா இருந்துச்சி... அதான். அடுத்தமுறை சரி செஞ்சிக்கிறேன்.
சின்னக்கதை என்றாலும் சிறப்பான கதை.முடிவுகள் இரண்டுமே முத்து.
//
க.பாலாசி said...
//ஸ்டைலு, ஆக்டிங், ஃபைட், வாவ் ஆவ்சம். அவரு கல்யாணம் பண்ணிகிட்ட அன்னிக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா? //
அடப்பாவமே...நீ பாலாசிய பாத்ததில்லையா...
முடிவுகள் இரண்டும் நன்றாயிருக்கிறது. இரண்டாம் முடிவு இன்னும் நன்றாயிருக்கிறது. பட் என்னோட கவலை அந்த மேன் பத்தினது.
சிறுகதை சிறப்பு....
//
உங்களின் விரிவான பின்னூட்டமும் வெகு சிறப்பு..
//
நாடோடி இலக்கியன் said...
நடையில் முன்பைவிட முன்னேற்றம் இருக்கிறது பிரபா.
வேறு களங்களையும் எடுங்கள் அது உங்களுக்கே தெரியாத உங்களின் திறமையை வெளிக்கொணரும்.
//
நன்றி நண்பா. கண்டிப்பாய். என்னை தொடர்ந்து செம்மைப்படுத்துவதற்கு நன்றி...
//
ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...
பிரபாகர், நல்லாயிருக்குங்க. ரெண்டுமே நல்லா இருக்கு.
//
நன்றிங்க செந்தில், உங்களின் ஆதரவு எழுத தெம்பா இருக்கு.
//
துபாய் ராஜா said...
சின்னக்கதை என்றாலும் சிறப்பான கதை.முடிவுகள் இரண்டுமே முத்து.
//
நன்றி ராஜா. உங்களைப்போன்ற அன்பு நண்பர்களின் ஊக்கம் தான்தான் என்னை மெருகேற்ற உதவுகிறது.
//'உங்களோட வேலை பத்துன விவரங்கள், வசதி வாய்ப்புன்னு எல்லா விவரமும் எனக்கு தெளிவா தெரியிற வரைக்கும் காத்திருந்தேன், தெரிஞ்சது, ஓகே சொல்லிட்டேன்...//
//'இல்லப்பா ஒத்து வராது. ஆளு ரொம்ப பொசசிவ், முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு'//
இரண்டு முடிவுகளிலும் இந்த காலத்து பெண்களின் தெளிவான புத்திசாலித்தனத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள் பிரபாகர்.
// துபாய் ராஜா said...

October 24, 2009 6:59 PM//
நன்றி ராஜா. ஆழ்ந்து படித்து அழகாய் பின்னூட்டம், அதுதான் ராஜா.
irunthalum antha paiyane ippadi verippethe koodathu
// Anonymous said...
irunthalum antha paiyane ippadi verippethe koodathu
October 24, 2009 10:33 PM//
நன்றி அனானி, உங்களின் கருத்துக்கு...
குமுதம் ஒரு பக்கக் கதை படிப்பது போல இருக்கிறது.
இரண்டாவது முடிவு ஓ.கே.
//r.selvakkumar said...
குமுதம் ஒரு பக்கக் கதை படிப்பது போல இருக்கிறது.
இரண்டாவது முடிவு ஓ.கே.
October 24, 2009 11:27 PM //
நன்றிங்க செல்வகுமார்... வருகைக்கு ரொம்ப சந்தோசம்...
//அடிக்கடி கிள்ளிப் பார்த்துக்கொண்டான்//
ம்ம்... =)
//ஸ்டைலு, ஆக்டிங், ஃபைட், வாவ் ஆவ்சம்... / நவ் ஐ ஹேட் ஹெர்//
ஹையோ ஹைய்யோ..
//'உங்களோட வேலை பத்துன விவரங்கள், வசதி வாய்ப்புன்னு எல்லா விவரமும் எனக்கு தெளிவா தெரியிற வரைக்கும் காத்திருந்தேன்//
இதுதான் காதல் என்பதா... அட அட..
// தட்டிவிட்டுக்கொண்டு ஊசி குத்திய பலூன் போல உற்சாகமின்றி நடந்தான்//
நல்ல முடிவு..
//முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு//
அப்போ டெஸ்ட் ல பாஸ் பண்ணி இருந்தா.. காதலோ.. =))...
எப்டியோ.. அருமையான புனைவு.. வாழ்த்துக்கள் பிரபாகர்..
//அவன் சென்றதும் கொஞ்சம் தொலைவிலிருந்த அவளின் தோழிகள் அவளருகே வர, 'இல்லப்பா ஒத்து வராது. ஆளு ரொம்ப பொசசிவ், முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு'//
இப்படித்தான் பிரபாண்ணே நிறைய பேர் மனுசனோட ஒரு விசயத்தை அதெப்படி இவளுங்க எடை போடலாம்?
இரண்டாவது முடிவு பிடிக்கலை
முதல் முடிவு இருந்துருக்கணும்
காலையிலயே படிச்சுட்டேன் இப்போதான் டைம் கிடைச்சது அண்ணா
பின்னூட்டத்துக்கு
பதிவு நன்றாக உள்ளது ....................
ஒரு 5 வருடம் முன்பு ..........ஆனந்த விகடனில் இதை போல ஒரு கவிதை படித்தேன் ..........
"தலை கோதிய காதலி ......அந்த நாயகன் சாயலில் இருக்கிறான் " என்று சொன்னவுடன் ....
காதலன் முகம் வாடுகிறது நல்ல பதிவு நண்பா .......
நன்றாக இருக்கிறது பிரபாகர். ஆனால் இந்த முடிவு பிடிக்கவில்லையென்றால் என்பது தேவையா?!
//October 24, 2009 11:31 PM
கலகலப்ரியா said...
//அடிக்கடி கிள்ளிப் பார்த்துக்கொண்டான்//
ம்ம்... =)
...
//
விரிவான விமர்சனத்துக்கு நன்றிங்க கலகலப்ரியா. ரொம்ப சந்தோசம்.
//பிரியமுடன்...வசந்த் said...
//அவன் சென்றதும் கொஞ்சம் தொலைவிலிருந்த அவளின் தோழிகள் அவளருகே வர, 'இல்லப்பா ஒத்து வராது. ஆளு ரொம்ப பொசசிவ், முன் கோபம் ஜாஸ்தின்னு சொன்னாங்க. டெஸ்ட் பண்ண ஒரு சின்ன பொய், ஆளு கழண்டுகிட்டாச்சு'//
இப்படித்தான் பிரபாண்ணே நிறைய பேர் மனுசனோட ஒரு விசயத்தை அதெப்படி இவளுங்க எடை போடலாம்?
இரண்டாவது முடிவு பிடிக்கலை
முதல் முடிவு இருந்துருக்கணும்//
நன்றி வசந்த், நீங்கள் தரும் உற்சாகம் இன்னும் நிறைய எழுதனும்போல் இருக்கு. இனி கவனமாய் இருக்கிறேன், உங்களின் கருத்துக்கு நூறு சதம் உடன்படுகிறேன்,
//
வெண்ணிற இரவுகள்....! said...
பதிவு நன்றாக உள்ளது ....................
ஒரு 5 வருடம் முன்பு ..........ஆனந்த விகடனில் இதை போல ஒரு கவிதை படித்தேன் ..........
"தலை கோதிய காதலி ......அந்த நாயகன் சாயலில் இருக்கிறான் " என்று சொன்னவுடன் ....
காதலன் முகம் வாடுகிறது நல்ல பதிவு நண்பா .......
//
நன்றிங்க. என் அருமை நண்பரோடு பேசும்போது, டி.வியில் ஒரு பெண் தனது கணவர் முன்பே ஒரு நடிகர ரொம்ப வர்ணித்து பேசியதை அவரது கணவர் புளகாங்கிதப்பட்டு ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார் என சொல்லியதிலிருந்தே இந்த சிறுகதை. ஆம், கவிதையோடும் ஒத்துப்போகிறது. நன்றிங்க.
//
ஷங்கி said...
நன்றாக இருக்கிறது பிரபாகர். ஆனால் இந்த முடிவு பிடிக்கவில்லையென்றால் என்பது தேவையா?!
//
ஷங்கி, காதலை விடுவதற்கு நடிகரை மட்டும் சொல்வது போதுமா என குழ்ப்பம், அதனால்தான். இனி இப்படி ஆகாமல் பார்த்துக்கொள்கிறேன். நன்றி ஷங்கி....
அருமையான கதை பிரபா,
SurveySan-ன் நச் கதை போட்டிக்கு அனுப்பலாமே
//சங்கர் said...
அருமையான கதை பிரபா,
SurveySan-ன் நச் கதை போட்டிக்கு அனுப்பலாமே
//
நன்றி சங்கர். இன்னும் கொஞ்சம் பெட்டெர்-ஆ எழுதி அனுப்புகிறேனே?
உங்கள் முதல் வருகைக்கு நன்றிங்க...
//உங்களுக்கு பிடிச்ச நடிகை'
'நீதான்,
super ,, i like that line very much sir..
//
ஸ்ரீ.கிருஷ்ணா said...
//உங்களுக்கு பிடிச்ச நடிகை'
'நீதான்,
super ,, i like that line very much sir..//
Thanks a lot Jai for your continuous support...
First mudivu than nalla iruku..
story super..
//Sachanaa said...
First mudivu than nalla iruku..
story super..//
உங்களின் முதல் varukaikku நன்றிங்க...
Post a Comment